January 2023 உபதேசம்

நல்ல நேரத்தைத் தான் நாம் உருவாக்க வேண்டும்…!

 

சாங்கிய சாஸ்திரத்தைச் செய்து நல்ல நேரம் வருகின்றதா… கெட்ட நேரம் வருகிறதா…? என்று தான் இன்று பார்த்துக் கொண்டு வாழ்கிறோம்.

உதாரணமாக ஒரு மனிதன் திடீரென்று கடுமையான நெஞ்சு வலியால் அவதிப்படுகின்றான்… அவனுக்கு மூச்சுத் திணறலாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.

மருத்துவரிடம் உடனடியாக அழைத்துப் போனால் தான் அவனுக்குச் சரியாகும். நல்ல நேரம் பார்த்து அவனை மருத்துவரிடம் கொண்டு போக முடியுமா…?

நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் “அந்த நல்ல நேரம் அவரைக் காப்பாற்றுமா…?”

இப்படி… நம்மை அறியாமலேயே நல்ல நேரம் கெட்ட நேரம் என்று தான் சாங்கியப்படி எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதிலே உண்மை இல்லை.

ஆக அவரைக் காக்க வேண்டும் என்று எண்ணத்தில் உடனே சென்றால் அவருக்கு நல்ல நேரம் வருகிறது… அவரை நிச்சயம் பிழைக்க வைக்க முடியும்.

நல்ல நேரம் எங்கே உருவாகின்றது…?
1.நமக்குள் தான் உருவாகின்றது
2.நல்ல நேரத்தைத் தான் நாம் உருவாக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நல்ல நேரத்தை உருவாக்க வேண்டும் என்றால்…
1.இப்போது ஒரு கஷ்டம் வருகின்றது என்றால்
2.அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எனக்கு நல்லது நடக்க வேண்டும்…! என்ற இந்தச் சந்தர்ப்பத்தை அங்கே உருவாக்க வேண்டும்
5.அப்பொழுது அந்த நல்லது நடக்கும்… இது நல்ல நேரம் ஆகின்றது

ஆனால் ஒருவர் வருகிறார். “ஜாதகப்படி இந்த நேரம் மோசமான நேரம்… இந்த நேரத்திலே நீங்கள் நல்ல காரியத்தை ஆரம்பிக்கின்றீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அவர் சொல்வதைப் பதிவு செய்தால் போதும்.
1.அவர்கள் சொல்லும் அந்தக் கெட்ட நேரம் நமக்குள் வந்து
2.அது கெட்ட நேரமாகவே ஆகிவிடுகிறது.

ஆக கெட்ட நேரமும் நல்ல நேரமும் எங்கே எப்படி உருவாகின்றது…? என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டில் இந்தக் கஷ்டம் அந்தக் கஷ்டம் என்று சொல்வார்கள். பின் என்னுடைய நேரம் கெட்ட நேரம்… அதனால்தான் இப்படியானது…! என்று சொல்லிவிடுவார்கள்.

இதை எல்லாம் எடுத்துவிட்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் நாம் எண்ணி உயிரிலே உருவாக்கப்பட்டால்…
1.அந்த உணர்வின் வழி அந்த உணர்ச்சி… அது நம்மை ஆளத் தொடங்கும்
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வைக் கண்களால் நினைக்கப்படும் போது
3.அந்த உணர்வு வலுவாகி உயிரிலே மோதும் போது அதை நல்ல நேரமாக உயிர் சமைக்கும்.

ஆக… நல்ல நேரமும் கெட்ட நேரமும் மனிதனுக்கு இல்லை.

நம்மிடம் இருக்கும் “அரிதான சக்திகளை” அறியாதபடி தான் வாழ்ந்து கொண்டுள்ளோம்

 

இன்று விஞ்ஞானத்தில் ஒலிப் பதிவு செய்த நாடாக்களில் காந்த அலையை மின்சாரத்தினால் பாய்ச்சி அதனை ஒலிக்கச் செய்து கேட்கின்றனர்.

அதைப் போன்று இவ்வுடல் என்ற கூட்டு அமிலமுடன் உயிர் அணு தோன்றி ஜீவ உணர்வு எண்ண சக்தி வளர்ந்த நாள் தொட்டே பல கோடிச் சரீரங்களில்.. ஒவ்வொரு உயிர் ஜீவனின் உணர்வு எண்ண சுவாசத்தில் எடுத்த நினைவலைகள் அனைத்துமே நம் உடலில் பதிவாகியுள்ளது.
1.அப்படிப் பதிவான உணர்வெண்ண அலையில்
2.பல ஜென்மங்களில் எடுத்த எண்ண நினைவலைகளும் உண்டு.

அதன் குண நிலைத் தொடரில் தான் இன்றைய பிம்ப உடலின் உணர்வு நினைவு எண்ண ஓட்டங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அப்படிப் பதிவாகியுள்ள உடல் கூறு தான் இது.

ஆகவே…
1.இவ்வுடல் உணர்வு எண்ணமுடனே (அந்த ஓட்டத்திலேயே) நம் எண்ணத்தைச் செலுத்தினோமானால்
2.ஆத்ம சக்தி நல்லுணர்வின் வழித் தொடர் பெற முடியாமல்
3.அணைகட்டாமல் செல்லும் நீரைப் போல் தான் அதன் வேக நிலைக்கொப்ப செல்லும்.

உணர்வின் எண்ணம் கொண்டு நற்சக்தியின் ஞான ஒளி அலையை இவ்வுடலில் ஏற்கனவே பதிவாகியுள்ள பலவான உணர்வுகளில் “கலக்கச் செய்திட வேண்டும் (இது முக்கியம்)…”

1.அத்தகைய எண்ணங்களையும் நினைவுகளையும்
2.நற்சக்தியின் நல் எண்ண குணத்தை வழிப்படுத்தக்கூடிய எண்ணத்தில் நம் வாழ்க்கை நடைமுறை இருந்திட்டால்
3.நாம் எச்சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வின் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
4.அச்சக்தியின் எண்ணமுடன் நம் வாழ்க்கை செயல் இருந்திட்டால்தான்
5.நம் ஆத்மாவும் நல் ஞானச் சக்தியின் வழித் தொடரைப் பெற முடியும்.

உடலில் மட்டுமல்லாமல் உடலை விட்டுப் பிரிந்தவர்களின் (இறந்தவர்களின்) எண்ண நினைவு சப்த அலைகள் “அந்தந்த உயிராத்மாவின் சுழற்சியுடன்” இக்காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டே அழியாமல் தான் உள்ளது.

இதனை உணர முடியுமா…?

இன்று நாம் பேசியதை நாடாக்களில் அமிலத்தைப் பூசி காந்த மின் அலையின் சக்தியினால் பதிவு செய்து பல காலங்களுக்கு அதனைக் கேட்க முடிகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களின் தொடர்பலையையும் நாம் நம் எண்ணத்தால்… அவர்கள் பால் செலுத்தும் உணர்வு ஞானத்தால்… எந்த ஒரு உடலை விட்ட ஆத்மாக்களுடனும் தொடர்பு கொள்ள ஜீவ பிம்ப மனித உடல் கொண்டோரால் முடியும்.

இம்மனித ஞானத்தில் மட்டும் தான் முடியும் என்பதல்ல…!

நம்முடன் வாழ்ந்த ஜீவன் பிரிந்த ஆன்மாக்கள் அவர்கள் அவர்களால் விரும்பி வாழ்ந்த காலத்தில் அவர்களின் உடம்புடன் தரித்திருந்த பொருள்களில் காந்த மின் அலையின் சக்தியை சில அமிலங்களின் கலப்புக் கூட்டைப் பூசி அவர்கள் பேசிய அலையையும் எடுக்கலாம். அவர்களின் இன்றைய எண்ண ஒலியையும் எடுக்கலாம்.

இவ்வுடல் கூட்டிற்கு ஜீவ நீர் சக்தியினால் எச்சக்தியையும் செயலாக்கவல்ல ஆற்றலுண்டு. “சகல லோகங்களையும் காணவல்ல ஆத்மக் கூடு இது” (நம் ஆன்மா).

1.ஆனால் நம் உணர்வின் எண்ணமெல்லாம் “இவ்வாழ்க்கை” என்ற ஏக்கச் சலிப்பு நிலையுடனே இருப்பதாலும்
2.பெரும்பாலும் தன் சக்தி குண அமிலத்தையே கூட்டும் வழியிலிருந்து
3.குறைக்கும் ஈர்ப்பு ஓட்டமான ஓட்ட கதியில் செலுத்தி விடுவதாலும்
4.நம் ஆன்மாவுக்குண்டான சக்தியை அறியாமலேயே வாழ்கின்றோம்.

இவ்வுணர்வின் எண்ணத்தையே நாம் நல்லெண்ண குண அமில நிலையில் வளர்த்துக் கொண்டோமானால்
1.ஒவ்வொரு மனித ஆத்மாவும் எந்த ஒரு பேரின்ப நிலை பெற வேண்டும் என்று
2.அன்றைய ஞானிகளும் சப்தரிஷிகளும் உணர்த்தி உள்ளார்களோ அதன் உணர்வெண்ண நினைவுப்படி
3.அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடைய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் சொந்தமோ பந்தமோ நண்பர்களோ உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் பாசத்தால் “ஐயோ…” இப்படிப் போய்விட்டார்களே என்று எண்ணினால் அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

இந்த மாதிரி நேரத்தில் நாம் விழித்திருத்தல் வேண்டும். உடனே நம் உயிரை எண்ணி “ஈஸ்வரா” என்று அவனிடம் வேண்டுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அடுத்து
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
2.பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்ற உணர்வுடன் உந்தித் தள்ள வேண்டும்.

“அப்படி உந்தித் தள்ளாமல்…” ஐயோ… இப்படி ஆனதே…! என்று எண்ணினால் அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும். உள்ளே வந்த பின் அவர் பட்ட வேதனையும் கஷ்டங்களும் நோய்களும் நமக்குள்ளும் வந்துவிடும்.

ஆகவே இதை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

நம் மூதாதையர்களோ… சொந்தமோ பந்தமோ… நண்பர்களோ யாராக இருந்தாலும் சரி… அந்தப் பாசப் பற்றுடன் நாம் கவர்ந்தால் நம் உடலுக்குள் வந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும். அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும். நமக்குள் அந்தத் தீமைகள் புகுந்து விடாதவாறு தடைப்படுத்துதல் வேண்டும்.

தடைப்படுத்த வேண்டுமென்றால் எப்படிச் செய்ய வேண்டும்…?

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்து சப்தரிஷி என்ற நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உறவினர்களின் உயிராத்மாக்களும்… நண்பர்களின் உயிராத்மாக்களும்… சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைந்து சப்தரிஷி என்ற நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

இப்படி அந்த ஆன்மாக்களை உந்திச் செலுத்தி அங்கே அந்த சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் கரைத்திட வேண்டும். இதுதான் ஞானிகள் காட்டிய வழி.

ஆக… “ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழும்…”
1.அதாவது அவர்களும் பிறவியில்லா நிலை அடைகின்றனர்
2.நீங்களும் நலம் பெறும் சக்தி பெறுகின்றீர்கள்.

சில உடல்களில் அறியாது ஆன்மாக்கள் புகுந்திருந்தால் நம்மை அறியாது சில தீமையான உணர்வுகளைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். நம்முடைய செயலாக்கங்களை மாற்றி பாவ வினைகளாக அதன் வழிக்கு நம்மை இயக்கும்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்தும் உங்களால் விடுபட முடியும்.

எங்கள் உடல்களில் அறியாது சேர்ந்த ஜீவான்மாக்கள் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

அந்த ஜீவான்மாக்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து எங்கள் உடல்களில் நலம் பெறும் ஜீவான்மாக்களாக மாறிட அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
1.அந்த ஆன்மாக்களும் சப்தரிஷி மண்டல அலைகளுடன் கலந்து பிறவியில்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானித்தால்
2.அதனின் செயலாக்கங்கள் தணிந்து நம்மை நலம் பெறச் செய்யும்.
3.எதிர்பாராது நடக்கும் சில விபத்தான நிலைகளிலிருந்தும் நாம் விடுபட முடியும்.
4.நம் எண்ணத்தால் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

எந்தச் சூழ்நிலையிலும் இனிமேல் பதட்டமடையாது… “மன உறுதி கொண்டு குரு காட்டிய அருள் வழியில் நடந்து வாருங்கள்…”

 

நான் சம்பாதிக்கின்றேன்… நீயும் சம்பாதிக்கின்றாயா…? என்று ஆசைப்பட்டாலும் இனி உலகப் போர் நடந்தால் அணு குண்டு யுத்தம் தான் நடக்கும்.
1.எந்த நிமிடம் அணுகுண்டோ மற்ற நிலைகளோ எங்கே… எப்படி விழுகப் போகிறது…! என்று சொல்ல முடியாது
2.அடுத்தவன் நம் மேல் போடப் போகின்றான்… நாம் அவன் மீது போடப் போகின்றோம்…
3.இது தான் நடக்கப் போகிறது…

அந்த நிலை ஆவதற்கு முன் இந்த உடலை விட்டுச் செல்லும் முன் “நாம் எதைச் சேமிக்க வேண்டும்…?” என்பதைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரம் வேகா நிலை பெற்றது. நம் உயிரும் எந்த நெருப்பிலும் வேகுவது இல்லை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்த்துக் கொண்டு வந்தோம் என்றால் உயிரைப் போன்று வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

என் சொத்து உன் சொத்து…! என் காசு உன் காசு…! கௌரவம்…! அனைத்தும் போய்விடும். காரணம் உலக யுத்தம் மிக அருகில் இருக்கின்றது;. ஆரம்பித்தால்…
1.ஒரு பத்து நிமிடம் அல்லது குறைந்தது ஒரு பதினைந்து நாட்களுக்குள் உலகம் முழுவதற்குமே விஷத்தன்மை பரவப் போகின்றது.
2.நாம் என்ன செய்யப் போகின்றோம்…?

உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் மீண்டும் அடுத்த உடலுக்குள் சென்று விடக்கூடாது இன்னொரு பிறவிக்கு வந்து விடக்கூடாது

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சாதாரணமாக யார் உடலை விட்டுப் பிரிந்தாலும் நஞ்சின் தன்மையைத் தான் அடைகின்றார்கள்.

ஆக… இந்தக் காற்று மண்டலமே நஞ்சின் தன்மையாக இருந்தாலும் அதை நீக்கக்கூடிய சக்தியை நாம் இப்போதே சேர்த்துக் கொண்டு வரவேண்டும்.

எது எப்படி இருந்தாலும்
1.உயிர் உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் நாம் செல்ல வேண்டும்.
2.தோக்கி உள்ள விஷங்களை அங்கே கரைத்துப் பழகுதல் வேண்டும்

அதற்குத் தான் இப்பொழுது பயிற்சியாக உங்களுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

எத்தனை பேர் இதை நீங்கள் எடுக்கிறீர்கள்…! என்று தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1.எந்தச் சாமியும்… எந்தச் சாமியாரும்… “உங்களை யாரும் காக்கப் போவதில்லை…”
2.உங்கள் உயிர் தான் உங்களைக் காக்க முடியும்.

உயிரின் துணை கொண்டு எந்த உயர்ந்த சக்தியை நீங்கள் எடுக்கின்றீர்களோ… அந்த உணர்வை வைத்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடவும்… இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதற்கும்… இந்த ஒன்றைத் தவிர வேறு வழி இல்லை.

ஏற்கனவே பல முறை உங்களுக்கு இதை எல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டே தான் வருகின்றோம். இனி எந்த நேரம்… எது நடக்கும்…? என்று சொல்ல முடியாது அந்த அளவுக்குத் தான் இந்த உலகம் இருக்கின்றது. ஆகவே
1.நம் குருநாதர் காட்டிய வழியில் தியானத்தைக் கூட்டுங்கள்
2.ஆத்ம சுத்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் செய்து கொண்டே வாருங்கள்
3.மன அமைதியைக் கொண்டு வாருங்கள்
4.எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டமடையாதபடி மன உறுதி கொண்டு அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது…!

இதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் என்றால் தியானத்தைச் சரியான முறையில் கடைப்பிடித்து துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்த்துப் பழகுங்கள்.

இதைச் செய்தால் தான் தப்ப முடியும்.

பிறவிக் குணத்தை மாற்ற முடியுமா…! எப்படி…?

 

1.உணர்வையும்
2.எண்ணத்தையும்
3.ஒவ்வொருவரும் செலுத்தி வழிப்படுத்தும் முறை கொண்டு தான் “ஞான ஈர்ப்பு” வளரும்.

இவ்வுணர்வையும் எண்ணத்தையும் ஞானத்தில் செலுத்திட நற்குணங்களின் சக்தி அலை ஆறு வகையை உணர்த்தினோம். மனித குண அமிலங்கள் பன்னிரெண்டு இருந்தாலும் அதிலே அந்த ஆறு நற்குணங்களின் அமிலங்களின் சக்தி நிலை மனிதனுக்குள் பெருக வேண்டும்.

ஒவ்வொரு மனிதனின் குண அமிலத்தின் உணர்வு உந்தச் செய்யும் எண்ண ஓட்டம் உடலின் உணர்வைக் கொண்டே மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். அதனால் ஏற்படும் சலிப்பைச் சாந்தமாக்க வேண்டும்.

இவ்வுடல் பிம்ப உணர்வு கொண்டு வாழும் வாழ்க்கையில்
1.ஒவ்வொரு நிலையையும் காணும் பொழுதே
2.நாம் எடுக்கும் சுவாசத்தினால் அவ்வுணர்வலைகள் இவ்வுடலில் சாடத்தான் செய்யும்.
3.இன்று நாம் காணும் உணரும் எண்ணத்தால் மட்டும் நம் சுவாசம் அத்தகைய நிலையை ஈர்க்கும் நிலை ஏற்படுவதல்ல.

ஏன்… எப்படி…? எதனால்..?

ஜீவ பிம்ப உணர்வு (மனித) உடலில் “எல்லா உணர்வின் நிலையையும் உணரவல்ல ஈர்ப்பு குணங்கள்” இப்பிம்ப உடலின் அமில குணச் சேர்க்கை வடிவெடுத்த ஆரம்பக் காலத்திலிருந்தே…! பல ஜென்மங்களின் கூட்டுக் கலவை வளர்ப்பு அமிலங்கள் இந்த உடலில் உண்டு.

1.முந்தைய காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட உடலின் உணர்வலைகள்
2.இன்று… இப்பொழுது… நாம் எடுக்கும் நற்சக்தியின் அலையின் உணர்வினால் மட்டும் தடைப்படுத்திட முடியாவண்ணம்
3.நம் உடலின் கூட்டு உணர்வமில… முந்தைய சேமிப்பு அமிலத்தில் “உயர்ந்து நிற்கும் குணத் தொடர் உணர்வு” (முன் ஜென்மத் தொடர்)
4.அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நம்மை மாற விடாமல் தடைப்படுத்தும்.

இயற்கையின் உரு குண நிலையே இதன் அடிப்படை குண ஈர்ப்பு ஓட்டத்தில் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஓடிக் கொண்டுள்ளது.

1.அதி மழை காலத்தில் அதன் வேகத்தைக் கொண்டு பெய்யும் மழை நீர்
2.அதே ஓட்டத்தில் சுழன்று அதி வேகமாக ஓடிக் கலக்கின்றது.
3.அதே நீர் தான் அமைதியாகவும் தெளிந்த நிலையிலும்
4.நாம் அணை கட்டி விடும் வேகத்தின் விகிதப்படி நிதானமாக ஓடுகின்றது.

உணர்வின் வேகத்தை மழை நீரானது மழை பெய்யும் வேகத்தைக் கொண்டு அதன் ஓட்ட நிலையில் விட்டு விட்டால் அதே வேகத்தில் பாய்வது போல் நம் உணர்வின் வேகத்தையும் அப்படியே விட்டால் அதனின் வேகத்திலேதான் பாயும்…!

ஆனால் மழை நீரை அணையைக் கட்டித் தேக்கி அந்நீரை நமக்கு வேண்டியபடி வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட ஓட்டத்தில் திறந்து விடும் பொழுது அதே நீர் அதற்கு உகந்த வேக நிலை ஓட்டத்தில் தான் அது ஓடும்.

ஆக.. இவ்வெண்ணத்தை நம் வாழ்க்கையில் நடத்திடும் எந்தச் செயலுக்கும் அச்செயலை ஈர்க்கவல்ல எண்ண ஓட்ட கதியில் விட்டு விட்டோமானால் என்ன ஆகும்…?

வாழ்க்கையில் நடந்திடும் எந்த ஒரு செயலையும் அணை கட்டி ஒழுங்குமுறைப்படுத்தி விடும் நீரைப் போல் இல்லாமல் விட்டு விட்டால்
1.மழை நீரின் வேகத்தைக் கொண்டு பாய்ந்தோடும் துரிதத்தைப் போலவும்
2.மழையின் தன்மை குறையக் குறைய மழை நின்ற பிறகும் அதன் செயல் நிலைக்கொப்பச் செல்லும்
3.நீரின் வேக நிலையைப் போலவும் தான் இவ்வெண்ண உணர்வும் செயல்படும்.
4.காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பிறகு அது நிதானப்பட்டாலும் “வெள்ளத்தின் பாதிப்பு பாதிப்புத்தான்…!”

அதைப் போன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நொடிக்கும் நாம் எடுக்கும் சுவாசத்தின் உணர்வு எண்ணம் கொண்டு பல மோதல்கள் வருகிறது.

ஏனென்றால் நம் பூமியின் காற்று மண்டலத்தில் இயற்கையின் அமில சக்திகளுடன் இம்மனித எண்ணத்தின் சுவாச அலையின் குண அமிலங்கள் நிறைந்தே சுழல்வதால்
1.நாம் எடுக்கும் சுவாசத்துடன் இக்காற்று மண்டல அமில சப்தங்கள்
2.நம் உணர்வு எண்ணத்தில் மோதிக் கொண்டே தான் உள்ளன.

ஒவ்வொரு நொடிக்கும் நம் சுவாச நிலைக்கொப்ப உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சக்திகள் இவ்வுடல் பிம்ப அமில சப்த அலையுடன் பதிவாகிக் கொண்டே தான் உள்ளது… அதனின் இயக்கமும் இருந்து கொண்டே தான் உள்ளது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆகவே எதிர் மோதலாகும் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்… நம் உணர்வையும் எண்ணத்தையும் சமப்படுத்திச் சீராக்கத் தான் நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் கொடுக்கும் அருள் ஞான உபதேசங்களை எல்லாம் கேட்பார்கள், படிப்பார்கள். ஆனால்… ஆத்ம சுத்தி செய்ய “நேரமில்லை….” என்று இலேசாகச் சொல்லி விடுவார்கள்.

ஆனால் நம் கையில் மண்ணோ அல்லது ஒரு அழுக்குப் பட்ட பின்பு அடுத்து “அப்படியே உணவைக் கையில் எடுத்து நாம் உட்கொள்வோமா..?” உட்கொண்டால் எப்படி இருக்கும்…?

கையில் மண்ணைப் பிசைந்து வேலை செய்கின்றோம், சில அசுத்தமான இடங்களில் வேலை செய்கின்றோம், சாயங்களோ மற்றவைகளையோ கையில் எடுத்துக் கலக்கிப் பல வேலைகள் செய்கிறோம்.

ஆனால், இதையெல்லாம் கழுவாது அப்படியே சாப்பாட்டைச் சாப்பிட்டால் என்ன ஆகும்…? சாப்பிடுவோமா…!

இதைப் போன்று தான் நம் ஆன்மாவில் சேரும்…
1.நமது வாழ்க்கையில் நம்மையறியாது கேட்டுணர்ந்த பல நிலைகள் “இந்த வாழ்க்கைக்கு அது பயன்பட்டாலும்”
2.அந்தத் தீமையான உணர்வுகள் நம்மிலே விளைந்திடாது தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

அந்தத் தூய்மையைப் பெறுவதற்குத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகரும் பொழுது உங்களுக்குக் கிடைக்கும்படியான சந்தர்ப்பத்தை இந்த உபதேசத்தின் மூலம் ஏற்படுத்துகின்றோம்.

1.உங்கள் உடலில் மறைந்துள்ள ஒவ்வொரு நல்ல உணர்வுகளையும் தட்டியெழுப்பி…
2.செடிகளுக்கு உரம் போடுவது போல் உங்கள் நல்ல உணர்வுகளுக்குள்
3.அருள் உபதேசங்களை ஊட்டச் சக்தியாகக் கொடுக்கின்றோம்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் ஆத்மாவைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
1.சிறிது நாள் பழகிக் கொண்டால் தன்னாலே வரும்
2.இதில் ஒன்றும் சிரமமில்லை.

நீங்கள் தொடர்ந்து இந்த ஆத்ம சுத்தியைச் செய்வீர்கள் என்றால் உங்கள் எண்ணம் உங்களை மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் அழைத்துச் செல்லும். இந்த மனித வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு வாழச் செய்யும்.

உங்கள் பார்வை பிறருடைய தீமைகளை அகற்றச் செய்யும். உங்கள் பேச்சும் மூச்சும் உலகைக் காக்கச் செய்யும்.

ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து வந்தால் “உள் உணர்வு (ஞானிகள்)” சரியான பாதையில் உங்களை வழி நடத்தும்

 

நம் நண்பரைச் சந்திக்கின்றோம்… பார்த்தால் சோர்வாகத் தெரிகின்றது ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்று கேட்கின்றோம்.

ஆமாங்க… என் பையன் ஏதேதோ செய்து விட்டான்…! கடன் கொடுத்தது பணம் திரும்ப வரவில்லை… குடும்பத்தில் ஒரே ரகளையாக இருக்கின்றது… என்ன செய்வது என்று தெரியவில்லை…! என்று சொல்கின்றார்கள்.

நம் நண்பர்களிடம் நல்லதைத்தான் விசாரிக்க விரும்புகின்றோம் ஆனால் அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் சொல்கின்றார்கள்.

அப்படிச் சொல்லும் பொழுது “இதையெல்லாம் என்னிடம் சொல்லக் கூடாது.. போங்கள்…!” என்று சொல்ல முடியுமா…?

அப்படி அவர்கள் சொன்னாலும் நாம் அந்த இட்ட்தில் விழித்திருக்க வேண்டும். அவர் அவருடைய கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாலும்…
1.அவருடைய கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்
2.அவர் தொழில் சீராக வேண்டும்
3.அவர் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த ராகத்தை
4.இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் “அவர் நலம் பெற வேண்டும்… நலம் பெற வேண்டும்…” என்று இதைச் சொல்லிக் கொண்டிருந்தால்
1.அவருடைய கஷ்டம் நமக்குள் புகாது அதை இழுக்காது
2.வெளியில் தான் தேங்கி நிற்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும். எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர வேண்டும். எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் இதைச் செலுத்தி வலுவாக்க வேண்டும்.

“ஒரு நிமிடத்திற்குள்” இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த நண்பரிடம் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள் உங்களுக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும்… உங்கள் தொழில்கள் சீராகும்… “கஷ்டம் என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்…!” என்று சொல்லிப் பாருங்கள்.

அவர் படும் கஷ்டங்கள் உங்களுக்குள் விளையாது. இப்படி நமது சகஜ வாழ்க்கையில் பிற தீமைகள் வந்தால் விழித்திருக்க வேண்டும்.

ரோட்டில செல்கின்றோம். சந்தர்ப்பம் ஒரு விபத்தைக் காண நேர்கின்றது உற்றுப் பார்த்த பின் நமக்குள் அது வந்து விடுகின்றது… ரெக்கார்ட் ஆகிவிடுகிறது.

இப்படிப் பதிவான அனைத்துமே நாம் எப்பொழுது சோர்வடைகின்றோமோ அப்பொழுது நினைவுக்கு வரும். அந்த மாதிரி நேரங்களிலும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரை எண்ணி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

ஊனை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே இணைத்துப் பழகுதல் வேண்டும்.
1.நாம் கண்ணிலே பார்த்தது இங்கே தான் ரெக்கார்ட் ஆகும்
2.விலா எலும்புகளில் தான் அதிகமாகப் பதிவாகும்…
3.காரணம் அங்கு அதிகமான மேக்னெட் (காந்த சக்தி) இருக்கின்றது.. அங்கே இழுத்து வைத்துக் கொள்ளும் ரெக்கார்ட் ஆகும்
4.பதிவானதன் துணை கொண்டு காற்றிலிருந்து இழுத்துத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்ளும்
5.ஆன்மாவில் எது வலுவாக இருக்கின்றதோ… அது உயிரிலே மோதும்
6.அதனுடைய வேலையைச் செய்யும்… “உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற விடாது…”

தியானத்தில் நீங்கள் இருக்கும் போது இது எல்லாமே தெரியும். எத்தனையோ நினைவுகள் உணர்வுகள் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

என்னால் ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

அந்த ஆன்மாவில் வலுவாக இருப்பது முன்னாடி வந்தபின் தியானம் எடுப்பதை மறந்து விட்டு அதற்குள் சென்று விடுவார்கள். பின் “இப்படி வருகிறதே…” என்று எண்ணும் பொழுது
1.அதைக் காட்டிலும் வலுவானது வந்தால் அது இயக்கும்
2.அதற்கடுத்து மனதிலே சோர்வு வந்துவிடும்… நல்ல சக்திகளைப் பெற முடியாது.

இதைச் சீர்படுத்த வேண்டும் என்றால் அவ்வப்பொழுது வரக்கூடிய தீமைகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஆன்மாவைச் சுத்தம் செய்து கொண்டே வர வேண்டும்.

சிறிது நாட்கள் இதைச் செய்து நீங்கள் அனுபவத்திற்கு வந்தால் பின் தன்னிச்சையாகச் (AUTOMATIC) செயல்படுத்த முடியும்… மன நிம்மதி கிடைக்கும்.

கலக்கமான நேரத்தில் யாம் சொன்ன ஆத்ம சுத்தியைச் செய்தால் நல்ல சிந்தனைகள் வரும்
1.அந்த நேரத்திற்கு வேண்டியது – என்ன செய்ய வேண்டும் என்ற உபாயங்களும் வரும்
2.அந்த வழியும் தெரியும்… உள் உணர்வை ஊட்டும்.

ஆனால் இருள் என்ற உணர்வுகள் வரப்படும் போது அதை அப்படியே விட்டு விட்டால் அந்த உள் உணர்வைக் கூட நாம் அறிய முடியாதபடி தடைப்படுத்தி விடும்.

அதற்குத்தான் அந்தந்த சந்தர்ப்பங்களில் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுவதற்கு இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அண்டசராசரங்களையும் நாம் காண முடியும்

 

பல நிலைகளால் பூமியின் நிலையே பூமியின் சுவாச நிலையே மாறு கொள்ளும் இத்தருவாயில் நம் உணர்வின் எண்ணத்தால் ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தில் மடியப் போகும் உயிரினங்களின் வழித் தொடர் செல்லும் மிகவும் ஈன நிலையிலிருந்து மீள முடியும்.
1.இப்படி உயர் செயல் குணமுள்ளது இன்றைய மனித உடல் உள்ளவர்களுக்கு
2.உடல் இல்லாதவர்கள் என்ன செய்வது…? (உடலை விட்டுப் பிரிந்து சென்ர நம் முன்னோர்கள்)

தன் உணர்வின் எண்ணத்தால் தான் எடுக்கும் ஜெபத்தால் தான் மட்டும் சக்தி பெறுவதோடு அல்லாமல் தன் உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி தான் வணங்கும் தன் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களையும் உயர் நிலைப்படுத்திட முடியும்.

1.எவ்வுடலில் இருந்து உடல் பெற்று வழி வந்துள்ளோமோ
2.அவ்வுடலின் முன்னோர்களையும் தம் ஈர்ப்பு ஜெபத்தால் நாம் வணங்கி
3.நாம் செல்லும் சப்தரிஷி மண்டலக் கூட்டுடன் சுழல விட்டுக் கொள்ள முடியும்.

ஏனென்றால் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்குத் தன் உணர்வினால் மனம் சுவை இவைகளைத்தான் எடுக்க முடியும். ஞானத்தை வளர்த்துக் கொள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களால் முடியாது.

அவர்களின் நிலை சிதறாமலும் மாறுபடாமலும் இருக்க உடலுடன் கூடிய ஜீவ பிம்ப உடல் மனிதனால்தான்
1.தன் எண்ண உணர்வில் அவர்களை நினைத்து வணங்கினால்
2.அவர்களின் உயிராத்மா வேறு ஈர்ப்பலைக்குச் செல்லாமல்
3.நாம் பாய்ச்சும் ஞானிகளின் எண்ண உணர்வு ஈர்ப்புக்குள் அவர்களின் நிலையும் சுழன்று கொண்டிருக்கும்.

ஏனென்றால் இன்று விஞ்ஞானத்தால் பூமியினுள் உள்ள நுண்ணிய காந்த அலையையும் காற்றில் கலந்துள்ள இவ்வலையையும் ஈர்த்தெடுத்து “எலெக்ட்ரானிக் காந்த மின் அலை ஈர்ப்புச் செயல் காண்பதினால்…” மிகச் சக்தி வாய்ந்த உடலை விட்ட உயிராத்மாக்கள் கூட ஈர்ப்புச் சிதறல் நிலை இன்றுள்ளது… உயர் நிலை பெறத் தடையாகி விட்டது.

இன்று விஞ்ஞானத்தில் இவ்வலையைப் பிரித்தெடுத்து பல செயல்களை செயற்கைக்கு உணர்த்துகின்றான்.

ஆனால் அதே காந்த நுண்ணிய மின் அலை ஈர்ப்பை ஈர்த்துத்தான் ஜீவன் கொள்கின்றது ஒவ்வொரு ஜீவனும். மனிதனின் உடல் பிம்பச் செயலே இக்காந்த நுண்ணிய மின் அலை ஓட்டம் தான்.

விஞ்ஞானத்தில் உலோகத்தின் இம்மின் அலை ஈர்ப்பைக் கொண்டு பல மண்டலங்களுக்கும் பல சாதனங்களைச் செலுத்தி உணர்ந்து வருகின்றான். ஆனால்
1.இஜ்ஜீவ பிம்ப உடலிலேயே…
2.இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் சென்று காண வல்ல
3.அமிலப் படைப்பு ஈர்ப்பு காந்த மின் அலைகள் உண்டு.

இக்காந்த மின் அலையை எவ்வெண்ணத்தில் எவ்வுணர்வைக் கொண்டு பாய்ச்சுகின்றோமோ அதன் நிலையை நாம் அறிய முடியும். இவ்வுடலில் எல்லா உணர்வலையையும் ஈர்க்க வல்ல சக்தியுண்டு.

இதனை உணர்த்தத்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் கதை வடிவில் இராமனையும் கிருஷ்ணனையும் படைத்தான் அன்றைய ஞானி.

நற்குணங்களின் உருவமாய் இராமனின் கதையைப் படைத்தான். உலகத்தையே இம்மனித பிம்ப ஈர்ப்பில் காண முடியும் என்பதனை உணர்த்த கிருஷ்ணனைப் படைத்துக் கிருஷ்ணனின் வாயைத் திறந்தால்… அண்ட சராசரங்களையும் கண்டதாகக் கதை உருக்காட்டினான் அன்றைய ஞானி.

இக்காற்றில் தான் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் அனைத்துச் சக்திகளும் உண்டு.
1.உணர்வுடன் உருவமுடன் உள்ள நாம்
2.இவ்வெண்ணச் சுவாசத்தால் இராமனின் குண அமிலத்தை ஈர்த்துக்
3.கிருஷ்ணனின் வாயில் கண்ட அண்ட சராசரங்களையும் காண முடியும்.

மனித பிம்ப உணர்வு எண்ணச் சுவாசத்தால் காந்த மின் நுண்ணிய அலை ஈர்ப்பை எச்செயலில் செலுத்தி நம் உணர்வு எண்ணச் சுவாசம் செல்கிறதோ அதன் செயலை நாம் செயலாக்க முடியும்.

நம்மைக் காட்டிலும் மிகச் சக்தி வாய்ந்த நம்மையே படைக்க வழி தந்த சப்தரிஷிகளின் தொடரில் இவ்வெண்ண உணர்வு சுவாச ஈர்ப்பிற்குச் செயலாக்க முடியும்.

1.முதலில் இராமனைப் போன்ற குணமாகுங்கள்
2.பிறகு கிருஷ்ணனின் காந்த நுண்ணிய மின் அலை உருவாகுங்கள்.
3.உருவை உணர்த்தி வழி அமைப்பான்… “நம்மை வழிப்படுத்தி வளர்ந்தவன்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்குள் உள்ள நல்ல உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதிலே மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே வருகின்றோம்.

1.செடிகளுக்கு எப்படித் தூரைக் கிளறிவிட்டு அதிலே உரத்தைப் போடுவது போன்று
2.உங்கள் ஒவ்வொரு உணர்வுகளையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அது தூண்டச் செய்து
3.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் படரச் செய்கின்றோம்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி இதை நாம் யாரும் செய்யவில்லை. இன்றைய நிலைகளில் இதைச் செய்து ஆக வேண்டிய நிலை உள்ளது.

இந்த உணர்வுகளை அடிக்கடி தூண்டச் செய்து பௌர்ணமி மற்ற கூட்டுத் தியானங்களில் செயல்படுத்தும்படி செய்கின்றோம்.

கூட்டுத் தியானங்களில் அனைவருடைய எண்ணங்களும் வலுவான நிலைகள் சொல்லும் பொழுது
1.எல்லோரும் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று
2.எல்லோருடைய எண்ணங்களும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது இந்த உணர்விற்கு வலு கூடிவிடுகின்றது.

இவ்வாறு சேர்க்கப்படும் பொழுதுதான் அதனின் வலிமை கொண்டு நீங்கள் எண்ணும் பொழுது இந்தக் காற்றிலுள்ள அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

ஆகவே இதை எந்த நேரத்தில் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் கேட்டாலும் பார்த்தாலும் அடுத்த நிமிடமே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப் போல பிறர் வாழ வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் நீங்கள் முதலில் வாழ்கின்றீர்கள்.

1.பிறர் கெட வேண்டும் என்று எண்ணினால் முதலில் நாம் கெட்டுத்தான்… “கெட வேண்டும்” என்ற சொல் இங்கே விளைந்து
2.அந்த எண்ணங்களை எடுக்கும் பொழுது அங்கே அவர்களும் கெடுகின்றார்கள்.
3.ஒருவரை நாம் குறை கூறும் பொழுதும் குறையின் உணர்வுகள் நமக்குள் விளைந்த பின்பு தான்
4.குறையின் நிலைகள் பிறர் மேல் பாய்ச்சப்பட்டு அவர்கள் நினைவுக்கு வரும் பொழுது அது வருகின்றது.
5.எனக்குக் கஷ்டம் கஷ்டம் என்று சொன்னால் கஷ்டத்தின் நிலைகள் விளைந்து நம் ஆன்மாவாகி
6.நம் சொல்லே… நம் எண்ணமே… நமக்குக் கஷ்டத்தை ஊட்டுகின்றது.

இதிலிருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய தீமையைக் கண்டாலும் ஆத்ம சுத்தி செய்யுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று எண்ணுங்கள்.

உங்கள் நினைவினை அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கப்படும் பொழுது அதனின் வலுப் பெற்றால் நீங்கள் அதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் இணைகின்றீர்கள்.

இந்த வாழ்க்கையில் பிறர்படும் துன்பங்களையும் பகைமை உணர்வுகளையும் சேர்த்துக் கொண்டால் நாம் புவியின் ஈர்ப்புக்குள்ளேயே வந்து விடுகின்றோம்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட்டு நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவோம். பேரின்ப பேருவாழ்வு வாழ்ந்த அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைவோம்.

