போகர் உருவாக்கிய நவபாஷாணச் சிலையின் இரகசியம்

NAVAPASHANAM MURUGAN

போகர் உருவாக்கிய நவபாஷாணச் சிலையின் இரகசியம்

 

போகர் என்றாலே “தாவர இனச் சத்தை எல்லாம் போகித்தவர்…” என்று பொருள்.

ஆதியிலே அகஸ்தியன் இயற்கையின் சக்திகளை எப்படி மோகித்து அந்த உணர்வின் தன்மையைப் போகித்து அந்த உணர்வின் சக்தியை அணுவாக மாற்றினானோ அதே போல் தான் அகஸ்தியன் பெற்ற அருளை போகரும் பெற்றதனால் “போகர்…!”

எதனையுமே நுகர்ந்து…
1.உணர்வுகளை அறிய வேண்டும்…! என்ற ஆர்வத்தைக் கூட்டிக் கூட்டிக் கூட்டி
2.அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் பெருக்கி
3.மணத்தால் நுகர்ந்திடும் ஆற்றல் பெற்றவர் போகர்.

நவக்கோள்கள் அது வெளிப்படுத்தும் உணர்வுகள் பூமியிலே படர்ந்திருக்கும் பொழுது “பாஷாணக் கற்களாக…” அது விளைந்திருக்கும்.

அப்படிப் பாஷாணக் கற்களாக விளைந்ததைத் தனித்துத் தனித்து எடுத்து இந்த நவக்கோளின் உண்மையை அறிந்து நவபாஷாணத்தால் ஒரு சிலையை உருவாக்கினார்.

27 நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதி அது ஒளி வீசும் உணர்வுகளையும் இந்த நவபாஷாணத்திற்குள் அதைப் பதியச் செய்தார்.

அந்த உணர்வின் இயக்கத்தைக் கொண்டு எந்தெந்தக் குணத்தில் எந்தெந்தக் கோள்களின் சத்து எதெனெதன் நிலைகளில் இருக்கிறது என்ற நிலையை அந்த நவபாஷாணத்திற்குள் பாய்ச்சினார்.

புழுவிலிருந்து மனிதனாக வந்த நிலையில் பலவிதமான உணர்வுகளை… பல விதமான உணவுகளை… தான் உட்கொண்டு அதனைதன் உணர்வு கொண்டு எண்ணங்கள் உருவாகி… அதன் வழியில் வளர்ச்சி பெற்ற உண்மையை… அறிந்து கொண்டவன் போகன்.

1.ஒவ்வொரு தாவர இனச்சத்தின் தன்மைகளிலும் மனிதனை உருவாக்கக் காரணமாக இருந்த
2.நஞ்சை வென்றிட்ட… நஞ்சை வென்றிடும்.. அந்த உணர்வின் சத்துக்கள்
3,புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் இருக்கும்
4.அது நாளுக்கு நாள் விஷங்களை மாற்றி… மாற்றி… மாற்றி…
5.விஷத்தை மாற்றிடும் சக்தி பெற்ற பின் தான் மனிதனாக உருவாக்கியது என்பதை உணர்ந்து
6.மனிதனுக்கு மூலமாக இருந்த விஷத்தை வென்றிடும் தாவர இனச் சத்தின் தன்மைகளையும்
7.அந்தச் சிலையில் சாரணையாக ஏற்றினான் (நவக்கோள்கள் + 27 நட்சத்திரங்கள் + தாவர இன சத்துக்கள்).

விஷம் கொண்ட மற்ற விஷ ஜெந்துக்கள் மிருகங்கள் மோப்பத்தால் நுகர்ந்தறிந்து தங்களைக் கொன்று புசித்திடாமல் இருப்பதற்காக வேண்டி அக்காலங்களில் அகஸ்தியனின் தாய் தந்தையர்
1.பல விதமான மூலிகைகளைத் தான் படுத்திருக்கும் பக்கம் பரப்பி வைக்கின்றார்கள்…
2.அரைத்து உடலிலும் பூசிக் கொள்கிறார்கள்.
3.அந்த மூலிகைகளின் மணத்தைக் கண்டு அந்த உயிரினங்கள் விலகிச் சென்றுவிடுகின்றன.

அத்தகைய மணங்களை அகஸ்தியனின் தாய் நுகர்ந்ததனால் அந்தத் தாயின் கருவிலிருந்த அகஸ்தியன் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் ஆற்றலின் சக்திகள் விளைந்தது.

27 நட்சத்திரங்களின் உணர்வுகளும் கடும் நஞ்சு கொண்டது. நட்சத்திரங்களிலிருந்து வரும் கதிரியக்கங்கள் மின்னலாகத் தாக்கும் பொழுது மற்றொன்றை ஊடுருவி வீழ்த்திவிடும். அத்தகைய வீரிய சக்தி கொண்டது தான் நட்சத்திரங்கள்.

தாய் கருவில் இருக்கும் பொழுது… அகஸ்தியனின் சந்தர்ப்பம் அதனை எல்லாம் அடக்கித் தனக்குள் அணுத் தன்மையாக மாற்றிக் கொண்டது… மாறியது….! அந்த அகஸ்தியன் தான் இன்றும் அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக உள்ளான்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியின் துணை கொண்டு அகஸ்தியனுக்குப் பின் இரண்டாவது… இந்த போகன் 5000 ஆண்டுகளுக்கு முன் அறிந்துணர்ந்தான்.

நம் பிரபஞ்சமும் கோள்களும் நட்சத்திரங்களும் எப்படி உருவானது…? என்று அகஸ்தியன் கண்ட உணர்வை அவனும் தனக்குள் கண்டுணர்ந்து நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றான்.

1.27 நட்சத்திரங்களின் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அந்த மின் கதிர்கள் நவபாஷாணத்திற்குள் ஊடுருவி
2.அதன் வழி கொண்டு இந்த 27 நட்சத்திரங்களையும் ஒருங்கிணைத்து
3.அந்த உணர்வின் தன்மை தனக்குள் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற ஒரு சிலையை “முருகன் சிலையாக…” உருவாக்கினான் போகன்.

அதாவது
1.ஆறாவது அறிவின் நிலைகளை “முருகா…!” என்று அறிவின் சிறப்பாகக் காட்டி
2.நாம் மனிதனாக எப்படி வந்தோம்…?
3.மனிதனாக ஆன பின் இத்தனை அறிவும் நாம் எப்படிச் செய்ய முடிந்தது…? என்பதை அவன் கண்டுணர்ந்து
4.நமக்கெலாம் தெரியப்படுத்தினான்…. அந்தப் போகன்.

ஒவ்வொரு பகுதி மக்களும் அந்த உணர்வுகளை அதை எப்படிப் பெறுகின்றனர் என்ற நிலையை அறிவதற்காக வேண்டி இந்தப் பூமி முழுவதற்கும் ககன மார்க்கமாகச் சென்று அறியும் சக்தி பெற்றான்.

அந்த அறிவின் சக்தி பெற்ற நிலையில் இந்த நவபாஷாணச் சிலையை உருவாக்கி…
1.அதன் வழியில் இன்றைக்கு நாம் எல்லாம் வழிபடும் நிலையாக
2.ஆறாவது அறிவின் பெருமையை சிலை ரூபமாக வெளிப்படுத்தியது போகன் தான்..!

Leave a Reply