நம் கண்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்பு தியானம்

நம் கண்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்பு தியானம்

 

இன்றைய வாழ்க்கையில் நல்லதுக்காக நீங்கள் ஏங்கித் தவிக்கப்படும் பொழுது உயிரான ஈசன் அமைத்த ஆலயத்தில் (உங்கள் உடலில்) அருள் மகரிஷிகள் உணர்வுகள் படர்ந்து இருளை நீக்கிப் பொருள் காணும் அந்தத் திறன் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் நான் (ஞானகுரு) “மௌன விரதம்” இருக்கின்றேன்.

1.உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானமும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா நிலை அடைந்தானோ
3.அதே போன்று உங்கள் வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தியும்… தீமைகள் உட்புகாது தடுக்கும் ஆற்றலும்
4.அருள் ஒளி என்ற நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் வாழ்க்கை வாழ்ந்திடவும்
5.உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் வளருதல் வேண்டும். காரணம் உங்கள் உடலுக்குள் வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்ற உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று பகைமை கொண்டு மோதும் போது தான் உறுப்புகளில் வேதனையும் உணர்ச்சிகளில் வேதனையும் வேதனைப்படுத்தும் செயல்களையும்… சொல்லாகச் சொல்லும் பொழுது கேட்போருக்கும் அந்த வேதனையை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நீங்கள் மீள வேண்டும் என்பது தான் என்னுடைய தியானமே…! அரும்பெரும் சக்திகளைக் குருநாதர் காட்டி அருள் வழியில் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

யாம் பதிவு செய்த அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நுகரும் போது உங்கள் ஆகாரத்துடன் அது கலந்து நல்ல இரத்தமாக மாறுகிறது. உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்கி உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய இந்தத் தியானம் உதவும்.

ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்… உயிர் வழி நுகருங்கள்.
1.கண் வழி கவர்கின்றோம்
2.ஆனால் உயிர் வழி நுகர்தல் வேண்டும்.

சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…! தீமை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக்
1.கண்களால் ஏங்கிப் புருவ மத்தியில் பதிவு செய்யப்படும் பொழுது
2.அந்த உயிரான நிலைகள் – அதனுடைய காந்தப்புலன் அறிவு
3.நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உயிர் வழி…
4.உயிர் என்ற உணர்வுடன் ஒன்றித் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றது.
5.அதனின்று வரும் பேரருளை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை உயிரான காந்தம் கவரும் பொழுது
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள்
2.நீல நிற ஒளிக்கற்றைகளை உயிர் கவருவதை நீங்கள் உணரலாம்.
3.உங்கள் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை ஈர்க்கும் அந்த வலிமை கிடைக்கும்… அதை இப்பொழுது உணரலாம்.

துருவ ஒரு நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்றுகண்ணின் நினைவை உங்கள் இரத்தங்களில் செலுத்துங்கள். இப்பொழுது இரத்த நாளங்களில் ஒரு புது விதமான உணர்ச்சிகள் வரும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… கணையங்கள் கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் சிறுநீரகங்கள் இருதயம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் உருவாகிறது. உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.கண்களில் கவரும் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவரும் வலிமை மிக்க நரம்பு மண்டலங்களாக மாறி கண் ஒளி சீராக அமைந்து
3.அனைத்தையும் அறிந்திடும் அருள் ஞானக் கண்ணாக கண் நரம்பு மண்டலம் உருப் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணுக்குள் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கண்களை இயக்கிக் கொண்டிருக்கும் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
1.அகண்ட அண்டத்தில் வரும் அருள் உணர்வுகளை அறிந்திடும் அருள் சக்தியும்
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வைப் பெறும் தகுதியும்
3.கண்ணின் நரம்பு மண்டலம் பெற வேண்டும்… அதைப் பெறக்கூடிய தகுதி பெற வேண்டும் என்றும் ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய அனைத்து நரம்பு மண்டலங்களும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இவ்வாறு செலுத்தும் போது நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகள் அனைத்தும் இப்பொழுது அகல்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக மாற்றும் தகுதி பெறுகின்றோம்.

Leave a Reply