“சப்தரிஷி” என்பவன் எப்படி உருவானான்…?

“சப்தரிஷி” என்பவன் எப்படி உருவானான்…?

 

ஆத்ம சக்தியின் உண்மையை உணர்ந்து ஞானத்தைப் பெருக்கும் உயர் ஞானச் செயலை அறிய ஏக்கம் கொண்டவர்கள்… இச்சரீர பிம்ப ஆத்ம எண்ண அலையை மகரிஷிகளின் பால் செலுத்தினால் சகலத்தையும் அறியும் ஆற்றல் பெற முடியும்.

அந்த அலைத் தொடரைப் பற்றிடல் வேண்டும். மகரிஷிகளின் அலைத் தொடர் என்பது என்ன…?

1.சகலத்தையும் அறியவல்ல.. சகலத்திலும் கலந்துள்ள… உயர் சக்தி கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பலையின் தொடர்பாக
2.இச்சரீர எண்ணமானது செலுத்தப்படும் தொடர் கொண்டு
3.இச்சரீர உணர்வு அமிலக்கூட்டின் வளர்ச்சி நிலைக்கு உகந்த அலைத் தொடர்பின் சக்தி தியானத்தால்
4.இச்சரீர பிம்ப உணர்வுகளோ.. இயக்கங்களோ… தன் நிலை மறந்த மயக்க நிலையோ அன்றி…
5.இந்த ஞான ஆத்ம பலத்தின் எண்ண ஞானத்தால் – உயர் தொடர்புடைய அலைச் சக்தியின் தொடரினால்
6.இந்தப் பிரபஞ்ச உண்மைகளையும் இதன் தொடர்பு கொண்ட பால்வெளி மண்டல வளர்ப்புத் தொடர் யாவையுமே
7.தன் நிலை மறக்கா உணர்வுடனே ஒவ்வொருவரும் காண முடியும்.

“சித்து நிலை” பெறுவது என்பதுவும் இதன் தொடர் அலை வழித் தொடரினால் தான்.

ஆகவே அத்தகைய ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்றால் இச்சரீர பிம்ப வளர்ப்பிற்கு நல் உர சக்தியைப் போட வேண்டும்.

நல் உர சக்தி என்பது… எது…?

1.தனித்த ஆத்மாவாக எண்ணத்தாலும் செயலாலும் பிற ஆத்மாவின் தொடரில் இருந்தெல்லாம் விலகி
2.தன் குணத்தின் நற்குணம் எது…? என்று அறிந்து
3.அதன் சுழற்சியில் பக்தி கொண்ட ஜெப ஞான தியானத்தால் மட்டும்
4.உயர் சக்தியை இவ்வாத்மாவுக்கு உரமாகச் செலுத்த முடியாது,

நறுமணமான நிலையிலிருந்தோ… அமைதியான சுற்றுச் சூழல் தனித்த வாழ்க்கை முறையிலோ… அதிலும் இவ்வாத்ம ஞானம் வலுக் கூடாது.

அதே சமயம்… பல மனிதர்களுடன் மத்தியில் வாழக்கூடிய தொடர் வாழ்க்கையில்… (இப்பொழுது வாழும் நிலை) அவர்களின் அலை ஈர்ப்பின் பிடிப்பில்… அவர்கள் செய்யும் குரோத வஞ்சனை உல்லாச கேளிக்கைகளுக்குள்… நம் உணர்வால் எடுக்கக்கூடிய எண்ன மோதலின் பிடியில் சிக்கி விட்டாலும்… இவ்வாத்மாவிற்கு நாம் போடக்கூடிய உரம் தடைப்படுகின்றது.

மனித ஆத்மாவிற்கு வலு உரம்… பின் எங்கிருந்து எப்படி எடுக்க முடியும்..?

ஒரு உயர்ந்த குண உலோகமான தங்கம் அது வளரக்கூடிய பகுதியில் மண்ணுடன் மண்ணாக ஒவ்வொரு இடத்திலும் அதன் வளர் தனமை வளர்ச்சி நிலை கூடிக் கூடி உயர்ந்த வார்ப்புப் படிவமாகின்றது.

