உங்களைக் காக்க வேண்டும் என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம் – ஞானகுரு

உங்களைக் காக்க வேண்டும் என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம் – ஞானகுரு

 

இன்று பார்க்கின்றோம்… விஞ்ஞான அறிவால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று கம்ப்யூட்டரைத் தயார் செய்து கொண்ட பின் பூமியிலிருந்து வரும் எதிர் அலைகள் அந்த எக்கோ (ECHO) வருவதை அளந்தறிகின்றனர்.

கம்ப்யூட்டர் சாதனத்தில் நாடாக்களில் இந்த விஷமான உணர்வின் (கெமிக்கல்) ஓலி அலைகளைப் பதிவாக்கி வைத்து… அதன் முகப்பில் இருக்கக்கூடிய நிலைகள் (PROBE) பூமியை உற்று நோக்கிக் காட்டப்படும் பொழுது… பூமிக்குள் இருக்கும் நிலைகளைக் காட்டுகின்றது.

அதாவது…
1.இவர்கள் பாய்ச்சும் உணர்வின் தன்மை அந்த எலக்ட்ரிக்கின் உணர்வின் அதிர்வுக்குத் தக்கவாறு
2.அதன் நிலைகளில் அந்த மணத்தையும் உணர்ச்சியின் வேகங்களையும் கண்டறிந்து நாடாக்களில் பதிவு செய்கின்றனர்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த மிருகங்களின் உடல்கள் மண்ணுடன் மண்ணாக மறைந்திருக்கும் நிலைகளையும்… பாறைகளாகக் கூட ஆன நிலைகளையும் கண்டறிந்து… அங்கே தேடிச் சென்று குறைந்தது 100 அடிக்குக் கீழ் அமிழ்ந்து கிடப்பதைத் தோண்டி எடுத்து அந்த உருவத்தையே கண்டறிகின்றனர்.

உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கின்றான். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் இதை கம்ப்யூட்டரில் இணைத்து அதில் வரும் அலைகளை எடுத்து
1.அதனுடைய தசைகளின் அமைப்பையும் அதன் உணர்ச்சியின் செயலாக்கங்களையும்
2.வாழும் போது அந்த மிருகம் எதை எல்லாம் உணவாக உட்கொண்டது என்றும்
3.உணர்வின் அதிர்வுகளைக் கண்டு அந்த மிருகத்தின் உருவத்தையே கம்ப்யூட்டர் காட்டுகின்றது.
4.விஞ்ஞான உலகில் இதைப் பார்க்கின்றோம்… விஞ்ஞானம் இன்று அதை நிரூபிக்கின்றது.

முந்தைய காலங்களில் எல்லாம் திருடர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் கைரேகை பட்டால் அதை வைத்துத்தான் பார்ப்பார்கள். ஓரே கைரேகை உள்ளவன் என்று இருந்தாலும் அந்த ரேகைகளைக் கண்டு ஒத்துப் பார்த்து “இவன் தான்…” என்று அது கண்டுணர்ந்தார்.

இப்பொழுது அதுவெல்லாம் இல்லை…! எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஓரு கைரேகை பட்டால் அவனின் உணர்வின் அதிர்வுகள் அங்கே பதிவாகி இருக்கின்றது என்று அதை வைத்துக் கம்ப்யூட்டரில் அந்த அதிர்வினைப் பதிவாக்கி ஆயிரம் மடங்கு கூட்டுகின்றனர்.

1.அப்பொழுது இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் மோதப்படும் போது
2.அந்த மனிதன் எப்படிப்பட்ட ரூபம் உள்ளவன்…?
3.அவனுடைய குணங்கள் என்ன…? எப்படி இருக்கின்றான்..? என்று அவனின் ரூபத்தையே காட்டுகின்றது கம்ப்யூட்டர்.

இப்படி எல்லாம் நுண்ணிய நிலையில் விஞ்ஞான அறிவு இன்று காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்கின்றோம்…? என்றால் இன்னும் அறியாமையில் தான் வாழுகின்றோம்…!

1.மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொல்லும் உணர்வு தான் வருகின்றதே தவிர
2.மனிதனைக் காக்க வேண்டும்… தன்னைக் காக்க வேண்டும் என்ற உணர்வு இம்மியளவும் வரவில்லை…
3.இயந்திரத்தின் துணை கொண்டு எல்லாமே செயல்பட்டாலும் அந்த இயந்திரம் கூட ஒன்றைக் கட்டுப்படுத்துகின்றது (CONTROL)
4.ஆனால் மனிதன் தன் மனதைக் கட்டுப்பபடுத்த முடியாதபடி
5.பிறரின் உணர்ச்சியின் தன்மை கொண்டு தவறுகள் செய்வது… கொலைகள் செய்வது… தன் இச்சைக்குச் செயல்படுத்துவது
6.தான் இன்பத்தைப் பெறுவதற்காக மற்றவருக்குத் துன்பத்தை ஊட்டுவது என்று
7.இது போன்ற நிலையில்தான் இந்த உலகம் இருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீளுவதற்குத் தான் இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

ஏனென்றால் யாம் சொல்வது சாதாரணமானது அல்ல. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால் அது உங்களைத் தெளிவுபடுத்தும் சக்தியாக வரும்.

உங்கள் உயிர் எலக்ட்ரிக் என்று இயக்கம் கொண்டது. அதிலே இந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கப்படும் போது
1.வாழ்க்கையில் எதிர்ப்படும் உணர்வுகளில்
2.இது பிழை கொண்டது… இது தேவையற்றது…! என்று அதை நீக்கி
3.உங்களைக் காக்க இது உதவ வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவு செய்கின்றேன்

உங்கள் கவனத்தைத் திருப்பாது உற்று நோக்கி இந்த உபதேசத்தின் உணர்வினை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இன்றைய விஞ்ஞான உலகிலிருந்து உங்களைக் காத்திடும் சக்தியாக இது வரும்.

Leave a Reply