யாம் சொன்னதைப் பதிவு செய்து… “அதை எண்ணி எடுப்பவர்களுக்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கும்…”

 

புதிதாக வாங்கும் போது ஓரு பாத்திரம் அழகாக இருக்கின்றது. ஆனால் அதிலே அழுக்குகள் படிந்து விட்டால் இருண்டு விடுகின்றது. அப்போது அந்தப் பாத்திரத்தை பார்த்தால் எப்படி இருக்கும்…? நன்றாக இருக்காது.

பாத்திரத்தில் அழுக்குப் படும்போது அவ்வப்பொழுது அதைத் துடைத்துக் கொண்டு அல்லது தூய்மைப்படுத்திக் கொண்டு வந்தால் அது “பளிச்…” என்று இருக்கும்.

ஆனால்
1.அழுக்குகள் ஏறிய பின் தேய்த்துப் பார்த்தால் போகாது… களிம்பு ஏறி இருக்கும்
2.அதிகமான களிம்பு ஏறிவிட்டால் சொர சொரப்பு அதிகமாகிவிடும்
3.மீண்டும் அதைச் சுரண்டி அல்லது சாணை பிடித்துத் தான் சரி செய்ய முடியும்.

இது போன்றுதான் இயற்கையின் நிலைகளில் நாம் சுவாசிக்கும் உணர்வுகளில் நம்மை அறியாது ஆன்மாவில் அழுக்குகள் சேர்கிறது. அதைத் தூய்மைப்படுத்தாது விட்டுவிட்டால் பாத்திரத்தில் களிம்பு ஏறியது போல் தீயவினைகளாக உடலில் சேர்ந்து அதனால் பல பல தொல்லைகள் வந்து சேர்கிறது.

ஆகவே ஆன்மாவை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்திலும் சரி… மற்ற கூட்டுத் தியானத்திலும் சரி… உயர்ந்த சக்தியை எடுத்துப் பழகிக் கொண்டவர்கள் நீங்கள் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தை மறவாது பயன்படுத்துங்கள்.

தீமைகளைச் சந்திக்கும் போதெல்லாம் அல்லது நுகரும் பொழுதெல்லாம்… அல்லது எதிர்பாராது தீமைகள் வந்து மோதும் போதெல்லாம்… அதை மாற்றிக் கொண்டே வாருங்கள்.

1.எத்தனையோ வகைகளில் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டேயிருக்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருந்து கொண்டிருக்கின்றோம்.
3.அந்தச் சக்தி உங்களுக்குள் வந்து கொண்டு இருக்கின்றது… வலுவும் கூடுகிறது.
4.நினைத்தவர்களுக்குத் தான்…!

நினைக்காதவர்களுக்கு இல்லை… காரணம் உணவை எடுத்துச் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் தானே உள்ளே போகும்.

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! வீட்டிலே டிவி.யில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த ஸ்டேஷனில் இருந்து ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் காற்றிலிருந்து அதை இழுத்து நாம் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

ஆனால் நீங்கள் உங்கள் எண்ணத்திற்குள் எத்தனை ஸ்டேஷனை வைத்திருக்கிறீர்கள்…?

சண்டை போட்டவன் ஏமாற்றியவன் கேலி செய்தவன் திட்டியவன் கொலை செய்ய வந்தவன் என்று இப்படி எல்லா ஸ்டேஷனும் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

இப்படிப்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் போது என்ன செய்கிறது…?

சிரமமான நேரத்தில் அவர்களை எண்ணும் பொழுது அந்த ஸ்டேஷனுக்குள் இணைந்த பின் அடுத்து நமக்குள் நல்ல சிந்தனைகள் வருவதில்லை.
1.என்னை இப்படி ஏமாற்றினார்களே… அவர்களை என்ன செய்யலாம்…?
2.என்னைஇப்படித் திட்டினார்களே… அவர்களைச் சும்மா விடுவதா… இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று
3.இத்தகைய உணர்வு தான் மனதில் ஓடிக்கொண்டிருக்குமே (டி.வி.யில் படம் ஓடுவது போல்) தவிர நல்ல உணர்வுகள் வருவதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாம் செயல்படுத்த வேண்டியது எது…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.வரக்கூடிய தீமைகளை மறக்க இதை நாம் எடுத்தால் அதனுடைய வலு குறைகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது
3.ஆகவே இந்த ஸ்டேஷனைத் தான் நாம் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

வியாழனின் ஞான ரிஷி – ஈஸ்வராய குருதேவர்

 

ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்கின்றது. வளர்ப்பின் படர் பலவாகிப் பலவின் பல வளர்ந்தே உருவாகி உருவாகி உருண்டோடும் உரு குண வளர்ப்புச் செயலில் தொடர் கொண்ட நிலையில் வளர்வது தான் அனைத்துமே.

ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து ஒவ்வொன்றாக வளரும் வளர்ச்சி கதியில் உருவாகி உணர்வாகி செயலாகி செயலில் வழி பெறுவது பல.

1.இயற்கையின் உண்மை உணர்வில் உருண்டோடும் சக்திகள் எல்லாமே “அவன் படைப்பென்றாலும்”
2.அவன் படைப்பிலிருந்து நல் ஒளி படைப்புப் பெறுவது தான் “இறை ஞானம்..” என்பது.

பலவாக உள்ள இந்த உலகில் இயற்கைப் படைப்பில் மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித ஞானத்தை உயர்வாகச் செயலாக்கும் சக்தி உருவாகியுள்ளது.

1.இறை ஞானத்தின் சக்தியை உணர்ந்து வழி ஞானம் பெறவல்ல ஆற்றல் மனித குண ஞானத்திற்குத் தான் உண்டு.
2.உயர்த்துபவன்… உயர்ந்தவன்…! என்ற வமிசக் கோட்பாட்டை அறியும் ஞானம் மனிதனுக்குண்டு.

மனிதன் வாழ மற்ற இயற்கையும் துணை கொள்கின்றது. தீயது என்ற நிலை உள்ளதினால் தான் நல்லதைப் பிரித்துக் காண முடிகின்றது. நற்சக்தியின் செயலிலே சகல வளர்ப்பும் இருந்ததென்றால் ஞானத்தின் வளர்ப்பு நிலை பெறுவது எப்படி…?

1.சக்தியின் ஸ்வரூபத்தில் சகலமும் உண்டு.
2.சகலமும் இருந்தால் தான்… சகலத்திலும் இருந்து “உயர் உணர்வு எது…?” என்று செயல் கொள்ள முடியும்.

உயர் நிலை உணர்ந்து… உயர் ஞான இறை சக்தி அடைய… ஞானத்தை உணர்ந்து செயல் கொள்ளக்கூடிய நிலை “மனித உரு வளர்ச்சி கொண்ட வழித் தொடரில் தான் உண்டு…!” என்பதை உணர்ந்து இந்தப் பூமியில் மனித இன வளர்ச்சியை ஊக்குவித்தனர் சப்த ரிஷிகள்.

குருவாக இன்று நாம் சொல்லும் “வியாழனின் ஞான ரிஷி” தான் வியாழனின் மனிதக் கரு உரு நிலையிலிருந்து மனிதனின் அமில குண வளர்ச்சி சக்தியை அம்மண்டலத்தில் மனித இனங்கள் வாழ முடியாத வளர்ப்பு நிலை கொண்ட மண்டலமாக வியாழன் மாறும் தருவாயில் இங்கே பூமியில் மனிதக் கருவை வளரக் காரணமானவர்.

அதாவது அந்தச் சூட்சம ஞானச் செயல்… மனித இனத்தின் சுழற்சி வட்டம் சப்தரிஷியினால் ஈர்த்தெடுக்கப்பட்டு மீண்டும் மனிதக் கரு உருவாகவும்… மண்டலமாக நம் பூமியின் சக்தி அலையை வளர்க்கவும் செய்து… இப்பூமியின் ஈர்ப்பிற்கு மனித இனக் கருவை வளர்க்க விட்டனர் அன்று சப்தரிஷிகள்.

1.இன வளர்ச்சியில் ஞானத்தை உணர்ந்த அவர்கள் செயல்
2.அந்தந்தக் கால நிலைக்கொப்ப அவர்கள் பதித்த வளர்ச்சியிலிருந்தே
3.தன் வளர்ச்சிக்குப் பலம் கூட்ட தன் வளர்ப்பில் பயிராக்கிய பயிரிலிருந்து
4.மீண்டும் பயிராக்க “விதையைத்தான்” இன்று அவர்கள் சேமிக்கின்றார்கள்.

சப்தரிஷி உருவான அமிலக் கூட்டு இன நிலைக்கொப்ப தன் குண உணவையே தான் எடுத்து தான் வளர்ந்து இவ்வின வளர்ச்சி மங்கா நிலைக்காகத்தான் “சப்தரிஷிகளின் செயல்” இன்றுள்ளது.

1.இறைவனின் படைப்புத்தான் ஒவ்வொன்றும்
2.படைப்பின் படைப்பெல்லாம் அவனே தான்
3.அவனின் படைப்பில் இறை ஞானம் பெறும் மனித ஞானம் கொள்வது தான்
4.படைக்கப்பட்டவன் படைப்பின் பொருள் காணும் நிலை.

நாம் நம் வாழ்க்கையில் சாதாரண நிலையில் உணர்ந்து வாழ்ந்து ஜீவன் பிரிந்து செல்லும் நிலையில் உள்ள நிலையை அந்தந்தக் காலங்களில் சப்தரிஷிகள் பல உடல்களை ஏற்றுப் பல ஞானிகளை உருவாக்கிச் சென்றார்கள்.

ஆனால் இன்று வளர்ந்து பெருகியுள்ள மனிதனின் குண வழித் தொடர் யாவையுமே விஞ்ஞானம் என்ற உடல் பிம்ப சுகம் காணும் செயல் ஞானமாக வளர்ந்து வேரூன்றிக் கிளை விட்டுப் படர்ந்து விட்டது.

1.இதனை மாற்றியமைத்து
2.உயர் ஞானமான ஆத்ம ஞானத்தை வளர்த்து
3.இறை ஞானம் என்ற மனித அமில குண சக்தி ஈர்ப்பு வளர்ச்சி தரும் சப்தரிஷியின் ஞானமுடன்
4.நம் உணர்வின் செயல் இன்றுள்ள கால கட்டத்தில் செல்ல வேண்டிய குறுகிய காலமிது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதனைப்படும் பொழுது உற்றுப் பார்த்தால் பெரியவர்களுக்கு ஏதோ ஒரு விதமான வெறுப்பு வருகின்றது.

ஆனால் வேதனையுடன் கைக் குழந்தையைப் பார்த்தால் அதற்கு ஒன்றுமே தெரியாது. வேதனையுடன் இருப்பவர் பார்த்தால் குழந்தைக்கு எரிச்சல் வரும்… கை கால் குடைச்சல் வரும்.

சில கல்யாண வீட்டுகளில் பார்த்தால் தெரியும். குழந்தை இல்லாதவர்கள் சிலர் வருவார்கள். குழந்தையின் ஏக்கத்தில் இதைப் பார்ப்பார்கள்.

குழந்தை அழகாக இருந்தால் போதும். அந்த உணர்வுடன் ஆசையாகத் தூக்குவார்கள். பார்த்து அந்த உணர்வுடன் (தனக்குக் குழந்தை இல்லை என்ற வேத்னை) குழந்தையைக் கையில் தூக்கினால் போதும்.

அந்தப் பார்வையைப் பார்த்தவுடன் கைக் குழந்தை “சில்..சில்..சில்..” என்று அழுக ஆரம்பிக்கும்.

குழந்தையின் ஆசையில் அந்த ஏக்கத்தின் தன்மை கொண்டு
1.“தனக்குக் குழந்தை இல்லையே…!” என்ற
2.வேதனையான பார்வை பட்டவுடன் அந்தக் குழந்தை நிச்சயம் அழுகும்.
3.இதைத் தான் “கண் பார்வை… கண் திருஷ்டி, ஓமழிப்பு” என்று சொல்வார்கள்.

நாம் எதை எண்ணிப் பார்க்கின்றோமோ
1.அதனின் உணர்வு தன் கண் பார்வை பிறருடைய தீமைகளை உருவாக்கும்…
2.நம் நினைவின் ஆற்றல் அதைச் செய்யும்.

அதே சமயத்தில் நாம் வெறுப்பும் வேதனையும் கொண்டு ஒரு பொருளைப் பார்த்தால் பொருளின் தரத்தை நாம் உணர முடியாது.

நாம் வெறுப்போ கோபமோ அடைந்த பின் அந்த உணர்வின் நினைவு கொண்டால் தரமான ஒரு பொருளையோ துணிமணிகளையோ பார்த்துத் நிச்சயம் தேர்ந்தெடுக்க முடியாது.

காரணம்… நம்முடைய கண் பார்வையின் உணர்வுகள் எதுவோ அதற்குத் தக்கத்தான் அந்தப் பொருளின் தரத்தை நமக்குள் தெளிவாக்கும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்தல் நல்லது.

“வேதனைகள் வரும் போது தான்…” நம்மைப் பாதுகாக்கும் சக்தியைக் கூட்ட முடியும்

 

நமது வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். அதன் படி நடக்கவில்லை என்றால் ஒவ்வொரு செயல்களிலும் வேதனை கலந்தே வருகின்றது. ஆனாலும்…
1.”வேதனைப்படுகிறோம்… கஷ்டப்படுகிறோம்…” என்ற எண்ணங்கள் இப்படி வரும் பொழுதுதான்
2.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சக்தியும் உண்டு.

இருப்பினும் வேதனை வெறுப்பு சோர்வு என்ற உணர்வு அதிகரித்து விட்டால்… எத்தகைய நல்ல செயல்களாக நாம் செயல்படுத்திக் கொண்டிருந்தாலும் அதைச் செயல்படுத்த முடியாதபடி ஒரு சோர்வு வந்து விடுகிறது.

சோர்வடைய… சோர்வடைய… நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் சோர்வடையத் தொடங்குகிறது. சோர்வால் மீண்டும் வேதனை வருகிறது.
1.இப்படி வேதனைகளை நாம் அடுக்கடுக்காக இந்த உடலிலே
2.இப்போது சேர்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் – எந்த நிலையில் யாராக இருந்தாலும் சரி… அப்படித்தான்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் வேதனையிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான எண்ணத்தில் தான் வளர்ச்சியாக வந்தது.

இப்படி எல்லா வகைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்த நாம்… வீட்டிலே ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். அந்த நேரத்தில் ஒரு கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்து விடுகிறது.

நேற்றுத் தான் வாங்கி வந்தேன்… அதற்குள் இப்படி உடைந்து விட்டதே…! என்று மன திருப்தி இல்லாதபடி வேதனைப்படுகின்றோம். அன்றாட வாழ்க்கையில் இப்படி நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனை அல்லது சோர்வு அல்லது சஞ்சலம் என்ற இந்த உணர்வுகளைத் தான் கவர நேர்கின்றது… அதைத்தான் சுவாசிக்கின்றோம்.

இப்படி நுகர நுகர… நம் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் உருவாகத் தொடங்கி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிந்து நாம் விடுபட வேண்டும்.
1.இருந்தாலும் இது எல்லாமே உடலின் இச்சைகள் கொண்டு வருவது தான்.
2.ஆனாலும் இந்த உடல் வேண்டும்
3.இந்த உடல் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நம்மை அறியாது வரும் தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதாவது
1.பிற உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அது இயக்காதபடி
2.உடலுக்குள் அது அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் மூக்கு வழி நுகர்ந்தது (சுவாசித்தது) உயிரிலே பட்டுத்தான் அந்தந்த அறிவின் இயக்கமாக இருக்கின்றது. ஆகவே புருவ மத்தியில் (உயிரில்) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து இந்த வலுவைக் கூட்டி தீமையான உணர்வுகள் புகாதபடி தடுத்தல் வேண்டும்.

பின் கண்களை மூடி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று “ஒரு நொடிக்குள் கண்ணின் நினைவை உள்ளே செலுத்தி விட வேண்டும்…”

இப்படி ஒரு பழக்கம் வந்து விட்டால் உடலுக்குள் தீமை செய்யும் அணுக்கள் உருவாகாதபடி தடுத்துவிடலாம். இதற்கு முன்னாடி பதிவான உணர்வுகள் விளைந்தது… உடலிலிருந்து மீண்டும் அந்த நினைவுகள் வந்தாலும்… அதையும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆக… இந்த உடலுக்குப் பின் நாம் கொண்டு செல்வது எது…?

செல்வமோ சொத்தோ எல்லாம் இருந்தாலும் கடைசியில் நோயாகி விட்டால் அதை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது. முதலிலே சொன்னபடி வேதனைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பமாகத் தான் ஆகிவிடுகின்றது.

அதைப் போன்ற நிலையிலிருந்து தப்புவதற்கு ஒவ்வொரு நொடிகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆத்ம சுத்தியைக் கையாளுங்கள்.
1.தீமைகளை நீக்குங்கள்
2.அருளைப் பெருக்குங்கள்
3.இருளை அகற்றலாம்
4.அமைதியான வாழ்க்கை வாழலாம்
5.சிந்தித்துச் செயல்பட முடியும்
6.சிந்தனையுடன் வாழ்க்கை நடத்த முடியும்.

இதை எல்லாம் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

படைப்பது எல்லாம் இறைவன் என்றால் தீமையானதைப் படைக்காது நல்லதை மட்டும் படைக்கலாம் அல்லவா…!

 

புல்லைப் படைத்தான்… பூண்டைப் படைத்தான்… செடி கல் மண் நீர் அனைத்தையும் படைத்தான்… சகல ஜீவராசிகளையும் படைத்தான்… மனிதனையும் படைத்தான்…! இறைவன் படைப்புத் தான் எல்லாமே…!

1.மனிதனைப் படைத்த இறைவன்
2.மற்ற எல்லா நிலைகளைக் காட்டிலும் “மனிதனை” உயர் ஞானத்துடன் படைத்துள்ளான்
3.ஆனால் அவற்றை எல்லாம் படைத்த இறைவன் நம்மையும் படைத்து… அவ்விறைவனையும் வணங்கச் செய்கின்றானா..?

இயற்கையின் படைப்பில் படைப்புகள் அனைத்தும் அவன் படைப்பென்றால்
1.அவன் படைப்பில் “தீமைகளை எதற்குப் படைக்கின்றான்…?”
2.நல்லுணர்வையை படைத்து நற்சக்தியின் செயலையே அவன் பெற்றிருக்கலாம் அல்லவா…!

படைப்பில் ஏன் இறைவனுக்கு ஓரவஞ்சனைகள்…? நீங்கள் வணங்கும் ஆண்டவனுக்கு ஏன் படைப்பில் இப்படி மாற்றம்..?

தீயோனையும் நல்லவனாக்கலாம். தீய படைப்புகள் அனைத்துமே படைக்கப்படுவதற்கு முதலிலேயே நல்ல படைப்புகளாகப் படைத்திருக்கலாம் அல்லவா…!

1.கொடூர குணம் படைத்தவனும் நயவஞ்சகனும் இறைவனை வணங்கினால் இருள் நீங்கும்…!
2.இறைவன் ஒருவன் தான் அவர்களை மாற்ற முடியும்…! என்று
3.இறைவன் படைப்பையே… இறைவனிடம் வேண்டச் சொல்கிறான்
4.அப்படி என்றால் இறைவன் படைப்பில் “இனியவன்” என்பவன் யார்…?

ஆக… இறைவன் என்பவன் யார்…? அவன் எங்குள்ளான்…?

மனிதன் பிறப்பெடுத்து வாழும் காலத்திலேயே தன் பிறப்பை உயர்வாக உணர்ந்து தெய்வத்தின் படைப்பிலேயே உயர்ந்து நிற்கும் மனிதனுக்கு
1.எந்த இறைவனால் பலவும் படைக்கப்பட்டன என்று உணர்கின்றானோ
2.அவற்றின் துணை இல்லாவிட்டால் இவனால் வாழ முடியுமா..?

இயற்கையில் கலந்துள்ள தாவர இனங்களிலிருந்துதான் உணவை எடுக்கின்றான். நீரும் காற்றும் நிலமும் இவனை வளர்க்கிறது. இவன் உணர்வில் “தீயது” என்று உணர்த்தப்பட்ட ஒவ்வொன்றிலும் இருந்துதான் “நன்மை எது…?” என்று இவன் (மனிதன்) உணர்ந்து வாழ முடிகிறது.

1.படைக்கப்பட்ட இறைவனுக்கு எது சொந்தம்…?
2.அவன் படைப்பில் உருவான உரு அனைத்துமே “இப்படி இப்படித்தான் வளர வேண்டும்…” என்ற அவன் படைத்தானா…?
3.இறைவன் படைப்பு என்பது யாது…? உருவானது எந்நிலை கொண்டது…?
4.படைப்பில் பலவும் உள்ள பொழுது இறை ஞானம் என்று உயர்ந்து காண்பது எது…?
5.இன்றைய இவ்வுலகின் உண்மை நிலை என்ன…?
6.உலகை உருவாக்கி உருளச் செய்த உணர்வு உண்மை நிலை என்ன…?
7.இயற்கையின் படைப்புத்தான் எல்லாமே…! என்றாலும் படைப்பின் உரு நிலை எப்படிக் கொள்கிறது…?
8.இறை ஞானத்தின் உண்மையை உணர முடியுமா…?
9.உணர்ந்தோர் சொல்லும் நிலை உண்மைதானா…? என்ற எண்ணமும் எழலாம்.

மின்சாரத்தினால் நீங்கள் உபயோகிக்கும் சாதன முறைகளுக்கு எப்படி அந்த மின் விசை எந்தெந்த நிலையில் பாய்ச்சப்பட்டு அதற்குகந்த சக்தி வெளிப்படும் தன்மையில் மின் விசிறியும் மின் இயந்திர இழுவை நிலையும் ஒளி விளக்குகளும் செயல்படுகின்றனவோ அதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வின் எண்ண ஞானத்தை
2.எச்சக்தி அலையின் ஈர்ப்பில் பதிய விடுகின்றானோ
3.அதற்குகந்த சாதனை செயல் ருப வழியில் தான் மனிதன் இன்றுள்ளான்.

இது தான் உண்மை…! இறைவன் தனியாக யாருக்கு என்றும் எதுவும் கொடுக்கவில்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோபம் வந்தபின் நம்முடைய செயல்கள் எப்படி இருக்கும்…?

வேறு ஒன்றும் வேண்டியதில்லை. பெண்களுக்குக் கோபம் வரட்டும். தோசையைச் சுடச் சொல்லுங்கள்.
1.நெருப்பைக் கொஞ்சம் அதிகமாக்கி விடுவார்கள்
2.மாவை ஊற்றியபின் தோசை சட்டியிலே ஒட்டிக் கொள்ளும்… எடுக்க வராது.

“சே.. சனியன் பிடித்தது… தொலைந்து போகிறது இப்படிப் பண்ணுகிறது…!” என்று சொல்லிக் கொண்டு சட்டியைச் சுரண்டு… சுரண்டு… என்று சுரண்டுவார்கள்.

அப்புறமாவது அதைத் துடைக்க மனம் வருமா என்றால் வராது. மீண்டும் அப்படியே தோசையை ஊற்றுவார்கள். தோசை கருகிவிடும்.

“சனியன்… எவன் கண் பட்டதோ..?” நான் தோசை எப்படி எல்லாம் சுட்டிருக்கின்றேன்…? இப்பொழுது இப்படி ஒட்டிக் கொள்கின்றது என்பார்கள்.
1.இந்த உணர்வுகள் நம்மைச் சிந்திக்க விடாது
2.ஏனென்றால், அந்தக் கோப உணர்வின் செயல்கள் இப்படி.

கோபமான உணர்வுடன் பெண்கள் சமைக்கட்டும். அன்றைக்குப் பார்த்தால் குழம்பிலே மற்றதிலோ இரண்டு மிளகாய் அதிகமாகப் போட்டுவிடுவார்கள். வாயில் வைத்த பின்பு. “உஷ்ஷ்… தஷ்ஷ்… ஆ…” என்று சொல்லிக் கொண்டு தான் சாப்பிட வேண்டியதிருக்கும்.

அதே சமயத்தில் அவர்கள் வேறு ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும் என்றால் “டப்…” என்று வைப்பார்கள். சாப்பாடு போடும் போது பார்க்கலாம். “சொத்…” என்று போடுவார்கள்.

இதைப் பார்த்த பின்பு உங்கள் மனது எப்படி இருக்கும்…?
1.குழந்தைக்குக் கொடுத்தாலும் சரி மற்றவர்களுக்குக் கொடுத்தாலும் சரி, அந்தக் கோபம் தன்னாலே இயக்கும்.
2.ஆக… தப்பு செய்யாமலே தப்பு செய்ய வைக்கும்.

நாம் நல்ல மனம் கொண்டு நாம் நல்லதைச் செய்ய வேண்டும் என்று ஓங்கி வளர்த்திருந்தாலும் சந்தர்ப்ப பேதத்தால் என்ன நடக்கின்றது…?

ரோட்டில் போகும் போது ஒருவன் மற்றொருவரை உதைக்கின்றான். நாம் பார்க்கின்றோம்.

“பாவிப்பயல்… இப்படி அடிக்கின்றானே…! நடு ரோட்டில் போட்டு இப்படி அடிக்கின்றானய்யா…!” என்போம். அப்பொழுது அவன் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் நுகர்ந்துவிடுகின்றோம்.

நுகர்ந்த பின் என்ன சொல்வோம்…?

1.ரோட்டில் வைத்து இப்படித் தாக்குகின்றான்
2.இவனெல்லாம் உருப்படுவானா..? நாம் தன்னாலேயே பேசுவோம்.

அங்கே பதிவு செய்த உணர்வுகள் இங்கே வருகின்றது.

ஒரு இடத்தில் மிளகாயைத் தூற்றிக் கொண்டிருந்தால் மேலே பட்டால் என்ன ஆகும்…? நமக்குத் தெரியாது. ஆனால், காற்றிலே கலந்து அது வருகின்றது. நம் மேல் பட்டவுடன் எரிகின்றது.

அப்புறம் இன்னும் அதிகமாக எரிந்தால் என்ன செய்கின்றோம்?

சனியன்.. எங்கேயோ தூசி பட்டுவிட்டது போலிருக்கின்றது. குளித்தால் தான் எரிச்சல் போகும் என்று நினைக்கின்றோம். குளித்தால் தான் அந்த எரிச்சல் நீங்கும்.

அதே மாதிரி எங்கேயாவது சர்க்கரைப் பாகு காய்ச்சிக் கொண்டிருப்பார்கள். அது காற்றிலே கலந்து வரும். நாம் போகும் வழியில் நம் உடலில் பட்டபின் “பிசு…பிசு..” என்று ஆகிவிடும்.

நான் ஒன்றையுமே தொடவில்லை… இப்படி உடலில் “பிசு…பிசு…” என்று வந்து விட்டதே என்று நினைப்போம்.

இதை அப்படியே விட்டுவிடுகின்றோமா…? இல்லை. உடனே நாம் குளித்து உடலில் பட்ட அந்தப் பிசு பிசுப்பை நீக்குகின்றோம்.

இப்படி நம் வாழ்க்கையின் நிலைகளில் சில நேரங்களில் வெளியிலே நடந்து போகும் போது பிசு பிசுப்போ ஒரு எரிச்சலோ வருவதைப் பார்க்கலாம்.

சில இடங்களில் சோளம் அறுவடை ஆகியது என்றால் அதைத் தட்டிப் பிரிப்பதற்காக வேண்டித் தூற்றுவார்கள். அந்தச் சோளத் தூசியிலே சிறு மூக்கு மாதிரி இருக்கும். காற்றிலே கலந்தது நம் கண்ணுக்கே தெரியாது.

காற்றிலே கலந்து வருவது நம் உடல் மீது பட்டவுடன் “சுள்… சுள்…” என்று அரிப்பு எடுக்கும். நம்மை அறியாமலே இது நடக்கும். அப்பொழுது நாம் குளிக்காமல் இருக்க முடியுமா…? அப்படியே விட்டுவிடுகின்றோமா…?

புற நிலைகள் கொண்டு நம் உடல் மீது படுவதை நீக்குவதற்காகக் குளித்துத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

ஆனால் நாம் ஒரு தீமையான செயலைப் பார்த்துவிட்டு வந்தோம். நமக்குள் பதிவாகியிருக்கின்றது. நாம் போகிற பாதையில் பிறர் தவறு செய்வதைப் பார்க்க நேருகின்றது. அந்த மாதிரி நிலைகளைப் பார்த்தவுடன் வெறுப்பான நிலைகள் தன்னையறியாமலே வரும்.

இதைச் சுத்தப்படுத்த வேண்டுமா… வேண்டாமா…? என்று சற்றுச் சிந்தியுங்கள்.

சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்…? நம் உயிரிலே பட்டு அந்த உணர்வு அதன் வழியில் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும். இதைப் போல
1.எத்தனையோ தீமையான உணர்வுகளைப் பார்த்திருப்போம்…
2.அந்த அணுக்கள் நமக்குள் இருக்கும்… அதற்குச் சாப்பாடாகும். தீமையான அணுக்கள் வளரத் தொடங்கும்.

அதனின் நிலைகள் வளரப்படும் பொழுது நம் உடலில் என்ன நடக்கும்…?

எனக்குக் கால் வலிகின்றது, தலை வலிக்கின்றது, உடலெல்லாம் வலிக்கின்றது என்போம். நான் நன்றாகத் தான் இருந்தேன். இப்பொழுது ஏனோ தெரியவில்லை கழுத்து சுளுக்கிவிட்டது… நரம்பு பிடித்துவிட்டது… இங்கே சுண்டி இழுக்கின்றது என்றெல்லாம் சொல்வோம்.

இதெல்லாம் எதன் அடிப்படையில் வருகின்றது…?

சில நேரங்களில் நாம் பதிவு செய்த அந்தத் தீமையின் உணர்வுகள் வலுவாகப்படும் பொழுது நல்ல அணுக்களை அதை இயக்கவிடாதபடித் தடைப்படுத்தும்.

அப்பொழுது உடலில் வலி வேதனை வருகிறது. வந்தபின் டாக்டரிடம் சென்று மருந்து கொடுத்துத்தான் அதைச் சுத்தப்படுத்துகின்றோம்.

ஆனால்… அதற்கு முதலிலேயே தீமையைக் கண்டபின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் சுத்தப்படுத்துகின்றோமா..,?

1.அதற்காக வேண்டித்தான் உங்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.நீங்கள் அதை எடுத்து “நான் நன்றாக ஆனேன்… என்னைக் காத்துக் கொண்டேன்…” என்ற சொல் வரவேண்டும்.

ஏனென்றால் பல வகைகளிலும் அந்த விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.

1.கோபமும் வெறுப்பும் வேதனையும் வலுக் கொண்டது
2.உங்களுக்குள் நல்லதை வைத்திருக்கும் பொழுது அதை எடுக்கவிடாதபடி முன்னாடி நின்று தடுத்து விடுகின்றது.

அது போன்ற நிலைகளை எல்லாம் சுத்தப்படுத்தினால் தான் உடல் நலமும் மன வளமும் பெற முடியும்…. அந்த அருள் ஞானத்தையும் நீங்கள் பெருக்க முடியும். இதை உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்வதற்குத்தான் “ஆத்ம சுத்தி” என்று ரொம்பவும் எளிதாகக் கொடுத்துள்ளேன்.

பயன்படுத்திக் கொள்ளுங்கள். தீமைகளிலிருந்து விடுபடுங்கள். மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெறுங்கள். விண்ணும் மண்ணும் போற்றும் அந்த மெய்ஞானிகளில் ஒருவராக நீங்கள் ஆவீர்கள்.

புலி வருகிறது துப்பாக்கியால் சுடுங்கள் என்று சொல்கிறோம்…! பயன்படுத்த வேண்டுமா இல்லையா…?

 

செல்ஃபோன் எல்லோருமே வைத்திருக்கின்றோம். காந்தப் புலனால் இயக்கும் செல்ஃபோன்… அதற்குள் தொடர்பு என்ன இருக்கின்றது…?

வயர் (WIRE CONNECTION) இல்லை…
1.ஆனால் காந்தப் புலனால் கவரப்பட்ட உணர்வுகள் அது ஈர்க்கும் சக்தி… விஞ்ஞான அறிவால் வைத்த நிலைகள்
2.அதனுடன் தொடர்பு கொண்டு எங்கிருந்தாலும் நாம் இயக்க முடிகின்றது.
3.குறித்த எல்லைகள் வரையும் கொண்டு செல்ல முடிகின்றது.

வெகு தொலைவில் இருந்தால் சேட்டிலைட் மூலமாக அமெரிக்கா மற்ற ஏனைய நாடுகளுக்கும் தொடர்பு கொள்ள முடிகின்றது… பேசவும் முடிகின்றது… பார்க்கவும் முடிகின்றது.

இப்படி எப்போது வேண்டும் என்றாலும்… எங்கே வேண்டுமானாலும் நம்பரைத் தெரிந்து அழுத்தினால் உடனடியாக மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள முடிகின்றது. அவர்களுக்கும் :இன்னார் தான் பேசுகிறார்…” என்று அந்த நம்பரை வைத்து அறிய முடிகிறது.
1.அடுத்து அவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றால் அதை அணைத்துக் கொள்ளவும் (SWITCH OFF)
2.தொடர்பே வேண்டாம் (BLOCK) என்று நிறுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

இதைப் போன்று தான் சிலருடைய உணர்வுகளை உங்களுக்குள் அது இயக்காமல் தடைப்படுத்த… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

இது எல்லாம் உணர்வின் இயக்கங்கள் தான்…!

உங்களுக்குள் பதிவான தீமையான உணர்வுகளைத் தடைப்படுத்த “மிக மிகச் சக்தி வாய்ந்த நிலையைத் தான்…” இந்தத் தியானத்தின் மூலம் கொடுப்பது. ஆகவே இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துப்பாக்கியைக் கையிலே கொடுத்துப் “புலி வருகிறது… சுட்டு விடுங்கள்…!” என்று சொன்னால்
1.புலி வருகிறது… புலி வருகிறது… என்று சொல்லிக் கொண்டு
2.நீங்கள் சுடாமல் இருந்தால் என்ன ஆகும்…? புலி தாக்கத்தான் செய்யும்…!

அது உங்களைத் தாக்காது பாதுகாப்பதற்குத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம் “அதை நீங்கள் பயன்படுத்தும் முறைகளில் தான் இருக்கின்றது…” (ஞானகுரு)

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஆசையின் உணர்வுகள் எங்கே அழைத்துச் செல்கின்றது…?

1.நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.
2.அந்த வேதனை வந்த பின் சிந்தனை தவறினால் உடனே கோபம் வருகிறது.
3.கோபம் வந்தபின் அதைக் காட்டிலும் வெறுப்பான செயல்களைச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக்கூடிய செயல்கள்… நாம் செயல்படுத்தவில்லை. நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டுத் தான் அவ்வாறெல்லாம் இயக்குகின்றது.

ஆனால் அதை எல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது. அதை நாம் பயன்படுத்த வேண்டுமா இல்லையா…!

கருணைக்கிழங்கில் இருக்கக்கூடிய விஷத்தை வேக வைத்துப் புளியைக் கரைத்துவிட்டு… காரம் உப்பு என்று பல சுவையான சரக்குகளைப் போட்டு ருசியாக மாற்றுகின்றோம்.

இதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்
2.இல்லையென்றால் மனிதனாகப் பிறந்தும் பயன் இல்லாது தேய்பிறையாகப் போய்
3.இன்று மனிதன்… நாளைக்கு மனிதன் அல்லாத மற்ற உயிரினங்களாக உயிர் உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் தப்புவதற்குத் தான் மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகள் கிடைக்க வேண்டும் என்று பதிவு செய்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

யாம் சொன்னதைப் பயன்படுத்தும் போது “தக்க சமயத்தில்” உங்களுக்கு அந்தத் தீமையை நீக்கக்கூடிய உபாயங்களும் உயர்ந்த ஞானங்களும் உதயமாகும். அந்த ஞானத்தை வளர்த்தால் தீமை புகாது தடுக்கும் அந்தச் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

சாமி தீர்ப்பார் சாமியார் தீர்ப்பார் என்ற எண்ணத்திற்கு மாறாக “யாம் சொன்ன முறைகளைக் கடைப்பிடித்தாலே…”
1.உங்களுக்குள் இருக்கும் சக்திகளை நீங்கள் பயன்படுத்தித் தீமைகள் புகாது தடுத்து
2.உங்களையும் காத்து உங்கள் குடும்பத்தையும் காத்து அனைவரையும் காக்கும் சக்தியாக
3.பண்பை வளர்த்து அன்பை வளர்த்து மற்றவர்களுக்கும் பண்பினை ஊட்டி
4.நீங்கள் இடும் மூச்சுலைகள் காற்றிலே படர்ந்து தீமைகளை அகற்றும் சக்தியாக வரும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உயிரான ஈசனை மதித்து அவனால் அமைக்கப்பட்ட உடலை ஆலயமாக மதித்து நடத்தல் வேண்டும்.

“மகரிஷிகள் ஞானிகளின் தொடர்பு கிடைத்தால் தான்” கடுமையான தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட முடியும்

 

மனிதன் நல் உணர்வு கொண்டு வாழ்ந்தாலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் அவரின் பக்குவ முறை மாற்றத்தினால் ஏக்கம் சலிப்பு என்ற தொடர் குண ஆவேச எண்ணம் கொண்ட உணர்வலையில் சென்ற பின் உடலை விட்டு ஆவி பிரிந்தவுடன் அவர்கள் எங்கே செல்கிறார்கள்….?

பல எண்ண ஈர்ப்பில் சுழன்று ஆவி மிருக ஈர்ப்பிற்குச் சென்றும் மனிதனை ஒத்த அங்க அவயங்கள் அற்ற மிருக ஜீவிதத்திற்குச் செல்ல ஏதுவாகிறது.

உணர்வலையின் மாற்ற நிலை கொண்ட ஆத்ம பிம்பமே பல காலச் சேமிப்பு அமில ஈர்ப்பு உரு மாறி மனிதக் கருவிலிருந்து மிருகக் கரு நிலைக்குச் செல்லும் பொழுது
1.மாந்திரீக நிலைக்கு வசமாகிக் கொண்ட ஆவிகளின் உணர்வின் ஈர்ப்பும்
2.மாந்திரீகனின் ஆன்மா பிரிந்த பிறகு அவன் வசப்பட்ட ஆவிகளின் உணர்வு அமில சக்தி எந்நிலை பெறுகின்றது…?

மிருக ஜெந்துவிலேயே பல நிலை கொண்ட குண வளர்ச்சி ஜெந்துக்கள் உண்டு. மாந்திரீக வசப்பட்ட ஆவிகளின் ஈர்ப்பு மாந்திரீகன் வசப்படுத்தி வைத்துள்ள கால நிலை மாறுபட்டவுடன் இவ்வாவிகளுக்கும் சக்தி நிலை குறைந்து மீண்டும் பிறப்பு எடுக்க நாய்… குள்ள நரி… இவற்றின் ஈர்ப்பலை பிம்ப உடல் தான் பெற முடியும்.

நாய்க்கு உணர்வலைகள் அதிகம். மனிதனைக் காட்டிலும் நாய்க்கு மோப்பத்தால் ஈர்க்கும் நிலை துரிதப்படுகின்றது. சுவாச ஈர்ப்பின் நிலைக்கொப்பத்தான் செவி ஈர்ப்பும் கண் ஒளியும் அதற்கு உண்டு.

