உயிர் சக்தியைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…?

உயிர் சக்தியைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.

தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது…
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது… வளர்ந்து கொண்டேயுள்ளது.

இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.

இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது… ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு… பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.

இப்படியே பூமியின் கா.மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால்
2.நாம் எந்த சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு.ந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.

அப்படித் தோன்றியிருந்தாலும்… இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்…
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)

இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா…!

அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி… அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.

மிருகமாகி… அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி… அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே… அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.

மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்… நாடு… தேசம்… என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.

1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.

இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,

ஏனென்றால்
1.மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால்
2.நாம் எந்த சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு.
3.ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.

விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.

இன்றைய விஞ்ஞான மனிதன்…
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.
3.இதை யாரும் மறுக்க முடியாது…!

அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்… நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.

இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்… சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் “பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை…”

1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்…
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்…!”

Leave a Reply