மனிதப் பிறவி எடுத்தது மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பதற்கா…?

மனிதப் பிறவி எடுத்தது மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பதற்கா…?

 

காட்சி:-
உணர்ச்சி மிகுந்த மனிதன் ஒருவன் உணர்ச்சி குறைந்த எருமையில் அமர்ந்து அதனை அடித்துத் துன்புறுத்தி வண்டியில் கட்டிப் பாறாங்கற்களை ஏற்றிச் செல்கின்றான் அவ்வண்டியில்…!

விளக்கம்:-
மனிதன் தன் செயலுக்காகப் பலவற்றையும் மிருகங்களையும் மற்ற செயலுக்குகந்த பொருள்களையும் உலோகங்களையும் தன் ஜீவித வாழ் நாட்களில் சுகம் காணச் செயல்படுத்துகின்றான்.

உணர்ச்சி குறைந்த எருமை இவனைக் காட்டிலும் இவனுக்கு உபயோகமாக இருக்கின்றது. அதனால் இவன் பலன் காண்கின்றான்.

உணர்ச்சி குறைந்த எருமை தான் உணர்ச்சி மிகுந்த மனிதனுக்குப் பயன்படுகின்றது. இதைப் போன்று மனிதன் இந்தப் பூமியில் உள்ள பிற இன வஸ்துக்களையும் உயிரினங்களையும் தனக்கு உகந்ததாகப் பயன்படுத்தி வாழ்கின்றான்

1.உலக சக்தியையே மனிதனுக்குச் சொந்தமாக்கி வாழுகின்றான்… இன்றைய மனிதன் தன் அறிவின் விஞ்ஞான வளர்ச்சியினால்…!
2.ஆனால்… தன்னை உணர்ந்து தனக்குள் உள்ள உண்மை சக்தியை உணராமல் வாழ்கின்றனப்பா ஒவ்வொரு மனிதனும் இக் கலியின் கடைசிக் காலத்தில்.

காட்சி:-
ஒரு மனிதன் ஆற்றங்கரையில் அமர்ந்து இரை வைத்துத் தூண்டில் போட்டு பெரிய மீனாகப் பிடித்துச் செல்கின்றான்.

விளக்கம்:-
இன்றைய உலக நிலையும் இதன் அடிப்படை குணத்தில் தான் மனித ஆத்மாக்களின் வளர்ச்சி எண்ண வாழ்க்கை நடந்து வருகிறது.

தன் சாதகம் காண மீணுக்கு உணவு வைத்து அதனைப் பிடித்துத் தான் மனிதன் உண்ணுகின்றான். அதைப் போன்று
1.தன் வசதியான சோம்பல் மிக்க வாழ்க்கையின் சாதனைக்கு
2.சூரியனிலிருந்து பூமி ஈர்க்கும் மின் அலையையும் பூமி ஈர்த்து வளர்ந்த கனி வளங்களையும்
3.அறிவின் மேம்பட்ட கலி மனிதன் உண்டு விடுகின்றான்.

இது நாள் வரை வெளிப்படுத்தாத சில நிலைகளையும் வெளிப்படுத்துகின்றேன்.

எரிமலையையும் பனி மலையையும் பாலைவனங்களையும் ஏன் ஆழ் கடலையும் கூடக் கண்டு ஆராய்ந்து வருகின்றார்கள்.

இருந்தாலும் நம் பூமியில் மூன்று இடங்களில் இது வரை மனிதன் சென்று ஆராயாத இடங்களில் அதிகமாக காந்த ஈர்ப்புக் கிணறுகள் உள்ளனவே. இவர்கள் ஆராய்ச்சியில் ஏன் அதன் நிலைக்குச் செல்லவில்லை…?

1.பூமத்தியின் ரேகையின் மையப் பகுதியில் இக்காந்த ஈர்ப்பு ஆழ் கிணறுகள் நிறைந்துள்ளன.
2.கடல் மட்டத்தில் கீழ் இவ்வீர்ப்பு மிக அதிகப்படியாக உள்ளன.
3.மனிதன் மட்டுமல்ல…! இயற்கைக்கு மாறி எந்த நிலைகளும் அங்கு சென்றால் அதன் ஈர்ப்பில் அப்படியே ஈர்த்துக் கொள்ளும்.

பூமியின் ஈர்ப்புக் காந்த அலைக்குச் சக்தி தருவது பூமத்திய ரேகையின் மையப் பகுதி தான்… ஆராயும் நிலைக்குச் செல்வதாக இன்றைய விஞ்ஞானம் உள்ளது.

இவர்கள் செலுத்திச் செயல்படும் எக்கருவியையும் தன் ஈர்ப்புடன் அவை இழுத்துக் கொள்ளும்.
1.படர்ந்து மைல் கணக்கில் இல்லை… அந்தக் காந்த ஈர்ப்பு ஆழ் கிணறுகள்.
2.இந்தப் பூமியில் குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஐந்து ஆறு அடி விஸ்தீரணச் சுற்றளவு கொண்டதாக அது உள்ளது.

இவர்கள் ஆராய்ச்சியில் பிடிபடுவதும் கடினம்…! கடல் மட்டத்தில் ஒன்றும் மலை மேட்டில் ஒன்றும் பாலைவனத்தில் ஒன்றும் உள்ளது.

பூமத்திய ரேகையின் மையப் பகுதியிலும் கர்நாடக மாநிலத்தில் மலைப் பிரதேசத்திலும் சகார பாலைவனப் பிரதேசத்திலும் உள்ளது. அதன் பக்கங்கள் உள்ள இடங்களிலும் அதன் ஈர்ப்பின் செயல்கள் அந்தந்த இடங்களில் படர்ந்துள்ளது.

இதை எல்லாம் உணர்ந்து தன் உயிராத்மாவை வலுவாக்கி ஒளியாக்கி விண் சென்றவர்கள் அனைவரும் என்றுமே அழியாது வாழ்கிறார்கள்.
1.ஆனால் இந்த உடலுக்காக என்று வாழும் நிலையில் உள்ளவர்கள்
2.உண்மையையும் உணராது… தன்னையும் உணராது…
3.மீண்டும் மீண்டும் இதிலே சக்கரம் சுழல்வது போல் சுழன்று கொண்டுள்ளார்கள்.

மனிதப் பிறவி எடுத்தது சுழன்று கொண்டே இருப்பதற்கா…?

Leave a Reply