சரஸ்வதி இலட்சுமி பராசக்தி என்ற மூன்று தெய்வங்களையும் வணங்கச் சொல்வதற்குக் காரணம் என்ன…?

சரஸ்வதி இலட்சுமி பராசக்தி என்ற மூன்று தெய்வங்களையும் வணங்கச் சொல்வதற்குக் காரணம் என்ன…?

 

காந்தம் வெப்பம் மணம் இந்த மூன்றும் சேர்ந்துதான் ஒரு அணுவாக அதனின் இயக்கமாக இருக்கிறது என்பதனை அதை நாம் அறிந்து கொள்வதற்காகத் தான் காரணப் பெயர் அவ்வாறு வைத்திருக்கிறார்கள்.

நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகிறேன் என்றால் மைக் என்றும் ஆம்ப்ளிபையர் என்றும் ஸ்பீக்கர் என்றும் சொல்வது போன்று ஞானிகள் அணுவிற்குள் இயங்கும் ஆற்றலுக்கு அவ்வாறு பெயர் வைத்திருக்கிறார்கள்.

நம் உயிரின் இயக்கத்தால் துடிப்பின் நிலை வரும் பொழுது அந்தத் துடிப்பின் இயக்கத்திற்குப் பெயர் ஈசன்.

சூரியன் பல விஷத்தன்மையான நிலைகளால் தாக்கப்படும்போது அதனின் சுழற்சியின் வேகம் அதிகமாகி வெப்பமாகி… அந்த வெப்பத்தால் அதில் கலந்துள்ள விஷத்தின் தன்மையை வெளியே பிரித்து விடுகின்றது.

அதிலிருந்து வந்த பல நிலைகள் சேர்ந்து ஒரு உயிரணுவாக உண்டாகின்றது. சாதாரண அணுக்கள் சூரியனிலிருந்து வெளிப்படும் போது வெப்பம் காந்தமாக வெளிப்படுகின்றது.

அந்த வெப்ப காந்த அணுக்கள் வெளியேறும் பொழுது சூரியனைச் சுற்றி வெளியே இருக்கக்கூடிய அல்ட்ரா வயலட் என்ற விஷத்தை காந்தம் இழுத்து வெளிவரும் பொழுது மூன்று நிலையாக மாறுகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் என்ற மூன்று இயக்கச் சக்தியாக மூன்று நிலைகள் கொண்டு இயங்குகிறது.
1.வெப்பம் உருவாக்கக்கூடிய சக்தியாக இருக்கிறது
2.காந்தம் எதனையும் தனக்குள் எடுத்து இணைத்துக் கொள்ளக் கூடிய திறன் கொண்டது
3.தேள் கொட்டினால் நாம் எப்படித் துடிக்கின்றோமோ அதே மாதிரி விஷம் என்பது ஒரு இயக்கச் சக்தியாக இருக்கின்றது.

வெப்பத்துடன் அது இணையப்படும் பொழுது மூன்று நிலையான இயக்கச் சக்தியாக மாறுகின்றது. சூரியனை விட்டு வெளி வரப்படும் பொழுது மூன்று நிலைகளில் இப்படித் தான் வெளிப்படுகின்றது.

அதே போல் ஒரு உயிரணுவும் சூரியனை விட்டு வெளிவரும் பொழுது இந்த மூன்று நிலை கொண்ட ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

1.ஞானம் (மணம்) என்பது இயக்கச் சக்தியாகவும் – சரஸ்வதி
2.அது எந்த மணமோ அதனை ஈர்க்கப்படும் போது காந்தம் வளர்க்கும் சக்தியாகவும் – இலட்சுமி
3.ஈர்த்துத் தனக்குள் மோதியவுடன் வெப்பமாகி உருவாக்கும் சக்தியாகவும் – பராசக்தியாகவும்
4.இந்த மூன்று சக்திகளும் இயங்குகிறது.

பூமிக்குள் விஜயம் செய்யும் ஒவ்வொரு உயிரணுவிலும் இந்த மூன்று நிலைகள் கொண்ட இயக்கம் இருப்பதால் தான் பல கோடித் தாவர இனச் சத்துக்களை எடுத்து எடுத்துப் பல உடல்கள் மாறி இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது.

1.ஒன்பதாவது நிலையான நவராத்திரியாக இருக்கும் மனிதர்கள் நாம்
2.பத்தாவது நிலையான தசமி என்ற அழியா ஒளிச் சரீரம் எப்படிப் பெற வேண்டும்…?
3.அதைப் பெறுவதற்கு ஞானிகள் உணர்வை எடுத்து எப்படி நமக்குள் அதை வளர்க்க வேண்டும்…? என்று
4.நாம் உணர்ந்து கொள்வதற்குத் தான் வியாசர் இதைக் காட்டியுள்ளார்.

Leave a Reply