மாந்திரீகனால் வசப்படுத்திய ஆவிகள் மற்ற சாதாரண ஆவிகளைக் காட்டிலும் அதற்கு அதன் மாந்திரீக பூஜிப்பினால் ஈர்ப்பலை அதிகம் கொண்டுள்ளதினால் “நாயின் பிறப்பிற்குத் தான் செல்ல முடியும்…!”

ஆவிகளின் நிலையை உணர்த்தி வருகின்றேன். இதன் உண்மை நிலை என்ன…? ஆவிகள் உண்டா இல்லையா..? இதை உணர்வது எப்படி…? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகின் பல பாகங்களில் மாந்திரீக முறையில் பல அதிசயங்கள் நடப்பதை “ஆண்டவனின் ரூபம்…” என்று காட்டி ஏமாற்றி லிங்கமும் வேலும் விபூதியும் வருகின்றதல்லவா…!

அதுவுமல்லாமல் சில பொருள்கள் தானாக ஆடுவதும்… சிலர் பல மொழிகளில் பேசுவதும்… இந்த ஆவிகளின் தொடர் தான்.

மாந்திரீகனால் வசப்படுத்தப்பட்ட ஆவிகள் அவன் சொல்படி செயல்படுகின்றன. இந்த ஆவிகளுக்கு விமோசனம் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.

எல்லாமே ஆவி தான். மாந்திரீகனின் வசத்தில் சிக்குண்டு தன் நிலை உணராமல் செயல்பட்ட ஆவிகளுக்கும் உணர்வால் தன் நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சித்தர்களினால் அமைக்கப்பட்ட சில கோவில்களில் உடலுடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட “பல சித்தர்கள்” உள்ளார்கள்.
1.அவர்கள் உடலில் ஏற்றிக் கொண்ட சக்தி வாய்ந்த நுண்ணிய மின் காந்த ஈர்ப்பு ஒளியினால் இன்றும் சித்தாகி
2.உடலின் உணர்வு கொண்டு கோவில்களில் அவர்களுக்கென்று சமாதி குகை அமைத்திருகின்றனர்.
3.நல் நிலை பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டுள்ள மாந்திரீகர் வசத்திலிருந்த ஆவிகளானாலும் சரி…
4.கொடூர வேட்கையில் ஜீவன் பிரிந்த ஆத்மாவாக இருந்தாலும் சரி…
5.ஜீவ சக்தி கொண்ட சித்தனிடம் தன் உணர்வின் எண்ணத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு – அவர்களின் ஆசி கிடைத்தால்
6.சித்தர்களின் ஜீவ உடல் ஈர்ப்பில் சென்று தன் உணர்வு ஈர்ப்பை மீண்டும் “நல் உணர்வு கொண்ட மனித இன வளர்ச்சியில் வரலாம்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் நல்லவராக இருக்கின்றீர்கள். ஒருவர் கடுமையாக வேதனைப்படுகின்றார் என்றால் பாசத்தால் உற்றுப் பார்க்கின்றீர்கள். அப்பொழுது உங்கள் பாச உணர்வுகளில் இந்த வேதனை கலந்துவிடுகின்றது.

இரக்கத்துடன் அவருக்கு நல்ல உதவிகளைச் செய்கின்றீர்கள். நல்ல உணர்வுகளுக்குள் இந்த வேதனை கலந்தபின் ஒரு பாலில் பாதாமைப் போட்டபின் ஒரு துளி விஷத்தைக் கலந்து குடித்தால் மயக்கம் வருவது போல் ஆகிவிடுகின்றது.

இன்று மற்றவருக்கு இவ்வாறு உதவி செய்துவிடுகின்றோம். சிறுகச் சிறுக உங்களுக்குள் இது விளைந்த பின் உங்களுக்குத் தலைவலி மேல் வலி வரும்.

அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் இருக்கப்படும் பொழுது நீங்கள் எதையாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கச் சென்றால் நீங்கள் தரம் பார்த்து அவைகளை வாங்க முடியாது.

உங்களுக்குள் அந்த வேதனைப்பட்ட சோர்வான நிலைகள் கண்டு அந்தக் கலரும் பொருளும் தெரியும். அந்த மாதிரிப் பொருளை வாங்கிக் கொண்டு வந்துவிடுகின்றோம்.
1.ஏனென்றால் நமக்கு அது நல்ல சரக்காகத் தெரியும்.
2.ஆனால் வாங்கிய பொருளைக் கொண்டு வியாபாரத்திற்கு வந்தாலோ வியாபாரம் ஆவதில்லை
3.பார்த்த பின் “என்ன இந்த மாதிரி பொருளை வைத்திருக்கின்றீர்கள்..,?” என்று கேட்பார்கள்.

“நாம் நல்ல சரக்கு…” என்று சொல்வோம். ஆனால் அவர் உணர்விற்கு அது மட்டமாகத் தெரியும்.

மட்டமான சரக்கு வைத்திருக்கின்றார்கள்.. அதை வாங்கிச் செல்கின்றார்கள்…! நான் நல்ல சரக்கை வைத்திருக்கின்றேன் “வாங்க மாட்டேன் என்கிறார்கள்…” என்று நாம் சொல்வோம்.

ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை எதுவோ கண்களில் இந்த அலைகள் வரும். ஒரே கண்கள் தான்…!

உங்கள் கருவிழியைப் பாருங்கள்.
1.சோகமாக இருக்கும் பொழுது கண்ணின் ஒளிகள் எப்படித் தெரிகின்றது…?
2.கோபமாக இருக்கும் போது கண்ணின் ஒளிகள் எப்படி இருக்கின்றது…?
3.ஒரு சந்தோஷமாக இருக்கும்போது மகிழ்ச்சியின் நிலைகளில் கண்களின் ஒளிகள் எப்படித் தெரிகின்றது…?

இந்த உணர்வின் அலைகள் எந்த அலைக்குப் பாய்கிறது…? என்று எல்லோருக்கும் தெரியும்… தெரியாமல் இல்லை.

ஆனால்… இதைப் போன்ற இந்த உணர்வுகளை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும்…?

நல்லதை எண்ணிச் செயல்படும் பொழுது நல்லதையே தான் எண்ணுகின்றோம். நல்லவருக்குத் தான் துன்பம் அதிகமாக வருகின்றது. பாசத்தால் பரிவால் பிறருடைய கஷ்டங்களை எடுத்துக் கொள்கின்றார். ஆனால் அதைத் துடைக்கத் தெரிவதில்லை.

எல்லா அணுக்களிலும் இந்தத் தீமைகள் சேர்ந்துவிடுகின்றது. அப்பொழுது வியாபாரத்திலும் மந்தமாகின்றது. ஒரு சரக்கைத் தரமான நிலைகளில் பாதுகாக்க முடிவதில்லை.

அப்படிச் சங்கடமான பின் என்ன நடக்கும்…?

முதலில் வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பார். ஆனால். இப்பொழுது அந்த வீட்டைச் சுத்தப்படுத்தக்கூட மனது வராது… இருண்ட நிலை ஆகிவிடும்.

1.இப்படிப் பலருக்கு உதவி செய்து சங்கடமான நிலைகள் வளர்ந்து கொண்டபின்
2.அவருக்குள் அழுக்கான பின் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றோ
3.மற்ற பொருள்களைச் சீராக வைக்க வேண்டும் என்றோ அதெல்லாம் இருக்காது.

காரணம் அவருடைய தவறல்ல… இவர் நுகர்ந்த உணர்வுகள் அதனின் இயக்கமாக மாற்றும்.

ஒவ்வொரு நேரத்திலேயும் நாம் கையில் ஏதாவது ஒரு பொருளை எடுத்தோம் என்றால் கையைக் கழுவுகின்றோம். அதிகமான வேலை செய்து உடலில் வியர்வை வந்தால் குளிக்கின்றோம். வியர்வை அதிகமாகி துணிகளில் நாற்றமானால் உடைகளையும் மாற்றுகின்றோம்.

உதாரணமாக… நீங்கள் சுவாசிக்கும் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் மணமாக எப்படிப் பரவுகின்றது…? என்று பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் சாதாரணமாக (எப்பொழுதும் போல்) ஒரு சட்டையைப் போட்டுத் தனியாக வைத்துவிடுங்கள்.

அதே சமயத்தில் குளித்துவிட்டு வந்து வேறு ஒரு சட்டையைப் போட்டுச் சிறிது நேரத்தில் கழட்டிவிடுங்கள். அதைத் தனியாக வைத்துவிடுங்கள்.

அதே மாதிரி ஒரு மணி நேரம் தியானத்தைச் செய்து போட்டிருக்கும் அந்தச் சட்டையைக் கழட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மூன்றுக்கும் வாசனைகள் வித்தியாசத்தைக் காணலாம்.
1.காரணம் அந்த உயர்ந்த மகரிஷிகளின் நறுமணத்தை எடுக்கப்படும் பொழுது நம் ஆன்மாவில் அந்த நறுமணங்கள் வரும்.
2/இதையெல்லாம் தூய்மைப்படுத்தியவர்கள் அந்த மகரிஷிகள். அவர்கள்
3.தன்னில் தான் கண்டறிந்த உணர்வுகள் நமக்கு முன் பரவியிருப்பதை நீங்கள் நுகர்வதற்காக இதைச் சொல்கிறேன்.
4.உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி அந்த மகரிஷிகளின் நறுமணங்களைச் சுவாசித்தால்
5.உங்கள் ஆன்மாவில் அது பெருகி உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

பிறருடைய தீமையான உணர்வுகள் என்பது சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் – “வால் நட்சத்திரம் போன்றது தான்…”

 

உதாரணமாக நாம் வாழும் இந்தச் 2000 சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் தான் வால் நட்சத்திரம் என்பது. அக்காலங்களில் இதைத் “தூம கேது…” என்றும் சொல்வார்கள்.

சூரியனால் இழுத்து வரப்படும் போது வேகத்தால் வான் வீதியில் மற்ற அணுக்களோடு மோதும் பொழுது “ஒளி வெள்ளமாக… நீளமாக…” அது தெரிகின்றது.

ஆனால் சூரியனுக்குப் போகும் பாதையில் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து விட்டால்… பூமி இழுத்துக் காற்றழுத்த மண்டலத்தில் மோதும் போது நெருப்பாக மாறி… நம் பூமிக்குள் விஷத்தன்மையாகப் பரவி விடுகின்றது… “சுத்திகரிக்கும் நிலை இல்லாது போய் விடுகின்றது…”

எந்தப் பிரதேசத்தில் இது அதிகமாகப் பரவுகின்றதோ
1.அந்த இடத்தில் வாழும் மக்களுக்கு அதிகமான நோய்கள் வரும்
2.தாவர இனங்களுக்கும் மாற்றங்கள் வரும்…
3.விஷத்தன்மை கொண்ட கிருமிகளை உருவாக்கும் சக்தியும் பரவும்.

அரசர்கள் ஆட்சி புரியும் காலத்தில் வால் நட்சத்திரம் (தூமகேது) தெரிந்தாலே அவர்கள் மத ஆச்சாரப்படி அங்கே உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்பட்டு… மனிதர்கள் சிந்தனை குறைந்து… அதனால் சாம்ராஜ்யத்தை ஆட்சி புரியும் நிலையை அரசன் இழந்து விடுகின்றான்… அல்லது அழிகின்றான்.

ஆகவே வால் நட்சத்திரம் எந்தப் பிரதேசத்தில் தென்படுகின்றதோ “அந்த அரசனுக்கு ஆகாது…!” என்று அக்காலங்களில் சொல்வார்கள்.

ஏனென்றால் இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.பிறர் உடலில் விளைந்த தீய உணர்வுகள் (வால் நட்சத்திரம் போல்) சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
2.இந்த பரமாத்மாவில் காற்று மண்டலத்தில் அலைகளாகப் பரவினாலும்
3.நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் ஊழ்வினை என்று வித்தாக நம் செல்களில் பதிவாக்கி விடுகின்றது.

வேதனைப்படும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் தான் “வேதனைப்படுகிறார்…” என்று அறியத் தெரிகின்றது. ஆதே போல் அதிர்வான செயல்களைக் கண்டு நுகர்ந்த பின் நமக்கு அச்சத்தை ஊட்டி விலகிச் செல்லும்படியும் செய்கிறது… அந்த உணர்வுக்கொப்ப.

உயிரிலே பட்டால் பயம் வருகிறது… வேதனை வருகின்றது. இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் இரத்தத்தில் அது கலந்தால் இதே அணுக்களை உருவாக்கி விடுகின்றது. (அதாவது வால் நட்சத்திரத்தின் விஷத் தன்மைகள் பூமிக்குள் கவரப்பட்டால் அந்தந்த இட்த்தில் விஷத்தன்மைகள் பரவுவது போல்).

அதைத் தடுத்து நாம் நல்லதாக மாற்றி அமைக்க வேண்டுமல்லவா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்தி
1.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும்.
2.எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர வேண்டும்
3.ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று
4.முந்தி இது போன்ற உணர்வுகளை எண்ணங்களைச் செலுத்தி விட்டால்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

இப்படிச் செய்யும் போது அந்த்த் தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது… இரத்தத்தின் வழி உள்ளே செல்லாதபடி தடுக்கப்படுகிறது.

இப்படி அடிக்கடி நாம் தடுத்துப் பழகும் இந்த உணர்வுகள் தான்… சிறிது நேரம் இதை எடுத்துக் கொண்டால்
1.உள்ளுக்கே இது பிடிக்கவில்லை என்றால்… அதாவது அதன் மீது பற்று இல்லை என்றால் “உள்ளே இழுக்காது…”
2.ஒரு காந்தத்தை (MAGNET) வைக்கும் போது இடையிலே ஒரு காகிதத்தையோ அல்லது ஒரு அட்டையையோ கொடுத்துவிட்டால் அது எப்படி இரும்பை இழுக்காதபடி தடைப்படுத்துகின்றதோ அது போன்று
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இடைமறித்து உள்ளே செலுத்தி விட்டால்
4.அந்த வேதனைப்படும் உணர்வுகளை இழுக்காதபடி அனாதை ஆக்கி விடலாம்.

ஏனென்றால் நம் உடலில் ஏற்கனவே உருவான அல்லது புதிதாக உருவாகும் தீய அணுக்களுக்கு “ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தும் முறை தான் இது…” (மேலே உள்ள Sl No 2 – மிகவும் முக்கியமானது)

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைச் செய்து பழகினாலே தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி அனாதையாக்கப்படுகின்றது. ஈர்க்கும் சக்தி இவ்வாறு இழக்கப்படும் போது பிடிப்பில் இல்லாத இந்த உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து மாற்றிவிடுகின்றது.

ஏனென்றால் இந்தப் பூமியின் பிடிப்பில் எது இல்லையோ அதை அனைத்துமே சூரியன் கவர்ந்து கொள்ளும். நம் ஆன்மா… ஜீவான்மா… உயிரான்மா… எல்லாமே தூய்மையாகிறது.
1.ஞானிகள் எல்லாம் இத்தகைய ஆற்றலைப் பெற்றவர்கள் தான்.
2.தீமை வராது தடுத்து அவருக்குள் விளைந்த உணர்வுகள் சொல்லாக வரும் பொழுது நாம் கேட்டால்
3.அந்த உணர்வுகள் நமக்கு நிச்சயம் நல்வழி காட்டும்
4.சிந்தித்து செயல்படும் தன்மையும்… தீமைகள் புகாது… நோய்கள் வராது… பாதுகாக்கும் தன்மைகளும் பெறுகின்றோம்.

மனிதனின் ஞானத்தை வெளிப்படுத்தும் அங்கமே “கைகள்”

 

நாசி சுவாசிக்கின்றது… கண் பார்க்கின்றது…!
1.கண் பார்க்கவும் செவி கேட்கவும்… வாயில் உமிழ் நீர் சுரக்கவும்…
2.உடலில் எல்லா நரம்பும்… அணுக்கள் துடிக்கவும் உணர்வுகள் உந்தவும்
3.எண்ண ஓட்ட நிலைகள் சர்வ சதா காலத்திலும் சுழன்றே
4.ஆத்ம பிம்பமுடன் ஜீவ உயிர் வாழுகின்றது.
5.உறக்கத்திலும் உணர்வுள்ளவனுக்கு எண்ணமுண்டு.

இவ்வெண்ணத்தின் ஓட்டம் எப்படி… எப்பாதையில் ஓடுகின்றதோ… அந்தப் பாதையின் உணர்வுடன் மீண்டும் மோதி அவ்வுணர்வின் சுவாசம் எடுத்து எண்ண ஓட்டத்தின் வழிப்படிச் செயலாக்க அங்க அவயங்களில் எச்சக்தியையும் செயல்படுத்திக் காட்டிடக் கையின் நிலை இல்லாவிட்டால் செயல் ரூபம் இந்த உலகில் எதுவுமே இல்லை.

1.செயலை வெளிப்படுத்தும் அவயம் தான் “கை…”
2.கையின் ஈர்ப்பிலே பிம்பத்தின் (உடலின்) சக்தி அனைத்தும் வெளிப்படுகிறது.
3.மற்ற அவயங்களின் சக்தியை வெளிப்படுத்துகின்றது.
4.ஞானத்தை உணர்த்துவதும் இக்கை தான்.

பலவாக உள்ள ஒன்றான பிம்ப உடலை… செயலை… எப்படி இந்தக் கை வளர்க்கின்றதோ அதைப் போன்று தான் பலவாக உள்ள உலக வாழ்க்கையில் பக்தி கொண்டு தெய்வ நம்பிக்கையை வழி காட்டினான் நம் சித்தன்.

ஆத்ம பிம்ப மனிதச் சக்திக்கே செயலாக்கும் அங்கமாகக் கையைக் கொண்டு தான் செயல்முறை வெளிப்படுகிறது.

இந்த உடல் பிம்ப ஜீவன் பிரிந்த பிறகும் மீண்டும் மனிதக் கரு வளர்ச்சியில் வரும் சிசுக்கள் பிறந்து சில மாதங்கள் கருவின் வளர்ப்பிலேயே அவயங்களின் முக்கியமான கையை மூடிக் கொண்டே தான் பிறக்கும்.
1.கையை மூடிக் கொண்டு சுவாசம் எடுக்கும் பொழுது
2.உடலின் சக்திகள் விரயப்படாது.

மனித பிம்ப செயலை உணர்த்த வல்ல இக்கையின் ஈர்ப்பு குண அமிலம் மாறுபடாத ஈர்ப்புடனே தான் சிசு உற்பத்தியாகின்றது.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு கையின் அவயங்கள் செயல்படும் முறை கொண்டு தான் அக்குழந்தை வளரும் முறையை அறியலாம். பிறந்ததும் மற்ற அவயங்களின் உணர்வை அக்குழந்தை கையை ஆட்டித் தான் வெளிப்படுத்துகின்றது. சில நாட்களுக்குப் பின் காலை ஆட்டும்.

பிறந்த குழந்தைகள் சில பிறந்தவுடனே கையை ஆட்டிக் கொண்டிருக்கும். அக்கையை ஆட்டும் குழந்தையின் ஞானமும் அக்கை ஆட்டும் முறை கொண்டு ஞானத்தின் நிலையும் அறியலாம்.

1.மனிதனின் ஞானத்தைச் செயலாக்கும் கை என்ற உறுப்பு மனிதனுக்கு இல்லா விட்டால்
2.மிருக நிலைக்கும் மனித நிலைக்கும் மாறுபாடில்லை.
3.மனிதனின் ஞானத்தை வெளிப்படுத்துவது கை.

ஞான நல்லறிவு குறைந்த உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு அவ்வாத்மா மற்ற ஈர்ப்பலையில் சென்று மனிதக் கருவிற்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது.

இன்று இந்தக் கலியின் மாற்ற காலத்தில் மனிதனின் ஞானம் குறைவுபட்டுக் கல்கியுக வளர்ச்சிக்கு ஞானத்தின் குறைவு கொண்ட மனித அமில குண பிம்ப உடல்கள் பெறும் ஆத்மாக்களுக்கு.. மீண்டும் இன்றுள்ள அங்க அவயப் பொலிவு இழந்தே… மிகவும் குறுகிய உடல் அமைப்பும் குரங்கினத்தின் அவயங்களை ஒத்த கை கால்களின் வளர்ச்சி பிம்பம் தான் ஏற்படும்.

மனிதர்களிலேயே இன்று சிலருக்கு அமில ஈர்ப்பு வளர்ச்சி அமையப்படாமல் கை கால்கள் சூப்பிய நிலையில் குறுகிய உடலமைப்பு கொண்டவர்களைப் பார்க்கின்றோம்.

மிகவும் அல்லல்பட்டு துன்புற்று ஜீவிதத்திற்கே கஷ்டப்படும் ஆத்மாக்களின் தாய்மார்கள் சிலருக்கு.. சிலருக்கென்ன…!
1.இந்நிலையில் உள்ள பல தாய்மார்களின் குழந்தைகள்
2.இப்படித்தான் இன்றும் பிறக்கின்றன.
3.இதன் தொடர்ச்சி குண குழந்தைகள் தான் வரப்போகும் ஆண்டுகளில் அதிகமாகப் பிறக்கப் போகின்றன.

ஏனென்றால் எண்ணத்தில் வளர்ச்சி ஞானம் அற்று இம்மனித பிம்ப வாழ்க்கையில் அல்லலுறும் ஆத்மாக்கள் மலிந்து விட்டன. மனிதனான அமிலத்தை அழித்தவனே மனிதன் தான்.

ஞானமற்ற வாழ்க்கையை… சலிப்புடனும் சங்கடத்துடனும் ஏக்கமுடன் ஏங்கி வாழும் வாழ்க்கை முறை மாற வேண்டும்.

ஆண்டவனிடம் ஏங்கிக் கேட்கின்றான் மனிதன்…!
1.ஏக்கத்தில் வளரும் சலிப்பு சங்கட குண மனிதனுக்கு
2.ஞானத்தால் வெல்லும் நிலையற்றதாகி விடுகிறது.

இத்தகைய உணர்வுச் சுற்றல் குணங்கள் நிறைந்துள்ள இன்றைய இக்கலி மனிதனின் வளர்ச்சி இதே சுழற்சி ஓட்டத்தின் ஈர்ப்பு குண அமிலம் அவனுக்குள் கூடிக் கூடி… இதன் செயலில்தான் அடுத்த கல்கியுக இனக்கருவும் வளருமப்பா…!

வறுமையும் இன்னலும் அற்று மற்ற மேற்கத்திய தேசங்களிலுள்ள மனித ஆத்மாக்களில் பலரோ போதை நிலையின் அடிமையினால் எண்ண ஞானமற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களின் பிம்ப உடல் ஆத்மா பிரிந்து சென்ற பின் அந்நிலைக்கொப்ப வளர்ச்சி அமில குண கரு தோன்றி வரும்.

1.எண்ணத்தின் ஞானத்தை வெளிப்படுத்தும் சக்தி அவயமான கை தான் மனித இனத்திற்கே மிகவும் முக்கியமானது…
2.ஆனால்… ஞானத்தின் வளர்ச்சி எடுக்காத பிறப்பற்ற உணர்வலையில் செல்லும் பொழுது
3.தான் பல ஜென்மங்களில் சேமித்த அமில குண சக்தியையே இழக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு
4.மனிதக் கரு உருவ நிலை மாறு கொண்ட பிம்பத்திற்குச் சென்று
5.அங்க அவயங்களின் சக்தியை வெளிப்படுத்தும் செயலாக்கும் திறமையுடைய – “கை இல்லாமல் பிறப்புக்கு வருகின்றது…!”

அதாவது “பிறப்பு…!” என்பது மற்ற ஜீவராசிகளின் “ஈர்ப்பலையின் பிறப்பு…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

(அகஸ்தியன்) துருவன் தன் ஐந்தாவது வயதில் மகா சித்து பெற்றான் என்று சொல்வார்கள்.

ஏனென்றால் ஐந்தாவது வயதில் துருவனின் தாய் தந்தையர் இறந்த பின் அவன் துருவத்தை நோக்கித் தவமிருந்தான் என்றும் சொல்வார்கள்.

அதே சமயத்தில் அவன் பதினாறாவது வயதை எட்டப்படும் பொழுது அக்கால மக்கள் அவனுக்குத் திருமணத்தை முடிக்கின்றார்கள். வசிஷ்டர் அருந்ததி என்பார்கள். அதாவது அருந்ததி என்ற மனைவியைத் தனக்குள் இணைக்கின்றான்.

விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் கண்டாலும். அந்தப் பதினாறாவது வயதிலிருந்து கணவனும் மனைவியும் ஒன்றாகச் சேர்த்து தன் மனைவிக்கும் அது பெற வேண்டும் என்று எண்ணிப் பாய்ச்சுகின்றான்.

அவனின் மனைவியும் இந்தச் சக்தியைத் தனக்குள் பெற்று மீண்டும் அது தன் கணவனுக்குப் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுகின்றது.

இப்படி அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் உயர்ந்த நிலைகளில் எண்ணி வரப்படும் பொழுதுதான் “சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள்…” எனும் நிலையாகப் பிறவியில்லா நிலையை அடைந்தனர்.
1.அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி இரு மனமும் ஒன்றாகி
2.இரு உயிரும் ஒன்றான நிலைகள் கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக மாறி
3.இன்றும் விண்ணுலகில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதற்காகத்தான் சிறு குட்டிக் கதைகளைப் போட்டுக் காட்டி மார்க்கண்டேயன் என்று காட்டுகின்றார்கள்.

(விண் செல்லும்) “மார்க்கத்தைக் கண்டவன்” – மார்க்கண்டேயன்.

உனக்கு எந்தக் குழந்தை வேண்டும்…? என்று கேட்கப்படும் பொழுது
1.எனக்கு என்றும் பதினாறு என்ற நிலைகளில்
2.விண்ணிலே ஒளியாக வாழும் அந்தக் குழந்தைதான் வேண்டும் என்று
3.காவியப் படைப்பில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

நாம் தெரிந்து கொண்டோமா..,? சற்று சிந்தியுங்கள்.

இவ்வாறு பதினாறாவது வயதில் அவர்கள் இருவரும் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் கணவனும் மனைவியும் ஒன்றிய நிலைகள் கொண்டு துருவ மகரிஷி என்ற நிலை அடைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

என்றும் பதினாறு என்று இளமைப் பருவமாக வளர்ந்து கொண்டேயிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.
1.அந்த அகஸ்தியனை[ப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவருமே
2.என்றும் பதினாறு என்ற நிலையில் இன்றும் வளர்ச்சி பெற்றுக் கொண்டேயுள்ளார்கள்.

“கஷ்டமான நேரங்களில் தான்…” யாம் கொடுக்கும் சக்தியை அதிகமாக எண்ணி எடுக்க வேண்டும்

 

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எல்லோரையும் தியானிக்கச் சொல்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல… சாஸ்திரங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டது தான்…!

1.ஆனால் துருவ நட்சத்திரம் என்றால் என்ன…? என்று கேட்கின்றார்கள் அந்த அளவுக்குத் தான் இருக்கின்றது பிழைப்பு…
2.துருவ நட்சத்திரம் என்றால்… “அது என்ன…? புதிதாகச் சொல்கிறீர்கள்…!” என்று கேட்கின்றார்கள்.

இராமாயணத்தில் இருக்கின்றது… மற்ற எல்லாவற்றிலும் இருக்கின்றது. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் அறுத்துத் துண்டாக்கி விட்டார்கள்… நாம் புரிந்து கொள்ளாதபடி ஆக்கிவிட்டார்கள்.

காலையில் ஒரு அரை மணி நேரமாவது வடகிழக்கிலே விண்ணிலே நினைவைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.
1.வடகிழக்கில் தான் விநாயகரை வைத்திருப்பார்கள்…
2.சிவனுடைய நிலைகளும் சில இடங்களில் அப்படித்தான் அதுவும் வடக்கிழக்கில்தான் இருக்கும்.

வடகிழக்கைப் பார்த்து ஈஸ்வரா…! என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் ஏங்கி… அந்த உணர்வுகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும். சாஸ்திரப்படி இது உண்மை…!

உங்களுக்கெல்லாம் இதைப் பதிவாக்கி வைத்துவிட்டோம். நீங்கள் வடகிழக்கைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
1.எப்பொழுது வேண்டுமென்றாலும்… எந்தத் திசையை நோக்கினாலும்… காற்றிலிருந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற முடியும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் இங்கே மிதந்து கொண்டிருக்கின்றது.

காரணம்… நீங்கள் எண்ணிய உடனே அந்தச் சக்தி கிடைப்பதற்குத் தான் இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

திட்டியவனை எண்ணியவுடன் எப்படி அவனுடைய நினைவுகள் உங்களுக்கு வருகின்றதோ அது போன்றுதான் என்னைச் சந்தித்து “யாம் சொன்ன முறைப்படி எண்ணுபவர்களுக்கெல்லாம்…”
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் துன்பங்கள் துயரங்கள் அகல வேண்டும் என்றும்
3.நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் சாதாரண நிலையில் பிறரை எண்ணும் போது உங்களுக்கு எத்தனையோ துன்பங்கள் வருகின்றது. ஆனால் நான் பதிவு செய்யும் ஞானிகள் உணர்வுகள்… கஷ்டம் போக வேண்டும் என்று அந்த உணர்ச்சிகளை யாம் உந்தப்படும் பொழுது அதை நீங்கள் எண்ணினால் உங்களுக்கு அது கஷ்ட்த்தை நீக்கக்கூடிய சக்தியாக வருகின்றது.

நான் உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது… அதை விடுத்து விட்டு
1.என் பையன் இப்படி இருக்கின்றான்
2.என் தொழில் இப்படி இருக்கின்றது
3.என் குடும்பம் இப்படி இருக்கின்றது
4.கடன் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லையே
5.என் உடலில் ஏதாவது நோய் வந்து கொண்டே இருக்கின்றது என்று இப்படி எண்ணினால் அதைப் பெற முடியாது.

எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்று தான் தொடர்ந்து இதை நான் குரு இட்ட கட்டளைப்படி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

நான் ஆசைப்பட்டு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றேன். ஆனால் நீங்கள் ஆசைப்பட வேண்டுமா… இல்லையா…!

சாமி நன்றாகத் தான் சொல்கின்றார்…! என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்று அதன் மீது எண்ணங்களை வலுவாக்கி விட்டால் யாம் சொல்லும் நிலைகளை எண்ணவே வராது.

வேதனை… வேதனை… நோய்…! என்று தான் எண்ண முடியுமே தவிர “அதை நீக்கிப் பழக வேண்டும்…” எண்ணத்திற்கு அது விடுவதில்லை ஆக மொத்தம் தெய்வத்திடம் சென்று முறையிட்டு… என்னை “இப்படிச் சோதிக்கின்றாயே…!” என்று கேட்பது போன்று தான் எண்ணுகிறார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துன்பங்களிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா…? யாம் சொல்லும் முறைப்படி எண்ணுகின்றார்களா…!

ஆனால் எல்லாவற்றையும் பதிவாக்கிக் கொடுக்கின்றோம்.
1.கஷ்டமான நேரங்களில் தான் “இதை எடுக்க வேண்டும்…” என்று சொல்கின்றோம்
2.ஆனால் கஷ்டமான நேரங்களில் தான் இதை விட்டு விடுகின்றார்கள்…!

ஏனென்றால் குருநாதர் எனக்கு இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து மிக மிக உயர்ந்த சக்தியைப் பெறும்படி தகுதி ஏற்படுத்தினார். அதையே தான் உங்களுக்கும் செயல்படுத்துகிறோம்.

“பறக்கும் நிலை”

 

சப்தரிஷிகள் தான் பூமியின் வளர்ச்சியில் மனிதக் கரு தோன்றி மனித ஞானம் பெற வழி வகுத்தனரே…!
1.இக்கலி மாறி கல்கியில் மனிதக் கரு வளரவும் மனித ஞானம் வளரவும்
2.சப்தரிஷிகளே ஏன் மீண்டும் அவர்களின் செயலைச் செயலாக்கிடக் கூடாது..? என்ற வினா எழும்பலாம்.

செடி சிறிதாக உள்ள பொழுது அதற்குகந்த ஆகாரத்தைச் செலுத்தினால் போதும். வளர வளர வளர்ச்சிக்குகந்த ஆகாரம் தேவைப்படுகிறது. வளர்ந்து முதிர்ந்த மரமாக ஆன பிறகு தன் உணவைத் தானாகவே எடுத்துக் கொள்ளும் வளர்ச்சியில் மரமுள்ளது.

சிறிய பயிர்களுக்கு நீர் ஊற்றித் தான் வளர்க்க வேண்டும். முற்றிய மரத்திற்கு அதன் உணவை அதுவே எடுத்துக் கொள்ளும்

அதைப் போன்று சப்தரிஷிகள் அவர்களின் சக்தியைப் பூமியின் கரு வளர்த்துச் செயல்படுத்த ஆரம்ப வளர்ச்சிக்கு ஆரம்ப நிலைக்குகந்த உணவு படைத்தால் போதும்.

வளர்ச்சியின் பெருக்கம் கொண்ட பிறகு வளர்ச்சிக்குகந்த உணர்வலைகளை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று பலவாகப் பெருகியுள்ள மனித எண்ணங்களின் ஈர்ப்பு நிலைக்கும் கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் காலங்களின் (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) எண்ண ஈர்ப்பிற்கும் பல மாற்றங்கள் உண்டு.

1.பெருகியுள்ள இன வளர்ச்சியின் அழிவு நிலை நெருங்கிவிட்டது.
2.மனித ஆத்மாக்களுக்குத் தன் உணர்வைத் தான் அறியும் பக்குவ முறைகள் எல்லாம் மாறிவிட்டது
3.உலகப் பொது எண்ணச் சுழற்சி ஈர்ப்பே நாகரீகம் என்ற உணர்வின் பேராசைப் பிடிப்பில் செயல்பட்டு விட்டது
4.ஆகவே அவ்வாறு பெருகிய மனித இனக்கரு இக்கலி மாற்றத்தில் மாறப் போகின்றது.

இந்த மாற்றக் காலத்திற்குள் சப்தரிஷிகளினால் இவ்வளவு காலங்களும் அங்கங்கு செடியாக உள்ள பயிருக்குகந்த உணவளித்த நிலையில்… அந்தப் பயிரே மரமாகித் தன் உணவை எடுத்துக் கொள்ளக்கூடிய ஞான நெறி முறைக்கு ஈர்த்துச் செல்கின்றனரப்பா…!

பஞ்சாக உள்ள எண்ணங்களை பஞ்சைப் பக்குவப்படுத்தி பதம் பிரித்து அதனதன் குணத்திற்கொப்ப நூற்பு நிலை ஏற்படுத்தி இந்தப் பஞ்சுடன் கலக்கும் அமில வண்ணத்தை ஏற்றி ஆடை நெய்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று பஞ்சாக உள்ள பக்தி நெறி முறை உணர்த்தி அந்தந்தக் கால நிலைகளுக்கு ஒப்ப சப்தரிஷிகளின் உணர்வலையால் அவர்களின் உணர்வுக்குகந்த பக்குவ முறைகளை ஏற்றித் தன் ஈர்ப்பின் ஞானச் சுழற்சியுடன் சுழல விட்டுக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் நிலையை… சப்தரிஷி தான் ஆண்டவன் என்று உணர்த்துகின்றீரே…!
1அப்பொழுது இந்தப் பூமியின் சக்திகளை எல்லாம் தந்தது அவர்கள் தானா…? என்ற வினா எழும்பலாம்.
2.இவ்வினாவிற்கு விடை ஆம் என்பது ஒன்றே தான்.

சப்தரிஷியினால் ஏற்படுத்திக் கொண்ட மண்டலங்களின் நிலையினால் தான் ஒவ்வொரு மண்டலத்தின் தொடர்பைக் கொண்டு… அதனதன் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு… அது வெளிப்படுத்தும் உணர்வு குணத்தினால் தான் மணமும்… மணத்திற்குகந்த சுவையும் வண்ணங்களும் நம் பூமியில் தோன்றின.

பல சக்தி அலைகள் நிறையப் பெற்ற நம் பூமியில் மனித இன ஞானங்கள் வளர்ந்தோட வளர்த்தியதே “பல மண்டலங்களின் ஈர்ப்பு உணர்வினால் தான்…!”

1.ஒவ்வொரு ஞானியும் அவனவன் எடுத்த உணர்வின் குண அமிலத்தை வளர்த்த ஞானத்தால் மண்டல நிலை எய்தி
2.இம்மண்டல வளர்ச்சி ஞானத்தால் இன்றைய இந்நிலை உருப்பெற்றுள்ளது.

அத்தகைய ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பல ஆத்மாக்கள் நிலை என்ன…?

இக்கலி மாறி கல்கி தோன்றி இச்சுழற்சி வட்டத்திலிருந்தே மாறி இம்மனிதக் கரு ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் பிறிதோரு மண்டல வளர்ச்சிக் கருவுடன் பிறப்பில் மனிதக் கரு வளரும் நிலையில்
1.மனிதனின் உருவ அழகுப் பொலிவு பெற்று
2.இன்று பூமியின் ஈர்ப்பில் நடக்கும் மனிதன்
3.நாளை “பறக்கும் நிலை” கொண்ட வளர்ச்சி ஞானம் பெறுகின்றான்.

சப்தரிஷியின் உணர்வின் வட்டத்திலுள்ள மனிதக் கருக்கள் எல்லாம் இந்நிலை பெறுகின்றன. இன்று சித்து நிலையில் சுழன்று ஓடும் பல ஆத்மாக்களும் இவ்வுணர்வின் கூட்டத்துடன் செல்கின்றன.

சப்தரிஷியின் உணர்வின் சுழற்சி ஈர்ப்பில் உள்ளவர்களுக்கே இந்நிலை என்றால்…!
1.சப்தரிஷியின் உணர்வுடனே சப்தரிஷியின் செயலாகச் சுழலப்பெறும் ஆத்மாக்கள்
2.இன்றெப்படி சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றனரோ அந்நிலையின் ஒளி ஞானம் பெற்று
3.ஒவ்வொரு மண்டலத்துக்குமே தன் ஈர்ப்பின் உணர்வு சக்தியைப் பரப்பித் தன் உணர்வின் இன்பத்தை உணர முடியும்.

மனித வாழ்க்கையில் வாழும் இந்தக் குறுகிய காலத்தை “இவ்வாழ்க்கை என்ற… கூட்டுக் குடும்பப் பொருள் சேர்க்கையில் தான் அந்த இன்பம் உண்டு…!” என்பது மனிதனின் எண்ணம்.

1.இந்த மனித வாழ்க்கையில் காணும் இன்பம் சிற்றின்பம் தான்.
2.பேரானந்தப் பெரு நிலை என்னும் உணர்வு ஞான வளர்ச்சி இன்பம் தானப்பா அழியா இன்பம்.
3.ஆனாலும் எவ்வின்பம் பெறவும் இந்த மனித வாழ்க்கை நிலையின் சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலையில் தான் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புலியோ மிகவும் கடினமானது, ஆக்ரோஷமானது. அதே சமயத்தில் இதைக் காட்டிலும் தன் வலு கொண்ட நிலை கொண்ட பன்றியும் உண்டு.

ஒரு சமயம் காட்டிலே நான் போகும் பாதையில் ஒரு ஆண் பன்றி கொம்புடன் இருந்தது. மனிதனைப் பார்த்தாலே எதிர்த்து அடிக்க வரும். ஆனால் குருநாதர் என்னைத் தனித்துப் போகச் சொன்னார்.

தனித்துப் போகும் போது அந்தப் பன்றி ஒரு மூலையில் போய் உட்கார்ந்திருக்கின்றது. மூலையில் உட்கார்ந்து இருப்பதை “என்ன…?” என்று பார்த்தவுடனே ஒரு புலி பார்த்து இதைத் தாக்க எண்ணுகின்றது.

