மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை” சொல்லுங்கள்

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை” சொல்லுங்கள்

 

நம்மை அறியாதபடி உள் புகுந்து நம்மை கவலைப்படச் செய்வதற்கும்… நம்மை அறியாத உள் புகுந்து வேதனையான சொல்களைச் சொல்லச் செய்வதற்கும்… சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகளே… (குணங்கள்) காரணமாகின்றது.

அத்தகைய வேதனைகள் வளர்ந்தால் உடலில் கடும் நோயாகின்றது.

ஆனால் நாம் அதைத் தடைப்படுத்தி… மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி… என்றும் நிலை கொண்ட நிலைகளில் அதைப் பற்றுடன் பற்றி… அந்தப் பற்றின் நிலைகள் கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் சரீரம் பெற முடியும்.

மறவாதீர்கள்…!
1.எந்த நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை சொல்லுங்கள்…”
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

உங்கள் உடலுக்குள் இது பெருகப் பெருக நோயின் தன்மை குறையும். மகரிஷிகளின் அருள் சக்தியால் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
1.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரை நீங்கள் கேட்டுக் கொண்டால்
2.நாம் எதைக் கேட்டோமோ அந்த உணர்வின் அலையாக அவன் (உயிர்) நமக்குள் படரச் செய்வான்
3.நம்மை அறியாத உள் புகுந்த தீமைகளை அது நீக்கும்.

மறவாதீர்கள்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள். உங்கள் ஈசனான உயிரிடம் வேண்டுங்கள். தீமைகளை அகற்றிட எண்ணும் பொழுது தீமைகளை அகற்றிடும் செயலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிடம் விளைகின்றது.

மறவாதீர்கள்…! ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சக்தி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் பிறவிக் கடலைக் கடந்து சென்ற அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து… அதைப் பற்றுடன் பற்றி இந்த உடலே ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.

சிவன் இராத்திரி உயிர் உடல் பெற்ற நாள்…! அந்த உடல் பெற்ற நாள் என்றால் அந்த உடலுக்குள்ளே “நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் மறைந்தே இருக்கின்றது…”

இருளுக்குள் மறைந்த அந்த உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து செயல்படும் அடுத்த நிலை தான் நாம் மனிதனாக வளர்ந்த நிலை. மனிதனாக வளர்ந்த நிலையில் இந்த உடலை விட்டு அகன்ற பின் உத்தராயணம்…! அது முருகனுக்கு உகந்த நாள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நமக்குள் மாற்றி அமைக்கும் உத்தராயண நேரத்தில் “பங்குனி உத்திரம்…” என்று அங்கே காட்டுகின்றார்கள்.

அதாவது ஆறாவது அறிவின் துணை கொண்டு ஞானிகள் சென்ற வழியில் நம் நினைவாற்றல் அங்கே சென்று இந்த உடலை விட்டு அகன்ற பின் பிறவியில்லா நிலை அடைவது தான் உத்தராயணம்.

1.இந்த உடலின் தன்மை நமக்கு நமக்கு வேண்டாம்
2.உயிருடன் ஒன்றி ஒளி நிலைகள் பெறுவதே நமக்கு வேண்டும்.

பங்குனி உத்திரம் – ஆறாவது அறிவின் துணை கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி மெய் ஒளியுடன் ஒன்றி மெய் ஒளியின் சரீரம் பெறும் நன்னாள்தான் அது.

Leave a Reply