மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் “ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு…!”

Divine Light body

மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் “ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு…!”

 

நல்லதை எண்ணினால் நல்லது நடக்கும். ஆனால் தீமையின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அந்த நன்மைகள் வராது.
1.ஆகவே சொர்க்கவாசலை விட்டு நரக வாசலுக்கே சென்றுவிடும்.
2.நரகலோகத்திற்குச் சென்றால் மீண்டும் மனிதனாகப் பிறக்க எத்தனை காலமாகுமோ …? என்பதைத்தான்
3.ஒரு பரமபதப் படத்தை வைத்துக் காட்டுகின்றனர் ஞானிகள்
4.அதாவது சொர்க்கவாசல் என்று பரமபதத்தைக் காட்டி விளையாட்டு ரூபமாக நமக்கு உணர்த்துகின்றனர் ஞானிகள்.

பன்றி நாய் நரி நண்டு தேள் இவைகள் எல்லாம் அந்தப் படத்தில் கீழே காட்டப்பட்டிருக்கும். தாயங்களை உருட்டுவார்கள். அப்படி உருட்டும் பொழுது இதன் வழி கொண்டு சென்றால் அடுத்து ஒரு சிறிய ஏணி இருக்கும்… பெரிய ஏணியும் இருக்கும்.

சந்தர்ப்பத்தால் சிறிய ஏணியில் ஏறியபின் அடுத்து பல கட்டங்களைத் தாண்டிச் செல்கிறது. அங்கே சென்ற பின் அடுத்து அதன் அருகில்… “முகப்பிலேயே ஒரு விஷப் பாம்பு இருக்கின்றது…!”

தாயக்கட்டையை உருட்டினால் தாயம் விழுந்தால் கீழே வந்து விடுகின்றது. நம் வாழ்க்கையில் எதனின் உணர்வின் தன்மையைப் பெறுகின்றோமோ அது நம்மைக் கீழே கொண்டு வந்துவிடுகின்றது.

அதாவது ஒரு மனிதன் வேதனைப்படும் நிலைகளில் செயல்படுகின்றான் என்றால் அதை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால்
1.நம் நல்ல எண்ணங்களை இயக்கிக் கொண்டிருக்கும் விஷம்
2.வேகமாகக் கொண்டு வந்து நம்மைக் கீழே இறக்கிவிடும் என்பதைத்தான்
3.அங்கே உதாரணமாகக் காட்டுகின்றார்கள் பாம்பைப் போட்டு..!

சொர்க்க வாசல் என்று சொல்லும் வைகுண்ட ஏகாதசி அன்று அந்த ஏகாந்த நிலை பெறச் செய்யும் அருள் ஞானத்தை நாம் பெற
1.இந்த வாழ்க்கையில் எத்தனை தடைகள் வருகின்றது…?
2.மீண்டும் மீண்டும் நாம் எப்படித் தேய்பிறையாகின்றோம்…?
3.அப்படி வரும் தடைகளிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும்..?

இதைத் தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்…!

அதை எல்லாம் தாண்டி அடுத்து மேலே வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி வந்துவிடுகிறது. “பரமபதம் ஏறப் போகின்றோம்…” என்றாலும் கடைசியில் அங்கே ஒரு பெரிய பாம்பு இருக்கும்.

1.மேலே வந்த பின் நான் வந்துவிட்டேன் என்று எண்ணுவார்கள்…!
2.ஒரு தாயம் முதலிலே விழுந்து விட்டால் நேரடியாகக் கீழே கொண்டு போகும்.
3.அதனுடைய முடிவு எங்கே முடிகிறது…?
4.கீழே பன்றியிடம் தான் விடுகின்றது… பன்றியிடம் வாலைப் போட்டுக் காட்டியிருப்பார்கள்.

பல கோடி உணர்வின் தன்மைகள் கொண்டு நாம் சென்றாலும் அதிலிருந்து விடுபடும் வல்லமை உண்டு. ஏனென்றால் இங்கே வந்தால் பன்றி என்ன செய்கிறது..?
1.சாக்கடையை நுகர்ந்து
2.அதற்குள் இருக்கும் தீமைகளைப் பிளந்து
3.நல்ல உணர்வுகளை நுகர்ந்து
4.அந்த நல்ல உணர்வின் வளர்ச்சி பெற்று “மனிதனாக” அது உருவாக்குகின்றது.

ஆகவே நாம் தீமைகளை அகற்றி ஒளியாக்கும் உணர்வின் தன்மைகளை நமக்குள் வளர்த்தல் வேண்டும். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு நாளும் நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வருதல் வேண்டும்.

பல கோடி உணர்வுகளைச் சந்தித்தாலும் அதிலிலுள்ள தீமைகளை நீக்கிவிட்டு அருள் ஒளி பெறும் சக்தியாக நாம் வளர வேண்டும்.
1.இவ்வளவு விஷயங்களையும் அந்தப் பரமபதத்தின் மூலம்
2.அழகாக மனிதனுக்குச் சித்தரித்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

Leave a Reply