நம் கண்களுக்கு.. கருவிழிகளுக்கு… கண்ணின் திரைகளுக்கு… நாம் கூட்ட வேண்டிய “உயர்ந்த சக்தி”

நம் கண்களுக்கு.. கருவிழிகளுக்கு… கண்ணின் திரைகளுக்கு… நாம் கூட்ட வேண்டிய “உயர்ந்த சக்தி”

 

மெய் ஞானிகள் தன் உடலில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த உணர்வின் நிலையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கே பூமியில் சுழன்று கொண்டிருப்பதை ஈஸ்வரபட்டர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவு கொண்டு எண்ணும்போது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நான் சுவாசிக்க நேருகின்றது.

என் உடலுக்குள் அது கலந்த பின்… தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பும் பித்தளையும் திரவகத்தை ஊற்றிப் பிரிப்பது போல
1.அந்த அருள் ஞானியினுடைய உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று
2.தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது…
3.தீமைகளைப் பிரித்துவிடுகின்றது… அதைச் சுத்தப்படுத்துகின்றது

இதுதான் ஆத்மசுத்தி என்பது.

மற்றவர்களுடைய குறைகளை நான் கேட்டாலும் இந்த முறைப்படி சுத்தப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு முன்னாடி நான் எத்தனையோ வேதனைகளை அனுபவிக்க நேரும்.

உங்களுக்கு நன்மை செய்யலாம்… ஆனால் நீங்கள் பட்ட தீமைகள் எல்லாம் எனக்குள் அதிகமாக வந்து எனக்குள் நல்லதை மூடி மறைத்துவிடும்.

இதைப் போன்று தான் உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குவதற்கும் இந்த உபாயத்தை… அந்த மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையைக் காட்டிக் கொண்டு வருகின்றேன்.

எந்த அளவுக்கு நீங்கள் கூர்ந்து இதைக் கவனிக்கின்றீர்களோ இது ஊழ்வினையாக உங்கள் எலும்புக்குள் பதிவாகின்றது.

எப்போது நீங்கள் தீமைகளைச் சந்திக்க நேருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை நீங்கள் தூண்டப்படும் போது
2.அதைப் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும்போது
3.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வைச் சுவாசிக்க நேருகின்றது.

டி.வி.யுடன் சேர்ந்த ஆண்டன்னாவின் பவரைக் கூட்டும்போது வெகு தொலைவில்… செயற்கை கோள்கள் மூலமாக அங்கிருந்து ஒலி… ஒளிபரப்பச் செய்வதைக் கவர்ந்து அது காட்டுகிறது

அதை நாம் டி.வி.யில் பார்ப்பதைப்போல அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்பொழுது யாம் சொல்லும்போது கூர்ந்து கவனித்தால் உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு ஆவது மட்டுமல்ல…
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
2.அதனின் நிலைகள் கொண்டு ஆழமாகப் பதிவானபின்
3.அந்த நினைவின் அலைகளை… மகரிஷிகளை எண்ணும்போதே
4.ஆண்டன்னாவின் சக்தியைக் கூட்டியது போல்… நம் கண் (ஆண்டன்னா) மிக சக்தி வாய்ந்ததாக மாறி
5.அந்த ஆற்றல்களைக் கவர்தல் வேண்டும்.

ஆகவே இப்பொழுது கேட்டுணரும்போது உங்கள் கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை இணைந்து… நான் சொல்வதை அதே கண் தான் ஈர்த்து ஊழ்வினையாக உடலிலே பதிவு செய்கின்றது.

அதே சமயம்
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிகளுக்கு…
2.அந்தத் திரைகளுக்கு அனுப்பும் கண்ணின் நினைவை
3.ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும் இது சக்தி வாய்ந்ததாகச் சேர்க்கின்றது.

பின்பு அந்த ஆண்டன்னா பவர் போல… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஏங்கினால் அதைக் கவர்ந்து உங்களைச் சுவாசிக்கச் செய்து உங்கள் உடலுக்குள் அந்த உணர்வுக்ள் சென்று அறியாது வந்த தீமைகளை நீக்கிட உதவும்.

இப்படிச் செய்யாமல் சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்ற எண்ணம் இருந்தால்
1.நமக்கு நாமே ஏமாந்து நமக்கு நாமே காலத்தை விரயம் செய்து
2.நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்வதுபோல் தான் ஆகும்.
3.யாகங்களைச் செய்தோ வேள்விகளைச் செய்தோ இதை எல்லாம் நிவர்த்திக்க முடியாது.

யாகம் என்பதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்த்தால் இது தான் யாகம்… அது தான் வேள்வி.

அந்த உயர்ந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணத்தை நமக்குள் செலுத்தினால் ஒழிய துன்பங்களை அடக்க முடியாது.

1.நம் உயிர் ஒரு நெருப்பு
2.அதிலே எதைப் போடுகின்றோமோ அந்த வாசனை தான் வரும்

ஒரு நஞ்சினை நெருப்பிலே போட்டால் அந்த நஞ்சின் வாசனை தான் வரும். ஆனால் அதிலே நல்ல மணத்தின் தன்மையைப் போட்டால் நல்ல மணத்தின் தன்மையை நாம் காணலாம்.

இதைப் போன்று தான் நம் உயிரில் நல்ல மணத்தின் தன்மையைப் போடும்போது நம் எண்ணங்கள் நல்லதாக வருகின்றது.

ஆகவே மிக சக்தி வாய்ந்த ஒரு நறுமணம் கொண்ட நிலையை நாம் இடும்போது அதிலிருந்து வெளிப்படுவதைச் சுவாசிக்கும்போது நல்ல வாசனை கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் நஞ்சான நிலைகள் நெருப்பிலே விழுகும்போது அதை நுகர்ந்தால் நாம் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விடுகின்றோம்.

இதைப் போலத் தான் நாம் எந்த உணர்வின் தன்மை எண்ணுகின்றோமோ இந்த நெருப்பான உயிருக்குள் இந்த உணர்வின் அலைகளாக உடலுக்குள் சென்று அந்த குணங்களுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.

ஆக அந்த ஞானிகளின் சக்தியை நமக்குள் எடுத்துத் தீமையின் உணர்வுகளை நீக்கி நல் உணர்வின் சத்தை நமக்குள் வலுக்கொண்டதாக மாற்றிக் கொள்வதற்குத்தான் எமது குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்றுதான் உங்களுக்குள்ளும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்கின்றோம்.

1.நீங்கள் அனைவரும் மெய்ப்பொருள் காண வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.இருள் நீங்கிய உணர்வலைகள் கொண்டு நீங்கள் பேசப்படும்போது
4.நீங்கள் வெளியிடும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவரப்படும்போது
5.பிறருடைய உணர்வுகளுக்குள் அது சென்றாலும் அல்லது
6.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
7.உங்கள் மூச்சின் அலைகள் பிறருடைய தீமைகளை நீக்க இது நிச்சயம் உதவும்.

Leave a Reply