அதாவது…
1.மண்ணின் சத்துப் படிவத்துடன் அடுக்கடுக்கான படிவமாக வளர்ந்து வலுக் கொண்ட உலோக வார்ப்பாக அத்தங்கம் வளர்வதைப் போன்றும்
2.நெருப்புடன் நாம் எப்பொருளைப் போட்டாலும் போடப்படும் பொருள் யாவையுமே அந்த நெருப்புடன் பஸ்பமாகும் நிலை போன்றும்
3.இந்த உலகச் சுழற்சி பந்த வாழ்க்கையில் இச்சரீர பிம்பம் சிக்குண்ட பிடியிலிருந்து தங்கத்தின் படிவமான வளர்ப்பைப் போன்று
4.இம்மண்ணான பிரபஞ்சத் தொடரின் உயர் உரமாக இச்சரீர பிம்ப ஆத்மாவிற்கு நாம் அளிக்கக்கூடிய உரமானது
5.தங்கத்தின் படிவமான வளர்ப்பை ஒத்த வளர்ப்பைப் போல் நாம் எடுக்கக்கூடிய சத்துத் தன்மை
6.திரவகத்தில் செலுத்தப்படும் செம்பு பித்தளை இரும்பு போன்று கரைந்தாலும் இத்தங்கம் கரையாத நிலை பெறுவதைப் போலவும்
7.நாம் அளித்த உரத்தின் தன்மை கொண்டு இந்த ஆத்ம சக்தி எவ்வீர்ப்புப் பிடியிலும் போய்ச் சிக்காமலும்
8.வந்து மோதும் பிரபஞ்சத் தொடர்பு வேண்டப்படாத தீய எண்ணங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு.. இவ்வாத்மாவின் வலு தங்கத்தைப் போன்றும்
9.இப்பிரபஞ்ச திரவகக்திலிருந்து கரையப்படா தங்கமாக ஜொலிக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டு வர வேண்டும்.

இப்பொழுது வாழும் இந்தச் சுழற்சி வாழ்க்கையில் நம்முடன் தொடர்பு கொண்ட ஆத்மாக்களின் எண்ண உணர்வின் ஈர்ப்பு அலைத் தொடர்பை இச்சரீர பிம்ப எண்ணத்தில் நாம் எடுத்துத் தான் நம் ஆத்மாவிற்கு உரம் போட்டு உரமாக்க முடியும்.

ஆத்மத் தொடர்பின்றி ஆத்ம வலுவை நாம் பெருக்க முடியாது என்ற உண்மையைத் தெளிவாக உணர்ந்திடல் மிகவும் அவசியம்.

ஆனால் எந்த எண்ணத்தைப் பிற எண்ணத்தின் பால் நாம் செலுத்துகின்றோமோ அதே எண்ணத்தின் பிரதிபிம்ப அலை உணர்வின் எதிர் நிலைதான் நம் எண்ணத்திற்குள்ளும் வந்து அந்த அலை பாயும்.

பெண்மைக்கு ஆண்மைத் தொடர் அமில குணவார்ப்பு சக்தி இல்லாவிட்டாலும்… ஆணிற்குப் பெண்ணின் ஜீவ ஈர்ப்பு வளர்ப்பு இல்லாவிட்டாலும்… இவ்வாத்ம வலுவைத் தனித்த உணர்வு எண்ணத்தைச் செலுத்தி வளர்த்துக் கொள்ள முடியாது.

இவ்வாத்மாவிற்கு உரமே…
1.பிற ஆத்மாக்களில் செலுத்தும் எண்ண உணர்வின் தொடர்பலையிலிருந்து
2.இந்த ஞானத்தின் வலு செயல் கொள்ளத் தக்க முறையால்
3.அமில உணர்வு வளர்ப்பு அணு வளர்ச்சியின் வலுக் கொண்ட உராய்வால் தான்
4.இவ்வாத்ம வலுவின் வளர் தன்மை உயரும்.

அத்தகைய உயர்வினால்… இச்சரீர ஜீவத் துடிப்பலையின் தொடர்பு கொண்ட வளர்ச்சியிலிருந்துதான்… “சகலத்தையும் அறியும் வளர்க்கும் சப்தரிஷியே… உருவானானப்பா…!”

Leave a Reply