சித்தர்கள் கண்ட அரிய பொக்கிஷங்களை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம் – ஈஸ்வரபட்டர்

சித்தர்கள் கண்ட அரிய பொக்கிஷங்களை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம் – ஈஸ்வரபட்டர்

காலம் செல்லச் செல்ல இன்றைய விஞ்ஞானிகள் அறிவு வளர்ந்து பல வகை அற்புதச் செயல்களைக் கண்டுபிடித்து மக்களுக்குச் சொல்கின்றார்கள்… செயல்படுத்துகிறார்கள்.

ஆனாலும் இன்றைய உலகில் இக்கலியில் அறிவு வளர்ச்சி வர வர விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் “சோம்பேறி வாழ்க்கை வாழும் நிலையை உண்டாக்கி…” மனித மூளையையே மங்கச் செய்கிறார்கள் சில விஞ்ஞானிகள் எனும் பேர் பெற்ற விஞ்ஞானிகள்.

ஆதியில் சித்தர்கள் கண்டுபிடித்த ஞான நிலையிலிருந்து இந்த மண்ணில் விளையும் பொருள்களை வைத்துப் பல பல பொக்கிஷங்களைக் கண்டு உணர்த்தியுள்ளார்கள்.
1.அவற்றினால் மக்களுக்கு என்ன நன்மை…?
2.வைரம் அணிந்தால் என்ன நன்மை…?
3.தங்கத்தினால் என்ன நன்மை…?
4.நாம் பிறந்ததின் மகிமை என்ன…?
5.மண்பாண்டத்தில் சமைத்து உண்பதின் ஆரோக்கிய நிலை என்ன..? என்ற
6.பல வகை உண்மைகள் எல்லாம் ஆதியில் வந்த நிலை தானப்பா இன்றும் உள்ளது.

முதலிலேயே சொல்லியுள்ளேன் இந்தப் பூமித் தாயின் பொக்கிஷமெல்லாம் அந்தச் சூரிய சந்திர ஒளிக்கதிரிலிருந்து எப்படி வருகிறது என்பதை…!

அந்நிலை எல்லாம் ஆதியில் உள்ள சித்தர்கள் அறிந்து எடுத்துத்தான் மனிதர்களின் நன்மைக்காகச் வெளியிட்டார்கள்.

மக்களின் செயலுக்கு அந்த உண்மை நிலையை உணர்த்தி அவர்களாகவே அதை எடுத்துப் பக்குவ நிலை செய்து பயன்படுத்தப் பல உண்மை நிலையைப் பரவவிட்டார்கள் மக்களிடத்தில் அன்றையச் சித்தர்கள்.

வைரம் வைடூரியம் என்ற இன்னும் பல வகை நிறம் கொண்ட பல கோடிக்கணக்கான கற்களையும் அவை மனித உடலில் பட்டால்
1.எந்தெந்த உடலுக்கு அந்நிலையெல்லாம் அந்த உடல் ஏற்கின்றது என்ற நிலை எல்லாம்
2.அன்றையச் சித்தர்கள் கண்டுபிடித்து வெளியிட்ட உண்மையிலேதான் இன்றும் உள்ளார்கள் மக்கள்.

மனிதன் வளர்ச்சி அடைந்து உயர் நிலைக்காகக் கொடுக்கப்பட்ட அந்நிலையை
1.இப்பொழுது இன்றையச் செல்வத்திற்காகவும்
2.தம்முடைய டாம்பீக வாழ்க்கைக்காகவும் பயன்படுத்திப் பாழ் செய்து விட்டார்கள்.

இந்நிலையை அறிந்து தான் பல கோடிச் சித்தர்கள் பல உண்மைகளை மறைத்து விட்டார்கள் இன்றைய கலியின் பேராசை கொண்ட மக்களுக்கு.
1.பல வகை மூலிகைகளை வைத்து அன்றையச் சித்தர்கள் பயன்படுத்தியதையும்
2.அந்த மூலிகைகளை உபயோகிக்கும் நிலையை உணர்த்தாமலே மறைத்து விட்டார்கள்.

Leave a Reply