இது இரண்டும் ஒன்றை ஒன்று குறி பார்த்துக் கொண்டிருக்கின்றது. இரண்டுக்கும் இடையில் செடி மறைத்திருக்கின்றது.

முதலில் இது இரண்டிற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. தெரியாத நிலைகளில் நான் போய்க் கொண்டிருந்தேன்.

அப்புறம் தான் குருநாதர் இந்த உணர்வை ஊட்டி நன்றாக உற்றுப் பார் என்று இந்த உணர்வின் அலைகளை நுகர்ந்து பார்…! என்று சொல்கின்றார்.

நுகர்ந்து பார்க்கும் பொழுது இதை அடித்துக் கொல்ல புலி விரும்புகின்றது. பன்றி அதை எதிர்த்து நிற்கப் போர் செய்கின்றது.

அந்தப் பன்றியோ மண்டி போட்டிருக்கின்றது. அப்பொழுது இந்தப் புலி பதுங்கி வந்து அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால் பின்புறம் வந்து தாக்காதபடி பன்றி எதிர்மறையாக இருக்கின்றது.

புலி வரப்படும் பொழுது பன்றியும் பம்மிக் கொண்டு பேசாமல் இருக்கின்றது. அடித்துக் கொல்ல விரும்புகின்றது புலி. பன்றியோ தன்னைத் தற்காத்துக் கொள்ள விரும்புகின்றது.

அப்பொழுது நெருங்கி வந்து புலி தாக்க வந்த பின்… பன்றி தன் முன்னால் உள்ள கொம்பைக் கொண்டு “உஹு…ம்…” என்று முட்டுகின்றது.

புலி தூக்கி வீசப்பட்டு வெகு தூரத்தில் பந்து மாதிரி விழுகின்றது. புலியின் ஒரு பக்க உடலை அப்படியே கிழித்துவிட்டது.

புலி விழுந்தாலும் மீண்டும் அதிக ரோசம் வருகின்றது. “அடிபட்டு விட்டோம்…” என்ற அந்த ரோசத்துடன் மீண்டும் வந்து தாவுகின்றது.

மறுபடியும் பன்றி “உஹு…ம்…” என்று முட்டுகின்றது. கழுத்துப் பக்கம் அடித்தபின் புலி கீழே விழுந்தது.

மூன்றாவது தடவை புலி வேகமாக வந்து தாக்க வருகின்றது. மீண்டும் தாடையில் அடித்தது பன்றி. அடித்தவுடன் கீழே விழுந்தது. பார்த்தால் புலியை இரண்டாக வகுந்து விட்டது.

அந்தப் பன்றிக்கு அவ்வளவு வீரியம் வந்துவிட்டது. இதைக் காட்டினார் குருநாதர்.

ஒவ்வொன்றும் தன்னைக் காத்துக் கொள்ள இந்த உணர்வின் வலிமை அதற்கிருந்தாலும்
1.அதனிடம் இருக்கும் சிறு கொம்பைக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள
2.அதனுடைய வலிமையை எப்படிப் பயன்படுத்துகின்றது என்று பார் என்று குருநாதர் காட்டினார்.

அந்த உணர்வுகள் இங்கே வெளிப்படுகின்றது. அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இது அலைகளாகப் படர்கின்றது.

“இதே உணர்வுகள்…” தன் இனத்தின் தன்மையும் தன் இனத்திலிருந்து வந்த நிலையை இதனுடைய இனங்கள் நுகர்ந்து பார்க்கும் பொழுது “அதன் அறிவாக வருகின்றது” என்றார் குருநாதர்.

ஏனென்றால் தன் இனத்தின் தன்மை காக்கப்பட வேண்டும் எனும் பொழுது எந்த இனம் தன் வலிமை கொண்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதோ அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

கவரப்படும் பொழுது அது எப்படி அலைகளாகப் படர்கின்றது…? அதனுடைய இனங்கள் “இதே வேலையை எப்படிச் செய்கிறது…?”

அது ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பின் நிலை வருவதை…
1.குருநாதர் இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் வழி காட்டிக் கொண்டு போகும் பொழுது
2.உணர்வின் இயக்கங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படியெல்லாம் செய்கிறது என்று காட்டுகின்றார் குருநாதர்.

“புருவ மத்தியில்…” துருவ நட்சத்திரத்தினை நிலை நிறுத்த வேண்டியதன் அவசியம் என்ன…?

 

வாழ்க்கையில் யாருக்குமே நாம் தொல்லை கொடுக்க வேண்டாம்… “சும்மா தான் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் தொல்லைப்படுவரையும் கஷ்டப்படுபவரையும் வேதனைப்படுபவரையும் வெறுப்படைபவரையும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்காமல் இருக்க முடியாது… அந்தந்த உணர்வுகளை நுகராது இருக்கவும் முடியாது.
1.நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம்
2.உயிரிலே பட்ட பின் தான் அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

கண்களால் பார்க்கின்றோம் பிறருடைய செயல்களை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால் அவர் செயலின் உணர்வுகள் வெளி வருவதை நாம் நுகர்ந்து தான் அவர் இன்ன நிலையில் இருக்கின்றார் என்று அவர் கோபப்படுகின்றாரா.. வேதனைப்படுகின்றாரா…! வேதனைப்படுத்துகின்றாரா…? என்ற உணர்வால் அறிகின்றோம்.

இந்த உணர்வை ஈர்த்து நம் உயிர் சரியாகச் செயல்படுத்தவில்லை என்றால் “என்ன தான் நடந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியாது…”

வாழ்க்கையில் சிலர் மிகவும் விரக்தி ஆகி இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளோருக்கு…
1.எதிர்த்தாற்போல் இருக்கக்கூடிய ஒரு பொருளை அறிய முடியாது… காண முடியாது… தெரிய முடியாது… அவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.
2.வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் “தன் வீடு” எங்கே இருக்கிறது…? என்று தெரியாது.
3.அவருடைய நண்பரே அருகில் வந்தாலும் அந்த நண்பரை அவரால் அறிய முடியாது… தெரியாது.

ஏனென்றால் இந்த உணர்வின் அறிவு அங்கே மழுங்கி விட்டால் இந்த உணர்வுகளை அங்கே செயலாக்குவது இல்லை. உதாரணமாக…
1.கண்களிலே பூ விழுந்தால்… அதாவது கண் கருவிழிக்குள் கருமணியில் அழுக்குகள் சேர்ந்து விட்டால் எப்படிப் பார்வை சரியாகத் தெரியாதோ இதே மாதிரி
2.நம் உயிரிலே உணர்வுகள் (நாம் சுவாசிப்பது) மோதும் இடத்தில் ஒரு “தடயம்…” ஒன்று உண்டு
3.அடிக்கடி வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்தால் உயிரைச் சுற்றி அழுக்குகள் அதிகமாகிவிடும்.

அந்த அழுக்கு என்பது வேதனையின் நிலையாக உருவாவது உண்டு. அதிகமான அழுக்குகள் அங்கே சேர்ந்து விட்டால் சோர்வின் தன்மை வந்துவிடும்.

1.எதை நினைத்தாலும் அது சரியான நினைவுகள் வராது
2.என்ன செய்கின்றோம்… ஏது செய்கின்றோம்…? என்று எதையும் அறிந்து கொள்ள முடியாது (தன்னை மறந்த நிலை என்று சொல்கிறோம் அல்லவா)

இத்தகைய உணர்வு கொண்டு இந்த உயிரான்மா வெளியே சென்றால் எங்கே செல்லும்…? மனிதன் யார் மீதும் நினைவில்லை.

ஆனால் இதைப் போன்று சில உயிரினங்கள் அடிக்கடி தன்னை நினைத்து மறந்து போகும். அத்தகைய உடலைப் பெறும் நிலையாக இந்த உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.

உயிர் ஒன்றுதான்… பல உடல்களாக எடுத்து எடுத்து இன்று மனிதனாக வந்தது. இருந்தாலும் “உயிர் தான் நம்மை உருவாக்கியது…” என்று மனிதனாக ஆன பின் தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

தெரிந்தாலும் அதை மதித்து ஞானிகள் காட்டிய வழியில் நாம் செயல்பட வேண்டுமா இல்லையா…?

1.புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று சொல்லித் துருவ நட்சத்திரத்தைப் அடிக்கடி எண்ணச் சொல்வதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறதா…?
2.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போதும் கண்ணின் நினைவு புருவ மத்தியில் இருக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே நிலை நிறுத்த வேண்டும்.

அப்போது தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியாக மாறும். நம் உணர்வுகள் தெளிவாகும்… பேரருளாக பேரொளியாக மாறும்.

இந்தப் பிறவிக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

ஞானம் பெறுபவன் மட்டும் உலக மாற்றத்திலிருந்து தப்ப முடியுமா…!

 

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர “ஒரு சக்தி” தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால் மீண்டும் பயிர் செய்ய “விதை நெல்” தேவைப்படுகின்றது.

அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும்.

இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் “பல மகான்கள்” தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் மீண்டும் மனித ஜனனம் தேவை.

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் எத்தகைய தீமையானவற்றைப் பார்த்தாலும் “ஐயோ… இப்படி ஆகிவிட்டதே…” என்று பார்க்க வேண்டியதில்லை.

உங்கள் எண்ணத்தால் சிறுகச் சிறுக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏனென்றால் தீமையான உலகில் நாம் வாழ்கின்றோம். உங்கள் வாழ்க்கையில் நல்லதைச் செய்கின்றீர்கள். ஒருவருக்கு 100 ரூபாயையோ 1000 ரூபாயையோ நம்பிக்கையின் பேரில் கொடுக்கின்றீர்கள்.

திருப்பி நீங்கள் கொடுத்த ரூபாயைக் கேட்கச் சென்றீர்கள் என்றால் அந்தப் பணம் வராது. இரண்டாவது தரம் அழுத்திக் கேட்டால் என்ன ஆகின்றது…?

“என்னய்யா… நீ சும்மா கேட்டுக் கொண்டிருக்கின்றாய்…? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றாய்..,?” என்று கேட்பார்கள்.

அப்புறம் நீங்கள் இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்…?

“அடப் பாவி… உனக்கு நான் இப்படிக் கொடுத்தேனே… இந்த மாதிரிச் சொல்கிறாயே….!” என்று
1.உதவிக்குப் பணம் கொடுத்தும் அந்த இடத்தில் வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க நேருகின்றது.
2.இன்று பெரும்பகுதி இடங்களில் இந்த நிலைதான்.
3.நம்பிக்கையின் பேரில் கொடுத்தால் இப்படித்தான் அது “அம்போ…,” என்று போய்விடுகின்றது…
4.இலட்சக் கணக்கில் கூடப் போகின்றது. அப்புறம் நீங்கள் வேதனைப்படாமல் என்ன செய்வீர்கள்…?

அதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று துடைத்து அதைச் சுத்தப்படுத்திக் கொள்தல் வேண்டும்.

கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று சொல்லி அங்கே உயிருடன் இணைக்கப்படும் பொழுது தான் அந்த மகரிஷிகளின் எண்ணம் வரும்.

கண்ணின் நினைவை இப்படிக் கொண்டு வரவில்லை என்றால் இங்கே இருப்பதை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றிவிடும். நீங்கள் என்னதான் எண்ணினாலும் கூட ஈஸ்வரா என்று நினைக்கச் சொல்லாது.

நான் (ஞானகுரு) எப்படித் தவம் இருக்கின்றேன்…?

ஒவ்வொரு நாளும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அண்டத்தையே சுழன்று நீங்கள் அந்தச் சக்தியின் நிலைகளைப் பெறுகின்றேன்.

அதை உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்று சொல்லித் தவமிருக்கின்றேன். நீங்கள் பெற வேண்டும், நீங்கள் வளர வேண்டும் என்று சொல்லி நான் தவமிருக்கின்றேன்.

அந்த மகரிஷிகளின் அலைகள் உங்களுக்குள் வரும் பொழுது நீங்கள் எண்ணும் பொழுது எளிதில் உங்களுக்குக் கிடைக்கின்றது. நீங்கள் பெற வேண்டும் என்று நான் தவமிருக்கும் பொழுது உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

ஆகவே அவரவர்கள் இந்தக் காற்றில் கலந்திருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தீர்கள் என்றால் நீங்கள் அந்தப் பலனைப் பெறலாம்.

சிலர் என்ன செய்கின்றார்கள்…?
1.சாமி கொடுப்பார் என்றேன் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
2.நான் எதைக் கொடுப்பது…? என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த உணர்வான சத்தை உங்கள் உயிரான ஜீவ அணுக்களுக்குள்… உங்களைக் காத்துக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகளுக்குள்… தீமையை விளைவிக்கும் அணுக்களில் இந்த உணர்வை இப்பொழுது ஒவ்வொரு நிமிடமும் உபதேசித்துக் கொண்டுள்ளேன்.

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இதைச் சேர்ப்பிக்கின்றேன். அந்த அருள் சக்திகள் உங்களுக்குள் வளர்வதை உணரலாம்.

ஒரு செடி வளர்ந்து வரப்படும் பொழுது முதலில் இலைகள் வளர்கின்றது. பின் அதிலே பூவைப் பார்க்கின்றோம். பூவில் இதழ்களும் உதிர்ந்துவிடுகின்றது. அதிலே கருக்களின் நிலைகள் உருவாகின்றது. காயாகின்றது தன் வித்தின் தன்மை உருவாக்குகின்றது.

அதைப் போல
1.உங்களுக்குள் ஒவ்வொரு அணுக்களிலும் இந்த மகரிஷிகளின் உணர்வுகளை ஒட்டச் செய்து இதைப் பெருக்கச் செய்து கொண்டுள்ளோம்.
2.நீங்களும் மகரிஷிகளாக ஆக முடியும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… நமக்குள் வளர்க்க வேண்டும்… அது தான் முக்கியம்…!

 

கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?

கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.

விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.

ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?

பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே… ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
2.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.

தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்னத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.

இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.

நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.

கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.

மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.

அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.

சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.

எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றி விட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது…”

சாந்தமான நிலை பெற ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான் நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.

எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.

மந்திரமும் இல்லை மாயமும் இல்லை… எனக்கு நோய் இல்லை “எப்போதும் நான் நலமாக இருப்பேன்” என்று உங்களால் சொல்ல முடியுமா…?

 

யாரை நான் ஜெபிக்கின்றேன்…? யாரை எண்ணி நான் தவமிருக்கின்றேன்…?
1.குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுகின்றேன் (ஞானகுரு)
2.பெற்று யாரையெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினேனோ
3.நான் பார்த்தவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருக்கின்றேன்.

ஆனால் நீங்கள் முக்காடு போட்டுக் கொண்டு “என்ன..? சாமி சொன்னார் நமக்கு ஒன்றுமே நடக்கவில்லை… ஒன்றுமே நடக்கவில்லை…” என்று எண்ண வேண்டியதில்லை.

சிலர் “என் கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…” என்று எண்ணுகின்றார்கள். கை கால் குடைச்சல் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது.. தீராத நோயாக ஒரே தலைவலியாக இருக்கிறது…! என்று கேட்பார்கள்.

தலை வலி நீங்க வேண்டும்… கை கால் குடைச்சல் நீங்க வேண்டும் என்று கேட்கின்றார்களா…? என்றால் இல்லை.

1.அதை “மற்றவர்களுக்குச் சரியாகும்…” என்று யாம் சொல்லியிருப்போம்.
2.ஆனால் “அவர்களுக்குத் தானே சொன்னார்…” என்று இதைத் திரும்பத் திரும்பக் கேட்பார்கள்.

தீராத தலைவலியாக இருக்கின்றது, உடலெல்லாம் வேதனையாக இருக்கின்றது என்று கேட்கிறார்கள்.

இப்பொழுதுதானே அவருக்குச் சொன்னோம் என்று சொன்னால் “அதற்குச் சொல்லவில்லை…” என்பார்கள். என்னுடைய வேதனைகளை என்னால் தாங்க முடியவில்லை…! என்பார்கள்.

ஏனென்றால் இந்த எண்ணத்தை முதலில் நீக்கிவிட்டால் உங்கள் நோய் நீங்கிவிடும்.

நீங்கள் மந்திரமும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை… ஒன்றும் வேண்டியதில்லை.
1.இந்தத் தியானத்தை ஒழுங்காகச் செய்து
2.“எனக்கு நோய் இல்லை… நான் நலமாக இருப்பேன்…” என்ற எண்ணத்தை மட்டும் கூட்டிப் பாருங்கள்.

உங்கள் எண்ணத்தை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும். உங்களுக்குள் அந்த நன்மையின் பயனைக் கூட்டும்.

நீங்கள் எண்ணியவுடன் கிடைக்கும்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்.

ரேடியோ, டி.விக்களில் எந்தெந்த அலை வரிசையில் வைக்கின்றோமோ அந்த அலை வரிசையில் வைத்து ரசித்துப் பார்க்கின்றோம்.

அதைப் போன்றுதான் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் நஷ்டம் என்று பார்க்கின்றீர்கள் சாதாரண மனிதனைப் பார்க்கின்றீர்கள் நல்லதைப் பார்க்கின்றீர்கள்.

ஆனால், அந்த வேதனை என்ற விஷத்தன்மைகளைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது அதை உடனடியாக அறிய முடிகின்றது. அந்த வேதனை உங்களை இயக்கிவிடுகின்றது.

இதைப் போல் தான் “உங்கள் மனதைத் திருப்பி..,” அருள் ஞானிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்கள் உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்கின்றோம்.

இந்த உணர்வை ஆழப் பதிவு செய்து கொண்டபின் அதை நீங்கள் நினைவு கொண்டால் மகரிஷிகள் உணர்த்திய உணர்வலைகளை எளிதில் பெற்று நீங்களே உங்கள் துன்பங்களை நீக்கிக் கொள்ள முடியும் உங்கள் எண்ணத்தால் உயர்ந்த நிலைகள் பெற முடியும்.

இதைவிட இன்னும் சுலபமாகக் கொடுப்பதற்கு என்ன இருக்கின்றது?

மக்கள் யாரும் குறை உள்ளவர் அல்ல. சந்தர்ப்பம் இத்தகைய நிலைகள் அமைந்து விட்டது. அவர்களை மீட்டிட நீ என்ன செய்யப் போகின்றாய்..,? என்று குருநாதர் கேட்டார்.

அவர்களின் உயிர்களை நீ கடவுளாக மதி. உடல்களைக் கோவில்களாக மதி. மனிதனாக உருவாக்கிய உயர்ந்த குணங்களை நீ அங்கே வரம் கேள். அங்கே உயர்ந்த குணங்கள் வளர வேண்டும் என்று நீ எண்ணினால் உனக்குள் அது வளர்கின்றது.

அவர்கள் காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் உனக்குள் காக்கும் சக்தி வளர்கின்றது.

ஆகவே, “குறைகளைக் காணாதே…,” குறைகளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய், உயர்ந்த தியானத்தை நீ எடு. அவர்கள் குறைகளிலிருந்து மீள வேண்டும் என்று நீ தவமிரு.

அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நீ உயர்கின்றாய். அவர்கள் அதைப் பெற வேண்டும் என்று ஏங்கு. அதை உன்னால் பெற முடியும் என்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

எனக்குக் குரு கொடுத்தது இது தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறும் தகுதியை அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றோம்.

உங்கள் உடலில் பதிவான அந்த நினைவுகளை ஊட்டி அந்த மகரிஷிகளின் உணர்வை இப்பொழுது உங்களைப் பெறச் செய்வதற்கு இந்த நினைவின் நிலையைப் பெறச் செய்து கொண்டே இருக்கின்றேன்.

ஏனென்றால் சொல்லாக வெறுமனே சொல்லிவிட்டுப் போவதில்லை.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி “நீங்கள் பெற வேண்டும்…” என்று தான் முதலில் நான் தியானிப்பேன்.
2.பின் அது “உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும்…” என்று தவமிருப்பேன்

ஆகவே இதுதான் தவம் என்பது. இந்தத் தவத்தின் பலன்களை நீங்கள் அனைவரும் பெறவேண்டும்.

நான் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் பத்தாது.
1.நீங்கள் எல்லோருமே தீமைகளை அகற்றக்கூடிய சக்தி பெற வேண்டும்
2.உங்கள் பேச்சால் மூச்சால் பிற தீமைகளை அகற்றப்பட வேண்டும்.
3.உங்கள் பேச்சும் மூச்சும் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள தீமைகளைப் பிளக்க வேண்டும்.
4.கேட்டுணர்ந்தோர் உணர்வுக்குள் ஊடுருவி அந்தத் தீமையின் உணர்வுகள் அது அடக்ககப்பட வேண்டும்.
5.இந்த வழியில் நாம் வந்தால் தான் இந்த விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளிலிருந்து நம்மை நாம் மீட்டிக் கொள்ள முடியும்.

நமது குருநாதர் காட்டிய நிலைகள் எல்லாம் – உங்கள் அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் செய்தார். அவன் அமைத்துக் கொண்ட கோட்டை… கோவில் என்று உங்கள் உடலை மதிக்கச் செய்தார்.

அந்த உடலுக்குள் மனிதனாக உருவாக்கிய காரணமும் நல் வழிப்படுத்தும் உயர்ந்த குணங்கள்… அது என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்றும் “நீ இதைத் தவமாக இரு…” என்று கட்டளையிட்டார்.

அதன் வளர்ச்சி பெற்ற பின் அங்கே அவர்கள் விடும் மூச்சலைகள் இங்கே காற்றிலே பரவும். அவர்கள் மகிழ்ச்சி பெறும் பொழுது அதைக் கண்டு நீ மகிழ்வாய் என்றால் “அந்த உணர்வு உனக்குச் சொந்தமாகும்…” என்றார் குருநாதர்.

உனக்குள் இருண்ட நிலையைத் தெளிவாக்கும்… தெளிந்த மனதையும் உனக்குள் உருவாகும்.

பின் எதை நீ எண்ணுகின்றாயோ… வானின் இயல்பு நீ பெற வேண்டும் என்றும் அனைவருக்கும் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அதன் வளர்ச்சி இங்கே வளர்ந்து இந்த உணர்வின் வலிமை கொண்டு இந்த உடலை விட்டு நீ அகன்றாலும் அவர்களின் உணர்வின் தன்மை உந்து விசையால் விண் செல்லவும் இது உதவும்.

இந்தப் பேருண்மையைக் காட்டியதால் அதன் வழியில் தான் நீங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தவமிருக்கின்றேன்.

“உங்களுக்கு வேண்டும்…” என்று விரும்புவதற்குப் பதில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் தியானியுங்கள். உங்கள் சார்புடையோருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் அவர்கள் தொழில் நலமாக இருக்க வேண்டும் அவர்கள் உடல் நலமாக இருக்க வேண்டும் என்று தவமிருங்கள்.

இந்தத் தவத்தின் பலனை நிச்சயம் நீங்கள் பெற முடியும். ஆக, அந்த விண்ணின் ஆற்றலைப் பெறமுடியும்.

“தனக்கென்று பெற வேண்டும்” என்று எண்ணிவிட்டால்…
1.தான் எண்ணிய நிலைகள் அந்தக் காலம் வரும் வரை எதிர்ப்பார்ப்போம்
2.எதிர்பார்த்த நிலைகள் நடைபெறவில்லை என்றால் சோர்வடைவோம்.
3.சோர்வடைந்தால் நமக்குள் விஷத்தின் தன்மை நமக்குள் கூடிவிடும்.
4.நாம் எதைப் பெற வேண்டும் என்று எண்ணினோமோ அதைத் தடைப்படுத்திவிடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும்.

எப்பொழுதும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். நீங்கள் அதைப் பெற முடியும்.

நம் நண்பர்களோ… நாம் பார்க்கும் இடங்களிலோ… தொழில் செய்யும் இடங்களிலோ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று தவமிருந்தால் அந்தத் தவத்தின் பலனை நிச்சயம் பெற முடியும்.

விஞ்ஞான அறிவால் “எதுவுமே செயல்படுத்த முடியாதபடி ஆகப் போகின்றது…”

 

மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட விஷக் கதிரியக்கங்கள் சூரியனுக்குள்ளும் சேர்ந்து அங்கேயும் இப்போது கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இருந்தாலும் இரு மடங்கு அழுத்தத்தின் தன்மை சூரியனுக்குள் அதிகமாகப் பாய்ச்சப்பட்டுப் பிரபஞ்சத்தில் அத்தகைய நிலைகள் பரவுமேயானால் “விஞ்ஞான அறிவால் வந்த இவை அனைத்தும் சூனியமாகிவிடும்…!”

இப்பொழுது இரு மடங்கு மின்சாரம் வயர்களில் வந்தால் அதனுடன் சேர்க்கப்பட்ட பல்புகள் அனைத்தும் ஃப்யூஸ் (FUSE) ஆவது போன்று இந்த உணர்வுகள் அதிகமானால்….
1.மனிதனுடைய சிந்தனைகளும் மிருகங்களுடைய உணர்வுகளும் மாறுபட்டு
2.”வெறி பிடித்தது…” போன்று உலகம் முழுவதும் பரவும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து நாம் மீள்வதற்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ மற்ற எது வந்தாலும் ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் உடலில் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி நாளும் வளர்த்துக் கொண்டே வந்தால் மன உறுதி கிடைக்கும். நம்முடைய காரியங்களை எல்லாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற அந்த உயர்ந்த ஞானம் கிடைக்கும்.

நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வார்கள்…
1.பிறருடைய கஷ்ட நஷ்டங்களை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டே வந்தால்
2.அந்தக் கணக்கின் பிரகாரம் அவருக்கு வந்த கஷ்டமெல்லாம் நமக்குள் வந்து நம்மையும் அது பாதிக்கும்.
3.அவர் உடலுக்குள் வந்த அவர் நோய்களும் நமக்கும் வர நேருகிறது.

ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று “இந்தக் கணக்கைக் கூட்டினால்” இந்த உடலில் சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கும்.

ஆக… அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க… மன உறுதி கொண்டு இந்த வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும்… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இது உதவும்.

அதே சமயத்தில்
1.நீங்கள் எடுத்துக் கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தும்
2.உங்கள் மூச்சலைகள் மூலம் இந்த உலகம் முழுவதும் பரவி
3.நச்சுத்தன்மைகளைப் போக்கக்கூடிய சக்தியாகப் படரும்.

அகஸ்தியன் அன்று தன்னுடைய பார்வையில் இந்தப் பூமி குடை சாயும் நிலையில் இருந்ததைத் திருப்பி… வெப்பத்தின் தன்மை கூடச் செய்து “துருவத்தில் உறைந்த பனிகளைக் கடலாக மாற்றி…” பூமியைக் காக்கும் சக்தியாக அன்று அவன் செயல்படுத்தினான்.

அகஸ்தியனுக்கு முந்திய காலத்தில் இருந்த கடல் நிலைகள் வேறு அகஸ்தியனுக்குப் பின் வந்த கடல் நிலைகள் வேறு.

மனிதன் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் இன்று அதிகமாக… அதிகமாக… நீர் நிலைகள் பெருகி நிலங்கள் குறைந்து கடல் நீர் பெருக்கமாகி… ஊரை அழிக்கும் நிலையாக வருகின்றது.

துருவப் பகுதியில் உள்ள உறைபனிகள் அனைத்தும் உருக உருக கடல்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. இது மட்டுமல்ல…!

பூமிக்குள் வெப்பத்தின் தணல் அதிகமாகும் பொழுது பூகம்பங்களும் எரிமலைகளும் அதிகமாகி உள்ளே கொதிகலன்கள் அதிகமாகி “எந்த நேரத்திலும்…” இந்தப் பூமி சிதையும் நிலைகள் இருக்கின்றது. நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களிலும் இதே நிலைகள் ஆகி கொண்டிருக்கின்றது.

ஒரு கோள் சிதைந்தாலே போதும்…! அதனுடைய விகிதாச்சாரம் மனிதனுடைய நிலைகள் அது கிடைக்காது போனால்
1.மனிதனும் மிருகமாகி விடுகின்றான்… விஞ்ஞானமும் அழிந்து விடுகின்றது…
2.இருளான உணர்வுகளே உலகெங்கும் பரவும் சந்தர்ப்பங்கள் வருகின்றது… இந்த விஞ்ஞானம் பயனற்றதாக ஆகிவிடும்.
3.இன்று செயல்படுத்தும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் பூராமே பாழாகி அதனால் இயங்கும் சாதனங்கள் செயலிழந்து அனைத்தும் திசை திருப்பப்பட்டு
4.“அடுத்து விஞ்ஞான அறிவால் எதுவுமே செயல்படுத்த முடியாதபடி ஆகப் போகின்றது…”.

ஆனால் மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் கவர்ந்து கொண்டால் இந்த உலகைக் காக்கலாம்… உங்களையும் காக்கலாம்… பிறவி இல்லா நிலையும் அடையலாம்.

இதைப் பெறுவதற்கும் செயப்படுத்துவதற்கும் உங்களுக்கு “மன உறுதி தேவை…!”

ஆகவே… ஏதோ என்று இல்லாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வாழும் இடத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அதிகமாகப் பரவச் செய்யுங்கள்.

1.அன்று ஒரு அகஸ்தியன் இந்தப் பூமியைச் சமப்படுத்தினான்.
2.இன்று அவனுடைய அருளைப் பெற்று பல ஆயிரம் அகஸ்தியர்களை உருவாக்குங்கள்.
3.குருநாதர் காட்டிய வழியில் உலகைக் காக்கும் சக்திகளாக இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வாருங்கள்.

“ஆண்டவனின் உண்மை நிலை உணராதவன்…” எங்கோ காணத் துடிக்கின்றான் அந்த ஆண்டவனை…!

 

1.அமிலத்தின் கூட்டால் சிவ பிம்பம் (உடல்கள்) பெற்று
2.சக்தி ஒளி ஈர்ப்பில் ஜீவன் கொண்ட ஜீவத் துடிப்பு அனைத்துமே
3.ஆண்டவனுக்குப் பொதுவானது தான்.

ஆண்டவனின் சக்தி என்று ஆண்டவனை வேண்டி… இறைஞ்சிப் பணிந்து பல பாடல்களைப் பாடி… ஆண்டவனைப் பெண்ணாகவும் ஆணாகவும் ஒளியாகவும் தாயாகவும் சகோதரர்களாகவும் அவரவர்கள் வழி வந்த மதக் கோட்பாட்டின் முறைப்படியெல்லாம் இறைஞ்சித் துதி பாடுகின்றனர்.

இந்த ஆறறிவு படைத்த மனித ஜெந்துக்களுக்கு மட்டும் தான் ஆண்டவன் சொந்தமா…?

சிறு அணுவும் “அவனன்றி அசையாது…!” என்று உணர்த்துபவனும் மனிதன் தான்.

ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அவ்வணுவையே உயிராகக் கொண்ட ஆடு மாடுகளையும் தன்னை ஒத்த மனித இனத்தையே கூட நரபலி தருபவனும் ஆண்டவனுக்குச் சமர்ப்பித்துத் தன் வேண்டுதலை நிவர்த்திக்கடன் செய்து ஆண்டவனை வணங்குபவனும் இதே மனிதன் தான்…!

ஆடு மாடுகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் அந்த ஆண்டவன் சொந்தமில்லையா…?
1.மனிதனுக்கு மட்டும் தான் அந்த ஆண்டவன் சொந்தம் என்றால்
2.மற்ற ஜீவராசிகளும் ஆண்டவன் படைப்பே…! என்று துதிபாடும் அந்த ஆண்டவன் எங்குள்ளான்…?

தவறான வாழ்க்கை நெறியில் உள்ளவனும் வாழ்கின்றான். நல் ஒழுக்கக் கோட்பாட்டில் உள்ளவனும் வாழ்கின்றான்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஆண்டவன் உள்ளான் என்று உணர்த்தும் எல்லா மதத்தினரும் தன் சுவை உணவிற்காகத் தன்னை ஒத்த ஜீவ பிராணிகளை உண்டு தான் வாழ்கின்றார்கள்.

இவனுக்குச் சொந்தமான அந்த ஆண்டவன் வந்து மற்ற ஜீவ பிராணிகளைப் பலியிட்டு உண்ணாதே…! என்று உணர்த்தியிருக்கலாம். அஜ்ஜீவன் பிரியும் நேரத்தில்… அதன் ஓலத்தைக் கேட்டு… ஏன் அந்த ஆண்டவன் வந்து அவற்றைக் காப்பாற்றியிருக்கக் கூடாது..?

ஆண்டவனைச் சொந்தம் பாராட்டி ஆண்டவனைத் துதித்து வணங்குபவனுக்கு அந்த ஆண்டவன் சொந்தம் என்றால் மற்ற பிராணிகளுக்கு ஆண்டவனின் சக்தி சொந்தமில்லையா…? அப்படிப்பட்ட ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…?

1.தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்…
2.நீரிலும் இருப்பான் நெருப்பிலும் இருப்பான்…
3.நினைத்த நினைப்பிலும் இருப்பான்… என்னும் ஆண்டவன்
4.எப்படி மனிதனுக்கு மட்டும் சொந்தமாகின்றான்…?

மதத்தவர் என்ற அடிப்படையில் குறிப்பிடுவதாக எண்ணி யாரையும் சாடுவதாக நினைக்க வேண்டாம்..! உள்ள உண்மையை உணர்த்துகின்றோம்.

எல்லா மதங்களிலுமே கடவுள் அன்பானவன் என்று சொன்னாலும் பிற பிராணிகளை அடித்து உணவாக உட்கொள்ளும் நிலை தான் உள்ளது.

ஆண்டவனின் செயலை இந்த மாமிசம் புசிப்பவர்கள் செய்யும் முறையில் மட்டும் குற்றம் காணவில்லை. மாமிசம் புசிக்காதவரின் செயல் என்ன…?

1.ஆண்டவனைப் பக்தித் துதி பாடி பஜனைகள் பல செய்து
2.ஆண்டவனாகக் கோவிலில் உள்ள கர்ப்பச் சிலைக்கு நீராலும் பாலாலும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் ஆராதனை செய்து
3.சுத்தமாக ஆச்சாரமுடன் கோடி அர்ச்சனைகளையும் பல கோடிப் புஷ்பங்களைச் சாத்தி வணங்கி
4.அந்த ஆண்டவனின் அருள் பரிபூரணமாகப் பெற்றுவிட்ட உவகையுடன் வருபவனுக்கு
5.அவன் வரும் வழியில் அவன் ஜாதிப் பிணைப்பு என்ற இனத்தவரன்றி
6.மற்றவரின் உடலோ சில கழிவுகளோ தன் மேல் பட்டுவிட்டாலும் உடனே பெரும் கோபம் கொண்டு
7.அந்த ஆண்டவனுக்குத் தான் செய்த பூஜை முறையிலேயே அபசாரம் நடந்து விட்டதாக உள்ளம் உலைந்து…
8.நீ வணங்கும் ஆண்டவன் என்பவன் யார்…? அந்த ஆண்டவனுக்கு உள்ள சக்தி யாவை…? என்று வினவினாலும்
9.உடனே கோப அலையைத் தன்னுள் ஏற்றிப் பெரிய தவறு நடந்து விட்டதாகச் செயல்படும் ஒரு சாராரும் உள்ளனர்.

என் (ஈஸ்வரபட்டர்) வினாவில் ஆண்டவன் யார் என்பது யாரென்றே புரியவில்லை.
1.ஆண்டவனின் உண்மை நிலை உணராதவன்
2.எங்கோ காணத் துடிக்கின்றான் அந்த ஆண்டவனை.

மரக்கறியும் அணு தான்.. மற்ற பிராணிகளின் உடலும் அணு தான்…! எல்லாமே அணுவாக உள்ள பொழுது… “அணுவின் அணுவாக” அக்காந்த மின் அலையின் ஜீவ சக்தியில் கலந்துள்ள அனைத்துமே ஆண்டவனின் சக்தி தான்.

1.ஒன்றின் துணையுடன் ஒன்று வாழ
2.ஒன்றை அழித்துத்தான் மற்றொன்று வாழ முடிகின்றது.
3.ஆவியாகி அமிலமாகி ஜீவனாகிப் பிம்பமாகி..
4.பிம்பம் ஆவியாகி அமிலமாகி ஜீவனாகி பிம்பமாகி ஆவியாகி…
5.மீண்டும் மீண்டும் சுழன்று ஓடும் சுழற்சி கதியின் சக்திக் கூட்டிற்கு
6.எல்லாமில் எல்லாமாக நிறைந்துள்ள ஆண்டவனின் சக்தி பிறந்து… வளர்ந்து… மடிந்து… பிறந்து… சுழன்று கொண்டே உள்ளது.

முதல் எது…? கடைசி எது….? உலகச் சக்தியில் முதலும் கடைசியும் உண்டா…?

முடிவில்லா மூலவனே மும்மூர்த்தியானவனே…! என்ற பொருளின் தத்துவம் இப்பொழுது புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் தான் கடவுள்…! என்று ஊருக்கொரு அருளாடியும்… ஊருக்கு ஒரு ஜோதிடம் சொல்பவரும் இன்று உண்டு.
1.பல மாயாஜாலங்களைச் செய்துவிட்டு “நான் தான் கடவுளின் அவதாரம்…” என்றும்
2.நான் கடவுளின் நிலைகள் கொண்டு இந்தப் பிரசாதத்தைக் கொடுக்கின்றேன்
3.இதை வாங்கினால் எல்லோரும் காக்கப்படுவீர்கள்… உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் போய்விடும் என்று
4.அவருக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அவருக்குள் கடவுளாகி பல மாயாஜாலங்களைச் சொல்வார்கள்.

மாயாஜாலம் செய்வோரிடம் – சீக்கிரத்தில் எனக்குப் பணம் வேண்டும், பொருள் வேண்டும், சுகம் வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளோர் அவர்களிடம் செல்கின்றார்கள்.

தன் பசியைத் தீர்க்க தூண்டிலில் இரையைப் போட்டு மீன்களைப் பிடிக்கும் பொழுது இரை தேடி வரும் மீன்கள் அதிலே சிக்கித் தவிப்பது போன்று இதன் வழி செல்வோர் அவர்களிடம் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளார்கள்.

இப்படி இந்த மனித வாழ்க்கையில் ஞானிகள் காட்டிய அருள் வழியிலிருந்து நழுவிச் சென்று மந்திரவாதியிடமும் ஜோதிடம் சொல்வோரிடத்திலேயும் இன்றும் சென்று கொண்டுள்ளோர் பலர்.

உனக்கு “நல்ல நேரம் வருகின்றது…, கெட்ட நேரம் வருகிறது..,” என்று சொல்லிவிட்டு அதிலே தீமைகளை அகற்ற யாகங்களையும் வேள்விகளையும் செய்தால் இது அகற்றப்படலாம் என்று அவர்கள் சொல்வார்கள்.

அப்புறம் அந்த யாகத்தைச் செய்வதற்கு நாலாயிரம், ஐந்தாயிரம் கொடுங்கள் என்று சொல்லி பாவத்தைப் போக்குவதற்காக யாகத்தைச் செய்யச் சொல்வார்கள்.

ஜாதகக் குறிப்பை வைத்து அதற்கென்று “ஏஜெண்டை” வைத்துச் செய்கின்றார்கள்.
1.நான் சொல்லவில்லை…!
2.நடப்பது அனைத்தும் உங்கள் ஜாதகத்தில் இப்படி எல்லாம் இருக்கிறது…! என்றும் அவர்கள் காண்பிப்பார்கள்.

