நம்மைக் காக்க… ஊரைக் காக்க… நாட்டைக் காக்க… உலகைக் காக்க… ஞானிகள் தான் தேவைப்படுகிறார்கள்

நம்மைக் காக்க… ஊரைக் காக்க… நாட்டைக் காக்க… உலகைக் காக்க… ஞானிகள் தான் தேவைப்படுகிறார்கள்

 

அகஸ்தியன் ஒரு காலம் நமது பூமியைச் சமப்படுத்தி நேர்பாதையில் வைத்தான்.
1.அந்த அகஸ்தியனுடைய அருளை நாம் பெற்று
2.அருள் ஞானிகளை உருவாக்கி… அவர்களின் துணை கொண்டு
3.பூமிக்குள் நடக்கக்கூடிய பூகம்பங்களையும் நமது பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களில் ஏற்படும் பூகம்பங்களையும்
4.நமது சூரியனுக்குள் ஏற்படும் பூகம்பங்களையும் மாற்றி அமைக்க முடியும்.

அத்தகைய ஞானிகள் தான் இப்போது தேவை.

எல்லோரையும் அகஸ்தியன் அருளைப் பெறச் செய்து அந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்க முடியும்.

நஞ்சை நீக்கிடும் ஆற்றல் இந்தக் காற்று மண்டலத்தில் பரவி… அதை நம் சூரியன் கவருமே என்றால்
1.சூரியனும் தெளிவாகும்
2.பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும் தெளிவாகும்
3.நாமும் தெளிவாக முடியும்…
4.உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்த அகண்ட அண்டம் எத்தகைய நிலையில் இருப்பினும் எல்லாவற்றையும் சேர்த்து அதிலே ஒரு பிரபஞ்சமாக ஆனது. பிரபஞ்சத்தில் உயிரணுக்களாகத் தோன்றியது.

பிரபஞ்சத்தில் இருக்கும் உணர்வுகள் அணுவாக மாறியதை உயிரணுக்கள் கவர்ந்து உடலாக மாற்றியது. அதிலே பல கோடி உடல்களைக் கடந்து மனிதனாக ஆனது. இது எல்லாம் ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்தது.

1.மனிதனான பின் உயிரைப் போல உணர்வை ஒளியாக்கும்
2.அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலைகளைத் தான் நம் குருநாதர் காட்டினார்.

அந்த மெய் ஞானி அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் சென்றால் மனிதன் முழுமை அடைந்து மனிதனுக்கு அடுத்த நிலையை நாம் அடைய முடியும்.

நாம் இந்த மனித உடலில் இருக்கும் போது உணவை அன்றாடம் எப்படி உட்கொள்கின்றோமோ அதைப் போன்று
1.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும்
2.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்
3.உயர்ந்த சொத்தாகக் கொடுத்தால் வேண்டும்.

விஞ்ஞான அறிவு கொண்டு சத்துள்ள ஆகாரத்தைக் கொடுத்து உடலை வளர்க்கின்றோம் ஆனால் நோய் என்று வந்து விட்டால் விஞ்ஞான அறிவு கொண்ட இரத்தத்தில் மருந்தினைச் சேர்த்து அந்தத் தீய அணுக்களை மாற்றுகின்றோம். இருந்தாலும் அது இந்த உடலுக்குத் தான்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நம் கண்ணின் நினைவு கொண்டு இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும் கண் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சி அந்த அருள் ஒளியைப் பெருக்கினால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இதை எளிதில் பெறலாம். ஆலயங்களில் இதைத் தான் காட்டப்பட்டுள்ளது. ஆகவே
1,இந்த உடலில் இருக்கப்படும் போதே நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.அனைவரும் நலம் பெற வேண்டும் அனைவரும் இந்த அருள் ஒளி பெற வேண்டும்
3.அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால்
4.நமக்குள் பகை என்ற நிலையோ நோய் என்ற நிலையோ விபரீத விளைவுகளோ வராதபடி தடுத்துக் கொள்ள இது உதவும்.

ஆகவே வாழக்கூடிய இந்தக் குறுகிய காலங்களில் குரு காட்டிய அருள் வழியில் அருளைப் பெருக்குவோம் இருளை அகற்றுவோம்… ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்… என்றும் ஏகாந்த வாழ்க்கை என்று பிறவி இல்லா நிலை அடைவோம்.

Leave a Reply