போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குருநாதரின் செயல்கள்

Eaganthanilais

போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குருநாதரின் செயல்கள்

 

மனிதனுடைய சிந்தனை முழுமையாக மறைந்து போகும் காலம் நெருங்கிக் கொண்டுள்ளது.

உயிரணுக்களாக ஆரம்பக் காலங்களில் தேடியது எந்த நிலையோ அதைப் போல் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு என்ற உணர்வினை நமக்குள் சேர்த்து அதனால் பல கலக்கங்கள் ஆகி சிந்தனை செய்யும் திறன் குறைந்து இந்த உடலை காக்கும் செயலையே இன்று இழந்து கொண்டிருக்கின்றோம்.

1.இந்தக் கோயிலுக்குப் போனால் நன்றாக இருக்குமா…? அந்தக் கோயிலுக்குப் போனால் நன்றாகுமா…?
2.இந்த ஜோதிடத்தைப் பார்த்தால் நன்றாக இருக்குமா…? ஜாதகத்தைப் பார்த்தால் நன்றாக இருக்குமா…?
3.இந்த மந்திரத்தைச் சொன்னால் நன்றாக இருக்குமா…? என்று
4.ஒவ்வொன்றாக எடுத்துத் தேடி நாம் அலைகின்றோமே தவிர
5.நாம் சுவாசிப்பது நமக்குள் எப்படி இயங்குகின்றது…? என்றே நாம் அறியாது
6.விஞ்ஞான உலகில் மெய்ப்பிக்கும் இந்தக் காலத்திலும் நம்மை அறியாமலே இது பித்தனாக இருக்கின்றோம்.

இதைத்தான் குருநாதர் சொன்னார்..! போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு அடித்துக் கொண்டிருப்பார்.

என்ன சாமி… சும்மா இருக்கின்ற போஸ்ட்டில் போய் கல்லைக் கொண்டு அடிக்கின்றீர்கள் என்று கேட்டேன் (ஞானகுரு).

நீ தான்டா என்ன என்று கேட்கிறாய்..! ஆனால் மற்றவர்கள் எல்லாம் என்னைப் பைத்தியக்காரர் என்று நினைக்கின்றார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவன் எதன் மேல் ஆசைப்பட்டானோ… அதிலே அந்தப் பித்துப் பிடித்துப் போய்… அதையே பெற வேண்டுமென்று எண்ணுகின்றான்.

1.ஆனால் தன் அருகிலே நல்ல பொருள் இருந்தாலும் கூட அதை எடுக்கும் வழியில்லை
2.தன் உடலில் நல்லது இருந்தாலும் அதை வளர்க்கும் வழியில்லை.
3.இப்படிப் பித்தனாக அலைந்து கொண்டிருக்கின்றான்.

நான் இந்தப் போஸ்டில் தட்டும் போது இந்த ஓசை வருகின்றது. அந்த ஓசையைக் கேட்டு ஏன் இப்படித் தட்டுகிறீர்கள்…? என்று என்னை நீ கேட்கின்றாய். அதனால் உனக்கு இப்பொழுது அதற்கு விளக்கம் நான் கொடுக்கின்றேன்.

நான் தட்டுவதைப் பார்த்து… “பைத்தியக்காரன்… தட்டிக் கொண்டிருக்கின்றான்…” என்று மற்றவன் நினைக்கின்றான்.

1.இந்த ஓசையை அவன் கேட்டு அவன் உணர்வுகள் என்னைப் பைத்தியக்காரனாக எண்ணி
2.பைத்தியக்காரன் என்று அவன் எண்ணும்போது அதைச் சுவாசித்து
3.உயிர் அவன் எதை எண்ணினானோ அந்த உணர்வின் தன்மையை அவன் உடலில் ஓடச் செய்கின்றது.

ஆக… அவன் பித்துப் பிடித்து இருக்கின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பித்தின் நிலைகள் அவனுக்குள் விளைகின்றது.

அதாவது நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்த உணர்வு உயிரிலே பட்டபின் அரங்கநாதன் ஆகி ஒலிகளாக எழும்புகின்றது. அந்த உணர்ச்சிகள் நம்மை ஆளுகின்றது என்பதனை ஆண்டாள்…! என்று ஞானிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் காரணப் பெயர் வைத்து இதை அறியச் செய்கின்றனர்.

1.நான் தட்டும் அந்த ஓசையை நீ சுவாசித்தாய்…
2.அதை என்ன என்று கேட்டாய்…? நுகர்ந்து என் அருகில் வந்தாய்…!
3.நான் இதற்கு விளக்கம் சொல்கின்றேன்… நீ புரிந்து கொண்டாய்.
4.தீமைகளிலிருந்து நீ மீளும் உபாயத்திற்கு உன் அறிவு இங்கே அழைத்து வந்தது.

ஆனால் அவன் (மற்றவர்கள்) அறிவு என்ன செய்கின்றது…?

அவன் என்ன செய்கின்றான் என்று தெரியாதபடி அவன் பித்தனாக இருக்கின்றான். இருந்தாலும்…
1.அவன் என்ன தப்பு செய்தான் என்ற எண்ணத்தில் நான் (ஈஸ்வரபட்டர்) வந்தால்
2.நான் அந்தப் பித்தனாகத் தான் வளருவேன்….
3.அவன் பித்தனென்றால் நான் பித்தனாகத்தான் இருக்க வேண்டும்.
4.அதனால் அதை நான் நுகர்வதில்லை…!

போஸ்டில் அடித்து வரும் இந்த ஓசையினைத் திரும்பிப் பார்த்து ஏன்… என்ன..? என்று கேட்கும்போது இதன் நிலையை நீ செய்தால் நல்லதாக இருக்கும் என்று சொல்வதை நுகர்ந்தால் அவர்களுக்குள் நன்மை பயக்கும்.

அவன் என்னைப் பித்தனாக்குகின்றான்…. அவன் பித்தன் என்று அவன் உணர முடியவில்லை..!

போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டிய இந்தச் சத்தத்திற்கு
1.குருநாதர் இத்தனை வியாக்கியானங்கள் சொல்கின்றார்….
2.மனிதன் இயல்பில் உயிரின் உணர்வுகள் எப்படி வருகின்றது என்று..!

Leave a Reply