தியானமே செய்யாதவர்களாக இருந்தாலும் அந்த ஆன்மாக்களையும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்

தியானமே செய்யாதவர்களாக இருந்தாலும் அந்த ஆன்மாக்களையும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்

 

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று சப்தரிஷி மண்டலத்தின் பேரருளைப் பெற்று நீங்கள் இந்தத் தியானத்தின் மூலம் வலுவாக்கிக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை எளிதில் விண் செலுத்த முடியும்.

உதாரணமாக உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் இந்தத் தியானத்திலேயே இல்லாது இருந்தாலும் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தோர் இந்தத் தியானத்தில் கலந்து கொண்டு… ஒருக்கிணைந்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அந்த உணர்வின் வலிமை கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை உந்தித் தள்ளி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அங்கே சென்றடைகிறது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு படர்ந்த பின் அந்த உணர்வின் தன்மையை அங்கே கரைக்கப்படுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவாக அங்கே நிலைக்கின்றது.

தொடர்ந்து ஒரு 48 நாளும் இவ்வாறு தியானித்தோம் அவர்களும் பிறவி இல்லா நிலை அடைகின்றார்கள். அதே சமயத்தில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நம் உடலில் படரப்பட்டு
2.எந்த நோயுடன் அவர்கள் ஆன்மா பிரிந்ததோ
3.அவர்களுடன் பற்றுடன் பற்றியிருந்த அந்த உணர்வின் பரம்பரை நோயாக நமக்குள் இருப்பினும்
4.அந்த உணர்வுகள் இயக்காது நம் உடலுக்குள் அந்த அருள் ஒளியைப் பெற்று நோய்வளராது தடுக்க முடியும்.

ஏனென்றால் சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ ஆஸ்த்மாவோ வலிப்பு நோயோ இது எல்லாம் பரம்பரை நோயாக வரும். அதனின் அணு தொடர்ந்து வரும்.

அது நமக்குள் வளராதபடி தடுக்க வேண்டும் என்றால் இந்த முறைப்படி அவசியம் அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடையச் செய்தல் வேண்டும்.

48 நாளும் அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒவ்வொருவரும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தத் தியானித்தால் அந்த ஆன்மாக்களும் ஒளிச் சரீரம் பெறுகிறது. அவர்கள் மூலம் நாமும் அங்கிருந்து எளிதில் சக்திகளைப் பெற முடியும்.

அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் நம் உடலில் இருப்பதை மாற்றிட அந்த அருள் ஒளியைப் பெருக்கப் பெருக்க உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகளை அகற்ற இது உங்களுக்கு உதவும்.

1.ஒரு தடவை மட்டும் செய்து விட்டோம்…!
2.அங்கே அவர்களை அனுப்பி விட்டோம் என்ற நிலை இல்லாதபடி
3.ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் 6 மணிக்குள் குடும்பத்தைச் சார்ந்தோர்
4.ஒரு பத்து நிமிடமாவது இதை முறைப்படுத்திச் செய்தால்
5.உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உடலிலிருந்த தீய வினைகளோ
6.அல்லது அறியாது சேர்ந்த சாப வினைகளோ தீய வினைகளோ பாவ வினைகளோ அனைத்தும் அகன்றுவிடும்.

ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். பேரருளை உங்களுக்குள் உருவாக்குங்கள். உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகளையும் சாப வினைகளையும் அகற்றிப் பழகுங்கள்.

உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்யுங்கள்.

அவர்கள் முன் சென்றால் அந்த உணர்வினை நாம் பின்பற்றினால் உடலை விட்டு எந்த நேரம் நாம் சென்றாலும் அதைப் பற்றுடன் பற்றப்படும் பொழுது
1.இந்தப் பிறவியிலேயே நாமும் அடுத்துப் பிறவியில்லா நிலை அடைவோம்
2.சப்தரிஷி மண்டலம் அடைய இது உதவும்…. இந்த உணர்வுகளை நாம் பெறும் தகுதியைப் பெற்றிடல் வேண்டும்.

ஏனென்றால் சிவ தனுசு என்று இந்த உடலின் பற்று கொண்டு அது வளர்ந்திடாது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உயிரான விஷணுவில் உயிருடன் ஒன்றச் செய்தல் வேண்டும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு சிவ தனுசை வீழ்த்தி விஷ்ணு தனுசு என்ற உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நாம் மாறுதல் வேண்டும்.

இது இராமாயணத்தில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நாம் இந்த முறைப்படி செய்தோம் என்றால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றலாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனித வாழ்க்கையில் வரும் சிறு சிறு குறைகளையும் பகைமைகளையும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

அருள் ஒளி பெற்று இருளை அகற்றி… மகிழ்ந்து வாழும் உணர்வை ஊட்டி… மன பலம் கொண்டு உடல் நலம் கொண்டு நாம் வாழ்ந்திடவும்… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

Leave a Reply