“மனித உருவைத் தான் முழு முதல் கடவுள்…” என்று ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்கள்… ஏன்…?

“மனித உருவைத் தான் முழு முதல் கடவுள்…” என்று ஞானிகள் சித்தரித்துக் காட்டினார்கள்… ஏன்…?

 

“ஆதி மூலம் என்ற உயிரால்” மனிதன் எப்படி உருவானானோ அவன் தான் முழு முதற் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பல கோடி உடல்களைக் கடந்து இந்த மனிதனாக ஆனபின் தான் அந்த நிலை வருகிறது. எப்படி…?

1.சூரியனிலிருந்து வரக்கூடியது (சந்தர்ப்பங்கள்) அது ஒன்றுடன் ஒன்று இணைந்து புதிது புதிதாக மாறுகின்றது
2.அதே சமயத்தில் மனிதனோ புதிது புதிதாக எத்தனையோ வகையான நிலைகளை மாற்றி உருவாக்கிக் கொண்டே உள்ளான்.
3.பயிரினங்களை மாற்றுகின்றான்… தாவர இனங்களை மாற்றுகின்றான்…
4.ஏன்…? எத்தனையோ விதமான உயிரினங்களின் உணர்வுகளையும் மாற்றுகின்றான்…. எல்லா செயலும் செயல்படுத்துகின்றான்.

அப்பொழுது கடவுள் யார்…?

கண்கண்ட தெய்வமும்… கடவுள் என்ற முழுமையான சக்தி பெற்ற மனித நிலைகளில்…
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் உருவாக்கினால்
2.தீமையை நீக்கும் கடவுளாக நீங்கள் உருவாகின்றீர்கள்.

யாம் (ஞானகுரு) சொன்ன தியானத்தின் முறைப்படி அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் உங்களுடைய சொல் பிறருடைய தீமையை நீக்கும் தன்மையாக வரும். உங்களுக்குள் தீமை வராது தடுக்கும் சக்தி பெறுகின்றீர்கள்

அதனால் தான் மிருக நிலையிலிருந்து என்று மனிதனாக ஆனானோ அது “முழு முதல் கடவுள்” என்று விநாயகர் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

சிவனின் பிள்ளை என்றும் சொல்வார்கள். நாம் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனிதனாக உடலை உருவாக்கியது. உடலுக்குள் தீமையை நீக்கும் உணர்வுகள் ஆனபின் “தீமையை நீக்கி நன்மையை உருவாக்கும்… அந்தக் கடவுளாக உருவாகின்றது…!”

மனிதன் எப்போது ஆனானோ “அவன் தான் கடவுள்…!”

நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… என்று சொன்னால் வேதனைப்படுத்தும் நிலைகளை ஒருவன் செயல்படுத்தினால்… அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் “அது கடவுளாக வந்து” அந்த வேதனையை நமக்குள் உருவாக்குகின்றது.

ஆனால்… வேதனை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்றால்… வேதனை நீக்கும் கடவுளாக உங்கள் உடலுக்குள் நின்று தீமைகளை நீக்கும்.
1.உலகில் இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை உருவாக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
3.உங்களுக்குள் இந்த ஞானத்தைப் பெற முடியும்.

இன்று ஒன்றும் அறியாது இருக்கலாம்… ஆனால் யாம் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவு உண்டு.

அவ்வப்போது இதை நீங்கள் சிந்தனைக்குரியதாக்கி… தீமைகளை நீக்கி உண்மையின் உணர்வை அறியும் ஆற்றல் பெற்று… உங்களையும் காத்து உங்கள் குடும்பத்தையும் காத்து… உலகைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக நீங்கள் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

1.உலகில் உள்ள தீமையின் உணர்வுகள் பூமியில் படராது
2.அது சூரியனால் கவரப்பட்டு அழித்திடும் அதை மாற்றிடும் சக்தியாக
3.உங்களால் அதைச் செயல்படுத்த முடியும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் ஒவ்வொருவரும் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து… சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெற்று… சாந்தமும் விவேகத்துடன் வாழ்ந்திட…. “குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்…”

Leave a Reply