அதிவிரைவில் தன் ஞானத்தை (அருள் ஞானம்) ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள்

அதிவிரைவில் தன் ஞானத்தை (அருள் ஞானம்) ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள்

 

இவ்வுலகில் மனிதனின் எண்ண சக்தியில் அறிவு நிலையின் வளர்ச்சி குணத்தை ஞானத்தின் பால் செலுத்தும் வழி முறைப் பக்குவத்தை மாற்றிக் கொண்டதால் ஒரு சாரார் ஏற்படுத்திக் கொண்ட அறிவின் ஞான முதிர்ச்சியினால் தன் ஞானம் பெற்றதை விஞ்ஞானம் கண்டு வளர்த்திட்டான் அதன் வழி சக்திகளை.

இப்படி மனித ஞானத்தின் வளர்ச்சியையே விஞ்ஞானம் கொண்டு உணர்ந்து செயலாற்றும் பல நிலைகளை உணர்ந்துள்ளான் மனிதன்.
1.ஆனால் அம்மனித விஞ்ஞானத்தைத் தன் ஞானத்திற்கு எட்டும் பொருளாக மனிதர்கள் யாவரும் உணர்வதில்லை
2.பிறப்புடன் கூடிய “அபூர்வ சக்தியின் வழி பெற்றிட்டான் அந்த மனிதன்…!” என்று
3.போற்றிப் புகழ்ந்து அம்மயக்கத்தில் தான் அடிபணிந்து வாழ்கிறான்,
4.இதே நிலை எல்லா வட்ட நிலைகளிலும் (துறைகளிலும்) உண்டு.

பக்தி மார்க்கத்தில் சித்தன் நிலை கொண்டு செயலாற்றுபவனையும்
1.அவன் தாள் பணிந்து உயர்த்தி – தான் தாழும் செயல் வடிவாக உள்ளான் மனிதன்.
2.வாழ்ந்த வழி பெற்ற நிலையின் தொடரிலும்… பிறரின் புகழ் பாடி வணங்கும் முறையிலும் வாழ்ந்தால் நம் ஆத்ம பலம் வளம் பெறாது.

எந்தச் சக்தியாக இருந்தாலும் இந்தக் காற்றின் ஈர்ப்புக்குச் சொந்தப்பட்டது தான். அதே காற்றின் சுவாச அலையுடன் வாழும் நாம் நம் சக்தியைக் குறைத்து ஒன்றின் தொடர் நிலையில் வாழாமல் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உகந்த ஞான ஒளியின் ஈர்ப்பை நமதாகப் பெற வேண்டும்.

அதிவிரைவில் தன் ஞானத்தை ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள். நம் பூமியின் ஓட்டப் பாதையில் சில மாற்றங்களாகி வழக்கமான பாதையிலிருந்து சிறிது மாற்றமுடன் ஓடிக் கொண்டுள்ளது.

ஆகாயத்தில் கோட்டை கட்டி (INTERNATIONAL SPACE STATION) விஞ்ஞான ரீதியில் செயல் முறைக்கு வந்துவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல் இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு மேல் சென்று விட்டால் அதே போல் மற்ற மண்டலங்களும்… ஏன் வளர்ச்சியுற்ற நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்புக்குக் கூட இல்லாத நிலையில்… இங்குள்ள சுவாச நிலையை எடுத்துச் சென்று… அதற்குகந்த மருத்துவ நிலையில் அங்குள்ள அலையின் சுவாச நிலையை ஏற்கும் அமில குணத்தை… சிறுகச் சிறுக வழிப்படுத்தி மனித ஆத்மா சென்றாலும் அங்கேயும் வாழ முடியும்.

1.ஆனால் மனிதன் இன்று செய்யும் இந்த விஞ்ஞானமே
2.நூறு ஆண்டுகளுக்கு முந்திய மார்க்கத்தில் செயல்படுத்தி இருந்தான் என்றால் வெற்றி கண்டிருப்பான்.

இவன் செயல் முறை காலத்திற்குள் “உலக மாற்றமே நிகழப் போகும் நிலையில்… அந்தர வாழ்க்கையில்…!” அதன் நிலையை உணர்த்தப் போகின்றான்.

நூறு மாடிக் கட்டிடம் எழுப்பும் மனிதன் அந்த நூறு மாடிக் கட்டிடத்திற்கு உகந்த “அதே உயரத்திற்கு உகந்த அஸ்திவாரத்தையா…” பூமியில் போடுகின்றான்…?

இந்தப் பூமியில் வாழும் வளரும் பூமியிலிருந்து பிரித்து எடுத்த பொருள்களும்.. நாம் அமைத்த எல்லாமும்… பூமியின் ஈர்ப்பின் பிடிப்புடன் சுழன்று ஓடிடும் நிலையில்
1.சக்தி கொண்ட நிலை மாறு கொண்டதால் தான்
2.இன்று வலுவிழந்த சில கட்டிடங்களும் பாலங்களும் விழுவதின் உண்மையும்.

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்கனவே விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டது. பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையைப் பகுதியும் வலு குறைந்து விட்டது.

மேன்மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உயர் மின் அலைகளைக் கடலிலிருந்தும் காற்றிலிருந்தும் இந்த மனிதன் சுகம் காணப் பிரித்து எடுத்துக் கொண்டே இருப்பதால்
1.தன் குறுகிய கால சுகத்திற்காக இந்தப் பேரண்ட உலகையே வலுவிழக்கச் செய்து
2.மீண்டும் வலுப் பெற வைக்கப் போகின்றான்.

இதனின் உண்மை என்ன…? என்பது புரிந்ததா…

Leave a Reply