“யாம் கொடுக்கும் சக்தியை…” நீங்கள் பெற வேண்டும்… அதை வளர்க்க வேண்டும்… மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்

“யாம் கொடுக்கும் சக்தியை…” நீங்கள் பெற வேண்டும்… அதை வளர்க்க வேண்டும்… மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்

 

காட்டிற்குள் சென்று தவம் இருப்பது என்பது… நம் உடலுக்குள் அதுவே பெரும் காடாகத்தான் இருக்கின்றது. வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் என்று எத்தனையோ கொதித்தெழும் உணர்வுகள் உள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் தவமாக்கி நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களிலும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் சேர்ப்பிப்பபதுதான் உண்மையான தவம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்கு அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

1.சொந்தமில்லாத இந்த உடலுக்குச் சொந்தம் கொண்டாடி
2.வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் என்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்து விடாதீர்கள்…
3.அதை வளராது தடுத்து விடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்து பிறவி இல்லை என்ற நிலையை அடையுங்கள். உயிரணு தோன்றி மனிதனான பின் கடைசி நிலை அது தான்.

பெண்கள் இந்த உண்மையின் இயக்கங்களை நீங்கள் உணர்ந்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிப் பழகுங்கள்.
1.தன் கணவருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.அதே போன்று கணவன் தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
3.இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் தியானிக்க வேண்டும்.

அகஸ்தியன் தன் மனைவியோடு எப்படி ஒன்றி வாழ்ந்தானோ அதைப் போன்று கணவன் மனைவி நீங்கள் வழி தொடர்ந்து செயல்படுத்தி வாருங்கள்.

இந்த உடலுக்கு பின் பிறவி இல்லை என்ற நிலை அடைய “எமது குரு அருளும்… மகரிஷிகளின் அருள் சக்தியும் உறுதுணையாக இருக்கும்…”

1.குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று
2.குரு துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று இருளை அகற்றி
3.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று
4.அமைதியும் சாந்தமும் ஞானமும் விவேகமும் பெற்று
5.உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது அருளைப் பெருக்கி
6.அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி நீங்கள் பெற எமது ஆசியும் அதுவாகி
7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெருகி பேரின்பம் பெற எமது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

உங்கள் உடலில் எத்தகைய வலியோ வேதனையோ வந்தாலும் உயிரான ஈசனை வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளை அங்கே செலுத்திப் பழகுங்கள்.

“உங்களை உங்கள் எண்ணமே காக்கும்…”

எண்ணியதை உயிர் இயக்குகின்றது… எண்ணியதை உடலாக்குவதும் உயிர் தான். இதைப் போன்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பம் பெற எமது ஆசிகள்.

நான் சொன்ன முறைப்படி தியானப் பயிற்சியைச் சீராக மேற்கொள்ளுங்கள் யாம் (ஞானகுரு) கொடுக்கக்கூடிய உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

1.யாம் சொன்ன அருள் வழியைக் கடைப்பிடிக்கும் போது அது எப்படி உங்களுக்கு நல்லதாகின்றதோ இதைப் போன்று
2.குரு காட்டிய வழியில் பெற்ற சக்திகளை… நீங்கள் மற்றவருக்குள் பாய்ச்சப்படும் பொழுது
3.அவருடைய நோய் போக வேண்டும்… அவருடைய தீமைகள் அகல வேண்டும்.
4.உங்கள் சொல்லைக் கேட்டாலே மற்றவருடைய கஷ்டங்கள் போக வேண்டும்
5.”அத்தகைய சக்தி நாங்கள் பெற வேண்டும்” என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

நான் சொல்லும் பொழுது உங்களுக்கு நல்லது ஆகிறது அல்லவா…! ஏன் இதைப் போன்று நீங்கள் சொல்லி அவர்களுக்கு நல்லதாகும் பொழுது அந்தக் கெட்டது வராமல் தடுக்கலாம் அல்லவா.

உங்களால் ஏன் இதைச் செயல்படுத்த முடியாது…? நிச்சயம் முடியும்.

1.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும்
2.இந்தப் பழக்கத்திற்கு வந்தால் சாமியார் பேரைச் சொல்லியோ தெய்வத்தின் பேரைச் சொல்லியோ யாரும் ஏமாற்ற முடியாது.

Leave a Reply