“இக்காலத்தில் பிறந்த நிலை… எக்காலத்தில் பெற்ற நிலையோ…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

human family tree

“இக்காலத்தில் பிறந்த நிலை… எக்காலத்தில் பெற்ற நிலையோ…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

முந்தைய பாடங்களில் “அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப…” உடலில் அமிலங்கள் வளர்கின்றன என்று உணர்த்தியுள்ளேன்.

இவ்வெண்ண நிலையில்
1.அதிகப்படியான குண நிலை கொண்டு அதே குண எண்ணத்தைக் கொண்ட உடலை விட்டுப் பிரிந்த ஜீவ ஆத்மாக்களும்
2.இன்னும் தன் மகன்… தன் மகள்… என்ற குடும்பப் பாசத்தில் இருந்து பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிராத்மாக்களும்…
3.முந்தைய காலங்களில் பல ஜென்மங்களாக விட்ட குறையிலிருக்கும் உயிராத்மாக்களும்
4.ஒரு தாயின் கருவில் தான் பிறக்க வேண்டும் என்ற பிறப்புத் தொடரில்
5.ஆண் பெண் (உடலுடன் இருப்பவர்கள்) இரு பாலரின் பருவ மாற்ற உடல் வளர்ச்சி ஏற்படும் காலம் தொட்டே
6.அவர்களின் சுவாச அலையுடன் “இவ்வாவிகளின் ஈர்ப்பு” அவ்வுடலுடன் ஏறிக் கொள்கிறது.

“பருவம் எய்திய பெண்களை” நம் முன்னோர்கள் அதிகமாக வெளியில் செல்லாமல் வைத்திருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்…!

ஏனென்றால்… “தன் மண வாழ்க்கையில் தோல்வி கண்ட ஆவிகள்” தன் எண்ணத்தை ஈடேற்ற அதே வயதுக்குகந்த அப்பருவ நிலை கொண்டோரின் உடலில் ஏறிக் கொள்வதற்குச் “சந்தர்ப்பம்” எதிர் நோக்கிப் பல நிலைகளைச் செய்கிறது.

இதன் சக்தியின் நிலை சூரியன் ஒளி அலை அதிகமாகப் பாயும் நேரத்தைக் கொண்டு உச்சி வெயிலில்… இதன் செயல் நடக்கும்.

அதுவும் அல்லாமல் இந்த ஆவிகள் மற்ற இடங்களில் சுற்றிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் நீர் நிலைகள் உள்ள இடங்களில் தான் அதனின் சுழற்சி அதிகப்பட்டிருக்கும்.

“ஜீவனுக்கு வரவேண்டும்…!” என்ற ஆசையிருப்பதனால் தன் உயிரணுவுடன் கூடிய ஆத்ம நிலை சிதறிவிடாமல் இருக்க… நீரிலிருந்து சூரிய ஒளி பட்டு அதிகமாக அவ்வொளி அலை உள்ள இடங்களில் இருந்தால் இந்த ஆவிகளுக்கு அதனுடைய ஆத்ம அமிலம் சிதறுபடாமல் காத்திருக்க முடியும்.
1.முன்னோர்களை நாம் வணங்க…
2.ஜீவ நதி உள்ள இடத்திற்கு ஏன் செல்கிறோம்…? என்பதன் பொருள் புரிந்ததா…?

இப்படிப் பலவாக உள்ள ஆத்ம உயிரும் (ஆவிகள்) ஜீவ உடல் கொண்ட ஆத்ம உயிருமான மனிதர்களின் நிலையும் கலந்து வாழ்வதனால் “தன் பிறப்பின் ஆசைக்காக…” பிறப்பெடுக்கப் பல உடல்களில் முன் கூட்டியே இந்த ஆவி ஆத்மாக்கள் ஏறிக் கொள்கின்றன.

ஏறிக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் அந்த உடலிலிருந்து தன் சாதகக நிலைக்காக அந்த மனிதனின் எண்ணத்தையே இந்த ஆவி ஆத்மாக்கள் இயக்கிச் செயல் புரிகின்றன.

இப்படி உள்ள ஆவி ஆத்மாக்கள் தான் பிறப்பில் வரும் நிலையில் சிலருக்கு ஒன்றுக்கு இரண்டாகவும் பலவாகவும் கருவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் மிருகத்தின் சுவாசத்திற்கு மிருக உடலில் பல உயிராத்மாக்கள் ஏறிவிடுவதனால் ஒரே சூலில் பல குட்டிகளை ஈணுகிறது.

அதே சமயத்தில் மிருகங்களிலேயே ஒரு நிலை கொண்ட சாந்த குணமுள்ள சில பிராணிகளுக்கு ஒரு சூலில் ஒரு கன்று ஈணும் நிலை வழி உள்ளது.

இந்தப் பிறப்பில் நடைபெறும் இச்செயல்களும்… “எண்ணத்திலிருந்து தான் வழித் தொடர் பெற்று…!” அதனதன் இன நிலையின் அமில குணம் தொட்டுப் பிறப்பிற்கு வருகின்றது.

ஆனால் இதன் தன்மையில் உடலில் ஏறிய அத்தனை உயிராத்மாக்களுமே கடைசியில் பிறப்பிற்கு வர முடியாமல்
1.அந்த உடலிலிருந்து ஆவி பிரிந்த பிறகு அதற்கும் விடுதலை கிடைத்து
2.மீண்டும் தன் பிறப்புக்குகந்த இடம் எடுத்து வருவதற்குள்
3.”பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன…” இந்த உடலை விட்ட ஆவி ஆத்மாக்களுக்கு…!

இந்த ஆவி ஆத்மாக்களின் வழித் தொடரில் தான் பிறப்பு வருகிறதா என்ற வினா எழும்பலாம். ஒவ்வொன்றின் நிலை மனிதனிலேயே பலவாக வருகின்றது.

ஆகவே… இப்பொழுது உடலுடன் இருக்கும் நாம்
1.இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி
2.இதிலிருந்தே மெய் ஒளி காணும் மெய் ஒளி பெறும் நிலைக்கு நம் எண்ணத்தை உயர்த்தி
3.சித்தர்களுடனும் ஞானிகளுடன் இணைந்து வாழும் உன்னத நிலையைப் பெறுதல் வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply