இன்னொரு பிறவியை மீண்டும் சொந்தமாக்க வேண்டாம்…!

இன்னொரு பிறவியை மீண்டும் சொந்தமாக்க வேண்டாம்…!

 

உங்களுக்கு எது சொந்தம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுதுமே அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெருக்குங்கள். அதைச் சொந்தம் ஆக்குங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறருடைய குறைகளைச் சொந்தமாக்க வேண்டாம். அந்தச் சொந்தத்தைக் கொண்டாடவும் வேண்டாம்

ஏனென்றால் அதைக் கொண்டாடி விட்டால் பகைமையான உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்தில் நீங்கள் சேர்ந்தாலும் அதன் இனப்பெருக்கமாக மாறி விடுவீர்கள்.

நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்கள் அனைத்தும் அதனதன் கூட்டமைப்பாக மாறும்.

உதாரணமாக மான் அதனுடைய இனக் கூட்டமைப்பாக இருந்தாலும் அதுவே மற்ற மானின் குணங்களுக்கு ஒப்ப இணைந்து கொண்டால் வகை வகையான மான்களாக வருகின்றது. அப்படி உருவான பின் அதனதன் கூட்டம் அதனுடன் சேர்ந்து கொள்கின்றது.

1.இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எதனின் பெருக்கமாக எந்தெந்தக் குணத்தை அதிகமாக்கிக் கொண்டு வருகின்றோமோ
2.நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாற்றி
3.அதனின் கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அந்தக் கூட்டங்கள் எங்கே வாழுகின்றதோ
4.அங்கே நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

அதாவது நம் உயிரான்மா மற்றொரு கூட்டமைப்புக்குள் சென்று அதனின் உடலுக்குள் நுழைந்து ஆடாகவோ கோழியாகவோ மாடாகவோ புலியாகவோ பாம்பாகவோ மாற்றிவிடும்.

கேரளாவில் ஒடியன் மந்திரம் என்று உண்டு. அந்த மந்திரங்களை நூறு முறை ஆயிரம் முறை என்று சொல்வார்கள். ஆனால் வெறும் மந்திரம் என்று தான் அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் அந்தந்த உயிரினங்களில் பெருக்கக்கப்பட்ட உணர்வுகள் ஒலி அலைகளாக எடுக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை எப்படி வருகின்றதோ இதைப் போல ஒரு மாட்டின் இறைச்சியின் உணர்வு கொண்டு அந்த உணர்வின் ஒலிகளைக் கூட்டப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே ஆன்மாவில் பெருகும்…. அங்கே அந்த உடலுக்குள் செல்லும்.

மீண்டும் இதனை அகற்றும் உணர்வோடு இன்னொருவர் சொன்னார் என்றால் இந்தக் கூட்டை விட்டு மீண்டும் வெளியே வரும். மீண்டும் இன்னொரு கூட்டிற்குள் சென்று தனித் தன்மையாக அதனுள் சென்று அதுவாக இயக்கும். இதைப் பார்க்கலாம்…!

இதை எல்லாம் நான் (ஞானகுரு) தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தில் பார்த்துப் படித்துச் சொல்லவில்லை.

குருநாதர் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தைகளைச் சொல்லிக் கொடுத்தார். அந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது அந்தந்த உடலுக்குள் செல்ல நேர்கின்றது.

மாட்டிற்குள்ளும் போகச் செய்தார் பாம்பிற்குள்ளும் போகச் செய்தார் யானைக்குள்ளும் போகச் செய்தார்.
1.இதை எல்லாம் எளிதில் சொல்லவில்லை. நேரடியாகக் கண்ட உண்மைகள் இது.
2.அப்படியே விட்டால் என்ன ஆகும்…? என் உயிரான்மா என்ன ஆகும்..!
3.ஏனென்றால் குருநாதர் என்னை எப்பொழுதுமே அவர் கைப் பிடித்து (கைவல்யம்) வைத்திருந்தார்.

இதைப் போல உணர்வுகளை இயக்கச் செய்து அதனின் உணர்வின் தன்மை கவர்ந்து கொண்டபின் உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எந்த நிலை பெறுகின்றது…? எதனின் உடலில் ஈர்க்கப்படுகின்றது…?
2.மனித உடலில் இதைப் பெருக்கிய பின் அந்த உடலுக்குள் போய் அதை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும்
3.அதிலிருந்து மீண்டும் வெளி வர வேண்டும் என்றால் என்ன செய்வது…?
4.மனித உடலில் இதை எல்லாம் உருவாக்கப்படும் போது
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகிறது…? என்றெல்லாம் நேரடியாகக் காட்டினார் குருநாதர்.

இந்த உடலுக்குப் பின் நாம் இனி பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும். அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும். அதற்குத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

Leave a Reply