வேள்விகள் செய்ய நல்ல வித்தைகளைத் தெரிந்தவரை வைத்துச் செய்யுங்கள் என்று சொல்கிற மாதிரிச் சொல்லி… அந்த ஏஜெண்டை வைத்துக் கொண்டே சொல்வார்கள்.

“தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்…,” என்று நாம் கேட்போம்.

ஏஜெண்டுகளை வைத்து யாகங்களையும் வேள்விகளையும் செய்யச் செய்து அவர்கள் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வார்கள். இப்படித்தான் சில நிலைகள் இந்த மாதிரி இன்றும் நடக்கின்றது.

கஷ்டப்பட்டுச் சம்பாதித்த காசை அவர்களுக்குக் கொடுத்து வீண் விரயமாக்கி பிறருடைய நிலைகளில் சிக்கிக் கொண்டு தன்னிலை அறியாது இப்படித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால்
1.இந்த உலகில் எப்படியெல்லாம் மனிதன் ஏமாற்றப்படுகின்றான்…?
2.எப்படியெல்லாம் மனிதர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்…?
3.“நாம் ஏமாந்து கொண்டிருக்கின்றோம்..” என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மனிதன் தன் வாழ்க்கையில் “கஷ்டப்படும் பொழுதெல்லாம்” தன்னையறியாமல் இந்தச் சூழ்நிலைகள் எல்லாமே வருகின்றது.

இதிலிருந்தெல்லாம் நாம் “மாற வேண்டுமா… இல்லையா…?”

ஆக… கடவுள் நம்மைக் காக்கின்றாரா..,? கடவுள் எந்த ரூபத்தில் நம்மைக் காக்கின்றார்..,? என்ற நிலைகளை ஞானிகள் காட்டிய நிலைகளை நாம் எடுத்துக் கொண்டோமா..,? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

1.நம் குருநாதர் காட்டியது – “உயிரே கடவுள்…”
2.அந்த ஈசன் வீற்றிருக்கும் “உடல் ஆலயம்…”
3.சுவாசிக்கும் உணர்வுகள் தெய்வங்களாக நம்முள் நின்று இயக்கிக் கொண்டுள்ளது.
4.“உணர்வின் செயலே தெய்வம்”.

இந்த வாழ்க்கையில் அறியாது வந்த இருளான உணர்வுகளை நீக்கி ஒளியின் தன்மையாக மாற்றிடும் நிலைகள் பெறவேண்டும் என்பதுதான் நம் குருநாதர் காட்டிய அந்த அறநெறிகள்.

திட்டியவனை எண்ணியதும் கோபம் இயக்குவது போல் இந்தப் பதிவை எண்ணினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக்க முடியும்

 

உதாரணமாக…
1.சந்தர்ப்பத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் எதிர்மறையான உணர்வாக (சண்டையோ அல்லது எதிர்பாராத நிகழ்வோ) இருந்தால்
2.நம் இரத்தங்களிலே அது கலக்கக் கலக்க ஒன்றுக்கொன்று போர்முறையாகி
3.உறுப்புகள் முழுவதற்கும் இந்த இரத்தங்கள் செல்லும் பொழுது
4.ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் எதிர்நிலையாகிறது.

அதனால் மனக்கலக்கங்களும் நாளடைவில் உடல் வலியும் நோயும் வரக் காரணம் ஆகிவிடுன்றது. அதைப் போன்று ஆகாதபடி தடுக்க ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி என்று யாம் கொடுக்கும் ஆயுதத்தை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்…!

தீமைகள் உங்களை இயக்காதபடி மனம் தெளிவாகும். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதிக்கே இதை உபதேசிக்கின்றேன்… பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

“ஆத்ம சுத்தி” செய்யும் ஆற்றலைப் பெறுவதற்கு நீங்கள் வருடக் கணக்கில் தவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

“ஒருவன் திட்டுகிறான்…” என்று வைத்துக் கொள்வோம். திட்டியவுடனே நம் எண்ணங்கள் அனைத்தும் அவன் மீது எப்படி வருகிறதோ அதே போன்றுதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் இப்போது பதிவாக்குகின்றேன்.

திட்டியவனை மீண்டும் எண்ணுவது போல்
1.யாம் சொன்னதைத் திரும்ப எண்ணினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்
2.இருளை நீக்கலாம்… அமைதி பெறலாம்… உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தலாம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிகளை நீங்கள் பெற வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனான். மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி… என்றும் பிறவியில்லா நிலை என்று அடைந்ததுதான் அந்தத் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அடிக்கடி நாம் நுகர்ந்து அந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்டால் இருளை நீக்கி… சிந்தித்துச் செயல்படும் தன்மையும்… இந்த வாழ்க்கையை நமக்கு நாமே ஒழுங்குபடுத்தும் அந்த சக்தியும் நமக்குக் கிடைக்கும்.

அவ்வப்பொழுது வாழ்க்கையில் வரும் தீமைகளைச் சுத்தப்படுத்தி அருள் உணர்வைச் சேர்த்துக் கொள்ள முடியும்.
1.எந்த அளவிற்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் சேர்த்துக் கொள்கின்றீர்களோ அந்த அளவுக்கு அது உங்களுக்கு நல்லது
2.இந்த உடலில் வரும் நோய்களைத் தடுக்கலாம்… மன அமைதியும் கிடைக்கும்
3.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையலாம்

சாமி செய்வார் சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும்… ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… எந்திரம் செய்யும்…! என்று காலங்களை நீங்கள் விரயம் செய்ய வேண்டியதில்லை.

இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணிய உடனே அது உங்களுக்குக் கிடைக்கும்படிச் செய்கின்றோம்.

1.திட்டியவனை எண்ணியதும் நம்மை அந்தக் கோபம் எப்படி இயக்குகிறதோ…?
2.இது போன்று திட்டியவனை எண்ணப்படும் போது துருவ நட்சத்திரத்தினை எண்ணி… அது நமக்குள் இயக்காதபடி தடுக்கவும்
3.ஒரு வேதனைப்படுவோரை எண்ணியபின் அந்த வேதனை உடனடியாக நம்மை எப்படி இயக்குகின்றதோ
4.இதைப் போல் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உள் செலுத்தி
5.அது போன்ற எத்தகைய தீமைகள் வந்தாலும் அவைகளைத் தணித்துக் கொள்ள முடியும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். இப்படிப் பழகிக் கொண்டால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மன அமைதி கிடைக்கும்… மகிழ்ச்சி வரும்… அருள் சக்திகளும் கிடைக்கும்.

மின் காந்த அலையை எடுத்தால் தான் சக்தி

 

எண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.

இவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்
1.எண்ணத்தைக் கொண்டு உணர்வும்…
2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்
3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்
4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.

காற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.

மின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.

நம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.

காந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.

எந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.

இதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.

1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு
2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்
3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி
4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி
5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை
6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோடி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)

இதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.

இச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்
1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்
2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.

ஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…! என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.

அஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா…? ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…?

ஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

ஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.

ஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்… மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே… தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.

தன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.

ஆனால்….
1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ
2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளைப் படைக்கப் பெற்று வழி வந்த நாம்
3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நட்பின் தன்மை கொண்டு ஒருவரிடம் பழகுகின்றோம். அவர் சந்தர்ப்பத்தால் நோய்வாய்ப்பட்டு இருக்கப்படும் பொழுது அவரை உற்றுப் பார்த்துக் கேட்டு க்ஷேமத்தை விசாரிக்கின்றோம். அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்கின்றோம்.

அப்பொழுது அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்து கொண்ட பின் அந்த நோய்வாய்ப்பட்ட உடலிலிருந்து வெளிப்படும் அந்த வேதனையான உணர்வுகளை நம்மை அறியாமலே நாம் நுகர நேருகின்றது

1.நாம் நல்லதை நினைத்துத்தான் அவருக்கு உதவி செய்கின்றோம்.
2.ஆனால் நோய்வாய்ப்பட்ட உணர்வுகள் வெளிப்படுவதை நாம் கண் கொண்டு உற்றுப் பார்க்கப்படும் பொழுது
3.அந்த மனிதனின் உருவம் நமக்குள் பதிவாக்கி விடுகின்றது.
4.அந்த உடலிலிருந்து வரக்கூடிய வேதனைகளை நாம் நுகர்ந்து அறிய முடிகின்றது
5.நுகர்ந்தறிந்தாலும் அவர் எப்படி வேதனைப்பட்டாரோ அதே வேதனை உணர்வு நமக்குள்ளும் தோன்றுகின்றது.

ஒரு முறை பார்த்து விட்டாலும் அவரை எண்ணி நாம் அடிக்கடி வேதனைப்படுகின்றோம். ஏனென்றால் அவர் உடலிலிருந்து வரக்கூடிய வேதனையான அலைகள் பூமியிலே பரவிக் கொண்டேதான் உள்ளது.

ஒரு செடி கொடிக்குள் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றிவிட்டால் அந்தப் பூமியின் துணை கொண்டு தன் உணர்வின் ஆற்றலைக் கவர்ந்து அதன் இனத்தின் வித்தாக விளைகின்றது.

இதைப் போல
1.நம் உடலின் துணை கொண்டு உடலுக்குள் இருக்கும் அணுக்கள் கிளர்ச்சியாகி
2.நம் உயிரின் துணை கொண்டு நாம் யாரைச் சந்தித்தோமோ அந்த உணர்வுகளைக் கவர்ந்து விடுகின்றது.
3.அப்படிக் கவர்ந்து நுகர்ந்தபின் அவர் பட்ட வேதனை போன்றே நம்மை அறியாமலே நம்மையும் சோர்வடையச் செய்துவிடுகின்றது.

அதே சமயத்தில் இந்த உணர்வுகள் நம் உடலிலுள்ள அந்த (அவரைப் பார்த்துப் பதிவாக்கிய) வேதனையான அணுக்களுக்கு இதை இரையாக்குகின்றது.

உதாரணமாக குருவியோ காக்காயோ மற்ற உயிரினங்கள் கூடு கட்டி முட்டையிட்டு அது குஞ்சு பொரித்த பின் அது நகர்ந்து செல்ல முடியவில்லை என்றால் இரை தேடிக் கொண்டு வந்து அதனதன் குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றது.

குஞ்சுகளோ தன் இரைக்காக வேண்டி ஏங்கிக் கத்துகின்றது. கத்தும் பொழுது தாய்ப் பறவை உடனடியாகத் தேடிச் சென்று தன் இனங்களுக்கு அதற்கு ஏற்ற உணவைக் கொடுக்கின்றது.

இதை போலத் தான்
1.நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ
2.நம் உயிர் அதை “ஜீவ அணுவாக மாற்றி” நம் உடலுடன் இணைத்து விடுகின்றது.
3.பின் உருவான அணு தனக்கு உணவு வேண்டும் பொழுதெல்லாம்
4.யாரை உற்றுப் பார்த்து எந்த உணர்வு கொண்டு அது உருவானதோ அந்த உணர்வை உணவாக எடுக்கும்.

உதாரணமாக வேதனைப்படுபவரைப் பார்த்து அந்த அணு உருவாகியிருந்தால் வேதனையை உருவாக்கும் நிலையாக நம்மையும் வேதனைப்படும் மனிதனாக உருவாக்கிவிடும்.

யார் மீது அந்த வேதனைப்பட்டோமோ அதே உணர்வின் தன்மையை நம் உடலிலிருந்த அணு ஏங்கப்படும் பொழுது
1.நம் உயிர் “எந்த உடலிலிருந்து இந்த வேதனைப்பட்ட அலைகள் வருகின்றதோ” அதைக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.ஆன்மாவிலிருந்து சுவாசிக்கச் செய்யும் போது அதே எண்ணங்கள் வந்து அந்த நினைவை ஊட்டுகின்றது.
3.அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை உடலில் உள்ள அந்த அணுக்களுக்கும் ஆகாரமாகச் சேர்கின்றது.

இது இயற்கையின் சில நியதிகள்.

ஆகவே… இதைப் போன்று நாம் வாழ்க்கையில் எவரைப் பார்த்தாலும் வேடிக்கையாக ஒருவர் சண்டை போடுபவரைப் பார்த்தாலும்… வேடிக்கையாகப் பலர் துயரப்படுவோரைப் பார்த்தாலும்… நம் கண்கள் அவரைப் பதிவாக்கி விடுகின்றது.

நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ அவர்கள் உடலிலிருந்து வெளிப்படுவதை அதைக் கவர்ந்து அதை நம் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து உயிரிலே பட்டபின் அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக நமக்குள் விளைந்து விடுகின்றது.

நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் இத்தகைய அணுக்கள் உருவாக்கி விட்டால் உயிரால் உருவாக்கப்பட்ட அந்த அணுக்கள் தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது அதே உணர்வுகளைத் தூண்டுகின்றது.

அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது இதே உயிர் யார் உடலிலிருந்து வந்ததோ அதைப் பிரித்து நம் ஆன்மாவில் இதைப் பெருக்கி அதைச் சுவாசித்து அதை உணவாகக் கொடுக்கின்றது.

ஆகவே இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும்
1.உயிரின் இயக்க நிலைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்
2.உயிரின் வேலை எது…? என்றும் நம்மை எப்படி உருவாக்குகிறது…? என்றும் அறிந்து கொள்ளுங்கள்… தெளிந்து கொள்ளுங்கள்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்றால் தீமையானவற்றைப் பார்த்த அடுத்த கணமே “ஈஸ்வரா” என்று நம் உயிரிடம் புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும், அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று யாம் சொன்ன முறைப்படி உள் செலுத்தினால் தீமையான உணர்வு கருவாகி அணு ஆகாமல் உடனடியாகத் தடுக்க முடியும்.

சிறிது நேரம் எடுத்துக் கொண்டால் அந்தத் தீமை செய்யும் உணர்வின் அலைகள் அனாதையாகிவிடும் நம் ஆன்மாவில் இருந்து விலகிச் சென்றுவிடும். இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி.

பின்.. யார் நோய்வாய்ப்பட்டுள்ளார்களோ அவர்களிடம் நாம் நல்ல வாக்கினைப் பதிய வைத்து “துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் நீங்கள் சீக்கிரம் நலம் அடைவீர்கள்…!” என்று சொன்னால் அவரும் அதை எண்ணி எடுத்தால் அவரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்.
1.உங்கள் வாழ்க்கையில் உங்களை நீங்கள் நம்பி இதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்
2.“உங்கள் எண்ணத்திற்கு எவ்வளவு சக்தி இருக்கின்றது…?” இன்று நிச்சயம் உணர்வீர்கள்.

“தன்னை மறக்கும் தியானத்தால்” பிறப்பின் பலனை அடைய முடியாது

 

பல கோடி ஆண்டுகளாகச் சேமித்துப் பழக்கப்படுத்தி நம் உடலுடன் கூட்டிக் கொண்டுள்ள இம் மூன்று வகை உணர்வலையையும்… பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும்… இந்தப் பல கோடி எண்ணத்தின் சுவாசத்தால் நம் சப்த அலையுடன் பல ஜென்மங்களாக எடுத்துப் பழக்கப்படுத்திய நிலைகளை எல்லாம்.. “தாவரங்களைப் போன்று”
1.இக்காற்றினில் கலந்துள்ள ஒலி அலையான காந்த மின் அலையைத்
2.தனக்கு வேண்டிய உயர்ந்த ஞான சக்தியைக் கூட்டிப் பலன் பெருக்கிக் கொள்ள முடியும்.

தாவரம் தனக்கு வேண்டிய பிரித்த அமிலத்தை எடுத்துப் பலனைத் தரவல்ல காலங்கள் முடிந்தவுடன் குறுகிய கால வளர்ச்சியினால் பட்டுப் போகின்றது.

ஆனால் அதிலிருந்து வெளிப்பட்ட அமில குண கூட்டுப் பெருக்கில் ஜீவன் கொண்ட ஜீவ ஆத்மாக்களான நம் ஜீவித சக்தியில்… இப்பெருக்கத்தின் பெருக்க நிலை வளர்வதற்கு… இந்த எண்ணத்தில் எடுக்கும் ஞானத்தின் ஒளி ஈர்ப்பின்… காந்த மின் அலையின் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதனின் ஞான ஒளியாக… இந்த உயிரணு மட்டுமல்லாமல் பல கோடி அணுக்களும் செயல் கொண்டு… இம்மனித ஞானத்தின் வளர்ச்சி நிலை கூடும் சக்தியை என்றுமே வளர்த்திட முடியும்.

இருந்தாலும் அத்தகைய நிலை எய்திட… தியானப் பயிற்சி முறையைப் பலரால் பல காலங்களாக வழிப்படுத்தி வாழ்க்கையில் பலரினால் செயல்படுத்தி வருகின்றனர் என்றாலும் “அதில் அவர்கள் அடைந்த நிலை என்ன…?”

1.நல்ல வாழ்க்கையின் பல ஞான உபதேசங்களும் பெற்றவர்கள் அதே சுழற்சியில் தான் சுழல்கின்றார்கள்
2.“ஆழ்நிலை தியானத்தை…!” அறியத் துடிக்கின்றனர்.
3.இந்த உணர்வையும் எண்ணத்தையும் உறங்கும் நிலைப்படுத்தும் ஞானத்தால்
4.இந்த உடலுக்கோ இந்த உடலை வளர்க்க குடி வந்த பல கோடி உயிரணுக்களுக்கோ வளரும் சக்தி குன்றி
5.இதே சுழற்சியில் தான் சுழன்று கொண்டே இருக்கும்.

மாறாக ஒவ்வொரு அணுவுமே மண்டலமாக உருப்பெறும் நல் ஒளி பெறும் சூரிய ஒளியுடனோ… பல கோடிச் சக்தி ஒளியான சர்வமும் படைக்கவல்ல அவ்வாதி சக்தியின் அருள் ஒளியுடன் கலக்கும் நிலை பெற… ஆழ் நிலைத் தியானத்தால் வளர்ச்சி கொள்ள முடியாது,

உணர்வுடன் கூடிய எண்ணத்தை…
1.இவ்வுணர்வின் உந்தலுக்குகந்த ஒவ்வொரு உடலிலும் உள்ள அமில குணங்களையும்
2.இவ்வெண்ண ஞானத்தால் எடுக்கும் சுவாசம் கொண்டு உயர்வாக்கும் பக்குவ முறையைச் செயல்படுத்தினால் தான்..
3.சக்தியின் சக்தியான சகலத்துடன் செயல்படுத்தும் “ஆதி சக்தியின்” ஒளி சக்தியைப் பெற முடியும்.

ஆதி சக்தியின் ஒளி சக்தியின் சிறு அணுவாக உதித்த நாம் அச்சக்தியின் அருளின் ஒளியைப் பெருக்கிச் சமர்ப்பிப்பது தான் நமக்கு ஆண்டவனின் சக்தி பெற்ற நிலையின் பொருள்…!

புரிந்ததா…!

இது நாள் வரை உணர்த்தி வந்த பாட முறையின் தியானம் கொண்டு

போற்றலுக்குகந்த போற்றலாய்
யான்… போற்றி மகிழவே

நேசத்திற்குகந்த நேர்மையாய்
நினைவால்… வழி நிற்பேனே

 

பாசத்திற்குகந்த படைப்பிலே…
பலவாகக் கலந்து பெறுவேனே…!

ஆசைக்குகந்த ஆசையாய்
அளவாய்.. மகிழ்ந்து அடைவேனே..!

 

ஆற்றலுக்குகந்த ஆண்டவனே…
ஆற்றலின் எதிர்பிம்பமானவனே…

தாலாட்டும் தாய் தந்தை தலைமையிலே
தலை வணங்கி… பணிவேனே…!

 

ஏற்றத்திற்குகந்த எண்ணத்திலே… …
ஏறும் படியில்… ஏறுவேனே…!
வாசத்திற்குகந்த வாசனையாக
உள்ளத்தின் வாசனையை… வளர்ப்பேனே…!

 

போற்றித் துதிக்கும் நிலையில் உள்ளேன்…
போற்றலுக்குகந்த… “தெய்வ நிலை பெறுவேனே…!”

என்ற இந்தப் பாடலில் உள்ளதன் கருத்தின் நிலையே உணர்ந்து ஒவ்வொரு மனிதனின் செயலும் செழிப்பாகிடல் வேண்டும்.

தீமைகளை நீக்க வேண்டும் என்றாலும் அதைப் “பகையாகக் கருதக் கூடாது…”

 

துருவ தியானத்தில் எடுக்கும் சக்தியின் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எங்கினால் அதை நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

கையில் அழுக்குப்பட்டால் நந்நீரை விட்டுக் கையைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.

இதைப் போல நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்
1.பல தீமைகளைக் காணும் பொழுதும் கேட்கும் பொழுதும் இது நமக்குள் ஊடுருவி நம்மை அறியச் செய்தாலும்
2.அந்த உணர்வின் வளர்ச்சிகளை அதை நமக்குள் வளராது தடைப்படுத்தி
3.“நம்முடன் அடங்கி இயக்கச் செய்ய வேண்டும்”.

அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும். கடுமையான தீமைகளைப் பார்த்தாலும் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் உணர்வினை இணைத்து இந்த வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இன்று நாம் குழம்பு வைக்கும் பொழுது காரம் புளி உப்பு என்று கலந்து தான் வைக்கின்றோம்.

காரம் புளி உப்பு ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டு அதனுடைய வீரியச் சத்தினை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதனை நாம் “பக்குவப்படுத்திச் சம அளவு கொண்டு வரும் பொழுது” சுவையாக வருகின்றது.

இதைப் போலத்தான் உலகில் இன்று கடுமையான நிலைகளும் வேதனைப்படும் நிலைகளும்… துயரப்படுத்தும் செய்திகளும்… நம்மை அறியாமலே பல நிலைகளில் வந்து கொண்டேயுள்ளது.

நாம் வாழும் காலங்களில் இத்தகைய “எதிர்மறையான உணர்வுகள்” வரும் பொழுது வெறுப்பின் தன்மை அடைந்து பிரித்திடும் தன்மையும் அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.
1.அப்பொழுது நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும்
2.நாம் நுகர்ந்த இந்த வெறுப்பின் உணர்வுகளுக்கும் இரண்டும் போராகி
3.தீமையை விளைவிக்கும் அணுக்களாக உருப்பெற்று நம் நல்ல உணர்வுகளை அழித்து விடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலில்லாது அவைகளை நம்முடன் இணங்கி இயக்கிடும் நிலையைச் செயல்படுத்திட வேண்டும்.

அவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ததை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பம் வருகின்றதோ உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து இந்த உணர்வினை இணைத்து விட்டால் இந்த எண்ணம் தான் “கல்யாணராமன்” என்பது.

1.வாழ்க்கையில் சந்திக்கும் “எத்தகைய தீமைகளையும் பகைமையாகக் கருதாது”
2.அது தனக்குள் அடங்கி தன்னுடன் இணைந்து இருக்கும்படியாக
3.குழம்புக்குள் புளிப்பும் காரமும் எப்படி இணைந்து சுவையாக உள்ளதோ
4.இதைப் போல மாற்றிக் கொள்ள முடியும்.

நாம் வாழ்க்கையில் காணும் தீமைகள் யாவையாகினும் கடும் நோயாக இருந்தாலும் நாம் பார்த்துணர்ந்து அதிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும். இருந்தாலும்…
1.நுகர்ந்த அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்திடாது
2.அது வலுப் பெறாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து… இணைத்து…
3.ஒவ்வொரு நொடிகளிலேயும் நாம் துருவ நட்சத்திரத்துடன் இணைத்(ந்)தே வாழ வேண்டும்.

இது தான் “வாழ்க்கையே தியானம்” என்பது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்கள் அனைவருக்குமே
1.சாமிக்கு (ஞானகுரு) இந்தச் சக்தி எப்படி வந்தது…?
2.நாமும் அந்தச் சக்திகளைப் பெற வேண்டும். அது எப்படி…? என்று
3.தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருக்கின்றது.

உங்களை மாதிரித்தான் எனக்கும் ஆசை வந்தது. அப்பொழுது குருநாதரிடம் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) உங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று கேட்டேன்.

எல்லாவற்றையும் காண்பித்தீர்கள், நீங்கள் எப்படி இந்தச் சக்தியைப் பெற்றீர்கள்…? என்று நீங்கள் கேட்கிற மாதிரியே நானும் குருநாதரிடம் கேட்டேன்,

“நீ இதைச் சீக்கிரம் பார்ப்பாய்… பார்த்துக் கொள்வாய்…” என்று இப்படியே என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.

அவருடைய பார்வை… 25 வருடத்திற்குப் பின்னால் தான்
1.அவருடைய பிறப்பு…. அவருடைய உணர்வுகள் எப்படி இயங்கியது…? என்கிற வகையிலே
2.அது சிறுகச் சிறுகச் சிறுகத்தான் தெரிய முடிந்தது.

ஏனென்றால் எல்லாவற்றையும் காண்பித்துக் கொடுத்தாலும் “அவரை யார்…?” என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்பொழுது அவருடைய உடலில் வந்த உணர்வுகளை எடுத்து நாம் கவர்ந்து அது எப்படி…? என்ற நிலைகளிலே அதன் வழிகளில் பக்குவப்படுத்தி
1.அவர் நிலைக்கு இன்றைக்கு ஒரு கால் பாகம் தான் வந்திருக்கின்றேன்.
2.அதிலேயும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கின்றது
3.யாம் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு 25 வருடம் ஆகிவிட்டது.

“தியானம் எடுத்துக் கொண்டே வந்தாலும்” வேதனையும் கோபமும் வருகிறது… ஏன்…?

 

ஒரு ரைஸ் மில்லில் நெல்லைப் போடும் பொழுது
1.அளவுக்கு மீறிப் போட்டால் அது நெல்லின் தோலைப் பிரிக்கும் சக்தி இழந்து விடுகின்றது
2.அல்லது அந்த இயந்திரத்தை இயக்க விடாதபடி தடைப்படுத்தி விடுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனின் சுவாசத்திலும் தீமைகளை எதிர்க்கும் சக்தி இருந்தும் அதைக் காக்க முடியாத நிலை ஆகப்படும் பொழுது…
1.தீமையின் உணர்வுகளை நாம் அடிக்கடி கேட்டுணர்ந்து இரத்தத்தில் கலந்து விட்டால்
2.அதே உணர்வுகள் நம் உடலில் தீமைகளைக் கவரும் சக்தியாக மாறிவிடுகிறது.

காரணம் இந்தத் தீமை என்ற உணர்வுகளைக் கண்ணிலே பார்த்தபின் கருவிழி நம் உடலில் முன் பாகத்தில் (நெஞ்சில்) எலும்புக்குள் ஊன் உண்டு. அதிலே பதிவாக்கி விடுகின்றது.

ஆக நாம் எதைக் கலந்தாலும் கவர்ந்தாலும் முன்னாடி குவித்து இதனின் உணர்வுகள் எதுவோ அதற்குத் தக்கவாறு இருக்கின்றது. இதில் எது அதிகமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் அந்த வாழ்க்கையின் அமைப்பாக நாம் மாறி விடுகின்றோம்.
1.அதற்குத் தக்க உணர்வின் தன்மை நம் இரத்தங்களிலே மாறுகிறது
2.அது மாற்றப்படும் போது நம் உறுப்புகளும் மாற்றப்படுகின்றது.
3.தீமைகள் அதிகமான பின் கடுமையான நோய்களைச் சந்திக்கும் நிலை வருகின்றது.
4.உடலுக்குப் பின் வேதனை கொண்ட உணர்வுடனே உயிரான்மா பிரிகின்றது.
5.பின் நாம் எங்கே செல்கின்றோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது வாழ்க்கையில் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து வளர்ச்சியில் மனிதனாக வந்தோம். இதற்குப் பின் மீண்டும் கீழான நிலைகளுக்குச் செல்லலாமா…!

ஒரு நாயை அடிக்கிறோம்… துன்புறுத்துகிறோம்… இம்சிக்கிறோம்… என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த உயிர் வெளி வரப்படும் பொழுது மனிதன் அடித்தால் மனித உடலுக்குள்ளே தான் வருகின்றது.

ஆனால் வலு கொண்ட வேறு ஒரு மிருகம் உதாரணமாக ஒரு புலி அடித்தால் நாயின் உயிரான்மா புலிக்குள் செல்கிறது.

மனிதனால் தாக்கப்பட்ட நாயின் உயிர் மனித உடலில் ஈர்க்கப்பட்டு மனித உணர்வை எடுத்து மனிதனாக உருவாக்கும் சந்தர்ப்பம் வந்துவிடுகிறது.
1.ஆகவே இந்த உயிரை நாம் மதித்தல் வேண்டும்
2.காரணம் “எல்லாமே சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான்…!”

அன்றாட வாழ்க்கையில் நமக்குக் கோபம் வரலாம்… வெறுப்பு வரலாம்… வேதனை வரலாம்… சலிப்பு வரலாம்… சங்கடம் வரலாம்…! இது எல்லாம் நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் வரக்கூடியது தான். இதையெல்லாம் நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அப்படித் தடுத்துப் பழகுவதற்குத் தான் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து “ஆத்ம சுத்தி செய்யுங்கள்…” என்று சொல்கிறோம்.

அந்தச் சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… தீமைகள் புகாது தடுக்கும் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… உங்களுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்…! என்று வேறு எந்தச் சிந்தனையும் இல்லாதபடி நான் (ஞானகுரு) தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

அவ்வாறு உங்களுக்கு அந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்திக் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்களும்…
1.எப்போது… எத்தகைய குறைகள் வந்தாலும் அதை மறந்து ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
2.அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எல்லா உறுப்புகளுக்குள்ளும் செலுத்துங்கள்.

எங்கள் உடலில் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால் இதனுடன் அது அருகில் வரப்படும் பொழுது இது வலுவாகிறது. துருவ நட்சத்திரத்தின் வலு கூடுகிறது.

இதை எல்லாம் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றால் இன்று எல்லாமே நச்சுத்தன்மையாக இருக்கும்… கடினமாக இருக்கும் தீமைகளிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும். அதற்குத் தான் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் தியானம் எடுத்துக் கொண்டே வந்தாலும்…
1.சந்தர்ப்பத்தால் தான் எண்ணியது நடக்கவில்லை என்றால் “வேதனை…”
2.இல்லையென்றால் “கோபம்…” இதைப் போன்ற உணர்வு வந்தே விடுகின்றது.
3.நாம் தவறு செய்யவில்லை… ஆனால் இந்த உணர்வுகள் இயக்கி விடுகின்றது அல்லவா…!

காரணம்… ஏற்கனவே பதிவான நிலைகள்… அது வலிமை பெற்றது. அதனின் இயக்கங்களை இயக்கத் தான் செய்யும். அதை தடைப்படுத்த உங்களுக்குச் சக்தி தேவை.

இப்போது கொடுக்கும் சக்தியை நீங்கள் பயன்படுத்தி உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும்
1.நான் சொல்லும் நிலைகள் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொள்ளுங்கள்
2.தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்…
3.உங்கள் பேச்சால் மூச்சால் மற்றவரையும் காக்கும் சக்தியாக வலுப் பெறுங்கள்.

இயற்கையைப் பயன்படுத்துகின்றான் மனிதன்… ஆனால் இயற்கையை வளப்படுத்துகின்றான் ஞானி…!

 

உணர்வலையின் ஜீவ பிம்ப ஞானத்தால் தான் “நுண்ணிய காந்த ஈர்ப்பலையை…” நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

1.இந்த மனித உடலுக்குள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும் இவ்வுணர்வலையின் செயலையும்
2.இவ்வெண்ண சுவாசத்தால் “ஒரு நிலைப்படுத்தும்” பக்குவ மேம்பாட்டினால்
3.ஞான ஈர்ப்பின் நுண்ணிய காந்த அலையின் வளர்ச்சி ஒளியை
4.இவ்வுடல் முழுமைக்கும் ஈர்க்கவல்ல சக்தி முறையை வழிப்படுத்தும் செயல் உணர்ந்து
4.நம் ஜெப நிலை இருக்கும் பக்குவம் தான் “ஓ…ம் என்ற நாதமுடன் ஈர்த்து வழி பெறுங்கள்…!” என்னும் யான் சொல்லி வரும் நிலை.

இந்த உடலுக்கு உணர்வும்… உணர்வுடன் கூடிய குண அமிலங்களும்… குண அமிலங்களுடன் வழி நடத்தும் எண்ண சுவாசமும்… இருந்தால் தான் ஜீவ சக்தியான நுண்ணிய காந்த அலையின் சக்தியை நாம் எடுக்க முடியும்.

நம் உயிராத்மாவிற்குச் சேமிக்கும் சொத்து எது…? என்று பல தடவை வினாக்களை ஏற்கனவே எழுப்பியுள்ளேன்.

உயிராத்மாவிற்குத் தேவையான சொத்தைச் சேமிக்க வேண்டும் என்றால்… பலவான எண்ணத்தில் உணர்வின் உணர்ச்சி அலையின் வாழும் மனிதனின் ஞானம் எத்தகையதைப் போல் இருந்திடல் வேண்டும்…?

இன்றும் பல காலமாகவும் பல மேதைகள் புதிய புதிய செயல் முறைகளைக் கண்டுபிடித்து விஞ்ஞானச் செயலும் கல்வி ஞானமும் இன்னும் சிலர் கவிதை ஞானமும் பெற்றுத்தான் வாழ்கின்றனர்.

இந்த ஞானம் எத்தகையதைப் போன்றது..?

சித்தனின் ஞானத்திற்கும் இந்த ஞானத்திற்கும் மாறுபாடு என்ன…? சித்தனின் வளர்ச்சியும் ஞானம் தான்…! இவையும் ஞானம் தான்…!

சூரியனின் ஒளி சக்தியினால் இந்தப் பூமியின் வளர்ச்சி பூமி எடுத்து வளர்ந்து பலவாக உள்ளது. வளர்ந்துள்ள இயற்கையில் இருந்து அதிலுள்ள சத்தான நமக்குகந்தது எது..? என்று அறிந்து அதன் பெருக்கத்தை உற்பத்தியாக்கி அதன் சுழற்சி செயலில் இருந்தே மேன்மேலும் புதிய புதிய படைப்புகளை ஒன்றுடன் ஒன்று கலந்து அதன் பலனைப் பெறுவது போன்ற ஞானம் தான் விஞ்ஞானமும்.. இன்றைய கல்வி ஞானமும்… கவி ஞானமும்…! எல்லாமே.

ஆனால் சித்தனின் ஞானம் எப்படிப்பட்டது…?

இயற்கையில் பலவான நிலையில் இப்பலவற்றையும் கண்டு இவற்றிற்கு மேல் இவற்றையே வாழ வைக்கும் நிலை எவை..? என்பதனை உணர்ந்து இந்நிலையின் வளர்ச்சியின் “மூலம் அறிந்திட…” இந்த மூலத்துடன் சென்றடையும் நிலையில் கலந்தால் தான் இன்றைய படைப்பைப் போன்று பலவான புதிய படைப்புகளை இயற்கையில் படைக்கவல்ல ஆற்றலுக்கு வழி பெறச் செல்லுகின்றான் சித்தன்.

1.இயற்கையில் விஞ்ஞானம் காணுகின்றான் மனிதன்.
2.அந்த இயற்கையையே வளரச் செய்கின்றான் சித்தன்…!

காற்றிலும் நீரிலும் ஒளியிலும் உள்ள அமிலங்களைக் கொண்டு விஞ்ஞானச் சாதனையான அணு குண்டையும் விஷ வாயுக் குண்டையும் பலவாகப் படைக்கும் இன்றைய மனிதன்
1.நீரையும் காற்றையும் ஒளியையும் படைக்க முடியுமா…?
2.இயற்கையில் விளைந்த நாணல் புல்லைக் காற்றும் நீரும் ஒளியும் இல்லாமல் விஞ்ஞானத்தால் படைக்க முடியுமா…?

ஆனால் காற்றையும் நீரையும் ஒளியையும் படைத்தவனும் மனிதனே.. சித்தனாகவும் ஆனான்.. சப்தரிஷியாகவும் ஆனான்… சகலத்தையும் படைக்கும் ஆற்றலின் ஒளி காந்த சக்தியாகவும் ஆனான்…!

அத்தகைய ஞானத்தின் படைப்பு தானப்பா நீயும் நானும்…!

அந்த ஞானத்தையே பெறவல்ல சக்திக்கு ஜீவத் துடிப்புக் கொண்ட எண்ண சுவாசம் இருந்தால் தான் “எந்த ஞானமும் பெற முடியும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் எம்மை இமயமலையில் கேதார்நாத்துக்குப் போகச் சொன்னார். அங்கே பனிப் பாறைகளுக்கு மத்தியில் அவர் சொன்ன பாதையில் போனேன்.

பார்த்தால் ஒரு பட்டாளமே… படையே அந்த வழியில் போயிருக்கின்றது. அதிலே ஒரு 300, 400 பேர் இருப்பார்கள். அரசர்கள் போகிற மாதிரி சப்பரம் டோலி, குதிரைகள் எல்லாமே இருக்கிறது. அப்படி அப்படியே மடிந்து கிடக்கின்றார்கள்.

(நான் அங்கே போய்விட்டு வந்தபின் தான் பத்திரிக்கையில் எல்லாம் இதை வெளிப்படுத்தினார்கள்)

1.அந்தச் சரீரங்கள் எதுவும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது
2.அவர்கள் போட்டிருக்கும் நகைகள், வைரங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றது.

அதைப் பார்த்தவுடன் ஆசையும் வருகின்றது. நாம் இங்கே வந்தது யாருக்குத் தெரியப் போகிறது, இரண்டை எடுத்துப் பொட்டலம் கட்டிக் கொள்ளலாம் என்ற இந்த எண்ணம் வருகின்றது.

ஏனென்றால் குருநாதர் இந்தப் பாதையில் போகச் சொல்கின்றார். ஆசையைத் தூண்டுகின்றார்.

இரண்டு நகையை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போகும் பொழுது வீட்டில் கொடுத்தால் அவர்கள் கஷ்டமெல்லாம் போகும் என்று இப்படி என்னுடைய உணர்வுகள் சொல்கிறது.

ஒவ்வொருவர் உடலிலேயும் அவ்வளவு நகைகள் இருக்கின்றது…! அப்படியே படுத்துக் கிடக்கின்றார்கள். அவர்கள் முக அமைப்பைப் பார்த்தால் நேபாளிகள் சைனீஸ் மாதிரி அந்த அரச வம்சமாகத் தெரிகின்றது.

குருநாதர் சொன்னபடி (பழனியிலிருந்து) இவ்வளவு தூரம் வந்ததற்கு இதை எடுத்துக் கொண்டு வீட்டில் கொடுக்கலாம் என்ற எண்ணம் வருகின்றது.

குருநாதர் பழனியில் வைத்து எம்மிடம் செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்ன நிலையில் “இந்தச் செல்வம் இருந்தால் நமக்கு மதிப்பு வரும் அல்லவா…” என்ற இந்த உணர்வுகளும் அங்கே தூண்டுகின்றது.

எடுப்பதா… வேண்டாமா…? என்று எனக்குள் எண்ணங்கள் வந்தது. அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.

இது “நிஜமாகத்தான் இவர்கள் படுத்திருக்கின்றார்களா…?” அல்லது குருநாதர் இப்படிப் படுக்க வைத்திருக்கின்றாரா..? என்ற எண்ணம் வந்தது.
1.“இது நம்மை ஏதோ சோதிக்கின்றார்…
2.இது வேண்டாமப்பா..,” என்று அதிலிருந்து விடுபட்டு வந்தேன்.

நான் முதலில் வந்த பாதை அந்தப் பனிப் பாறை இடிந்து விழுந்துவிட்டது. அப்புறம் வேறு பாதையைக் காட்டி சுற்றிக் கீழே வந்தேன்.

