படைப்பின் படைப்பைக் காட்டிலும்… உயர் படைப்பாவது தான் ஆதிசக்தியின் சக்தி நிலை

படைப்பின் படைப்பைக் காட்டிலும்… உயர் படைப்பாவது தான் ஆதிசக்தியின் சக்தி நிலை

 

சூரியனின் ஒளி அலையின் தொடர்பின் பிம்ப நிலை கொண்டு சிவனாகவும் ஈர்ப்பு நிலை கொண்டு சக்தியாகவும் வளர்ப்பின் படைப்பைக் கொண்டு உருவான உலக சக்தியே சூரியனைக் காட்டிலும் சக்தி வாய்ந்த நிலை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய “சக்தி பூமி இது…!”

இக்கலியின் மாற்றத்திற்குப் பிறகு…
1.இப்பூமியில் இன்றுள்ள மனித ஆத்மாக்களின் நிலை மாறி உருவங்கள் மாறு கொண்டு
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் ஈர்ப்பு ஓட்ட சக்தி
3.சூரியனைக் காட்டிலும் துரிதம் கொள்ளக்கூடிய நிலை கொள்ளப் போகின்றது.

உருவத்திலே சூரியனை விடச் சிறியதாக இருக்கும் காலத்திலேயே இதன் ஈர்ப்பு சக்தியினால் இதன் ஓட்ட நிலை துரிதம் கொண்டு… இன்றெப்படி சூரியனைச் சுற்றி சூரியக் குடும்பமாகச் சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலம் உள்ளதுவோ அதைப் போன்று “பூமியின் ஈர்ப்பில்…” சூரியனும் சுழலப் போகின்றது…!

சூரியனை மையம் கொண்டு இன்று சுழலும் நிலையே பூமியை மையம் கொண்டு சுழலக்கூடிய நிலை உருவாகப் போகின்றது.

உயர் படைப்பின் படைப்பில் பலவுண்டு…!

1.அப்படைப்பிலேயே வளர்ச்சி கொள்ளும் நிலை கொண்டு
2.படைப்பின் படைப்பைக் காட்டிலும் உயர் படைப்பாவது தான் சக்தி நிலையே அன்றி
3.படைப்பின் குறுகும் நிலையல்ல உயர் சக்தியின் நிலை.

இப்பூமியில் ஞானத்தின் சக்தி கொண்ட மனிதக்கரு வளர்ந்துய்யும் நிலை கொண்டு… சக்தியின் நிலையினால் மனிதனின் ஞான வலுவால் ஆத்ம பலம் கொள்ளும் நிலை பெற்ற நம்மைப் படைத்த அவ்வாதி சக்தியின் படைப்பின் வலுக் கொண்ட சப்தரிஷிகளின் படைப்புடன் மனித ஆத்மாவின் ஆத்ம ஞான வளர்ச்சியினால் பூமியின் நிலை வளர்ந்தது.

பூமியின் ஈர்ப்புச் சுற்றலின் ஓட்டம் துரிதம் கொண்டு சுழலும் தன்மையில் பூமியின் ஈர்ப்புடன் வாழக்கூடிய சக்தி நிலை மனித உரு நிலைக்கு ஒப்பாமலும்
1.பூமியை மையம் கொண்டு சுழலும் பூமியின் ஈர்ப்புக்கு வரும் பிறிதொரு மண்டலத்தில் (சந்திரன்)
2.மனிதக் கரு உருவம் வளரக்கூடிய நிலைக்கு இன்றெடுக்கும் ஆத்ம சக்தியின் பலத்தால் “மனித இனம் வளரும்…!”

நொடிக்கு நொடி மாறிக் கொண்டே சுழல்கின்ற அனைத்து நிலைகளிலும் இன்றுள்ள மனித ஆத்ம பிம்ப நிலைக்கொப்ப உருவம் தான் இருக்குமா…! என்றால் அதுவுமில்லை.

