பிள்ளையைச் சுமக்கும் தாயைப் போல் ஒளியான அணுக்களை நமக்குள் உருவாக்குவோம்

destiny of humanity

பிள்ளையைச் சுமக்கும் தாயைப் போல் ஒளியான அணுக்களை நமக்குள் உருவாக்குவோம்

இந்த மனித வாழ்க்கையில்
1.நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன..?
2.நாம் தெளிய வேண்டியது என்ன…?
3.நாம் அறிய வேண்டியது என்ன…?
4.நாம் சேர்க்க வேண்டியது என்ன…?

ஏனென்றால் இன்றைய வாழ்க்கை நாளைய சரீரமாக வருகின்றது. முந்தைய செயல் இன்றைய சரீரம்… இன்றைய செயல் நாளைய சரீரம்…!

அப்படி என்றால்… பிறவி இல்லா நிலை… அதாவது ஒளியின் சரீரமாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்…! எல்லோரும் அந்த அருள் ஞானத்தைப் பெறவேண்டும்…! என்று எண்ணுதல் வேண்டும்.

இன்று உடலில் இருக்கும் நோய்கள் எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். ஏன்…?
1.எப்படி இருந்தாலும் இந்த உடல் நிலையாக இருக்கப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது…!
2.பின்பு இந்த உடலுக்காகக் கட்டி ஏன் அழுகின்றீர்கள்..?
3.இந்த உடலை விட்டுவிடுங்கள்..!
4.அந்த… அடுத்த ஒளியின் உடலை உருவாக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

கர்ப்பமான தாயை எண்ணிப் பாருங்கள்…! கர்ப்பமுற்றிருக்கப்படும் பொழுது அந்தத் தாய் எத்தனையோ வேதனைப்படுகின்றது. ஆனால் குழந்தை பிறக்க வேண்டும்…! என்று அதைத்தான் மகிழ்ச்சியாக எண்ணுகிறது. (சொல்வது அர்த்தமாகிறதா..!)

அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது இந்த உடலில் வரும் தன்மைகள் அந்தக் கர்ப்பிணி எப்படி எண்ணுகின்றதோ அதைப் போல்
1.அருள் ஒளியை வளர்க்கின்றேன்…
2.அருள் ஞானத்தைப் பெறப் போகின்றேன்…
3.அருள் வழியை நான் பின்பற்றுவேன்.. என்று
4.இந்த உணர்வை வலுவாக்கி நாம் மகிழ்ச்சி பெறுதல் வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் தாய் தன் குழந்தையின் மீது உள்ள ஆசையில் என்ன செய்கிறது…? ஒவ்வொரு கர்ப்பிணியும் படும் அவஸ்தையைப் பார்க்கலாம்…!
1.உணவு தயார் செய்ய வேண்டும்..
2.கணவனைக் கவனிக்க வேண்டும்… மற்றவர்களையும் பார்க்க வேண்டும்…
3.வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும்…!

அப்பொழுது அந்தக் கர்ப்பிணி என்ன செய்கிறது..? தன் இனமான குழந்தையை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகிறது.

அருள் ஞானிகள் என்ன செய்கின்றார்கள்…? பிள்ளையைச் சுமக்கும் தாய்மையைப் போல் தங்களுக்குள் உயர்ந்த குணத்தை வளர்க்க வேண்டும் என்ற நிலையிலேயே வளர்த்தார்கள்…! இன்று அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்கின்றார்கள்…!

அவர்களைப் போல் நாமும் இருளை அகற்றிடும் உணர்வைப் பெற்று “எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும்…!” என்ற உணர்வை உருவாக்கி விட்டால் நாமும் அவர்கள் அடைந்த நிலையை அடையலாம்.

ஒரு கர்ப்பிணி தன் குழந்தை மேல் பற்று கொண்டு சுமந்து வரும் நிலையில் எத்தனை அவஸ்தை வந்தாலும் கூட அதை எண்ணுவதில்லை. அந்த விஷத்தை எண்ணுவதில்லை. குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற அந்த உணர்வைத் தான் எண்ணுகிறது.

1.அந்தக் கர்ப்பிணியைப் போன்று நாமும் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சுமந்து
2.வாழ்க்கையில் வரும் நஞ்சினை வளர்த்திடாது
3.நாங்கள் அருள் ஒளியில் வளர்கின்றோம்…!
4.அருள் ஒளி எங்களுக்குள் உருவாகின்றது…!
5.அருள் ஞான அணுக்கள் உருவாகின்றது
6.அருள் ஞானக் குழந்தையாக எங்களுக்குள் உருவாகின்றது…! என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் இப்படி உருவானது தான் இந்தத் துருவ நட்சத்திரம்…!

அதாவது ரிஷியின் மகன் நாரதன். ஆக ஒளியின் கருவாக ஒளியின் சரீரமாக உருவாக்கும் தன்மை. ஒவ்வொன்றும் உருவாக்கி வெளிப்படுத்தும் பொழுது சூரியன் தனக்குள் கவர்ந்து வைக்கின்றது. அதை எல்லோராலும் நுகர முடியும்.

மனிதனாக ஆன பின் இந்த உணர்வின் தன்மை கொ\ண்ட பின் இருளை அகற்றும் உணர்வின் தன்மை அது நாரதனாகின்றது.
1.நீ செய்வது தீமை…!
2.இதனுடைய நிலைகள் இப்படிச் செய்ததால் இப்படி ஆனது…! என்று உணர்த்துகிறது.

ஆகவே இந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டினால் தனக்குள் இருக்கும் உணர்வின் உண்மையை உணர்த்தும். அறிவின் தெளிவாக நமக்குள் ஊட்டும். ஏனென்றால் இருளை அகற்றியவர்கள் அந்த மகரிஷிகள்…!

1.அவர்கள் அருள் ஒளியைப் பெருக்கித் தீமை என்ற நிலையிலிருந்து விடுபட்டு
2.உயிருடன் ஒன்றிய உணர்வின் வலிமை கொண்ட நிலைகளாக எண்ணங்களை இணை சேர்த்து
3.பேரருள் பேரொளியாக நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக வேண்டும் என்று
4.எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply