சர்க்கரை இரத்தக் கொதிப்பு டி.பி. கேன்சர் போன்ற வியாதிகள் மனிதனுக்கு எப்படி வருகின்றன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Meditation medication

சர்க்கரை இரத்தக் கொதிப்பு டி.பி. கேன்சர் போன்ற வியாதிகள் மனிதனுக்கு எப்படி வருகின்றன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எதனையும் மாற்றியமைக்கும் சக்தி மனிதனுக்குண்டு.

சர்க்கரை வியாதி மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது…? சர்க்கரை வியாதியின் குண நலன் என்ன…?

சிறு வயது முதற் கொண்டு ஒரு நிலையான வாழ்க்கை வாழ்ந்துள்ள நிலையில்
1.அதிகமான சந்தோஷங்கள் ஏற்பட்ட காலங்களில் – சந்தோஷ அலையின் சுழற்சி வாழ்க்கையில்
2.அதன் தொடர் அலையில் ஏற்படும் சலிப்பு குணம் உந்தப்படுபவனின்
3.உடல் அமிலத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாசத்தால்
4.சர்க்கரைச் சத்து என்ற அமிலச் சுரப்பி உடலுக்கு வேண்டிய இரத்தச் சக்தியிலிருந்து
5.அதிகமான சத்து நிலைகள் சிறுநீரில் கலந்து விடுகின்றன.

மருத்துவத்தில் சில நிலைகளை (INSULIN) இந்த உடலில் செலுத்தி மருந்துகளை அந்தந்தக் காலங்களுக்கு உணவுடனும் மருந்துடன் கொடுத்துச் சமப்படுத்தலாமே தவிர பூரண குணம் கிடைப்பதில்லை.

வியாதியில் சிக்குண்ட மனித ஆத்மாவானது “ஆத்ம தியானம்” என்ற குண நிலையைச் சமமான நிலைப்படுத்தி நற்குணங்களின் ஈர்ப்பில் தன் எண்ணத்தைச் செலுத்தித் தான் எடுக்கும் ஞானத்தால் மெய் ஞானிகளின் உயர் அலையின் தொடரை உடலிலே சுவாசிக்கும் தியானத்தை மேற் கொண்டால் எந்த வியாதியையும் மாற்றி அமைக்கலாம்.

1.தான் வாழ்ந்த எண்ணச் சுழற்சியில் இருந்து கொண்டே
2.உண்ணும் உணவாலும் மருந்தாலும் மட்டும் எந்த வியாதியையும்
3.எந்த மகான் வந்தாலும்…
4.அகிலத்தையே ஆட்டுவித்த ஆட்டுவிக்கும் ஆதிசக்தியின் தொடர்பிருந்தாலும் நலம் காண முடியாது…!
5.உணர்வின் எண்ணத்தைச் சமப்படுத்தும் செயல் எண்ணம் இருந்தால் தான்
6.மனித ஆத்மாவின் உடல் பிணியும் தீரும்… உயர் ஞானமும் வளருமப்பா…!

ஏனென்றால் உணர்வால் எடுக்கும் எண்ணத்தைக் கொண்ட வியாதிகள் தானப்பா இந்த மனித உடலில் ஏற்படும் எல்லா வியாதிகளும்.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது…?

உணர்வின் எண்ணத்தை கோபத்தின் அலையில் எடுக்கும் சுவாசம் கொண்டு கோபத்தின் தன்மையை அதே ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் எடுத்து அதை வெளிப்படுத்திக் கோப அலையில் வாழ்பவனுக்கு
1.இரத்த நாளங்களின் துடிப்பு நிலை அதிகமாகி
2.உஷ்ணமான கனம் கொண்ட ஈர்ப்பின் சுவாசத்தால்
3.உணர்வின் கொதிப்பே இரத்தக் கொதிப்பாகின்றது.

சஞ்சலம் கொண்ட சலிப்புக் குணத்தின் ஈர்ப்பின் உணர்வின் எண்ணச் சுவாசம் தான் புற்று நோய்க்கும் எலும்புருக்கி நோய்க்கும் வித்தப்பா…!

காமாலையும் உப்புச் சத்தும் எப்படிக் கூடுகின்றன…?

தன் உடலின் உறுப்புக்களின் சுரப்பி நிலைகளுக்கொப்ப அவன் செய்யும் வேலைகளும் அவ்வுடல் நிலையின் சக்திக்கு மேல் உடல் உழைப்பும் உறங்கும் கால நிலையும் மாற்றியமைக்கப்பட்டால் இத்தகைய வியாதிகள் வரும்.

ஏனென்றால் கடினமான உழைப்பால் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வையிலிருந்து உடலிலுள்ள அமில உப்புக்கள் வெளிப்பட்டு விடுகிறது.

அந்த நிலையில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த ஆகாரங்கள் உண்ணும் பொழுது அந்த உடலின் தன்மையில் அவை ஏற்கப்படாமல் நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது.

ஆக… இரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய சில அவயங்களில் இவன் உண்ணும் உணவால் உடலில் ஏற்கனவே இருந்த சத்துக்கள் வெளிப்பட்டவுடன்
1.இந்தக் கனமான கொழுப்பு நிலை கொண்ட ஆகாரங்கள்
2.செயல்படாத நிலையில் தான் இம்மாதிரி வியாதிகள் வருகின்றன.

கோபத்தைத் தன்னுள் அடக்கி அடக்கி… பிறர் மத்தியில் தன்னைச் சாந்தமானவனாகக் காட்டுபவனின் உணர்வின் எண்ணம் கொண்டவனுக்கு… குடல் புண்களும் (அல்சர்) சில மூல வியாதிகளும் வருகிறதப்பா…!

கோபத்தைக் கட்டுப்படுத்துவதாக… அவன் எண்ணம் வெளியில் தெரியாத இவனது குணத்தின் செயலை… உள் அடக்கிக் கொள்வதால் குடல் புண் நோய்கள் எல்லாம் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு வியாதியும் ஏற்படுவது இந்தத் தொடர்ச்சியில் தான்.

அதே சமயத்தில்…
1.இவ்வலைத் தொடர் கொண்ட ஆவிகளின் தொடர்ச்சியும்
2.பலவீனமான உணர்வுடன் நாம் எடுக்கும் சுவாசத்தால் பலவீனம் கொண்ட தொடர்பலையின் ஈர்ப்பும்
3.அந்தக் குணம் கொண்ட ஆவிகளின் தொடரும் நம்முள் எறிக் கொள்கின்றன.

நற்குணங்களின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் இந்தக் குணமுண்டு. நாம் எடுக்கும் எந்தத் தொடருக்கும் இந்தக் குணமுண்டு.

நல்லவையானாலும்… தீயவையானாலும்…
1.இந்தச் சுவாசத்தால் எடுக்கும் உணர்வின் எண்ணச் சுழற்சியில் தான் நாம் வாழ்கின்றோம்.
2.எண்ணத்தின் உணர்வின் குண நிலைக்கொப்ப ஈர்ப்புடனே நாம் சுழல்கிறோம்.

நம் சுவாச நிலையை ஞானிகளுடன் தொடர் கொண்டு உயர்வாக்கி விட்டால் இந்த வாழ்க்கையில் வரும் இடரினை அகற்றிடும் சக்தி பெற்று நோய் வராது தடுத்து அந்தச் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் ஐக்கியமாகலாம்.

Leave a Reply