1.ஒன்றை ஒத்த நிலையில்… ஒன்றிலிருந்து மாறுபடும் உணர்வின் எண்ணமானது
2.ஆவி நிலை கொண்டு மீண்டும் மீண்டும் ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிப் பிம்பமாகும் தருணத்தில்
3.எந்த ஒரு குண அமிலத் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையில் கனி வளங்களின் ஆரம்பக் குண அமில வளர்ப்பில் வளர்ந்த தாவரங்களின் வளர்ச்சி நிலையில் மனிதக் கரு வளர்ச்சியும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் பூமியின் அமிலப் படைப்புக்கந்த இன வளர்ச்சியின் நிலைத் தொடரே பெற்றோம்.

நம் பூமியின் தாதுப் பொருட்களில் அதிகமாக உள்ளது எது…? இரும்பு தான் மற்ற தாதுப் பொருட்களைக் காட்டிலும் இப்பூமியில் அதிகம்.

ஆனால் இப்பூமியின் ஈர்ப்பு சுழற்சி வேகம் அதிகம் கொள்ளும் நிலையில்… பூமியின் ஈர்ப்புச் சுழற்சி துரித ஓட்டத்தினால்… பூமி இழுத்து வெளிக்கக்கும் சுவாச அலையினால்… பூமியின் ஈர்ப்பிற்கு மற்ற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய அமில குணத்தின் நிலையைக் கொண்டு…
1.இன்று இரும்பையே அதிகமாகக் கொண்டுள்ள இப்பூமியின் கனி வளத்தன்மையே
2.இரும்பு உள்ள நிலைக்கொப்ப தங்கம் வளரப் போகிறது… இது உண்மை..!
3.சூரியனின் நிலத் தன்மையில் தங்கத்தைக் காட்டிலும் சக்தி கொண்ட தாதுப் பொருள் உண்டு.

இரும்பைக் காட்டிலும் தங்கத்தின் குணம் உயர்ந்ததா…?

இரும்பைக் காட்டிலும் தங்கம் எத்தன்மைக்கும் இளகி வரும் குண நிலை கொண்டது. தங்கத்தை நுண்ணிய இழைகளாகவும் உருவாக்க முடியும்.

இரும்பை அதி உஷ்ணப்படுத்தித்தான் அதற்கு உருவங்கள் அமைக்க முடியும். மிகவும் உறுதி கொண்ட திடப்பொருள் இரும்பு. ஆனால் இளகும் தாதுப் பொருள் தங்கம்.

இன்று பூமியின் இரும்பின் குண அமிலம் நிறைந்த தாதுப் பொருள் உள்ள நிலைக்கொப்ப இப்பூமியில் வளரும் ஜீவன்களின் அமில வளர்ச்சியும் அதன் குணத்திற்கொப்ப இருக்கிறது.

இன்று ஓடும் பூமியின் சுழற்சி ஓட்டத்தின் வேகம் கொள்ளும் நிலைக்கொப்ப பூமியின் தாதுப் பொருட்களின் நிலையும் மாறுகொள்ளும்.

இரும்பெல்லாம் தங்கமாகும் நிலை உருவாகப் போகிறது. இப்பூமியில் இனி வரப் போகும் கல்கி காலத்தில் எல்லா நிலைகளும் ஒவ்வொரு நொடிக்கும் மாறிக் கொண்டு தான் உள்ளன.

1.ஆவி பிம்பமாகி..
2.பிம்பம் ஆவியாகிச் சுழலும் நிலைக்கொப்ப “உருண்டு வளரும் நாம்”
3.சுழற்சியுடன் ஒன்றிய எண்ணத்தின் வழித் தொடரில் இருந்தோமானால்
4.சுழற்சியுடன் சுழன்று கொண்டே ஆவியாகிப் பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் அதே சுழற்சியிலிருந்து பிம்பமான
5.பல கோடி கோடி ஆண்டுகளுக்குப் பலவற்றையும் வளர்க்கும் படைப்பாண்டவன் ஆகலாம்…

எதன் வழியில்..?

இவ்வெண்ணத்தை ஞானமாக்கி… “ஞானத்தால் ஜீவ ஆத்ம பலம் உய்யும் வழித் தொடர் கொண்டு…!”

Leave a Reply