துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாரதனாக்கி நண்பனாக்கிடல் வேண்டும்

Narad muni rishi

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாரதனாக்கி நண்பனாக்கிடல் வேண்டும்

 

இப்போது ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வைப் பார்க்கின்றோம்.
1.அவன் மீது இரக்கப்படுகின்றோம்… பாசமாக இருக்கின்றோம்.
2.உனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அழுகின்றோம்
3.அப்பொழுது அந்த வேதனை நமக்குள் உருவாகிறது.

ஆனால் அந்த நேரத்தில் ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து கொண்டால் நாரதன். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகரப்படும்போது இங்கே நாரதன் கலகப்பிரியன் ஆகின்றான்.

நாரதன் என்ன செய்கின்றான்…?

1.அவன் மேல் நீ பாசம் வைத்து இருக்கின்றாய்
2.அதற்கு மாறாக நீ இந்த நிலையில் நீ நட…
3.அவன் நலமாக வேண்டும்… உடல் நலமாக வேண்டும் என்று நம்மை எண்ணச் சொல்கின்றான்…!

அப்பொழுது அவனுக்கு வேதனைப்படும் அந்த எண்ணம் வருகின்றதா…? ஆக அந்த நல்ல எண்ணம் வருவதற்காக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற வேண்டும் என்று இங்கே சொல்லியிருந்தான்.

ஏனென்றால் பிடிவாதமாக நாம் என்ன சொல்கிறோம்…?
1.இவ்வளவு கஷ்டப்படுகின்றான்… நான் எப்படிப் பேசாமல் இருக்கின்றது…!
2.அது எப்படி அழுகாமல் இருக்கின்றது…
3.நான் வேதனைப்படாமல் எப்படி இருப்பது…? என்கிறோம்.

ஆனால் அந்த நாரதனோ கலகப்பிரியன். கலகமோ நன்மையில் முடியும்.
1.அந்த உணர்வின் தீமையை நீ நுகராதே…
2.அந்த அருள் ஒளி பெற வேண்டும்…
3.அவன் நலம் பெற வேண்டும்… என்ற உணர்வினை நீ சொல்லு என்று அவன் சொல்லப்படும் பொழுது
4.இந்த உணர்வின் தன்மையை நாம் உணர்வாக நுகரப்படும்போது அந்த உயர்ந்த எண்ணங்கள் வருகின்றது.

விஷ்ணுவிடத்தில் (உயிர்) அதைச் சொல்லப்படும்போது அதை அவன் என்ன செய்கின்றான்…? உருவாக்குகின்றான். அவன் வரம் கொடுத்து விடுகின்றான்.

வரம் கொடுத்த பின் உடலுக்குள் செல்லும் போது பிரம்மமாகின்றது. பிரம்மமாகும்போது இந்த உடலான சிவனுக்குள் எப்படி ஐக்கியமாகின்றது என்ற நிலையைத் தான் இங்கே தெளிவாக கொடுக்கின்றார்கள்.

ஆனால் இதனுடைய விளக்கத்தை எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லை. நாம் புரிந்து கொள்வதற்கும் வழியில்லை.

இன்றைய வழக்கத்தில் என்ன சொல்கிறோம்…?
1.ஒருத்தருக்கொருத்தர் நீ “நாரதர் வேலை பார்க்கின்றாய்…!” என்று தான் சொல்கின்றோம்.
2.அங்கே போய் மூட்டிவிடுகின்றான்… இங்கே கோள் மூட்டிவிடுகின்றான்… இப்படிச் செய்கின்றான்…! என்று சொல்லுவோம்.

நாரதனை நாம் அசுத்தப்படுத்துகின்றோம். ஏனென்றால் நாரதன் என்பது யார்…? அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள். அதை நாம் எடுத்துக் கொள்ளும்போது இந்தப் பகைமை என்ற உணர்வு வராதபடி தடுக்கின்றது.

ரிஷியின் மகன் நாரதன். நாராயணனின் அபிமான புத்திரன். உயிரான விஷ்ணுவிடம் வருகின்றான்… இதே உணர்ச்சிகள்… உருவாகும் பிரம்மனிடம் வருகின்றான்… இங்கே ஈஸ்வரனுடன் வருகின்றான்.

சித்திரபுத்திரன் – கண் கொண்டு பார்த்த உணர்வின் தன்மையை அங்கே வந்து நாரதன் என்ன செய்கின்றான்…? உருவாக்குகின்ற சித்திர புத்திரனிடம் சென்று நீ இந்தக் கணக்கை மாற்றிவிடு…! என்று சொல்கிறான்.
1.தீமையான உணர்வின் தன்மைகளை இங்கே தடுத்து நிறுத்தும்போது
2.அந்தக் கணக்கு அதாவது தீமையின் நிலை வளர்வது ஒன்று குறைகின்றது.

இதைப்போல உணர்ச்சிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் சென்று உடலுக்குள் இருக்கும் இந்திரலோகத்தைச் சீராக அமைக்கின்றான். ஏனென்றால்…
1.நம் உடலுக்குள் அது புகுந்து
2.ஒவ்வொரு உணர்விலும் இந்த உணர்ச்சிகளை எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்குத்தான்
2.நாரதன் சிவனிடம் போகின்றான்… பிரம்மனிடம் செல்கின்றான்…
3.இந்திரலோகத்திற்குச் செல்கின்றான்… இந்திரனிடம் சொல்கின்றான்…
4.ஒவ்வொருவரிடத்திலும் சென்று இப்படி அந்தத் தீமையான உணர்வுகளை மாற்றியமைக்கும் சக்தி கொண்டு
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் தீமைகளை அகற்றி
6.எப்படித் தீமைகள் புகாது பாதுகாக்கின்றது…? என்ற அந்த நிலையைத் தான் இங்கே இப்படித் தெளிவாக்குகின்றனர்.

சூரியன் (காந்த சக்திகள்) இந்த உலகில் எதை எதைக் கவருகின்றதோ அதன் அறிவாக செடி கொடியோ மிருகங்களோ மற்ற உணர்வுகளோ அதற்கெல்லாம் அதே இனச் சத்தைக் கொடுத்து அவன் நாராயணனாக இயக்குகின்றான்.

ஆனால் தனித்தன்மை கொண்ட உணர்வுகள் நஞ்சினை வென்று உணர்வின் தன்மை உருவாக்கியது
1.ரிஷியின் மகன் நாரதன்… தீமைகளை அகற்றக்கூடிய வல்லமை பெற்றவன்
2.சூரியன் அந்தச் சக்திகளைக் கவர்ந்து கொண்டால் நாராயணனின் அபிமானப் புத்திரனாகிறது
3.அதை நுகர்வோர் அவர்தம் வாழ்க்கையில் வந்த இருளை நீக்கி
4.அந்த மனித உடலுக்குள் ஒளி என்ற உணர்வை ஊட்டும் சக்தி பெற்றவன் நாரதன்…! என்பதைத் தான்
5.இப்படியெல்லாம் காவியங்கள் மூலம் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது,

அதை நாம் புரிந்து கொண்டோமா…? என்றால் இல்லை…!

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை நாம் பெறுவோம் என்றால் அது பேரொளியாக நம்மை மாற்றும்.
1.நம் உயிரின் துணை கொண்டு
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உணர்வுகளிலும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செருகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
4.நான் துருவ தியானத்தில் காலையில் உட்கார்ந்தேன்…! என்று சொல்லி அந்தப் பெருமிதம் கொள்ளக் கூடாது
5.நம் வாழ்க்கையையே தியானம் ஆக்க வேண்டும்.

நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றோமோ அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அதைத் தியானித்து நம் உடலுக்குள் பெருக்குதல் வேண்டும்.

தீமைகள் நமது உடலுக்குள் புகாது தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்…! துருவ நட்சத்திரத்தின் ஒளி நமக்குள் பெருகி அதனின் சேமிப்பாக நம் உயிரான்மா ஒளியாக மாறும்.

Leave a Reply