வரும் பொழுது இந்திய எல்லையில் இந்தப் பக்கம் இருந்து டெலெஸ்கோப் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

“பாருடா… உன்னைப் பார்க்கின்றான் பார்” என்று குருநாதர் அதையும் காட்டுகின்றார். அப்புறம் எப்படியோ இங்கே மங்களூர் வந்து சேர்ந்தேன்.

ஏனென்றால்… குருநாதர் எமக்கு இத்தனை ஆசையும் ஊட்டி அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

1.குருநாதர் சக்தி கொடுக்கிறார் என்றால் சும்மா கொடுக்கவில்லை.
2.அவர் கொடுத்த ஆற்றலை என்ன என்ன செய்யலாம்…? என்ற நிலையில் கொடுத்துள்ளார்.

நெருப்பை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்…?

வெளிச்சம் தேவை என்றால் நெருப்பைத் தீபமாகவும் பயன்படுத்துகின்றோம். சமையல் செய்யவும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம். அதே சமயத்தில் ஒரு இரும்பை உருக்க வேண்டும் என்றால் அதற்கும் நெருப்பைப் பயன்படுத்துகின்றோம்.

அதைப் போன்று தான் நம் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாகவும் மாற்றலாம். அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம்.

ஆக… இதை எந்த வழியில்…? என்ற வகையில் அந்தச் சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி? என்று எமக்குத் தெளிவாக உணர்த்துகின்றார்.

ஏனென்றால்
1.மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் எப்படித் தூண்டுகின்றது…?
2.முதலில் இதை அழித்துப் பழக வேண்டும்
3.அந்த மெய் ஒளியை வளர்த்துப் பழக வேண்டும்.

இமயமலையில் அந்த இடத்தில் வைத்து எமக்கு இதைக் காட்டுகின்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன்.

நம் வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்தை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுத்துப் பழக வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ பார்த்தோம் என்றால் அதை நாம் நுகர்ந்து அறிகின்றோம்.

அடுத்த நிமிடம் உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் எடுக்க வேண்டும். எடுத்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“அந்தச் சக்தியைத் தான்” உங்களைப் பெறச் செய்கின்றோம்.

அவர்களில் ஒருவர் நமக்குக் கெடுதல் செய்கிறார் என்றால்
1.“தொலைந்து போகட்டும்…” என்று சொன்னால் கெட்டுப் போகின்றார்கள்.
2.ஆனால் தொலைந்து போக வேண்டும் என்று சொன்ன உணர்வு நமக்குள் விளைகின்றது..
3.அவரும் கெடுகின்றார், நம் வளர்ச்சியின் தன்மையும் கெடுகின்றது.

ஆனால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அந்த அருள் உணர்வுகள் எங்களுக்குள் விளைய வேண்டும், நமக்குக் கெடுதல் செய்தவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் இது நமக்கு நன்மை பயக்கும்.

ஒரு போக்கிரி வருகின்றான், நமக்கு ஏதாவது ஒன்றைக் கெடுதலாகச் செய்கின்றான் என்கிற பொழுது நம்மிடம் சக்தி இருக்கின்றது என்ற வகையில் அவனை வீழ்த்த நாம் பதிலுக்குச் செய்தோம் என்றால் என்ன ஆகும்…?

நாம் ஒரு கடுமையான ஆயுதத்தை எடுத்து அதைப் பயன்படுத்தும் பொழுது நம் நல்ல குணங்களை அது அடக்குகின்றது. அப்போது
1.நாம் நமது நல்ல குணங்களை அடக்கித்தான்
2.அந்த வீழ்த்தும் உணர்வை நமக்குள் விளைய வைத்துத்தான்
3.அங்கே போக்கிரியின் மேல் பாய்ச்சுகின்றோம்.

அப்பொழுது அங்கே கெடுதல் வருகின்றது.

இங்கே விளைந்த பிற்பாடுதான் அங்கே போகின்றது.
1.ஆகவே இங்கே நமக்குள் முதலில் கெட்டது விளையாமல் தடுக்க வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை நமக்குள் “காப்பாக” பாதுகாப்புக் கவசமாக உருவாக்க வேண்டும்.

இந்த உணர்வின் தன்மையை இங்கே வளர்த்து அந்தத் தீமைகளைக் களைகளை நீக்க வேண்டும்.

இருளை அகற்றி ஒளியாக மாற்றி… பேரருள் பேரொளியாக ஆனவர்கள் தான் சப்தரிஷிகள்

 

சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா

சப்தரிஷிகள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை அருளாக்கிப் பேரருளாக மாற்றிப் பேரொளியாக மாறி எப்படி பிறவியில்லா நிலை அடைந்தனரோ அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

சப்தரிஷிகள் என்றால் யார்…?

இருளை அகற்றி ஒளியின் உணர்வினை தங்களுக்குள் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷிகள்.
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் பெற்று
2.ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழ்பவர்கள் சப்தரிஷிகள்.

அவர்கள் மனிதச் சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் தங்களுடைய வாழ்க்கையில் அறியாது வந்த இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கை வாழ்ந்தனர்.

அவர்கள் தங்களிடமிருந்து வெளிப்படுத்திய அருள் உணர்வுகளை நாங்கள் பெற்று அந்த அருள் ஞான வழியினை எங்கள் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும்.

உதாரணமாக… பலகாரங்களைச் செய்யும் பொழுது நாம் பல பொருள்களை ஒன்றாக இணைத்துச் சுவைமிக்க நிலைகளை எப்படி உருவாக்குகின்றோமோ இதைப் போன்று சப்தரிஷிகள் ஒன்றென இணைந்து உணர்வுகளைப் பேரருளாகப் பெற்றுப் பேரொளியாக மாற்றிப் பேரொளி என்ற நிலைகள் அடைந்து பிறவியில்லா நிலையாகத் தனக்குள் உருவாக்கி வளர்த்துக் கொண்டவர்கள்.

ஆகவே தான் அந்தச் சப்தரிஷிகள் பெற்ற அந்த அருள் சக்திகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று தியானிக்கச் சொல்கிறோம்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது போன்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்பொழுது நாம் எந்தச் சப்தரிஷிகளை எண்ணுகின்றோமோ நாம் அதுவாக ஆகின்றோம்.

சப்தரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக்கிச் சென்ற அந்த அருளைப் பெற வேண்டும் என்ற நினைவினை
1.கண்ணின் வழி கொண்டு உணர்வினை உடலுக்குள் பதிவாக்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கி இருங்கள்.

அவர்கள் பெற்ற பேரருளின் தன்மையை பேரொளியாக மாற்றிய உணர்வின் தன்மைகளை நாம் ஏங்கும் பொழுது
1.நமது உயிரோ அதை “ஓ…” என்ற நிலையில் அதை கருவாக்கி
2.உயிரான ஈஸ்வரலோகத்தில் சிரசின் பாகத்தில் அதன் அணுவின் தன்மையை உருவாக்கி
3.நம் இரத்த நாளங்களில் அதனின் கருவின் தன்மையாக உருவாக்கச் செய்கிறது.

அத்தகைய கருவினை நமக்குள் உருவாக்கி விட்டால் அணுவாக உருவாகும் போது
1.அதற்கு உணவு அந்த சப்தரிஷிகள் எடுத்த அருள் சக்திகள் தான்…
2.அதையே உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுவதைப் பற்றுடன் பாசத்துடன் உற்று நோக்கி அதன் உணர்வை நாம் நுகர்ந்தறிகின்றோம்… பின் அவர்களுக்கு உதவியும் செய்கிறோம்.

நாம் உதவி செய்தாலும் நாம் நுகர்ந்த அந்த வேதனையான உணர்வுகளை ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உயிர் ஈசனான ஈஸ்வரலோகத்தில் அந்த வேதனையை உருவாக்கும் அணுவின் கருவாக உருவாக்குகின்றது.

அவனைப் பரிவு கொண்டு உற்று நோக்கி இப்படி அவதிப்படுகிறானே…! எண்ணும் பொழுது நாம் அதுவாக மாறிவிடுகின்றோம்.

அதைப் போன்று தான் சப்தரிஷிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நாம் கண்களால் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

சப்தரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று
1.உயிரான ஈசனிடம் ஏங்குகின்றோம்… இந்த உணர்வின் தன்மை அங்கே ஈஸ்வரலோகத்தில் உருவாக்குகின்றது.
2.நம் இரத்தங்களிலே அது இந்திரலோகமாக மாறுகின்றது
3.பின் அந்த அணுவின் தன்மை உருவாகும் பொழுது பிரம்மலோகமாக மாறுகின்றது.

சப்தரிஷிகள் அவர்கள் எப்படி இந்த வாழ்க்கையில் இருளை நீக்கிவிட்டு உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழுகின்றனரோ
1.அந்த அரும்பெரும் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அந்த ஏக்கம்… நாம் அதுவாக மாறுகின்றோம்.

உண்மைச் சக்தியை… “காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல ஆத்மா…” நிச்சயம் ஒளி நிலை பெறுவான்

 

உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.

காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.

அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து…!” அதைத் தட்டி விடுகின்றான்.

இது எதனைக் குறிக்கின்றது…?

விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.

இவ்வுணர்வின் செயலே… எண்ணத்தை விழிப்படையச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்…?

இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்…!”

சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.

இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே…
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.

சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து…
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.

இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்…” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.

பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.
1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கித் தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.

உண்மைச் சக்தியை காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.

உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் இந்த உலகத்துடன் ஒத்து வாழ்கின்றோம். அதிலிருந்து பிரிந்து வாழ முடியாது. நன்மையோ… தீமையோ… அவைகளைக் கேட்டுணர்ந்துதான் நாம் செயல்படுகின்றோம்.

தீமையை நுகர்ந்து தீமை என்று நாம் உணர்கின்றோம். ஆனால் அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் விளையக் கூடாது.

அப்படி என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

ஒருவரிடம் பழகிய பின்பு எதிரியாகிவிட்டால் நமக்குள் அந்த உணர்வின் பதிவு இருக்கும். திடீர் என்று சந்தித்தோம் என்றால்
1.“ஐயோ… போகிறான் பார் அயோக்கியப் பயல்…” என்று
2.பயமோ கோபமோ ஆத்திரமோ வந்து அவன் செய்த தவறை உணர்த்தும்.
3அப்பொழுது… அந்த வழியில் உருவான அணு “தன் இரையை அந்த நேரத்தில் எடுக்கிறது…” என்று பொருள்.

அதே மாதிரி அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் பொழுது அதை நாம் கேட்க நேரும். மற்றவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் பொழுது அந்தத் தவறின் உணர்வை (நமக்குள் உருவான) அந்த அணு சாப்பிட்டு அது வளர ஆரம்பிக்கும்.

ஏனென்றால்… ஒருவன் தவறு செய்கின்றான். அதைப் பார்த்துணர்ந்ததை நம் கண்ணின் கருவிழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ பார்த்த உணர்வின் அலைகளை நம் ஆன்மாவாக (காற்றாக) மாற்றுகின்றது.

ஆன்மாவிலிருந்து மூக்கின் வழி அதைச் சுவாசிக்கப்படும் பொழுது உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சிகளாக இயக்கிக் காட்டும். அந்த உணர்ச்சிகள் வாயிலே உமிழ் நீராக மாறிச் சாப்பிட்ட ஆகாரத்துடன் இணையும். ஆகாரத்திலிருந்து இரத்தமாக மாறி பின் ஜீவ அணுக்களாகி உடலுடன் இணையும்.

ஆகவே…
1.நம் கண் அது வழி காட்டும்
2.நம் உயிரோ இயக்கிக் காட்டும்
3.உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும்
4.மீண்டும் நினைவுக்கு வரப்படும் பொழுது அதை அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.

இப்படி எந்தெந்த சந்தர்ப்பத்தில் அவைகள் நமக்குள் வளரத் தொடங்கினாலும் உடனுக்குடன் “ஈஸ்வரா…” என்று நம் உயிரிடமே வேண்ட வேண்டும்.

உருவாக்கும் உயிரான ஈசனிடம் தான் தீமையை மீட்டிடும் நிலைகளைக் கேட்க வேண்டும். ஏனென்றால் நாம் எண்ணுவதை அணுவாக உருவாக்குவது நம் உயிர் தான். அவனின்றி அணுவும் அசையாது.

ஏனென்றால் கருவிழி பார்த்துப் பதிவாக்கி, காந்தப் புலன் ஆன்மாவாகக் கவர்ந்து நாம் சுவாசித்தபின் உள்ளுக்குள் சென்று அது எதனால் வளர்க்கப்பட்டதோ அந்த அணுவிற்கு உணவாகக் கொடுப்பது நம் உயிரின் வேலை. (நாம் எண்ணுவதை எல்லாம் ஜீவ அணுவாக மாற்றுவது நம் உயிரின் வேலை தான்).

நம் உயிர் சூரியனாக இருந்து அணுக்களை உருவாக்குவதும் அவைகளுக்கு இரையைக் கொடுப்பதும் அதனதன் நினைவுகளைக் கவர்ந்து தனக்குள் செயலாக்கும் நிலையாக இயக்கிக் கொண்டுள்ளது.

உடலில் விளைந்த உணர்வைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு அதற்கொப்ப அடுத்து மறு உடல் பெறச் செய்கின்றது என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

தனியாக ஒரு மிளகாயைக் கடித்தால் “ஆ..,” என்று காரமாகின்றது. ஒரு விஷமான பொருளைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகின்றது.

அதே சமயத்தில் அந்த விஷமான சக்தியை மருந்துடன் சேர்த்து அதனின் கலவையைச் சிறுக்கப்படும் பொழுது மருந்தை நன்மையாக்குகின்றது… நோயை நீக்க உதவுகின்றது.

இதைப் போலத் தான்
1.தீமையானவற்றைக் கேட்டுணர்ந்தாலும் அதை நுகர்ந்து இயக்கப்படும் பொழுது “இடைமறித்து…”
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதனுடன் இணைக்க வேண்டும்.
3.அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் அணுவாக மாறுகின்றது.
4.இதைக் கலந்த அணுவாக மாறும் பொழுது தீமையை அடக்கும் நிலைகளாக நமக்குள் உருப்பெறுகின்றது.

இந்த வலுப்பெறும் பொழுது தீமையான உணர்வை இங்கே பிளக்கின்றது. இப்படித் துடைத்துப் பழக வேண்டும். இதைத் தான் உங்களுக்குச் சக்தி வாய்ந்த ஆயுதமாக “ஆத்ம சுத்தி” என்று கொடுக்கின்றோம்.

சர்வ தீமைகளிலிருந்து விடுபடுவீர்கள்… மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்கள் எண்ணமே உங்களைக் காக்கும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

தன் உடலில் எழும் உணர்வை மாற்றியமைக்கும் “எண்ண வலிமை” பெற வேண்டும்

 

காட்சி:-
வண்டியில் சக்கரம் சுழன்று… வண்டி ஓட அது உதவியாக வருகின்றது. ஆகவே வண்டி ஓட அந்தச் சக்கரம் தேவை தான். ஓடும் பொழுது அவ்வாச்சாணி முறிந்து சக்கரம் சுழன்று ஒரு பக்கம் உருண்டோடி விடுகின்றது… வண்டியின் குடை சாய்ந்து விடுகின்றது.

வண்டி ஓட அச்சாணி எப்படி முக்கியமோ அதைப் போன்று இந்த வாழ்க்கை என்ற வண்டி ஓடவும்… உடல் என்ற வண்டி ஓடவும்… அச்சாணி தேவை.

விளக்கம்:-
1.வாழ்க்கை வண்டிக்குப் “பொருளான அச்சாணி” வேண்டும்.
2.இந்த உடல் என்ற வண்டிக்கு இவ்வெண்ண “சுவாச அச்சாணி” வேண்டும்.
3.எண்ணத்தின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் செயலைக் கொண்டு தான் இப்பிம்ப உடலின் ஆரோக்கியத் தன்மையே உள்ளது.

“எண்ணத்தால் தான் அனைத்தும் நடக்கின்றது…” என்று உணர்த்துகின்றேன். ஆனால் இந்த உடலின் உணர்வு நிலை எதன் தன்மை கொண்டது…? என்று கேட்பீர்கள்.

உடலின் உணர்வினால் உணவையும் பசியையும் தாகத்தையும் உறக்கத்தையும் உடல் இச்சையையும் நாம் எண்ணத்தில் எடுப்பதற்கு முதலிலேயே “உணர்வின் உந்தலினால்…” நம் எண்ணத்தால் கொண்ட சுவாசத்தில் உணர்கின்றோம்.

இந்த உணர்வின் நிலை எப்படி ஏற்பட்டது…? எண்ணத்தால் இந்த உணர்வின் அலையை மாற்றி அமைக்க முடியும்.

ஆரம்பக் காலத்தில் இரண்டு வகை குண அமிலச் சேர்க்கையின் ஈர்ப்பில் ஜீவ சக்தி தோன்றியவுடன் அவ்வமில குணம் திடப்பட்டு வளர்ச்சியின் ஜீவ சக்தி உயிர் சக்தி ஏற்படுகிறது.

ஏற்பட்டவுடன் அதன் வளர்ச்சிக்குகந்த ஈர்ப்பின் உணர்வுக்கு மேன்மேலும் தன் உணவைச் சேமித்து… அதன் வட்ட வளர்ச்சி கூடக் கூட உணர்வின் தன்மையும்… உணர்வுக்குகந்த ஈர்ப்பு ஆகாரத்தையும்… சேமித்த இந்த உணர்விலிருந்து தான்… “உருவின் நிலையும் பெறுகின்றது ஜீவ ஆத்மாக்கள்…”

ஆரம்பக் காலத்தின் அமில குணச் சேர்க்கை என்று உணர்த்தியது இந்த உடல் பிம்பத்தைப் பெறத் தக்க அமில குணச் சேர்க்கைக் காலத்தைத்தான் குறிப்பிட்டேன்.

இப்படி இதன் வளர்ச்சி நிலை கூடிக் கூடிப் பல காலமாகச் சேமித்த இந்த உணர்வலையின் வழி சக்தியினால்தான் “எண்ண சக்தியே வலுப் பெற்று” ஜீவ ஆத்மாக்கள் வளர்ந்துள்ளன.

பல பல கோடி ஆண்டுகள் இந்த உணர்வின் அடிப்படை குண அமில ஈர்ப்பை வளர்த்துக் கொண்டு எண்ணியதைச் செயலாக்கும் மனித உரு பிம்ப ஜீவன்களுக்குத் தன் உணர்வின் அலையின் சக்தியும் இந்த எண்ண வளர்ச்சி ஏற்பட்ட ஜீவ உடல் கொண்ட பிறகு…
1.இயற்கையில் உடலில் தன் உணர்வை வெளிப்படுத்தும் செயல் அமிலங்களின் நிலை உள்ளன.
2.எண்ண வளர்ச்சி நிலை கொண்ட மனிதனால் மட்டும்
3.தன் எண்ணத்தால் உடலில் ஏற்படும் இயற்கை உணர்வு தன்மையையும் மாற்றி அமைக்க முடியும்.
4.இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் நிலைக்குகந்த செயலினால்
5.இவ்வுணர்வலையையும் மாற்றி அமைக்க முடியும்.
6.இவ்வுடலுக்கு உணவும் தூக்கமும் இச்சையும் தேவையில்லையா…?
7.இதனை மாற்றியமைப்பதனால் உடல் பிம்ப நிலை எப்படி நிலைத்திருக்கும்..?

உடலுக்குத் தேவையான உணவும் உறக்கமும் வேண்டியது தான்.

ஆனால் இவ்வெண்ணத்தின் செயலினால் அதன் பால் அந்த உணர்வின் தன்மைக்குகந்த வழித் தொடரிலேயே நம் எண்ணத்தைச் செலுத்தி அதன் செயலுக்கே நாம் சென்றுவிட்டோம் என்றால் அதே உணர்வின் எண்ண ஈர்ப்பின் லயிப்பில் தான் நம் ஜீவித காலம் அனைத்தும் சென்றுவிடும்.

பலதரப்பட்ட குணமும் பலதரப்பட்ட சுவையும் விரும்பக்கூடிய ஆத்மாக்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை சுவையும் உறங்கும் தன்மையும் இருந்திடும்.

அவனது குண நிலையும் சுவை நிலையும் அவனால் இந்த வாழ்க்கையில் மட்டும் எடுத்ததல்ல. ஆரம்ப அமில குண வளர்ச்சி காலத்திலேயே அவன் ஈர்த்து உணர்ந்த எண்ணத்தின் தொடர்பு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று வரை உள்ளது. உணர்ச்சியிலும் அவனது உடலின் இச்சையின் நிலையும் இவ்வாரம்பக் காலத்தின் வளர்ச்சியில் வந்தது தான்.

பசியும் தூக்கமும் ஆரம்பக் காலத்தில் குழந்தைப் பிராயத்திலிருந்தே அறிந்து உணர முடிகின்றது. ஆனால் வளர்ந்த பிறகு தான் உடல் இச்சையின் உணர்வு ஏற்படுகின்றது.

தாவரங்கள் அதன் வளர்ச்சியின் அமில குண சேர்க்கையின் சக்தி படிவத்தினால் அதன் பலனை வளர்ந்த பிறகு பூவாகி காயாகிக் கனியாகித் தருகின்றன.

அதைப் போன்று மனித வளர்ச்சியிலும் இவ்வளர்ச்சி முற்றலின் அமிலச் சேர்க்கையின் உணர்வின் நிலை குறிப்பிட்ட வயது வரம்பு சேர்க்கைக்குப் பிறகு வெளிப்படுகின்றது.

இந்த உணர்வின் வழித் தொடரினால் ஏற்படும் இந்நிலைகளை எண்ணத்தின் நிலைக்கொப்ப எப்படி ஒவ்வொரு மனிதனும் வழிப்படுத்தி வாழுகின்றான்…?

1.இந்த உடலின் தேவையான பசிக்கும் தூக்கத்திற்கும் இச்சைக்கும்
2.இவ்வெண்ணப் பழக்கத்தைச் செலுத்திய முறைப்படி அதன் தேவைகளை எல்லாம்
3.இவ்வெண்ணத்தின் பிடியில் அளவுடன் ஒரு நிலைப்படுத்த முடியும்.

தன் எண்ணத்தைக் கொண்டு இவ்வுணர்வின் இச்சைகளை எல்லாம் ஒரு நிலையில்… இவ்வுடலின் பிம்பத்திற்குத் தேவையான அளவுடன் செயல்படுத்தி வாழ்ந்து வரும் மனிதனின் வாழ்க்கை… அழகுடனும்… அமைதியுடனும்… மனிதன் மனிதனாக இருக்கவல்ல தன்மையுடனும் இருக்கும்.

கெட்டுப் போவதற்காக அடுத்தவரைத் திட்டுகிறோமா…! அல்லது அவருக்குள் இருக்கும் கெட்டது போக வேண்டும் என்று திட்டுகிறோமா…?

 

நாம் ஒரு பொருளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அது மற்றவர்களால் கிடைக்காமல் தடைப்படும் பொழுது அவன் வேண்டுமென்றே செய்கிறான் அவனைத் தடைப்படுத்தவேண்டும் என்ற உணர்வை எடுத்தவுடன்,
1.“அவன் பகைவன்…” என்ற உணர்வை எடுக்கிறோம்.
2.அப்பொழுது நாம் நல்ல பாதையில் போவதற்கு மாறாக
3.அவனைப் பழி தீர்க்கும் உணர்வுடன் தாக்கும் நிலை வருகின்றது.

அப்படி எதிர்த்துத் தாக்கும் உணர்வுகள் வீரியம் அடையும் பொழுது அவன் நம்மை எப்படிக் கெட்டுப் போகவேண்டும் என்று எண்ணுகின்றானோ அந்த உணர்வுகளெல்லாம் நம் உடலுக்குள் எடுத்து நம் உடலும் கெடுகிறது.

இப்படி அவரின் குறையான உணர்வை நமக்குள் வலு சேர்த்து விட்டால் அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது. நமக்கு நாமே நல்ல குணங்களை மாற்றியமைத்து அந்த உணர்வின் வழி ஏற்று நடந்துவிடுகிறோம்.

அடிக்கடி கோபம் கொள்வோர்களை நாம் பார்க்கலாம். “என்னை இப்படிச் சொன்னார்கள்… எப்படிச் சொல்லலாம்…? அவர்களை விடலாமா..?” என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது நம் இரத்த நாளங்களில் அது கலந்து நம் நல்ல அணுக்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது.

நான் (ஞானகுரு) திட்டினேன் என்றால்
1.அவர்களிடம் உள்ள “கெட்டது போவதற்காகத்தான்..” திட்டுவேன்.
2.அவர்கள் “கெட்டுப் போக…” நான் திட்ட மாட்டேன்.

ஏனென்றால் நான் திட்டுவது உடலில் இன்னொரு ஆவி இருந்தது என்றால் “அதைத்தான் சாடுவனே தவிர…” அவரைத் திட்டுவதில்லை. அதனால் அந்த உணர்வின் தன்மை ஆவி ஒடுங்கும். அந்த மனிதனை நல்லதைப் பேசவிடும்… நல்லதைச் செய்யவிடும்.

நீங்கள் திட்டினீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்…?
1.நேரடியாகத் திட்டுவீர்கள்…
2.அந்த ஆள் தான் செய்கிறார்… என்று நினைத்து அந்த ஆளைத் தான் திட்டுவீர்கள்.

“உள் நின்று இயக்கும் உணர்வை அறிந்ததனால்..” நான் அதைச் செய்கின்றேன்.

ஆகவே ஈஸ்வரா.., என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று அவர்கள் உணர்வை நமக்குள் வராதபடி தடுத்துவிட வேண்டும்.

அவ்வாறு தடுத்துவிட்டு சரி…
1.அவர்கள் செய்தார்கள் அவர்களாகவே உணர்வார்கள் என்று விட்டுவிட்டால்
2.இந்த உணர்வு அவர்களுக்குள் சென்று தீயதை மாற்றி நல்லதாக அவர்களுக்குள் விளையும்.

ஏனென்றால் நம் உயிர்… நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உருவாக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் சும்மா ஒரு பக்கத்தில் எதையும் நினைக்காமல் உட்கார்ந்து பாருங்கள்… அப்பொழுது தெரியும் உங்களுக்கு…! உங்கள் மனதில் என்னென்ன உணர்வுகள் நினைவலைகள் ஓடுகிறது…? என்று தெரிந்து கொள்ளலாம்.

1.வெறுப்பாகச் சொன்னவர்கள்…
2.சண்டை போட்டவர்கள்…
3.இடைஞ்சல் செய்தவர்கள்..
4.இவர்களைப் பற்றியெல்லாம் நினைப்பு தொடர்ச்சியாக வரும்.

எனக்கு அவன் இந்த மாதிரி இடைஞ்சல் செய்தான்.. நான் அவனுக்கு இவ்வளவு உதவி செய்தேன் அவன் இப்படிப் பண்ணுகின்றான்…! கடன் வாங்கியவன் காசைத் தர மாட்டேன் என்கிறான்…! வீட்டில் இப்படியெல்லாம் என்னைப் பேசுகின்றார்கள்.. இப்படி நடந்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வது…? என்ற புலம்பல் தன்னாலே (உங்களுக்குள்) வரும்.

ஏனென்றால்…
1.இப்பொழுது தானே இந்தத் தியானத்தைச் செய்கின்றோம்.
2.இதற்கு முன்னால் சேர்த்துக் கொண்ட எத்தனயோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு.
3.அது அது அந்த அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

அவ்வப்பொழுது இந்த உணர்வுகள் தோன்றினாலும் அப்பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பத்தால் சட்டையில் அழுக்குப் பட்டால் அதனின் நிலைகள் தெரிவதில்லை.

இதைப் போன்று தான் உங்கள் உயர்ந்த குணங்கள் ஒவ்வொன்றிலும் மறைத்திருக்கும் இத்தகைய தீமைகளை நீக்குவதற்கு மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆனால் யாம் பதிய வைத்த உணர்வை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த எண்ணத்தில் இருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு “இப்படி ஆகிவிட்டதே..,” என்று வேதனையாக எண்ணவே கூடாது. ஆகையினால் எனது வேலை…
1.கடவுளை நான் எங்கேயும் தேடவில்லை
2.உங்கள் உயிரைத்தான் கடவுளாக்கச் சொன்னார் குருநாதர்.

அவன் அமைத்த கோட்டை உங்கள் உடல் என்றும் பல ஆயிரம் ஆண்டுகள் இதனின் உணர்வுகளைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கியுள்ளது என்று உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன்.

அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து இந்த மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆராதனை செய்கின்றேன்.

தெளிந்து கொண்ட அறிவு கார்த்திகேயா என்று தெரிந்து கொண்ட இந்த அறிவின் தன்மை கொண்டு
1.நீங்கள் அருள் ஞானிகளாக… மெய் ஞானிகளாக…
2.உலகைக் காக்கும் அரும் பெரும் சக்திகளாக உருவாக வேண்டும் என்று விரும்புகின்றேன்.

இது தான் என்னுடைய தவம்.

செல்ஃபோன்களில் பதிவு செய்வது போல் அகஸ்தியர் உணர்வுகளை நம் ஊன்களுக்குள் பதிவாக்க வேண்டும்

 

பரிணாம வளர்ச்சியில் நாம் தீமைகளை நீக்கி வளர்ந்தோம். அகஸ்தியன் தீமைகளை நீக்கித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அதை நாம் எடுக்க வேண்டும்
2.அதை எடுத்து நம் உடலில் பதிவு செய்து நம் உடலில் உள்ள இரத்தங்களில் பரவச் செய்ய வேண்டும்.
3.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

உதாரணமாக விஞ்ஞான அறிவுப்படி செல்ஃபோன்களை (AIRCELL) வைத்திருக்கின்றார்கள் அதிலே எங்கிருந்து எல்லாம் பேசுகின்றார்களோ அந்த நம்பர் தெரிந்தால் பேசுகிறோம்.

வருகிறது… ரெக்கார்ட் செய்கிறோம்… மீண்டும் தொடர்பு கொள்கிறோம். திரும்பப் பேசும் போது யார்… யார்…? என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

செல்ஃபோன்களில் யாரிடம் எல்லாம் நாம் பேசுகின்றோமோ பதிவாக்குகின்றோமோ தெரிந்து கொள்கின்றோமோ இது அனைத்துமே பதிவாகி ஒரு ரெக்கார்டு போன்று ஆகிவிடுகின்றது. திரும்பி அவர்களுக்கு ஃபோன் செய்தோம் என்றால் அங்கே போகிறது.

இதே மாதிரித் தான் நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் (ஊனுக்குள்) அதைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றது – எலும்புக்குள்.

அதையெல்லாம் நாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
2.எலும்புகளுக்குள் இருக்கும் ஊனுக்குள் (செல்கள்) அங்கே செல்போன்களில் பதிவாக்குவது போன்று இப்பொழுது பதிவாக்கி
3.அதை கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

அதைப் பெருக்கிக் கொண்டு வந்தால் நமது வாழ்க்கையில் முந்தி இதற்கு முன்னாடி எத்தனை வகையான அறியாத நிலைகள் குறைகளை செய்தோமோ அதை எல்லாம் குறைக்க முடியும்.

இப்படிக் குறைத்துப் பழகுவதற்குத் தான் நாம் இருக்கக்கூடிய தியானம். சுவாமி செய்வார் சாமியார் செய்வார் ஜோதிடம் செய்யும் யாகம் செய்யும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

நாம் கண்களில் பார்க்கின்றோம்… கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் மற்றவரிடமிருந்து வெளி வருவதைக் கவர்ந்து இந்த நோய்… இந்த குறைபாடு… இந்தத் தவறு என்று அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

தெரிந்து கொள்கின்றோம்… கெட்டவன் என்றால் விலகிக் கொள்கிறோம். விலகினாலும் அந்தக் கெட்ட உணர்வுகள் கொண்டு “மோசமானவன்… மோசமானவன்” என்று பேசுகிறோம்.

1.அவன் உடலில் விளைந்த உணர்வுகள் இங்கே நம் எலும்புகளுக்குள் பதிவாகி
2.நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்தில் கலந்து அப்படிப் பேசக்கூடிய அளவிற்கு நம் உணர்வுகளைத் தூண்டி
3.அந்த அணுக்கள் விளைய ஆரம்பிக்கின்றது.

நாம் நினைக்கின்றோம் அவன் தான் தவறு செய்தான் என்று. ஆனால் உடனடியாக அதைத் துடைத்துப் பழகவில்லை என்றால் அவன் உடலில் விளைந்த தீமை நமக்குள் விளைந்த பின்… அவனைப் போன்று நாம் பல மடங்கு தவறு செய்யக்கூடியவர்களாகவே வந்து விடுகின்றது.

இதை நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.

கையிலே அழுக்குப்பட்டால் எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ உடலில் அழுக்குப்பட்டால் எப்படிக் குளிக்கின்றோமோ துணியில் அழுக்குப்பட்டால் எப்படித் துவைக்கின்றோமோ இது போன்று தான் ஆன்மாவில் படக்கூடிய அழுக்குகளை நாம் துடைத்து பழக வேண்டும்.

ஏற்கனவே நம் உடலில் ஜீவ அணுக்களாக அது இருக்கும் பொழுது அதற்கு அந்தத் தீய உணர்வு ஆன்மாவாக இருக்கும். நாம் எடுக்கக்கூடிய இந்த தியானத்தின் மூலம் அந்த ஆன்மாவையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே தியானம் எடுத்துப் பழகியிருக்கின்றோம். அதன் துணை கொண்டு நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்
1.நம் வாழ்க்கையைப் புனிதப்படுத்துவதற்கும்
2.சிந்தித்துச் செயல்படுத்துவதற்கும் அமைதிப்படுத்துவதற்கும்
3.அருள் ஞான வாழ்க்கை வாழ்வதற்கும் இது பயன்படும்.

இல்லையென்றால்…
1.நம் உடலில் உருவான அணுக்கள் அது சாப்பாடுக்கு ஏங்கத்தான் செய்யும்
2.உணர்ச்சியை உயிரிலே ஊட்டத்தான் செய்யும்
3.கண் வழி கவரத் தான் செய்யும்
4.உயிரிலே மோதத் தான் செய்யும்
5.அதே வேதனை உணர்வு நமக்குள் வரத்தான் செய்யும்.
6.அப்படியே விட்டு விட்டால் அதை மாற்றவும் முடியாது அந்த உணர்வு தான் வேலை செய்யும்

ஆகவே நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்குமே வாழ்க்கையை தியானம் என்று நாம் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

சிறிது காலம் தான் வாழுகின்றோம் நூறு வருடம் வாழ்ந்தாலே அதிகம் தான். சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டுகின்றார்கள் நாம் எதையெல்லாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ நம் உயிர் அதை எல்லாம் உருவாக்கிவிடும்… அந்தக் கணக்குகள் கூடிவிடும்

அதிலே எந்தக் குணத்தை இந்த வாழ்க்கையில் நாம் அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் வேதனை என்றால் அடுத்துப் பாம்பு… கோபம் என்றால் புலி… வெறி என்றால் நாய் நரி போன்ற நிலைகளுக்கு நமது உயிர் இந்த உடலை மாற்றிவிடும்.

நம் உடலில் எத்தனை குணங்கள் இருக்கின்றதோ அதைப் போல பரிணாம வளர்ச்சியில் குணங்கள் கொண்ட உயிரினங்கள் எத்தனையோ உண்டு.

எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த விஷம் இயக்குகின்றதோ அதனதன் வழி இயக்குகின்றது. இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ இன்று மனிதன் என்றாலும்… “இன்றைய செயல் நாளைய உடலாக மாறும்…!”

உயிர் மாறுவதில்லை.. உயிர் உணர்வுகளை மாற்றிக் கொண்டே இருக்கும்… உடலை மாற்றிக் கொண்டே இருக்கும்.

உயிரோடு ஒன்றி “ஒரே நிலையாக நிலை கொண்டு இருப்பது…” துருவ நட்சத்திரம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்து நம் உடலில் பெருக்கி
2.நாமும் இனி பிறவியில்லை என்ற நிலையை அடைந்து… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
3.எந்த வேதனையும் நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ளப் பழகுதல் வேண்டும்.

ஆண்டவனின் ஆண்டவனாகும் மகத்துவம்…” மனிதனுக்கு உண்டு

 

திடப்பொருளைக் கரையச் செய்வதும் இந்தக் காற்று தான். ஆவி அமிலத்தைத் திடமாக்குவதும் இந்தக் காற்று தான். இந்தக் காற்றின் மோதலில் வரும் “ஒளியும்… நீரும் தான்…” நம் பூமியின் ஜீவன்.

காற்றடைத்த பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டு விட்டால் அதன் செயலில்லை. அதே போல்
1.இக்காற்றின் அமில ஈர்ப்பு பிம்ப ஜீவனில் ஆவி பிரிந்து விட்டால்
2.இந்த உடல் என்ற பிம்பத்திற்கும் ஜீவனில்லை.
3.இக்காற்று குண அமிலத்தில் தான் இந்த உலக சக்தியே நிறைந்துள்ளது.

காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள பால்வெளி மண்டலத்தில் அமில குணங்கள் நிறைந்திருந்தாலும்… நம் பூமியின் காற்று மண்டல ஜீவ அமில குண நிலை அங்கு இல்லை.

நம் பூமியின் சுழற்சி ஓட்டத்தினால் பூமியே தான் சுழற்சி ஓட்டத்தின் வேகத்தினால் காற்றையும்… ஒளியையும்… நீரையும் வளர்த்து… தனக்கு உணவாக எடுத்து மீண்டும் கழித்து… மீண்டும் மீண்டும் இதே வளர்ச்சி கதியில் ஒரு நிலை சுழற்சி ஓட்ட நிலையினால் கோடி கோடி ஆண்டுகளாக வாழ்கிறது.

பூமியின் மாற்றக் காலம் ஏற்படுவது எப்பொழுது…?

பூமி ஈர்த்து வெளிப்படுத்திய அமில ஒளி ஜீவ சக்தியினால் வளர்க்கப்பட்ட “மனிதனாலே தான்” பூமியின் நிலை மாறப் போகின்றது.

பூமியின் எண்ணச் சுவாச வளர்ச்சி நிலையின் பெருக்கத்தினால் பூமியின் நிலையே இப்படி உள்ள பொழுது அப்பூமியிலேயே பிறந்து வளர்ந்து வாழும் மனிதனின் நிலையில் இவ்வெண்ண நிலை உயர்வதுவும் தாழ்வதுவும் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்…!

பூமியின் ஈர்ப்பில் பலவாக உள்ள சக்தி நிலையில் பலதரப்பட்ட பல கோடி அமிலங்கள் நிறைந்திருந்தாலும் நம் பூமியின் படைப்பிலுள்ள அமில குணங்களின் ஆவிக்காற்று நம் சுவாசத்திற்கு அப்படியே வந்து மோதுவதில்லை.

ஒவ்வொரு நொடிக்கும் எண்ணமில்லாத மனிதன் எவருமில்லை. எண்ணத்தில் எடுப்பது தான் இச்சுவாசம்.
1.இச்சுவாசத்தில் எடுக்கும் நிலை கொண்ட மனிதனுக்கு…
2.“மனிதனின் எண்ணத்துடன் நிறைந்துள்ள குண அமில சுவாசம் தான்” அவன் ஈர்ப்புக்கு வருகின்றது.

