உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா விண் சென்ற “நடந்த நிகழ்ச்சி”

soul propulsion

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா விண் சென்ற “நடந்த நிகழ்ச்சி”

 

ஒரு சமயம் மாயவரம் என்ற ஊரில் டாக்டர் ஒருவர் இருந்தார் அவருடைய தாயாருக்கு 80 வயது இருக்கும். கணவர் உடலுடன் இல்லை.

ஆனால் கணவர் உடலை விட்டுச் சென்றதும் அந்த அம்மா என்ன செய்தது…? “என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார்…!” (யாரும் சொல்லித் தரவில்லை) என்று அந்த எண்ணத்திலேயே இருக்கிறது.

பொட்டையும் தாலியையும் நீக்கும்படி மற்றவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
1.என் வீட்டுக்காரர் என்னுடன் தான் இருக்கிறார்..
2.நீங்கள் ஏன் அதை நீக்கச் சொல்கிறீர்கள்…? என்று ஒரு போடு போட்டது.

இருந்தாலும் வெளியில் போனால் எல்லோரும் இதையே கேட்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்கின்றது.

அப்பொழுது இந்த மாதிரி ஒரு சாமி (ஞானகுரு) வருகிறார்… அவரைப் பார்த்து… என்ன ஏது..? என்ற விவரங்கள் கேட்டால் நல்லது…! என்ற எண்ணத்தில் இருந்தது, எனென்றால் நம்முடைய ஞான உபதேசப் புத்தகங்களை ஏற்கனவே அந்த அம்மா படித்திருக்கின்றது.

அந்தச் சாமியை நான் பார்க்க வேண்டும்…! என்று வீட்டை விட்டு வெளியிலே வரவில்லை. சந்தர்ப்பத்தில் நான் (ஞானகுரு) அந்த வீட்டிற்குப் போனேன்.

விபரத்தை எல்லாம் சொன்னவுடனே… எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ அப்படி ஒரு எண்ணம் வந்துவிட்டது. ஆனாலும் சாஸ்திரங்களைப் படிக்கப்படும் பொழுது எனக்கு உள் உணர்வு ஒன்று தோன்றியது என்று அந்த அம்மா என்னிடம் சொல்கிறது.

கணவனுடன் ஒன்று சேர்ந்து வாழ்கிறோம். கணவனும் மனைவியும் இரண்டு பேரும் ஒன்றாகிவிட்டால்
1.மனைவி இறந்ததும் கணவன் இறந்துவிடுகின்றான்..
2.அல்லது கணவன் இறந்ததும் மனைவி இறந்துவிடுகின்றாள்..
3.இப்படி இரண்டு பேரும் ஒன்று சேர்த்துப் போனவுடன் ஒரே உணர்வுடன் போகிறது
4.இது எங்கே போகிறது…? என்ற விளக்கம் எல்லாம் நான் (ஞானகுரு) கொடுத்தேன்.

எனக்கு இந்த மாதிரியான எண்ணம் எப்படி வந்தது…? என்று என்னிடம் கெட்டது. தெரிந்தோ தெரியாமலோ தான் நான் இப்படிச் செய்கிறேன் என்று அந்த அம்மா சொல்கிறது.

1.உங்கள் தாயின் கருவில் நீங்கள் சிசுவாக இருக்கப்படும் பொழுது
2.இதைப் பற்றிய உணர்வுகளை நீங்கள் கேட்டதனால் உங்கள் உடலில் விளைந்திருக்கின்றது (பூர்வ புண்ணியம்)
3.அந்த உணர்வு தான் உங்களை இயக்கியிருக்கிறது…! என்று சொன்னேன்.

“கணவர் என்னுடனே இருக்கிறார்” என்ற நிலைகளில் அவர்களை அறியாதபடி சாங்கியத்திற்கே அந்த அம்மா எதுவும் ஒத்துக் கொள்ளவில்லை… இறந்தவர்களுக்குச் செய்யும் சாங்கியங்களையே செய்யவிடவில்லை.

இருந்தாலும் அந்த அம்மாவின் கணவர் ஆன்மா வேறு எங்கேயும் போகவில்லை. எங்கேயும் போகாதபடி அந்த அம்மா உடலைச் சுற்றிக் கொண்டே தான் இருக்கிறது.

அதை நீ இப்பொழுது பார்க்கலாம் அம்மா…! என்றேன்
1.பார்க்கலாம் என்று சொன்னவுடன் தன் கணவரின் உணர்வுகள் தனக்குள் இருந்து
2.தன்னுடன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ச்சி இருந்ததோ அதை எல்லாம் கண்ணில் பார்க்கின்றது.

அந்த ஆன்மா உடலுக்குள் செல்லவில்லை. ஆசை கொண்டு அந்த ஆன்மா எப்படிச் சுற்றிக் கொண்டிருக்கிறது…? என்ற உண்மையை உணர்கின்றார்.

அந்த அம்மாவின் பையன் அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர். இரண்டு பேருமே இதைப் பார்க்கின்றார்கள்,
1.இந்த உண்மையை இன்று தான் என்னால் உணர முடிந்தது
2.என் தாயின் நிலைகளில் எனக்கு அந்த அருள் கிடைக்க வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்று அவரும் எண்ணுகின்றார்.

இந்த உண்மையின் உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதிகாலையில் எடுத்து நீங்கள் வளர்த்துக் கொண்டு வாருங்கள்.

அந்த வலு கொண்டு உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவை நீங்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள். யாம் சொன்ன முறைபப்டி அவர்கள் இருவரும் செய்த பின் அங்கே ஒளியின் சரீரம் பெறுகின்றார்.

இதற்கு முன்னாடி ஒரு பெரிய சாதுவைப் பார்த்தாராம். சில உபதேசங்களை அவர் கொடுத்தாராம். இராமாயண மகாபாரதக் காவியங்களைப் பற்றி சொல்லி இருக்கின்றார்.
1.இருந்தாலும் சாங்கியம் எதுவும் செய்யாதே..! என்று மட்டும் அவர் சொன்னார்
2.பாக்கி எனக்கு விவரங்களைச் சொல்லவில்லை,

ஆகவே என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தது, தாலி எனக்குள் இருந்தாலும் அவருடன் ஒன்றி “முழு மாங்கல்யக்காரியாக நான் போய்ச் சேர வேண்டும்…!” என்ற எண்ணத்தில் தான் செய்து கொண்டிருந்தேன்.

சில இடங்களில் சில உண்மைகள் அறிந்தோ அறியாமலோ இப்படி இருக்கின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்றரை இலட்சம் பேரைச் சந்தித்ததில்
1.எப்படி எல்லாம் இந்த உலகம் இயக்குகிறது…?
2.மனிதனான பின் இனி நமக்கு என்ன இருக்கின்றது…? என்ற நிலையில்
3.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற இந்த உறுதியை வைத்துக் கொள்ள வேண்டும்.
4.நாம் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைகிறோம்.

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

Leave a Reply