நம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்

நம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்

 

ஏவல்… குட்டிச்சாத்தான்… மையிட்டு மந்திரம் செய்வோரிடம் நாம் சிக்கிடாமல்… அவர்கள் செயல்கள் செயல்படாவண்ணம் “நம் ஆத்மாவை..” நம்மைக் காத்திடும் நிலையை அறிந்து வாழ்ந்திடல் வேண்டும். பல எண்ணங்களின் நிலையிலிருந்து நம்மைக் காத்திடல் வேண்டும்.

1.சோதனை கொண்ட காலங்களில் சோர்வு நிலை கொண்டு முடங்கிடலாகாது
2,இவ் ஏவல்களின் தன்மையெல்லாம் சோர்ந்தவர்களை அதி விரைவில் அண்டிக் கொள்ளும்.

இத்துர் ஆவிகள் நடமாட்டத்தைப் பல மிருக ஜெந்துக்கள் எப்படி உணர்கின்றன…?

ஏவலும் சூனியமும் மிருக ஜெந்திற்குச் செயல் கொள்ளாது…! அதன் உடலிலேயே உணரும் தன்மை கலந்துள்ளது. இச்சுவாச சக்தி நாய்க்கு அதிகம். புலிக்குத் தன் பார்வையிலேயே கண்டிடும் சக்தியுண்டு.

இவ் ஏவலின் நடமாட்டமுள்ள இடங்களையெல்லாம் இவற்றை அறியும் தன்மை கொண்ட மிருகங்கள் உணர்ந்துவிடும்.

முந்தைய காலங்களில்… வீடுகளில் நாய் பூனை இவற்றைத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக மட்டும் வளர்க்கவில்லை. துர் ஆவிகளிடமிருந்து அவற்றின் ஏவல் இல்லங்களில் உட்சென்று செயல்படாமல் காக்கவும் இம் மிருகங்களை வளர்த்தனர்.

1.ஏவல்காரனையும் குட்டிச்சாத்தான் செயல் உடையபனையும் கண்டால்
2.இந்நாய் நரி பூனைகள் குரைத்துச் சப்தமிட்டு உணர்த்திவிடும்.

அக்கால இல்லங்களில் எல்லாம் இல்லத்தில் முன் வாயிலுக்கு மேல் நிலைக்கண்ணாடியைப் பதித்திருப்பார்கள். சாதாரண நிலையில் இருக்கும் நிலையில் நம் கண்ணிற்குத் துர் ஆவிகளின் நடமாட்டம் தெரிந்திடாது.

ஆனால் நிலைக்கண்ணாடியில் தெரியும் நிலையென்ன…?

நிலைக்கண்ணாடியில் பூசியுள்ள அவ்வமில சக்தி இத்துர் ஆவிகளின் சக்திக்கு எதிர் கொண்டது. நாயில் உடலிலுள்ள அமில சக்திக்கும் நிலைக்கண்ணாடியில் உள்ள அமிலத்திற்கும் தொடர்புண்டு.

இத் துர் ஆவியின் நிலையைப் பலர் காண்கின்றனர். பேயின் நடமாட்டத்தைக் கண்டேன் என்பவர் பலர். பேயல்ல அது குட்டிச்சாத்தானின் உருவ நிலை அது.

சிலருக்கு மட்டும் புலப்படும் நிலையென்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் அவரவர்களின் அமிலத்தன்மை ஒன்று உண்டு என்று உணர்த்தினேன் அல்லவா…! இவற்றைக் காணும் அமிலத்தன்மை கூடியவர்கள் உடல் இந்த நிலையை அறியலாம்.

சிலரின் நிலையில் அவர்களின் உடலிலுள்ள அமிலத் தன்மையே அபூர்வத் தன்மையில் இயற்கையிலேயே கூடிப் பிறந்திருப்பர். எண்ணத்தில் ஞானசக்தி நிறைவு கொண்ட அபூர்வப் பிறவியெடுத்தவர் பலர் உள்ளனரே. அவர்களுக்கு இயற்கையின் அமிலமே தன்னுள் கூடி பிறவியெடுத்து பிறந்து வளர்பவர்கள்.

1.பல பிறவியில் சேமித்த அமிலத்தின் கூட்டு நிலையினால்
2.பல ஞானிகள் மற்ற ஏவலின் சக்தியில்லாமல் வாழ்கின்றனர்.
3.ஆகவே நம்முள் உள்ள நிலையையே நல் நிலையில் வளரும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

நமக்காக ஏவாமல் பிறருக்காகச் செய்த மந்திர நிலையும் நம்மைத் தாக்கும் நிலையும் உண்டு. நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் (சுவாச நிலை) எத்தகைய தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது.

Leave a Reply