1.மனிதன் தன் எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்தி” எடுக்கும் சுவாசத்தினால்
2.எத்தனை காலங்கள் ஆனாலும் “குறைவின்றி நல்வழி பெற்று”
3.பலவாக நிறைந்துள்ள அமில குணத்தைத் “தன் எண்ண மேம்பாட்டினால்”
4.ஒன்றின்பால் “நல் ஞானத்திற்குகந்த” செயலாக்கும் அமிலத்தின் வளர்ச்சியின் குணத்தைக் கொண்ட சுவாசத்தை எடுத்து
5.எடுக்கக்கூடிய காந்த மின் அலையின் ஈர்ப்பை “நல்ல சக்தியுடன்” மோதச் செய்தோமானால்
6.அச்சக்தியின் ஒளி ஈர்ப்பை “நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடரினால்” நம் உடல் முழுவதுக்கும் பரவச் செய்து
7.இந்த உடலுக்குள் ஏற்கனவே பலவாக நிறைந்துள்ள “பல குண நிலை கொண்ட அமிலங்களையும்”
8.இவ்ஈர்ப்பின் நுண்ணிய அலையினால் “ஒரு நிலையான குண அமிலத்தை” இந்த உடல் முழுமைக்குமே நாம் பரவ விட்டால்
9.மனித வாழ்க்கையில் மோதிடும் பல நிலை கொண்ட குண நிலைக்கொத்த செயல் எதுவும் “நம் நிலையை மாற்றிட முடியாது…!”

அதே சமயத்தில் பல எண்ணச் செயல்கள் மோதினாலும் நாம் எடுக்கும் சுவாசத்தால்… அதன் குண நல ஈர்ப்பில் நாம் சிக்கிடாமல்…
1.ஏற்கனவே இந்த உடலில் நாம் நிறைத்துக் கொண்டுள்ள
2.ஒரு நிலையான அமில குணத்தின் நுண்ணிய அலையின் ஈர்ப்பு வளர்ச்சியில் பெற்ற
3.ஒளிச் சக்தியின் செயலே நமக்குள் நிறைந்து நிற்கும்.

மனித ஆத்மாவின் இவ்வெண்ண சுவாச சக்தியில் பெறத்தக்க நிலையினால் வளர்க்கும் நிலை உண்டு. தாவரங்களுக்கு அந்த நிலையில்லை.

ஒரு நிலையான எண்ண ஈர்ப்பில் தாவரம் வளர்ந்து வாழ்ந்தாலும் அதன் பலன் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலைக்கொத்த காலக்கெடுவில் தான் தாவரங்களின் நிலை உண்டு.

1.எண்ணத்தின் மேம்பாட்டின் வழி நிலை கொண்ட மனிதன் தான்
2.தன் எண்ணத்தில் பலவாகப் படைக்கவல்ல ஆண்டவனின் ஆண்டவனாக முடியும்.

ஆனால் இந்த எண்ண மேம்பாட்டின் உணர்வு அறியாத இன்றைய மனிதன் தான் உழன்று கொண்டே… உருவை மாற்றி… “உருச்சிதைந்து வாழ்கின்றான்….!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆரம்பத்தில் தென் பகுதியில் தோன்றிய அந்த அகஸ்தியன் தன் இளம் வயதிலேயே பேரண்டத்தின் பேருண்மைகளை உணரும் பருவம் வந்தது.

இந்தப் பேரண்டம் இருண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷத்தின் தன்மை எப்படி உருவாகின்றது…? அந்த விஷத்தின் தன்மை அணுக்களாக எப்படிப் பெருகுகின்றது…? என்பதையெல்லாம் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

இன்று சூரியன் இருக்கின்றது. அதிலிருந்து அணுக்களாக வெளி வருகின்றது.

ஆனால் ஆதியில் சூரியனே இல்லாத பொழுது அது ஆவிகளாக மாறுகின்றது. ஆவிகளாக இருக்கப்படும் பொழுது அது அடர்த்தியாகி மேகங்கள் எப்படி இருக்கின்றதோ இதைப் போல அக்காலங்களில் மேகங்களாக எப்படித் தொடர்ந்துள்ளது என்ற நிலையையும் உணர்ந்தான் அகஸ்தியன்.

இது அகஸ்தியர் தன் வாழ்க்கையில் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அது “முன்னோக்கிச் சென்று” அண்டத்தின் ஆற்றல் எப்படி…? என்ற நிலையை அவனால் அந்த விஷத் தன்மையின் ஆற்றல் கொண்டு இந்த வலிமை பெற்றதனால் காண முடிந்தது.

அந்த வலிமையான எண்ண அலைகளால் இந்த உலகம் எப்படி உருவானது…? பிரபஞ்சம் எப்படி உருவானது…? சூரியன் எப்படி உருவானது…? என்று கண்டறியும் ஆற்றலும் அவனுக்குள் வருகின்றது.

இந்த ஆற்றல் அவனுக்குள் எப்படி வந்தது…? என்ற நிலையை குருநாதர் உபதேசித்தருளினார். இந்த உணர்வின் நிலையைப் பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கி அந்த அலையின் ஆற்றலை நீ எப்படிப் பருக வேண்டும்…? என்பதையும் உபதேசித்தார்.

அதன் வழி கொண்டுதான் உங்களுக்கு இப்பொழுது சொல்வது.

பேரண்டத்தில் சூரியனோ, நட்சத்திரங்களோ, கோள்களோ இல்லாத பொழுது இருண்ட நிலைகள் ஒரு அடர்த்தியான நிலை வரும் பொழுது சிறு வெப்பமாகின்றது.

வெப்பத்தால் ஒரு ஆவி மாதிரித் தோன்றுகின்றது. ஆவிகளாக உருவான பின் அடர்த்தியின் தன்மை நாளாகும் பொழுது அது நஞ்சாக எப்படி மாறுகின்றது? என்று அகஸ்தியன் கண்டான்.

இதை இன்று விஞ்ஞான அறிவில் எப்படி ஒரு திரவகத்தை ஊற்றிய பின் அதனுடன் சேர்ந்த பின் எப்படி எப்படியெல்லாம் மாறுகின்றது…? என்று காணுகின்றார்களோ அதே போன்று
1.குருநாதர் பேச வைத்து உணர்வினை இயக்கச் செய்து
2.அந்த அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் கவர்ந்து
3.அவன் கண்டுணர்ந்த தொடர்பை நீ எப்படிப் பெற வேண்டும் என்ற நிலையை குருநாதர் உணர்த்தினார்.

அதன் தொடர் வரிசை கொண்டு பார்த்தேன்.

1.அவ்வாறு நான் பார்த்த… கண்டுணர்ந்த… எனக்குள் விளைய வைத்த அந்த உண்மையின் உணர்வுகளை
2.அனைவரும் எளிதில் பெற முடியும் என்பதற்குத்தான் கூட்டமைப்பாக அமைத்து
3.அந்த அகஸ்தியனின் ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கிறோம்.

ஒரு நிலை கொண்ட எண்ண சக்தி

 

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்…! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகைக் காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை. ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது…?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்… ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ணச் செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை…” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்… அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாகக் கொட்டாவி வெளிப்பட்டு
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து… பல அமிலங்களின் செயல் தொடர்பில்…” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்… மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்… நம் பூமிக்கும்… மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது… தன் தேவை அறியும் உணர்வும்… உறங்கும் நிலையும் இல்லை…? ஏன்…?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கிவிட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்…?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு… கழித்து… உறங்கி… மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.”ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை…!

இந்த யுக்தியைக் கையாண்டால் எந்தத் தீமையையும்… வேதனையையும்… அகற்றிடும் வல்லமை நிச்சயம் பெற முடியும்

 

பல காலம் எண்ணிப் பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது.

ஏனென்றால்… நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது. அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.

அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுது தான் இந்தத் தசைகள் கரைகின்றது.

அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது… வேதனையாகின்றது… நோயாகின்றது. வலித்தவுடன்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.
4.இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.

ஆனால் தியானத்தைக் கடைப்பிடிக்கும் சிலர் என்ன சொல்வார்கள்…?

இப்படித்தான் நான் எண்ணினேன்… இன்னும் வலி குறையவில்லை, வலி நிற்கவில்லையே…! என்பார்கள். வலி நிற்கவில்லையே என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்…?

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது
1.ஒரு இடத்தில் (நிறுத்திய பின்) “FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால்
2.அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.

அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… வலி நீங்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்…”.

அதற்குள் நான் “ஐய்யய்யோ அம்மம்மா… இன்னும் நிற்கவில்லையே…” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்…?
1.அந்த மகரிஷிகளை எண்ணி
2.“வலி நிற்கவில்லையே… வலி நிற்கவில்லையே…” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இதைக் கலக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகிச் சுழன்று வரப்படும் பொழுது… தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.

உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது. அப்பொழுது
1.நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது
2.அதனால் அது சோர்வடைகின்றது
3.அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஆகவே… இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள்
1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்ய வேண்டும்…? என்பதைச் சற்று சிந்தியுங்கள்
2.“எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்…?” என்ற நிலைக்கு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால் வலியோ… வேதனையோ… நோயோ… எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் ஓரு சமயம் எம்மை (ஞானகுரு) ரிஷிகேசம் போகும்படி சொன்னார். அங்கே மேலே இருந்து தண்ணீர் விழுகின்றது. காட்டுப் பகுதியில் ஒரு ஆறு ஓடுகின்றது. அதிலே மேடான பக்கமாகப் போகச் சொல்கிறார்.

போகும் பொழுது இரண்டு பிஸ்கெட், பேரீச்சம்பழம் இதைத்தான் வாங்கிக் கொண்டு போனேன். பை கூட இல்லை. துண்டில் முடிந்து கொண்டு சென்றேன்.

உனக்கு எதற்குடா பை..,? என்கிறார் குருநாதர்.

அவர் சொன்ன இடத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு சிறிய கோவில் இருந்தது. அதற்கு முன்னால் ஒரு பெரிய மரம் இருந்தது. ஆல மரமோ அத்தி மரமோ அதனுடைய விழுதுகளெல்லாம் நன்றாகப் படர்ந்து இருக்கின்றது.

பெரிய மரம் அது. அதனுடைய அடித்தூரே மிகவும் பெரியதாக இருந்தது. எவ்வளவு ஆண்டுகள் பழமையான மரம் என்றே தெரியவில்லை. அதற்கு முன்னாடிதான் அந்தக் கோவில் இருந்தது.

அங்கே போய் உட்காருடா…! என்றார் குருநாதர். உட்கார்ந்து தியானமிருந்து கொண்டிருக்கின்றேன்.

திடீரென்று தண்ணீர் வருகிறது… வேகமாக… வெள்ளமாக வருகின்றது. எந்தப் பக்கமும் போக முடியவில்லை. கோவிலுக்கு முன்னால் உட்கார்ந்ததால் என்னை அடித்துச் சுவரோடு கொண்டு போய் வைத்துவிட்டது.

வேறு வழி இல்லை.

தண்ணீர் வர…வர… வர…வர… அதைத் தொட்டுத் தொட்டு அப்படியே கோவில் மேலே சென்றுவிட்டேன். மேலே ஏறுவதற்குப் படியும் இல்லை. தண்ணீரின் அரவணைப்பிலேயே மேலே போய்விட்டேன்.

மேலே போனால் அதற்கு மேலும் ஒன்றரை அடித் தண்ணீர் வருகின்றது. இவ்வளவு தண்ணீர் வரும் பொழுது எனக்குப் பயம் வருகின்றது. இந்தக் கட்டிடம் எப்படித் தாங்கும்…? என்ற சந்தேகமும் வருகின்றது.

பிறகு ஒரு இரண்டு மணி நேரத்திற்குள் குறைந்து அப்படியே மேலே இருந்து “கிர்…” என்று கீழே தரை மட்டத்திற்குப் போய்விட்டது. மேலிருந்து இறங்கப் பாதையில்லை… குதித்தேன்.

எங்கேயோ மழை பெய்திருக்கின்றது. ஆனால் ரிஷிகேசத்தில் “இந்தப் பக்கம் தண்ணீர் வர வேண்டிய அவசியமில்லை…”

அந்தப் பெரிய மரம் இருந்த இடத்தில் இதற்கு முன் அங்கே தண்ணீர் வந்ததோ என்னமோ தெரியவில்லை. ஆனால், இது அனைத்துமே (தண்ணீரில்) கரைத்துப் பார்த்தவுடன் வௌவால் மாதிரி இருந்தது. உள்ளுக்குள் ஒரு கட்டிடம் தெரிகின்றது.

“ஓ…ம்… நமச்சிவாய…
ஓ…ம்… நமச்சிவாய..!” இதே சொல் கேட்கிறது.
“ஓ…ம்…” என்று அந்தத் “தொனியே…” சப்தம் அழகாகக் கேட்கின்றது.

“ஓ…ம் நமச்சிவாய…” என்று சொல்லித் தத்துவப்படித் தனக்குள் எடுக்கும் பொழுது இவர் இந்த உடலைத்தான் நேசித்திருக்கின்றார் தவிர சிவன் எங்கே இருக்கின்றார்…? என்று தெரியவில்லை.

இந்த உடலுக்குள்ளே அந்த வலுவைப் பெற்றிருக்கின்றார். இந்த உணர்வினால் தனக்குள்ளே அடங்கி அங்கே இருக்கின்றார். வேறு எந்தப் பலனும் எடுக்கவில்லை. சிவனை அடைய வேண்டும் என்ற உணர்வுகள் அங்கே இருக்கின்றது.

இந்த மாதிரி அங்கே காட்டுகின்றார் குருநாதர். “அவனைக் கலைத்துவிடாதே..,” திடீரென்று முழித்துப் பார்த்தால் நீ எரிந்து போவாய் என்றார்.

சொன்னவுடன் எனக்குப் பயம் வந்துவிட்டது.

முதலில் அங்கே தண்ணீரின் வெள்ளத்திலிருந்து எப்படியோ தப்பி வந்தால் இங்கே இப்படிச் சொல்கிறார் குருநாதர். பின் “அதைப் பார்க்க வேண்டும்…” என்ற உணர்வையும் ஊட்டுகின்றார்.

ஏனென்றால்… அவர்கள் கடுமையான சக்தியை எடுத்தவர்கள். நீ எதையாவது செய்து கலைத்துவிட்டு குறுக்கே போனால் “முழித்துப் பார்த்தாலே எரிந்து போவாய்..” என்றார் குருநாதர்.

அந்த உணர்வைத் தனக்குள் வலுவேற்றிக் கொண்டதால் பார்த்தாலே அந்த மாதிரி ஆகிவிடும் என்றார் குருநாதர்.

அவர் உடல் நலிந்து போயிருக்கின்றது. ஆனால்…
1.இந்த உயிர் அந்த உணர்வுடன் சேர்த்து மிகவும் ஒளியாக இருக்கின்றது
2.உள்ளுக்குள் இருந்து “ஒளி…” அப்படியே வீசுகின்றது… தீபம்… விளக்கு ஒன்றுமே இல்லை.
2.ஆனால் அந்தக் கல் இடைவெளிகளிலிருந்து அவ்வளவு வெளிச்சம் “பளீர்…ர்ர்” என்று அடிக்கின்றது.

அவ்வளவு ஒளிகளை அவர் எடுத்திருக்கின்றார், ஆனால், இந்த உடலுக்குள் தான் அகப்பட்டுள்ளார்… போகும் இடம் தெரியவில்லை.

அப்புறம்தான் குருநாதர் அந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அவரை எண்ணி மெய் உணர்வைப் பாய்ச்சுவதற்காக…
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் வலுக் கொடுத்து
2.அதில் போய் இந்த ஆன்மா இணைய வேண்டும் என்று சொல்லி
3இந்த ஆன்மா அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணச் சொன்னார் குருநாதர்.

எனக்குள் (ஞானகுரு) இருந்த இந்தப் பாவ நிலையெல்லாம் போக்குவதற்கு… “அவர் எடுத்த இந்த உணர்வின் சக்தி என் மீது படும் பொழுதுதான்… தீமைகளை மாற்றும் சக்திகள் எனக்குள் வந்தது….”

குருநாதர் ஒரு பக்கம் சக்தி கொடுத்தாலும் இல்லை என்றாலும் இது அந்த இடத்தில் அவரை எண்ணி இதைச் செய்யச் சொல்கின்றார்.

எதன் ரூபமாக…?

இங்கே அந்தச் சக்தியை அவர் பெற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. அது “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்…” என்று சொல்கின்றார் குருநாதர்.

1.இப்படி இந்த உடலுக்குள்ளேயே நிலை அடங்கி
2.சிவ தத்துவப்படி “சிவனை அடைய வேண்டும்…” என்ற நிலையில் இவ்வாறு இருக்கின்றார்.

அங்கே உள்ளே (தண்ணீர்) கமண்டலம் இருக்கின்றது, அப்புறம் கவட்டை இருக்கின்றது. இது இரண்டு தான் அங்கே அவர் வைத்திருக்கின்றார்.

மும்முடிபுரத்தில் 40 வருடம் அன்ன ஆகாரம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தார் அல்லவா. அதே மாதிரி அந்த உணர்வுகள் கொண்டு இங்கே இவர் (ரிஷிகேசம்) இருக்கின்றார்.

அவர் உடல் பெருத்திருந்தது. ஆனால் இங்கே இவர் உடல் சிறுத்திருந்தது.

1.அவர் “எதைப் பெற வேண்டும்…” என்று எண்ணினாரோ அங்கே பெற வேண்டும் என்று
2.குருவினுடைய அருள் அந்தப் பாதையை அவர் அடைய வேண்டும்,
3.“என்றும் ஒளியின் சரீரம் அவர் பெற வேண்டும்” என்று நான் இங்கே தியானிக்கின்றேன்.

அந்த உணர்வலைகளைப் பரப்பியவுடன் கூட்டை விட்டு அந்த ஆன்மா வெளியில் வருகின்றது. வந்து எனக்கு நேராக தலைக்கு மேலே போகின்றது.

எதை எண்ணினோமோ அதன் வழியில் அங்கே போகும் பொழுதுதான் அந்த உணர்வலைகள் “என் மீது படுகின்றது”.

அப்பொழுது என் வாழ்க்கையில் இதற்கு முன் வந்த சாப அலைகள் எத்தனையோ காண்பிக்கின்றார் குருநாதர்.
1.இந்த ஒளிகள் அலைகள் பட்டவுடன் இதெல்லம் உனக்கு இப்போது கரைகின்றது
2.அந்த உணர்வுகளை உன்னால் போக்க முடிகின்றது என்றார் குருநாதர்.

நான் குருவாக இருக்கின்றேன். இருந்தாலும் அதை எடுத்தால்தான் உனக்கு இது இங்கே போகின்றது.

ஆனால் இதையெல்லாம் அவர்கள் வெல்லும் “அக்கினியாக” மாற்றியவர்கள். ஆனால் போகும் பாதை இல்லை.

அதை எடுக்கும் பொழுது அந்த உணர்வலைகள் இது “உனக்கும் பங்கு உண்டு” என்று சொல்லிவிட்டு அதைக் காட்டுவதற்குத் தான் இங்கே போகச் சொன்னேன்…! என்றார் குருநாதர்.

ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணும் பொழுது அதைத் தியானிக்கும் பொழுது உணர்வின் ஒளிகள் அங்கே தெரியும். அங்கே விண்ணுக்குப் போனால் அது கிடைக்கும்.

1.அங்கே அவர் ஒளியின் தன்மை பெறுவது போன்று எல்லோருக்கும் அது பெற வேண்டும் என்ற இந்த உணர்வை ஊட்டு
2.எல்லோருக்கும் அதைக் காட்டு. அதன் வழி மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “விண் செலுத்து” என்றார் குருநாதர்.

இவ்வாறு 1000 வருடம் தவமிருந்தவரை விண்ணுக்குச் செலுத்திய பின்புதான் இங்கே மூதாதையர்களை.., “விண் செலுத்தும் நிலையையே” குருநாதர் கொண்டு வருகின்றார்.

அதற்கு முன்னால் மூதாதையர்களை விண் செலுத்துவது பற்றி ஒன்றும் தெரியாது…!

ஏதாவது ஒரு பாதை வேண்டுமல்லவா.

குருநாதருடைய பாதையிலே சென்றாலும்
1.கடும் தவமிருந்த உணர்வின் தன்மை “இதை வழியாக வைத்து”
2.மற்றவரை விண் செலுத்தும் உணர்வுக்கு வர வேண்டும்.

“உயிராத்மாவுக்கு உணவு கொடுத்து வளர்த்தவர்கள்…” துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்கிறார்கள்

 

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை… ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது…?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது. (முக்கியமானது) மின்சாரத்தை எடுக்கவும்… நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன…?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்… இயற்கையும்… ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது…? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது…?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லாவிட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி… நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது…?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது…?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்…”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்… நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ… அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது…!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்…!

பூமியின் நிலைக்கும்… பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை…!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி…
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி…
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனிதன் உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை… ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு… தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக… எவ்வமில குணம் உள்ளதுவோ… அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை… தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்… துருவ நட்சத்திரமும்…!

உயிரை ஈசனாக மதித்து வாழ்ந்தால் தான் பிறவி இல்லா நிலை அடைய முடியும்

 

கைகளில் அழுக்குப் பட்டால் எப்படித் துடைக்கின்றோமோ இதைப் போல் வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களையும் கோபங்களையும் குரோதங்களையும் பார்க்க நேர்ந்தால் நம் ஆன்மாவில் படும் அந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரன்… சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…” என்று காட்டுகின்றார்கள்.
1.நாம் சுவாசிக்கும் குணங்கள் எவை அதிகமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான் அடுத்த உடலைப் பெறுகின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்தால் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறுகின்றோம்.
3.இது மனிதனின் கடைசி நிலை.

ஆகவே அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் அருள் சக்தி பெற்றது தான்… “நாம் இன்று இருக்கும் இந்த மனித உடல்…” என்பதை மறந்திடலாகாது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாகப் பிறந்த நிலையில் கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவைப் பெற்றிருக்கின்றோம்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி ஒளிச் சுடராக ஆக்குகின்றதோ இதைப் போல் நாமும்
1.இந்த உடலான பிரபஞ்சத்திலிருந்து நன்மை தீமைகளை அறிந்து
3.தீமைகளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதி பெற்றவர்கள்.

நம் உடலுக்குள்ளே… இது ஒரு உலகம் தான். நமக்குள் சேரும் வெறுப்பு விருப்பு இத்தகைய உணர்வுகளை இந்த உடலான உலகில் இருளை நீக்கி அருளைப் பெருக்கி ஒளி என்ற உணர்வை நாம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இரத்தத்தில் கலக்கச் செய்து இரத்தத்தில் உள்ள ஆன்மாக்களைச் சுத்தப்படுத்துவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உறுப்புகளில் படரச் செய்து அதிலுள்ள ஆன்மாக்களைச் சுத்தப்படுத்துவதும் தான் ஆத்ம சுத்தி என்பது.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் பட்ட மாசுகளைத் தூய்மைப்படுத்திடும் நிலையாக
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கண்ணில் கருமணிகளில் உள்ள விஷத்தன்மைகளைத் துடைக்க வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து நாம் பார்த்ததை உடலுக்கெல்லாம் எடுத்துப் பாய்ச்சும் கண்ணின் நரம்பு மண்டலங்களிலும் அதை உருவாக்கிய அணுக்களிலும் பாய்ச்சி அதிலே தோய்ந்த விஷத் தன்மைகளைத் துடைக்க வேண்டும்.
3.அதைப் போன்றே நரம்பு மண்டலம் எலும்பு மண்டலம் தசை மண்டலம் தோல் மண்டலம் எலும்புக்குள் இருக்கும் ஊன்… அந்த ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து எடுத்து உள்ளே செலுத்திக் கொண்டே வர வேண்டும்.

இவ்வாறு நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டே வந்தால் இந்த உடலுக்குப் பின் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த மனித வாழ்க்கையில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ பிறவி இல்லாத நிலையை நாம் அடைகின்றோம்.

இப்பொழுது உள்ள நிலைகளில் சிறிது நேரம் நன்மை செய்தாலும்… சிறிது நேரம் நாம் தியானம் செய்தாலும்… அதற்கடுத்து வரும் கவலைகள் சங்கடங்கள் வெறுப்புகள் சஞ்சலங்கள் கோபங்கள் இதைப் போன்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது “தியானத்தின் பலனைக் கூட அது மாற்றிவிடும்…”
1.காரணம் அது அதிகரித்து விட்டால் விஷத்தின் இயக்கமே அதிகரித்து விடுகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட “வாழ்க்கையே தியானம்…” என்ற நிலைக்கு வளர வேண்டும்.

ஆகவே எப்பொழுதெல்லாம் தீமையைப் பார்க்கின்றோமோ அப்போதெல்லாம் அந்தத் தீமைகள் நமக்குள் வளராதபடி தடுத்து நம் ஆன்மாவைத் தூய்மையாக்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

மனிதனான நிலையில்
1.உயிரை ஈசனாக மதித்து எவர் எவர் அந்த உணர்வுகளை வளர்க்கின்றனரோ
2.அவர்களுக்கெல்லாம் பிறவி இல்லை என்பதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்குள் இதற்கு முன் அறியாது சேர்ந்த எத்தனையோ உணர்வுகளால் கேன்சர் டி.பி… ஆஸ்த்மா போன்ற நோய்கள் வருகின்றது.
1.அந்த உணர்வுக்கொப்ப அணுக்கள் தூண்டுகின்றது… அந்த உணர்வின் தன்மையை நுகர்கின்றோம்.
2.அதனால் நம்மை அறியாமலே உடலில் வேதனைப்படுகின்றோம். வேதனை என்ற உணர்ச்சிகளை உந்துகின்றது.

வேதனைப்படும் அணுக்கள் நம் உடலில் சேர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது நம் இரத்தத்தின் வழி சிறு மூளைக்கு எட்டுகின்றது. அணுக்களுக்குள் வேதனை என்ற உணர்வு வருகின்றது.

1.நம் உயிர் உடனே கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகின்றது
2.அந்த உணர்வின் நினைவாற்றல் “வலிக்கும் இடத்தைக் காட்டுகின்றது”.

அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது அந்த வலி இருக்கும் இடங்களில் எந்த விஷத் தன்மையை அந்த அணுக்கள் பெற்றதோ அதற்கு நேரடியாகவே உணவைச் செலுத்தச் செய்கின்றது.

நமக்குள் தீமையை விளைவிக்கும் அல்லது நம் உடலுக்குள் வேதனையை உருவாக்கும் நம் உடலைச் சிதையச் செய்யும் அணுக்கள் உருவாகியிருந்தால் அத்தகைய சிதைவின் நேரத்தில் நமக்குள் வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது,

இந்த உணர்வின் தன்மை உயிருக்கு எட்டுகின்றது. ஆனால் எட்டும் பொழுது வேதனை உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனையான அணுக்களைத் தான் பெருக்க உதவுகின்றது.

அதை மாற்ற வேண்டுமா வேண்டாமா..,? ஆகவே… நாம் எதைப் பெருக்க வேண்டும்…?

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
1.இராமன் எப்பொழுது கல்யாணராமனாகின்றான்…?
2.(சீதா என்ற) மகிழ்ச்சியான உணர்வைச் சேர்க்கும் பொழுதுதான் கல்யாணராமன் ஆகின்றான்.

எல்லோருடைய எண்ணங்களை ஒன்றாக இணைத்து எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை ஒன்றாக்கிப் பாருங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி அனைவரும் பெற்று நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
1.உங்களுக்குள் “ஆனந்தக் கண்ணீர்” வரும்.
2.அன்புடன் அரவணைக்கும் அணுவின் தன்மை உருவாகும்.
3.இதைப் போன்ற உணர்வுகளைத் தான் ஜீவ அணுவாக நம் உடலாக மாற்ற வேண்டும் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஏனென்றால் நம் உயிர் “ஓ…ம்” என்று ஜீவ அணுவாக நம் உடலாக மாற்றுகின்றது. நாம் எண்ணும் உணர்வே ஓம் என்று ஜீவ அணுவாக மாறுகின்றது. ஆகவே நாம் எதை எண்ண வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

இதைத்தான் அன்று ஞானிகள் செய்தார்கள்.
1.வெறுமனே “ஓ…ம் ஓ…ம்” என்று சொன்னால் அர்த்தமற்றது
2.நாம் “ஓம்.., ஓம்.. ஓம்…” என்று சொல்வதில் பொருள் இல்லை.

ஆகவே.. உங்கள் உடலில் வேதனை என்ற உணர்வுகள் வந்தால் இப்பொழுது யாம் கூறிய தியான முறைப்படி அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாகின்றது.

அந்த உணர்வின் வலுவை நமக்குள் உருவாக்கும் அணுக்கள் உருவாகின்றது. இதன் வழி கொண்டு மகரிஷிகளின் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும் என்று அந்த உணர்வை வளர்த்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குச் செலுத்துங்கள்.

இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது “நம்முடைய நினைவாற்றல்” அங்கே பெருகுகின்றது. அவ்வாறு பெருகும் நிலைகள் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே மகரிஷிகள் அருள் வட்டத்திற்குச் செல்கின்றோம்.
1.சப்தரிஷி மண்டலம் அடைகின்றோம்…
2.மனிதனின் கடைசி எல்லை அதுவே.

பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி…!

 

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து… அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் விஷத்தை எல்லாம் முறித்தது துருவ நட்சத்திரம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ளது சப்தரிஷி மண்டலம்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவர்கள்… சப்தரிஷிகள்.

அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுக்குள் சென்றால்
1.மீண்டும் இன்னொரு உடல் பெறும் விஷத்தின் தன்மைகளைப் பிரித்து விடுகின்றது
2.உயிர் அதனுடைய காந்த அலைகளுடன் இயக்கப்படுகின்றது
3.அதிலே விளையும் உணர்வுகளை எடுத்து ஒளியாக மாற்றுகின்றது.

மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்…!

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால்… கோடிச் செல்வங்களை இன்று தேடி வைத்திருப்பினும் இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. செல்வமும் நமக்குச் சொந்தமல்ல. “நமது உயிரே அழியாத செல்வம் ஆகின்றது…”

மனிதன் தீயிலே குதித்தால் இந்த உயிர் வேகுவது இல்லை. உணர்வுகள் மாறுகின்றது உணர்வுக்குத்தக்க அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது… இது சாகக்கலை.

ஆனால் இந்த உயிர் எப்பொழுதுமே எதிலுமே வேகுவதில்லை. வேகா நிலையை நாம் பெற வேண்டும்.

பிரபஞ்சம் ஒரு காலம் அழியும்… நம்முடைய பிரபஞ்சம் அழியும் தருணமே வந்துவிட்டது. கதிரியக்கப் பொறிகள் எல்லாக் கோள்களிலும் பரவி விட்டது.

பூமியில் நிலநடுக்கங்கள் எப்படி வருகின்றதோ பாறைகள் உருகி எப்படிப் பிளக்கின்றதோ அதைப் போல் மற்ற கோள்களிலும் இந்த நிலை ஆகிவிட்டது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் கோளின் நடு மையத்தில் அடைந்து கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கிறது. எந்தக் கோள் எப்பொழுது சிதையும்…! என்று சொல்ல முடியாது.
1.இரண்டு கோள்கள் சிதைந்தாலே போதும்… நம் பிரபஞ்சத்தின் இயக்கமே மாறிவிடும்.
2.நம் பூமி சிதைய வேண்டியதே இல்லை. ஆனால் அதற்குத் தக்க இயக்கங்கள் மாறிவிடும்.
3.இதைப் போன்ற காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

அன்று பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று நாம் சொல்லும் அகஸ்தியன் நீள வடிவமாகச் சென்ற பூமியை அது சாயாதபடி சமப்படுத்தித் திருப்பினான்… அதைச் சீராக்கினான்.

இன்றோ மனிதனுடைய விஞ்ஞான அறிவால் பூமி உருகும் தன்மை வந்துவிட்டது… பிரபஞ்சமும் உருகும் தன்மை வந்துவிட்டது… கோள்களும் உருகும் தன்மை வந்து விட்டது.

அகஸ்தியன் துருவனாகி… துருவ நட்சத்திரமாக ஆன அந்தச் சக்தியை நாம் பெற வேண்டும். பெண்கள் கர்ப்பம் என்று தெரிந்தாலே அந்தப் பத்து மாதத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் தியானிக்க வேண்டும்.

அகண்ட அண்டத்தில் வரும் விஷத் தன்மைகளையும் அகஸ்தியன் ஒளியாக மாற்றியது போன்று
1.கருவில் வளரும் இந்தக் குழந்தை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்றும்
2.உலக இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்றும் குடும்பத்தில் உள்ளோர் இதைச் செயல்படுத்துங்கள்.

அதிகாலை ஒரு பத்து நிமிடமாவது இதை எடுத்துச் செயல்படுத்துங்கள். அகஸ்தியனின் உணர்வுகள் அங்கே விளையும். குடும்பத்தில் உள்ள சாப அலைகள் தீய அலைகள் பாவ அலைகள் அனைத்தும் நீங்கும் ஒரு தெளிவான நிலையை உருவாக்க முடியும்.
1.ஆயிரக்கணக்கான அகஸ்தியர்களை நாம் உருவாக்குதல் வேண்டும்.
2.இப்படிச் செய்தால் தான் விஞ்ஞான அழிவில் இருந்து நாம் மீள முடியும்.

ஏனென்றால் விஞ்ஞானிகள் கடலில் உள்ள மணலில் இருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து செயற்கையில் கதிரியக்கப் போறிகளை உண்டாக்கி இந்த பூமியில் அதிகமாகப் பரவச் செய்துவிட்டனர்.

இயற்கையாக 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய துகள்கள் பூமிக்குள் பரவிக் காற்று மண்டலத்தில் மோதிய பின் தூசிகளாக மாறும்போது… விஞ்ஞானத்தில் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளில் அது மோதிய பின் எதிர்நிலையாக மாறிக் கடும் சூறாவளியாக உருவாகி… எல்லாவற்றையும் நாசம் அடையச் செய்து கொண்டிருக்கின்றது.

1.விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ச்சியாகி இருந்தாலும் இதை தவிர்க்க முடியாத… தடுக்க முடியாத நிலைகள் ஆகிக் கொண்டு இருக்கின்றது.
2.அமெரிக்காவில் இத்தகைய நிலைகள் அதிகமாகப் பரவிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இதெல்லாம் விஞ்ஞான அறிவிற்கு அப்பாற்பட்ட நிலை. இருந்தாலும் நடந்த பின் என்ன… ஏது…? என்று கண்டுபிடிக்கலாம். ஆனால் மெய்ஞானிகள் இதையெல்லாம் அன்றே சொல்லி உள்ளார்கள்.

ஆக… இந்த மனித வாழ்க்கையில் நாம் குறுகிய காலம் தான் வாழ்கின்றோம். அதற்குள் நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்…? என்பதை உணர்ந்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
2.அதனின் வலு கூடினால் நாம் மேலே சொன்ன தீமையிலிருந்து விடுபட முடியும்.

எல்லோரும் அந்த அருள் பெற வேண்டும் என்ற உணர்வைக் கூட்டுங்கள். உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். எதைச் சொன்னாலும் செய்தாலும் இந்த உடலுக்குள் ஒற்றுமை வேண்டும். ஏனென்றால் மகாபாரதப் போர் எல்லா உடல்களிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

வாழ்க்கையில் அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்… மெய்ப் பொருளைக் காணுங்கள்.

காற்றிலே இருக்கிறது… எந்த அளவுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துப் பெருக்குகின்றீர்களோ அதன் வலிமை கூடும்.

“பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி…!

மனிதப் பிறவியில் நாம் செய்ய வேண்டிய சாதனை

 

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு…! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

ஆக… உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆக வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த…
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் விண்னை நோக்கி ஏகுவதும் இந்தச் சூரியனைப் பார்ப்பதும் அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் அதன் தொடர் வரிசையாக மற்ற நட்சத்திரங்கள் உமிழ்த்துவதையும் இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவும் நிலையும் அவன் சக்தி வாய்ந்த நிலைகளில் உற்றுப் பார்க்கும் நிலைகள் அவனுக்குள் வருகின்றது.

அகஸ்தியன் இதைப் போன்ற உணர்வுகளை அவன் நுகர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மைகளை அவனுக்குள் வளர்க்கும் தன்மை பெறுகின்றான்.

1.பிற மண்டலங்களிலிருந்து (பேரண்டத்திலிருந்து) 27 நட்சத்திரங்கள் எப்படி அந்தச் சக்திகளைக் கவர்கின்றது…?
2.அது தனது உணர்வின் ஒளிக் கதிர்களை எப்படிப் பரப்புகின்றது…?
3.சூரியன் அதை எவ்வாறு கவர்கின்றது…?
4.அது வரும் பாதையில் மற்ற கோள்கள் இடைமறித்துத் தான் சுழலும் நிலைகளில் துருவப் பகுதியில் எப்படி நுகர்கிறது…?
5.தன் சுழற்சியால் வெப்பமாவதும் அது நுகர்ந்த உணர்வுகள் கொண்டு கோள்களாக எப்படி விளைகின்றது…? என்ற
6.இந்தப் பேருண்மைகளை அகஸ்தியன் தனக்குள் கவர்கின்றான். அவனுக்குள் அது விளைகின்றது.

தனக்குள் அப்படி விளைந்த உணர்வின் எண்ணங்களைப் பரப்புகின்றான். அவன் பரப்பிய எண்ணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொண்டே உள்ளது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் கண்ட உணர்வுகளும், இவனில் விளைந்து வெளிப்பட்ட உணர்வுகளும் இவை அனைத்தையும் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து வைத்து அலைகளாக இன்றும் பெருகிக் கொண்டுள்ளது.

அவன் வாழ்க்கையில் கண்டுணர்ந்த நிலைகளை அந்த அகஸ்தியன் இளமைப் பருவத்தில் பெற்றது அனைத்தும் நீங்கள் அனைவரும் பெற முடியும். அதைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேசமே.

நம்மை நாம் அறிதல் வேண்டும்…!

 

ஒரு உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து தாவர இனச்சத்தில் வீழ்ந்த பின் கண்ணில்லாத புழுவாகத் தான் ஆரம்ப நிலையில் தோன்றுகிறது. பின் உணவுக்காக நகர்ந்து செல்லும் பொழுது அதற்கு உணவு கிடைக்கவில்லை என்றால்
1.வேதனையான உணர்வுகளை நுகர்கின்றது
2.அந்த வேதனை உணர்வுகளே வலுவாகின்றது.

அப்போது துவாரகா யுகத்தில் உடலுக்குள் வேதனை என்ற உணர்ச்சிகள் தோன்றிய பின் “பார்க்க வேண்டும்…” என்ற புது உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.
1.இரண்டு கல்லை எடுத்துத் தட்டினால் எப்படி ஒளிகள் வருகின்றதோ
2.அதே போல இந்த உணர்வுக்குள் ஆன பின் இதுவும் கரண்ட்…
3.எலெக்ட்ரிக் எலக்ட்ரான்… இந்த இரண்டும் எதிர்நிலையாக மோதப்படும் பொழுது
4.உடலுக்குள் உணர்ச்சி என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

இப்படித் தோன்றும் உணர்வுகள் தான்
1.உயிரிலே மோதும் போது கண்களாக – அதே உணர்வுகள்
2.வெளிப்படும் வெளிச்சத்தை உள்ளுக்குள் சேர்த்து இரத்தத்தில் கலந்து
3.கண்கள் உருவாகும் தன்மைகளைக் கொண்டு வருகின்றது.

ஆக… கண்களால் புறத்திலே பார்க்கின்றோம்… கவர்ந்து உயிரால் நுகரப்படும் பொழுது… உயிரால் உணர்வுகளை அறிகின்றோம். இங்கே பார்க்கின்றோம்… அந்த உணர்வை அறிகின்றோம்.

