“நிர்வாண சக்தியாக” நிலை பெறச் செய்யலாம் ஆத்ம சக்தியை

“நிர்வாண சக்தியாக” நிலை பெறச் செய்யலாம் ஆத்ம சக்தியை

 

பன்னிரெண்டு வகை குண அமிலங்கள் கொண்ட… உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்ப இயக்கத்தில்… ஆத்மீக போதனையின் வழித் தொடரில்… ஞானத்தின் பால் செயல்படும் உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டிய பக்குவ முறை யாது…?

பல குணங்களின் உணர்வின் உந்தல் கொண்ட வாழ்க்கையில் மனிதனின் எண்ண உணர்வு தான் வளர வேண்டிய ஆத்ம வளர்ப்பின் வலு நிலையைக் கூட்ட என்ன செய்ய வேண்டும்…?

இச்சரீர பிம்ப இயக்க எண்ணத்தை சம நிலை கொண்ட நற்குணத் தொடர்பினால்
1.சாந்த குண அமிலமான “வெண்மையின் அமிலத்தின்” சேர்க்கை விகிதம் கூடிடல் வேண்டும்.
2.அதன் தொடர்பு கொண்ட காந்த மின் அலை ஈர்ப்பு செயலினால்
3.இச்சரீர பிம்பமே ஆத்ம வார்ப்பிற்கு வளர் நிலை தரத்தக்க “இயந்திர நிலையாக” உயரும்.

அதாவது சூரியனின் சக்தியைக் கொண்டு… காந்த மின் அலையின் தொடர்பினால்… ஜீவ சக்தியான நீர் சக்தியின் தொடர்புடன்… உலோக ஈர்ப்பில் மின் அலையைச் செலுத்தி.. அதன் செயலின் வீரிய குணத்தை (SOLAR POWER) எடுக்கின்றார்கள் அல்லவா..!

அதைப் போன்ற இயக்கச் செயலாக…
1.சரீர பிம்பத்தின் நீர் சக்தியைக் கொண்டு
2.இச்சம குண உணர்வினால் பெற்ற உறுப்புகளின் வளர்ப்பினால் உருவாகும் காந்த மின் அலைத் தொடர்பினால்
3.இச்சரீர உணர்வு எண்ணத்தை சகலத்திலும் கலக்கச் செய்து
4.எவ்வீர்ப்புப் பிடியிலும் இவ்வெண்ணத்தின் உணர்வு மோதாமல்
5.எண்ணத்தின் செயல் கொண்டே ஆத்ம அலையை எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலக்கச் செய்து
6.நிர்வாண சக்தியாக நிலை பெறச் செய்யலாம் இந்த ஆத்ம சக்தியை.

“வெண்மை அமிலத்தின்” தொடர்பு கொண்டு தான் மின் அலையே உருவாகின்றது. வண்ணத்தின் கூட்டு நிலைக்கொப்பத்தான் வளர்ப்பு நிலை ஒவ்வொன்றுமே உருவாகிறது.

வானவில்லின் வண்ணத்தைக் காட்டி இராமாயணக் காலத்தில் வான்மீகியார் எழுதிய காவியத்தின் உட்கருத்தை மாற்றப்படாமல் வைத்திருந்தால்
1.வண்ணங்களின் தொடர்பு கொண்டு
2.உயிர் வளர்ப்பின் அணுத் தொடர் வளர்ச்சியின்
3.அணுவுக்குள் அணு வளரும் உயர் சக்திகளை இன்று நாம் அறிந்திருக்கலாம்.

வெண்மையின் அமிலமான சக்திகளால் தான் நம் உடல் உறுப்பின் எலும்புக்கூறுகள் உருவாகி அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி வார்ப்பாக ஆத்மாவின் வலு வலுக் கொள்கின்றது.

சூரியனின் அலைத் தொடர்பிலிருந்து பூமியின் சுழற்சிக்கு பூமிக்கு வடிகட்டி பூமியின் ஈர்ப்பிற்கு வரும் அமிலச் சத்தின் உயிரணு வளர்ப்பு அமிலமே “இந்த வெண்மையின் சக்தி தான்…!”

சாந்த குணமான வெண்மையின் சக்தி அலைகளை உணர்த்தத்தான் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் கலைமகள்… ஞானமகள்…! என்றனர்.

ஆகவே…
1.ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வெண்மை உடுத்தும் தாய் குண சரஸ்வதி என்றும்
2.”ஞானத்தின் தொடர்பு கலைமகள்” என்ற சூட்சம வட்டத்திற்குள்
3.அச்சக்தியின் தொடர்பை நமக்குத் தெளிவாக உணர்த்தினர் நம் சித்தர்கள்.

வண்ணத்தின் சேர்க்கைக்கொப்பத்தான் உருவக செயல் உருவாகின்றது. அதன் தொடர்பு கொண்ட உணர்வின் செயல் தான் மாற்றங்களின் நிலையும்.

இன்றைய இக்கோளத்தின் உயர் வார்ப்பான உயர் வண்ணமான வெண்மையின் தன்மைக்கே கருமையின் பழுப்பு நிலை கூடிக் கொண்டே வருகின்றது.

இன்றைய கலி காலத்தில்…
1.மனிதனின் ஞானம் நிர்வாண உணர்வாக… வார்ப்பின் வார்ப்பாக
2.ஆத்ம வளர்ப்பை வளர்க்கும் ஞானம் பெற்று
3.நிர்மலமான ஜோதி நிலையுடன் கலந்திட வேண்டும்.

Leave a Reply