ஆரம்பத்தில் கண்ணில்லாத பொழுது புழு அது தன் உணர்வால் தான் அறியத் தொடங்குகிறது. அதே உணர்வுகள் மோதப்படும் போது அறிய வேண்டும் என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது “இரண்டும் கலந்து…” இந்த உணர்வுக்குள் கருத்தன்மை அடைந்து… உடலை விட்டு உயிரான்மா சென்றாலும் அதிலே உணர்வின் அணுக்கள் சேர்த்துக் கொண்டது கண்களாக உருவாகின்றது.

அதைத் தான் கண்ணன் துவாரகா யுகத்தில் பிறந்தான்…! என்று சாஸ்திரம் கூறுகிறது.
1.வாசுதேவன் – சுவாசித்த நிலைக்கும்
2.தேவகி – தான் பார்க்க வேண்டும் என்று உணர்வுகளுக்கும்
3.அந்த ரெண்டும் கலந்து அந்தத் தேவைக்கொப்பக் கண்கள் உருவாகின்றது.

இது நான்காவது பிரம்மம்…! ஒன்று எதன் வலிமை நமக்குள் வருகின்றதோ அந்த வலிமைக்குத்தக்க இதை மாற்றி அதன் வலுவான உணர்ச்சிகளைத் தூண்டி உடல்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.

உதாரணமாக ஒரு இரத்தக் கொதிப்பு வந்தவரை அடிக்கடி கண்களில் உற்றுப் பார்த்துப் பேசிப் பழகிக் கொண்டிருந்தால் உடலில் எல்லா நிலைகளும் மாறி… அடுத்தாற்போல் உங்கள் உடலிலும் இரத்தக் கொதிப்பு வரத் தொடங்குகிறது.

ஆனால் “நான் எல்லாருக்கும் நன்மை தானே செய்தேன்…” என்று நாம் சொல்லலாம். ஆனால் நுகர்ந்தது இரத்தத்தில் கலந்த பின் இரத்தக் கொதிப்பாக மாறிவிடுகிறது.
1.ஏனென்றால் நம் கண்கள் பிரம்மத்தைச் சார்ந்தது… ஆக உருவாக்கும் தன்மை பெற்றது.
2.எதை உற்றுப் பார்த்து அதைக் கவர்கின்றதோ அதனின் வலிமை இந்த உடலுக்குள் ஆன பின்
3.அதனின் தன்மை நமக்குள் அணுவாக உருவாக்கும் தன்மை பெற்றது.

சாஸ்திர விதிகள் இதையெல்லாம் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.
1.கடவுள் என்றால் என்ன…?
2.அவன் தனித்து ஒருவனாக இருக்கின்றானா…? இல்லை.

கண்கள் உருப் பெற்றபின் கண்ணின் நினைவைக் கொண்டு ஒன்றின் வலிமையின் உணர்வை நுகர்ந்த பின் உள் நின்று அது கடவுளாக உருவாக்குகின்றது. உள் நின்று அதன் உணர்வுகள் எதுவோ அதன் வழியே அது செயல்படுகின்றது.
1.நம் உயிர் மட்டும் கடவுள் அல்ல…
2.எதை நுகர்கின்றோமோ உள் நின்று அதன் உணர்வை அதுவே அதனதன் நிலைகள் வளர்க்கின்றது.

நமக்குள் எத்தனையோ கோடி கடவுள்கள் உண்டு… ஒருவன் அல்ல கடவுள்… ஒருவனே கடவுள் என்று சொல்வது “பிழை…”

ஆனால் அதே சமயத்தில் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் “அவன் இன்றி அணுவும் அசையாது…” உயிர் உடலில் இல்லை என்றால் உடலில் உள்ள இந்த அணுக்கள் அசையுமோ…? அசைய முடியாது.

உயிரான ஈசன் இந்த உடலில் இல்லை என்றால் உடலான சிவம் சவமாகி விடுகிறது. சவமான பின்
1.இந்த உடலுக்குள் ஏற்கனவே எந்தெந்த வகையில் குணங்களை உருவாக்கிய அணுக்கள் இருக்கின்றதோ
2.அவை அனைத்தும் இந்த உடலையே உணவாக உட்கொள்ளும் தன்மை வருகின்றது… புழுக்களாக மாறுகின்றது

முதலிலே ஜீவ அணுவாக இருக்கின்றது. உயிர் போய்விட்டால் அது எல்லாம் உயிரணுக்களாக மாறுகின்றது. எதன் சுவையோ அதன் உணர்ச்சி கொண்டு அதை உணவாக உட்கொள்ளும் அதன் தன்மை அடைகிறது என்பதைச் சாஸ்திரங்கள் கூறுகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்… காரணம் “நம்மை நாம் அறிதல் வேண்டும்…”

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி நமக்கு அவசியம் வேண்டும்

 

அமில குணமான பிம்ப சிவனுக்கு… அதன் வளர்ச்சிக்கு… ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.

அமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.

இதன் குண அடிப்படை தான் நாமும்… எல்லாமில் எல்லாமுமே…!

இதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்…
1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன…? என்ற உண்மையை உணராமலும்
2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.

மாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்… வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..?

குறுகிய கால வளர்ச்சி முற்றலிலே
1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்
2.”சுவை நிறைந்த கனி…!” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.

இதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்… இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர் விடுமப்பா…!

பிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.

அமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.

ஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.

பல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது..? கனிகளுக்கு சுவை எப்படி வந்தது…?

படர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.

இப்பொழுது உணர்த்துவது பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.

இந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை… அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.

1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.
2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.

தேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி…” எதுவுமே இல்லை…!

இப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு… ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு… அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.

ஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.

மாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழிப் பெற்றது…? மற்ற ஜீவன்களைக் காட்டிலும்
1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு
2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.
3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே
4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.

சிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.

இதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..?

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்… மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.

மனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை
1.சூரியனின் ஒளி அலையிலிருந்து – பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்
2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்
3.நுண்ணிய ஈர்ப்பலையை தன் எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக
4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.

இவ்வெண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள் இது தான்.

“ஒரு நிலை…” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி
1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக
2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கர்ப்பமாக இருக்கும் ஒரு தாயை எடுத்துக் கொண்டால் கருவுற்ற தொண்ணூறு நாட்களுக்குள் அந்தத் தாய் எடுக்கும் உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.

பொதுவாகப் பெண்கள் இரக்கமும் பண்பும் கொண்டவர்கள்.
1.கர்ப்பமான நேரத்தில் பிறர் படும் நோயினை எண்ணி “இப்படி ஆகிவிட்டதே..” என்று நுகர்ந்துவிட்டால்
2.அந்த நோயிற்குக் காரணமான உணர்வுகள் கருவிலிருக்ககூடிய சிசுவிற்குள்ளும் கலந்துவிடுகின்றது.

இன்று பல அணுக்களின் கருக்களை விஞ்ஞான அறிவுப்படி இணை சேர்த்து புதுப் புது செடிகளை விஞ்ஞானிகள் எப்படி உருவாக்குகின்றனரோ இதைப் போல
1.தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த நோயின் உணர்வுகள்
2.அது தாயின் கருவிற்குள் உருப்பெற்றுவிடுகின்றது.

ஒரு வீரியம் குறைந்த செடியில் வீரியமுள்ள செடியின் அணுக்களை நாம் எடுத்து அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது வீரியம் குறைந்த செடியும் வீரியமான செடியாக உருவாகின்றது.

இது மனிதனால் இணைக்கச் செய்யப்பட்ட நிலைகள்… அப்போது அது வீரியமான செடியாக உருவாகின்றது

இதைப் போன்றுதான் தாய் கருவிலே சிசு வளரப்படும் பொழுது பல கொடிய நோய்களையோ… அல்லது துன்புறுத்தும் நிலைகளையோ… சண்டை போடும் நிலைகளையோ… எதையெல்லாம் தாய் நுகர்கின்றதோ அந்த உணர்வின் அணுக்கள் கருவிலிருக்கக்கூடிய அந்தத் தொண்ணூறு நாட்களுக்குள் சிசுவில் அது பதிந்துவிடுகின்றது.

இப்படிப் பதிந்து கொண்டபின் அதனுடைய வளர்ச்சியில் வரப்படும் பொழுது…
1.தாயிற்குத் தான் பார்த்தது “ஊழ்வினை ஆகின்றது”
2.குழந்தைக்கோ அது “பூர்வ புண்ணியம் ஆகின்றது…”

இவ்வாறு கருவிலே விளைந்து விட்டால் கருவில் உருவான குழந்தையும் அந்த உணர்வின் தன்மை இயங்கப்படும் பொழுது அந்த உணர்ச்சியை அதிகமாகக் கூட்டிவிடுகின்றது.

தாய் உற்று பார்த்தவர்கள்…
1.எந்தெந்த நோய்வாய்ப்பட்டனரோ அதைப் போல பிறந்த குழந்தை சுணங்கிவிடுவதும்
2.அல்லது சண்டையிட்டவரைப் பார்த்திருந்தால் அதே உணர்வுகள் இனம் புரியாதபடி குழந்தை வெறுப்படைவதும் சண்டை போடுவதும்
3.அதே சமயத்தில் சிசு கர்ப்பத்தில் இருக்கப்படும் பொழுது அந்தத் தாயிற்கு இனம் புரியாத இன்னலும் இனம் புரியாத சங்கடமும், இனம் புரியாத வருத்தமும் வரும்.

சில குழந்தைகளில் இப்படி ஆகும்.

ஏனென்றால் சில உணர்வுகள் பதிந்து கொண்டபின் அதன் உணர்வின் அணுக்கள் அந்த வளர்ச்சியைப் பெறும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தி தாய் வழி அது பெறும் தகுதி பெறுகின்றது.

முதலிலே பதிந்தது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகின்றது. தாய் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாகின்றது. ஒரு உணர்வின் தன்மை வித்தாகி வித்தின் தன்மை கொண்டு அது வளர்கின்றது.

இதைப் போன்று “சூட்சம நிலைகளில்” பல நிலைகள் மாறிக் கொண்டேயுள்ளது
1.இது எவ்வாறெல்லாம் நடக்கின்றது…? என்ற நிலையையும்
2.பல உண்மையின் உணர்வுகள் அலைகளாக எப்படிப் படர்கின்றது…? என்றும்
3.நுகரப்படும் போது அந்த உணர்வலைகள் உடலுக்குள் எப்படி ஊடுருவுகின்றது…? என்ற நிலையையும் காட்டினார்.

இயற்கையின் நியதிகளை குருநாதர் எமக்குக் காட்டியதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதைச் சொல்கிறோம்.

சாமி சொன்ன வழியைக் கடைப்பிடித்தேன்… தீமைகளை என்னால் தடுத்து நிறுத்த முடிகின்றது… என்று ஒரு இரண்டு பேர் சொல்லுங்கள் பார்ப்போம்

 

அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேருடன் பழகுகின்றோம்.
1.அவன் இப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்தான்… மோசம் செய்து விட்டார்கள்… ஏமாற்றி விட்டார்கள்
2.இவன் நல்லவனாக இருந்தான்… எல்லோருக்கும் உதவி செய்தான் ஆனால் நோயால் இப்பொழுது அவதிப்படுகின்றான் என்று
3.இப்படிப்பட்ட எத்தனையோ உணர்வுகளை நாம் நுகருகின்றோம்.

சந்தர்ப்பங்களில் இது போன்று நுகர்ந்து விட்டால் நமக்குள் என்ன நடக்கின்றது…?

இந்த உணர்வு அனைத்து நம் உடலுக்குள் சென்று அது நரகாசுரனாக மாறி நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைக் கொன்று தின்ன ஆரம்பிக்கின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

ரோட்டிலே செல்கின்றோம்… திடீரென்று ஒருவன் அங்கே அடிபடுகின்றான். அடப் பாவமே…! என்று கண்களால் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்ந்து விடுகின்றோம்… பதட்டம் பயமும் வருகின்றது.

இது போன்று அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ விபரீத உணர்வுகளை அறிய நேருகின்றது… பார்க்க நேருகின்றது நம்மை அறியாமலே நமக்குள் பதிவாகி உடலுக்குள் வந்து விடுகின்றது.

கண்களோ இது அனைத்தையுமே நமக்குத் தெரியச் செய்கின்றது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றோம். ஆனால்
1.அப்போது நாம் எடுத்துக் கொண்ட பயமோ பதட்டமோ வேதனையோ அவை எல்லாம் உமிழ் நீராக மாறி
2.நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறி அந்த இரத்தம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குள் செல்லப்படும் பொழுது
3.அந்த நல்ல அணுக்களைக் கொல்லக்கூடிய நரகாசுரனாக மாறி விடுகின்றது
4.அதாவது… நம்மையும் வேதனைப்பட வைக்கிறது என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான்
1.தீப ஒளித் திருநாளன்று கண்ணன் (நம் கண்கள்) நரகாசுரனைக் கொன்ற நாள்…! என்று காட்டி நீ விழித்திரு உடலுக்குள் தீமைகள் புகாது தடுத்து நிறுத்து என்றும்
2.விநாயகர் சதுர்த்தி அன்று தீமைகளை நிறுத்திப் பழகு என்றும்
3.இவ்வளவு அழகாக வருடத்தில் 12 மாதங்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

ஞானிகள் கொடுத்ததை யாராவது நாம் சிறிதளவாவது மதிக்கின்றோமா அவர் சொன்னதை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்றோமா…?

இப்பொழுது இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்லிக் கொண்டு வருகின்றேன்… எல்லாம் கேட்கின்றீர்கள். எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றீர்கள்…?

“சாமி நன்றாகச் சொன்னார்…” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்
1.எவ்வளவு அழகாகச் சொல்கின்றார் தெரியுமா…!
2.என்னைப் புகழ் பாடி விட்டுப் பொருள் காணாதபடி… பொருளைத் தனக்குள் வளர்க்கத் தெரியாதபடி
3.இன்றும் தியான வழியில் வருபவர்கள் இருக்கின்றார்கள்.

எங்கள் சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று கேட்பார்கள். ஆனால்
1.நான் கடைப்பிடித்தேன்… நான் செய்து காட்டினேன்
2.சாமி சொன்னார்… நான் செய்தேன்… என்னால் நிறுத்த முடிகின்றது… நிறுத்த முடியும்…! என்று
3.ஒரு இரண்டு பேர் நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்…!

ஏனென்றால் யாம் சொன்னபடி நீங்கள் செய்து பழக வேண்டும். தீமையை நீக்கும் அந்தப் பழக்கத்திற்கு நீங்கள் வரவேண்டும். அன்றாட வாழ்க்கையில் அதைச் செயலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்குத் தான் நான் “மௌன விரதம்…” இருந்தது.

என்னுடைய நோக்கமே எப்படியாவது உங்களுக்குள் அருள் உணர்வுகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வுகளைக் கவரும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான்.

ஆக…
1.அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்களே உங்கள் எண்ணத்தால் மாற்றி
2.உங்களுக்குள் வரக்கூடிய கெடுதலை நீங்களே தடுத்து நிறுத்திக் கொண்டே வந்தால்
3.பிறவில்லா நிலை அடைய முடியும் என்று உறுதிப்படுத்துவதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது,

சித்தர்கள் வெளிப்படுத்திய (மறைமுகமான) இரகசியம்

 

இன்னும் மனிதன்…
1.விதை முதலா…? செடி முதலா…?
2.கோழியிலிருந்து முட்டை வந்ததா…? முட்டையிலிருந்து கோழி வந்ததா…? என்ற தர்க்க வாதத்திலும்
3.புராணங்களில் படைத்த காவியங்களை அதன் மையக் கருவைப் பிரித்து உணரும் ஆற்றல் இல்லாதும் வாழ்கின்றனர்.

அறிவாற்றலும் செயல் அவயங்களும் வளர்த்துக் கொண்ட மனிதன் தன் வளர்ச்சியை உணராமலும்… வளர வேண்டும் என்ற நிலையற்றும்… இயற்கையின் உண்மை வளரும் வளர்ச்சியை அறியாமலும்… வாழ்கின்றான்.

குணத்திலும் பல நிலைகள் உண்டு. மணத்திலும் பல நிலைகள் உண்டு. ஒலியிலும் பல உண்டு. இதன் அடிப்படை வளர்ச்சி பல கோடிக் கோடி உண்டு.

நம் பூமியின் ஜீவ சக்தியே காற்றும்.. ஒலியும்… நீரும்… தான். இஜ்ஜீவ சக்தி இப்பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திற்கு அப்பால் இல்லை.

இந்தப் பூமிக்கு ஜீவன் பூமியேதான் எடுத்துக் கொள்கின்றது. பால்வெளி மண்டலத்தில் அந்தந்த இடங்களில் உள்ள அமில குணங்களின் சுழற்சி கொண்ட சீதோஷ்ண நிலை படர்ந்துள்ளது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கப்பால் உள்ள பால்வெளி மண்டலத்திற்குச் சென்று விட்டால் நம் பூமியில் உள்ளதைப் போன்ற ஜீவ சக்தி மாறு கொள்கின்றது.

“ஜீவ சக்தி…” என்பது பூமியின் சுழற்சியில் பூமி ஈர்த்து வெளிக் கக்கும் ஆவியினால் – அந்தக் காற்று மண்டலத்தின் சுழற்சியில் பூமியின் சுழன்று ஓடும் ஓட்டத்தினால் இந்த ஜீவ சக்தி அமில குணம் கொண்டு ஓடுகின்றது.

பூமிக்குச் சொந்தமானது தான் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள இந்தப் பத்துப் பதினைந்து மைல் நிலையில் உள்ள காற்று மண்டலம்.

முந்தைய வினா போன்று சக்தி பெரிதா… சிவன் பெரிதா…? என்ற வினாவும் மனிதரிடம் உண்டு. மனித ஆத்மாக்கள் உணராத முறையில்…
1.சில சித்தர்கள் தான் அறிந்ததை… உணர்ந்ததை… மறைமுகமாக்கி
2.சரி பாதி சிவனும்… சரி பாதி சக்தியுமாக…!
3.ஆண்டவனின் ரூபத்திற்கு மனித பிம்ப உருவைக் கல்லில் வடித்துக் காட்டினார்கள்.

எந்த ஒரு அமில பிம்பமும்… அமிலம் திடமாகி அந்தத் திடத்தில் எடுக்கும் ஒளி என்ற சக்தியினால் ஜீவன் கொண்டு…
1.அதன் சுழற்சியில் அமிலமும் கூடுகின்றது.
2.அமிலத்தின் வளர்ச்சியைக் கூட்டினால் அதன் ஈர்க்கும் சக்தி ஒளி அதிகப்படியாக வளர்ச்சிக்கு வருகின்றது.

நம் பூமியும் மற்ற எல்லா மண்டலங்களின் ஆரம்ப ஜீவன்… “சிவ சக்தி…” என்ற பிம்ப வளர்ச்சி கொண்டது தான்.
1.அமிலமான திடப் பொருள் தான் சிவனாகவும்
2.அமிலமுடன் ஈர்க்கப்பட்ட காந்த ஒளி நிலை தான் சக்தியாகவும் ஆனதப்பா…!

அமில பிம்ப சிவன் ஈர்க்கா விட்டால் சக்தியின் காந்த அலை பாய்ந்து அக்காந்த அலைக்கும் சக்தி இருக்காது. அதே போன்று அமில குண திட பிம்ப சிவத்தில் அச்சக்தி ஒளி பாயாவிட்டால் ஜீவன் பெற முடியாது.

இதன் வளர்ச்சி நிலை தான் எல்லாமில் எல்லாமாக வளர்ந்து… “வளர்ச்சி கொண்ட அண்ட சராசரங்களும் அனைத்து ஜீவ சக்திகளும்…” உருவாகி இயங்கிக் கொண்டுள்ளதப்பா…!

இதில் சக்தி பெரிதா…! சிவன் பெரிதா…? என்ற கேள்விக்கு இடமில்லையப்பா…!
1.சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை.. சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை.
2.பிம்பம் தான் “சிவம்..” பிம்பத்தின் ஜீவன் தான் “சக்தி…”
3.சக்திக்கும் ஜீவனுக்கும் அப்பாற்பட்ட ஆதி சக்தியின் நிலையை உணர்ந்து வளர வேண்டுமப்பா..! (அனைத்திலுமே)

சிவன் ஆணுமல்ல… சக்தி பெண்ணுமல்ல…! ஒவ்வொரு ஜீவனிலும் சக்தியும் சிவனும் இருந்தால் தான் அஜ்ஜீவன் வாழ முடியும். சித்தர்களினால் மறைமுகமாக மறைத்து வெளிப்படுத்திய நிலை தான் இந்த ஜீவ சக்தி உருவ நிலை…!

விதை முதலில் வந்ததா..? செடி முதலில் வந்ததா…? என்ற வினாவிற்கு அறிவாற்றலின் மனிதன் தன் எண்ணத்தைச் செயல்படுத்தினால் ஆரம்ப வளர்ச்சியான செடியிலிருந்து விதை…! என்ற உண்மையை உணரலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எல்லா மதங்களும் நல்ல ஒழுக்கங்களைத் தான் கற்பித்துள்ளது.

எந்த எந்த மதத்தின் தன்மையில் இங்கே வந்தாலும் அவர்கள் வகுத்துக் கொண்ட சட்டத்தில் சிறிது பிழைகள் ஏற்பட்டால் உடனே “துரோகி” என்ற நிலைகளை எடுத்து வெறுப்பின் உணர்வுகளை வளர்த்து அந்த உணர்வின் தன்மையே காலத்தால் மாறுபடும் நிலைகள் வருகின்றது.

அன்றைய அரச காலங்களில் ஓர் அரசனுக்கு ஒரு மனைவி என்றால் பல மனைவிகளையும் சில மதத்தில் கட்டிக் கொள்ளலாம் என்ற தத்துவம் உண்டு.

இருந்தாலும் பிறக்கும் குழந்தைகள் மூன்று குழந்தைகள் ஆகிவிட்டால் தலை மகனுக்கே அரசுப் பட்டம் என்று வகுத்து வைத்தனர்.

அரச நிலையாக இருந்தாலும் அந்தச் சட்டத்தை இயற்றி அவர்கள் வகுத்துக் கொண்ட உணர்வுகள் குலதெய்வம் என்ற நிலைகளில் வைத்து “நம்மை ஆண்டு கொள்ளும் அந்தச் சக்தி” என்ற நிலைகளில் மதத்தின் அடிப்படையில் அரசர்கள் இத்தகைய நிலைகளை வகுத்துக் கொடுத்தனர்.

அரசன் வழியில் குடிமக்களுக்கும் அவர்களின் இணக்கத்துடன் வளர குலதெய்வம் என்ற நிலைகளும் அல்லது தெய்வம் என்ற நிலைகளில் இதையே பதிவு செய்து வைத்துவிட்டால்
1.இதை (இவ்வாறு எண்ணியதை) நமது உயிர் ‘ஓ’ என்று ஜீவனாக்கி ‘ம்’ என்றாகும்போது நமக்குள் அது “கடவுளாக…”
2.அதை மீண்டும் எண்ணும்போது (கடவுளாக உள் நின்று) நமக்குள் இயக்கமாகின்றது.

எந்தச் சட்டத்தை எந்த அரசன் இயக்கினானோ அந்தச் சட்டத்திற்குப் புறம்பாக யாராவது போய்விட்டால்
1.அவன் அந்தக் கடவுளுக்கு விரோதமானவன்
2.இந்த நீதிக்கு விரோதமானவன் என்றும் இயற்றியுள்ளார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு மதங்களும் தனக்குள் இயற்றப்பட்ட அதுவே சட்டமாக்கப்பட்டு “அது தான் நீதி” என்ற நிலைகளில் வகுக்கப்பட்டு மனிதன் அந்த அரசுக்குக் கீழ் ஒழுக்க நெறிகள் கொண்டு வருவதற்கே இதனைச் செய்தார்கள்.

இத்தகைய நிலை இருந்தாலும் கடவுளின் நிலைகள் இப்படி உருவாக்கப்பட்டு எல்லா மதங்களிலும் இதைப் போன்று பல நிலைகள் உருவாகிவிட்டது.

அதிலே ஒவ்வொரு அரசனும் தன்னுடைய முதுமையின் நிலைகள் வரப்படும்போது அவருக்குப் பிறந்த குழந்தைகள் – ஒரு மனைவி இருந்தாலும் மூன்று மக்களாகிவிட்டால்
1.இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆட்சி பிடிக்கும் நிலைகளில் போர் முறைகள் வந்து
2.அவர்களுக்குள் குலதெய்வங்களின் பெயர்களையும் மாற்றி வைத்து
3.“எங்கள் குலதெய்வம் இது வேறு… அவர்கள் குலதெய்வம் அது வேறு…” என்ற நிலைகளில் இனங்கள் பிரிக்கப்பட்டு
4.இப்படித்தான் உலகெங்கிலும் “மதங்களுக்குள் இனங்கள்” பிரிக்கப்பட்டது.

இன்றும் பார்க்கலாம். முகமதியர் மதமாயிருந்தாலும் அதற்குள் இனம் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் போர் செய்கின்றனர்.

இந்து மதமாக இருப்பினும் இதற்குள் இனங்கள் பிரிக்கப்பட்டு இந்த மதத்துக்குள்ளே ஒருவருக்கொருவர் “நீயா.. நானா…” என்று போர் செய்து கொண்டு இருக்கின்றோம்.

சீக்கிய மதத்தில் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இயற்றிய நிலைகள் கொண்டு கடவுளுக்குத் துரோகம் செய்கிறார் என்ற நிலைகள் கொண்டு குரு துரோகம் செய்கிறார் என்று இந்த இனத்துக்குள் ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலைகள் இருக்கின்றது.

ஆக அந்த இனத்தையும் காப்பதில்லை. இவர்கள் காட்டிய நல்லொழுக்கத்தை யாரும் காப்பதில்லை.

இதே போல் புத்த மதத்தில் எடுத்துக் கொண்டாலும் அவருடைய பிற்காலங்களில் இவர் வகுத்துக்கொண்ட நிலைகளுக்கு மாறாக வருகிறார் என்றும் அதற்குள் உள் பிரிவுகள் வந்து ஒருவருக்கொருவர் போர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஜைன மதத்தை எடுத்துக் கொண்டாலும் கடவுளைப் பற்றி எங்கள் தத்துவ ஞானிகள் இதைத்தான் கூறினார்கள் என்று கடைப்பிடித்தாலும் அதற்குள்ளும்… தவறு செய்தார் என்று அதிலேயும் ஒவ்வொரு அரசனும் கடைப்பிடித்த நிலைகள்
1.இந்த முனிவருடைய நிலைகள் வேறு
2.அந்த முனிவருடைய நிலைகள் வேறு… எங்களுடைய கடவுள் என்று அதற்குள்ளும் இனங்கள் பிரிக்கப்பட்டது.

அன்றைய காலங்களில் ஜைனர்கள் யாசித்தே வருவார்கள். ஒவ்வொரு உயிரிலும் கடவுள் என்ற நிலைகளில் ஏங்கி “பிச்சாந்தேகி” என்று உணவுக்காக வீடு வீடாகச் சென்று நிர்வாண நிலைகள் கொண்டு உலகம் உய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தாலும் காட்டுக்குள் மறைந்திருந்து வாழ்வார்கள்.

உணவை யாசித்துப் பெற்ற பின் அவர்கள் வாழ்த்திவிட்டுச் செல்வார்கள். நான் கடவுளை அடையச் செல்கிறேன், எனக்கு அன்னமிட்ட அந்த மக்களைக் காத்திட வேண்டும் என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்கள்.

ஒருவருக்கொருவர் நேசிக்கும் பண்புடைய நிலைகள் கொண்டு அனைவரையும் வளர்க்க வேண்டும் என்று இவ்வாறு இருப்பினும் அதிலேயும் வாழ்க்கையில் வரப்படும் பொழுது மதத்திற்குள் மதம் இனமாகப் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் போர் முறை.

புத்த மதங்களிலும் இதே தான்.
1.சீனாவில் புத்த மதத்தின் தத்துவம் வேறு
2.இலங்கையில் தத்துவம் வேறு
3.ஜப்பானில் புத்த மதத்தின் தத்துவங்கள் வேறு.

ஆகவே… நாட்டுக்கு நாடு அந்த ஞானிகளுடைய தத்துவங்களை எடுத்துக் கொண்டாலும் தன் ஆட்சி பீடத்திற்காகவே அவர்கள் அமைக்கப்பட்டு அதன் வழிகளில் மக்களைத் தனக்குள் ஒன்று சேர்த்து வரவேண்டும் என்று எண்ணினாலும் அதற்குக் கீழ் காலத்தால் அது பேதங்கள் உருவாக்கப்பட்டு இன்று உலகெங்கிலும் மத பேதம் இன பேதம் என்று மதத்திற்குள் இன பேதங்கள் பிரிக்கப்பட்டு
1.மனிதனுக்கு மனிதன் நியாயம் பேசிக் கொண்டுள்ளோம்.
2.நல்லதைப் பேசுகின்றோம்… ஆனால் அடுத்த மனிதனை அழித்திட வேண்டும் என்ற உணர்வின் ஏக்கமே நமக்குள் அதிகமாகப் பரவிவிட்டது.

மதங்களால் இயக்கப்பட்ட சாஸ்திர நிலைகளிலும் சாங்கிய நிலைகளிலும்தான் சிக்குண்டு உண்மையினுடைய நிலைகளை நாம் அறிய முடியாது இன்றும் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எத்தகைய வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டோமோ அந்த மதத்திற்குக் கீழ் நல்ல ஒழுக்கத்தைக் காட்டினாலும் நல்ல ஒழுக்கத்தைக் கொண்டு அவன் இந்த மதத்திற்கு விரோதமாகச் செய்கின்றான் என்று எதிர்மறையானதைப் பதிவு செய்யும் பொழுது அந்த மதத்திற்குள்ளேயே வெறுப்பின் தன்மை வளர்க்கப்பட்டுவிடுகின்றது.

வெறுப்பின் தன்மை கொண்டு
1.“இவன் துரோகி” என்று பறைசாற்றும் பொழுது
2.அவன் மீண்டும் “இவனைத் துரோகி” என்ற நிலைகளில் மதங்களில் இது உருவாக்கப்பட்டு
3.அதனின் நிலைகளில் தான் இன்று உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டுள்ளது.

இந்த நிலைகளில் எதை எதை நமக்குள் வளர்த்துக் கொண்டோமோ மனிதனுக்குள் விளைந்த இத்தகைய உணர்வுகள் அனைத்தும் இந்தப் பூமியில் படர்ந்து கொண்டேயுள்ளது.

அன்றைய காலங்களில் மந்திரம் எந்திரம் என்ற நிலைகளில் போர் முறைகள் வந்தாலும் இன்று இயந்திரத் துப்பாக்கிகளும் அணு விசைகளும் வந்துவிட்டது.

எலெக்ட்ரானிக்… லேசர் முறை கொண்டு போர் முறை உருவாகி யுத்தங்கள் வரும் நிலை ஆகிவிட்டது. மனிதன் மனிதனையை இரக்கமற்றுக் கொன்றிடும் நிலை ஆகிவிட்டது.

இது தான் இன்றைய நிலை.

1.எந்த மதத்திற்குள் ஏற்படுத்தப்பட்ட கடவுளாக இருந்தாலும்
2.அந்த மதத்தையே காக்க முடியாத நிலைகள் உள் பூசல்கள் அதிகமாகிவிட்டது.

மனிதன் மனிதன் என்ற நல் அறிவை இழக்கும் போர் முறைகள் வந்து மனிதனுக்குள் மனிதன் அழித்துக் கொண்டு இருக்கும் நிலைகள் தான் உலகெங்கிலும் பரவியுள்ளது.

மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் ஆட்சியும்… தன் கொள்கையைக் காப்பதற்காகப் போர் முறைகள் செய்து, தனக்கு எதிர்நிலையாக இருப்பதை அழிக்க வேண்டும் என்ற உணர்வுதான் தோன்றியதே தவிர
1.இவர்களுக்குள் வணங்கிய கடவுள் மக்களைக் காக்க வந்ததா..,?
2.கடவுள் இவரைக் காப்பாற்றியதா…? அல்லது
3.கடவுளைக் காக்க மனிதர்கள் தன் மதத்தின் கீழ் எப்படிச் செயல்படுகிறார்களா…? என்று சற்றுச் சிந்தித்து பாருங்கள்.

இதைத்தான் எமது குருநாதர் காட்டினார்.

மனிதனாக இருக்கும் நமக்குள் கடவுளாக இருக்கும்போது நாம் எண்ணியதை இயக்கி ‘ஓ’ என்று ஜீவனாக்கி கடவுளாக அந்த உணர்வின் செயலாக எவ்வாறு இயக்குகிறது…? என்று காட்டினார்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியினை நாம் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையை, நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிராத்மாவும் சப்தரிஷி மண்டலம் அடைவதே கடைசி எல்லை. இதுதான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய நிலைகள்.

விளம்பரம் செய்து… ஆசையைத் தூண்டி… ஞானத்தைப் பெறச் செய்ய முடியாது

 

குருநாதர் எனக்கு எப்படி ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்தாரோ அதைப் போல் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் செவி வழி கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து… உங்கள் புலனறிவு கொண்டு ஈர்க்கும் நிலையாக… அந்த மெய் ஞானிகள் உணர்வின் சத்தை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

இந்த உணர்வின் நினைவை நீங்கள் கூட்டும் போது காற்றிலிருந்து உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.
1.அத்தகைய பழக்கத்தினைக் கொண்டு வருவதற்குத் தான் தியான வழியினைக் காட்டி
2.அதன் மூலம் உங்கள் சிந்தனையைத் தூண்டச் செய்து
3.காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் ஞானிகளின் அருள் சக்திகளையும்
4.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேராற்றல்மிக்க சக்திகளையும் நீங்கள் பெறுவதற்காக இதைச் செய்கின்றோம்.

ஏனென்றால் அறிந்துணர்ந்து… தெரிந்து கொண்டு அதன் வழிகளில் நீங்கள் பின்பற்றும் நிலைகள் வேறு.

“ஒருவர் நம்மைத் திட்டுகிறார்…” என்ற உடனே அந்த உணர்ச்சிகள் பட்டதும்… நம்மை அறியாமலே
1.அவர் மேல் நமக்கு எவ்வளவு எண்ணங்கள் தோன்றி… சிந்தனைகள் தோன்றுகிறதோ…?
2.அவரை எப்படி உதைக்க வேண்டும்…?
3.எதன் எதன் மறைவிலே அதைச் செயல்படுத்த வேண்டும்…? என்ற “அந்த ஞானம் பேசுகிறது….”

அதைப் போன்று தான் மெய் வழி செல்ல வேண்டும் என்ற உணர்வுடன் ஏங்கி இருப்போருக்கு அந்த ஞானிகளின் ஆற்றல்கள் துரித கதியில் கிடைக்கும்.

ஆகவே எல்லாம் தெரிந்து எடுப்பது என்றால் மிகவும் சிரமம்…!

“எதையோ பின்னிப் பின்னிப் பேசுகின்றேன்…” என்று எண்ண வேண்டாம். இந்தப் பின்னலுக்குள் பல நிலைகள் உண்டு. பல நூல்களின் தன்மை பின்னி வரும் பொழுது தான் எத்தனையோ வகையான துணிமணிகளை நாம் ஆடைகளாக அணிகின்றோம்… அழகுபடுத்தும் நிலையாக அது வருகிறது.

ஆகவே இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வரப்படும் பொழுதுதான் சிந்தனைக்குரிய நிலைகள் கூடி
1.யாம் சொல்லும் தியான நிலையில் வரப்படும் பொழுது பல ஆற்றல் மிக்க நிலைகளைக் குவித்து
2.உங்களுக்குள்ளேயே அருள் ஞான வழிகளை அது காண்பிக்கும்… அருள் வழியிலே செல்லவும் இது உதவும்.

காரணம்… குருநாதர் எனக்கு எவ்வழியிலே காட்டினாரோ அதே போன்றுதான் உங்களை அறியாமலேயே மெய் ஞானத்தின் அருள் வழி நீங்கள் சென்று விஞ்ஞான உலகில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை விடுவிக்கும் சக்தியாக… மெய் வழியைப் பெறும் சந்தர்ப்பத்தையும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்யவும் இதைச் செய்கின்றோம்.

“யாம் முழுமையாகச் சொல்லவில்லை…” என்று சிலர் அந்த ஏக்கத்தில் இருக்கலாம். முழுமையாகச் சொல்வது என்று இல்லாதபடி
1.யாம் பதிவு செய்த நிலைகளை எல்லாம்
2.நீங்கள் தியானத்தில் இருக்கும் பொழுது அந்த உண்மையின் நிலைகள் உங்களுக்கு நிச்சயம் தெரிய வரும்.
3.வளர்ச்சியாக… வளர்ச்சியாக… உங்களுக்குள் “உள்ளிருந்தே அது தெரிய வேண்டுமே தவிர…”
4.வெளியிலே முழுமையாகப் பேசிக் கேட்டு அதைத் தெரிந்து கொள்வதால் பலன் ஏதுமில்லை.

எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் விளையப்படும் போது தான் இருள் சூழும் நிலைகள் குறைந்து… மெய் ஒளியின் ஆற்றல்கள் கூடி… உங்களுக்குள் அறியாது வந்த தீமைகள் குறையும்… அருள் ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகும்… அதைக் கவரும் தகுதியும் உங்களுக்குள் வளர்ச்சியாகும்… நீங்கள் வளர்வதற்கு அது பயன்படும்.

அதனால் தான் சுருங்கச் சொல்லி உங்களுக்குள் பதிவு செய்து… அருள் வழியில் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் இதை உணர்த்துகின்றேன்.
1.ஆகவே எனக்குக் கிடைக்குமா…? என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டியதில்லை
2.சந்தேகத்தின் நிலைகள் கொண்டு வந்தால் இதைச் செயல்படுத்த முடியாது.

விண்வெளியில் எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் இராக்கெட்டை அனுப்புகின்றார்கள். ஆனாலும் இங்கிருந்து தான் அதை அங்கே இயக்குகிறார்கள்… இயக்க முடியுமா…! என்ற சந்தேக நிலை இல்லை.

ஆக அந்த இயந்திரத்தில் இருக்கும் ஆற்றல்களுக்கும் மனிதன் சொல்லிப் பேசி நாடாக்கள் வழி பதிவாக்கிக் கம்ப்யூட்டர் மூலம் ஆணையிடுவதற்கும் (COMPUTER LANGUAGE) “அது செருகப்படுகின்றது…”

அவ்வாறு செருகி அதிலே பதிவு செய்த நிலைகள் கொண்டு நாடாக்கள் வழி ஆணையிட்டு அந்த இராக்கெட்டை இங்கிருந்து திசை திருப்புகின்றார்கள்… அதை இவர்கள் வசதிக்குத் தக்கச் சீராக்கவும் செய்கின்றார்கள்.

இப்படி…
1.ஆயிரம் டன் எடையுள்ள அந்த இயந்திரத்தையும்
2.மனிதனுடைய எண்ண வலுவானது அந்த எண்ண ஒலிகள் அது இயக்குகின்றது (மனிதனின் எண்ண ஒலிகள் மிகவும் வலு கொண்டது)

அதைப் போன்று தான் குருநாதர் காட்டிய வழியில் “உயர்ந்த சக்திகளை” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்… ஒரு கம்ப்யூட்டர் மூலம் அங்கே இராக்கெட்டை இயக்குவது போன்று.

இன்னும் சிலர்… இத்தகைய முக