அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நாளும் “புதுப் புது ஞான வித்துக்களாக…” நமக்குள் உருவாக்கும் வழி

let evil go

அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நாளும் “புதுப் புது ஞான வித்துக்களாக…” நமக்குள் உருவாக்கும் வழி

 

பரிணாம வளர்ச்சியில் இன்று நாம் மனிதனாக வளர்ந்திருக்கின்றோம். தீமைகளை நீக்கும் உடலாக நம்மை உருவாக்கியுள்ளது உயிர்.

1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக
2.வாழ்க்கையில் நாம் சுவாசித்த உணர்வுகள் ஒவ்வொன்றும்
3.அதாவது தீமையை நீக்கும் அந்த உணர்வுகள் அனைத்தும் கணங்களுக்கு அதிபதியாகி
4.இன்று மனித உடல் பெற்றுள்ளோம் என்பதை இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசா… கணேசா…! என்று உயிரைக் காட்டுகின்றனர்.

மனிதனாக இந்த உடலை உருவாக்கிய நிலையில் என்னை இயக்குபவனும் நீயே…! இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசா… கணேசா…!
1.உன்னை நான் அறிய முடிகின்றது கார்த்திகேயா
2.என்னை நான் அறிய முடிகின்றது கார்த்திகேயா
3.தீமை என்று அறிய முடிகிறது கார்த்திகேயா…!

அந்தத் தீமையை நீக்கி இந்த உடலில் நஞ்சை நீக்கும் அறிவைக் கொடுத்தாய் ஈஸ்வரா…! என்று உயிரை வணங்கும்படிச் சொன்னார்கள் ஞானிகள்.

நாம் எத்தனை பேர் உயிரை இப்படி வணங்குகிறோம்…? சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…? மனிதனாக உருவாக்கிய உயிர் அது தான்

நம்முடைய கலாச்சாரங்களை ஞானிகள் எவ்வளவு பண்புள்ளதாக வளர்த்துள்ளார்கள்…? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு இந்த உபதேசத்தை கொடுக்கின்றோம்.

நீங்கள் எந்த அளவுக்குக் கூர்மையாகக் கவனிக்கின்றீர்களோ… அந்த அளவுக்கு உங்கள் விலா எலும்புகளில் கூர்மையான நிலைகளில் பதிவாகி விடுகின்றது.

ஒரு வேதனைப்படுவனின் உணர்வை நுகர்ந்து விட்டால் ஈஸ்வரா.. என்று உயிரை உடனே எண்ணி அதைத் தடைப்படுத்திடல் வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் அவன் நன்றாக வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் பொழுது அவனையும் காக்கின்றோம். அதே சமயத்தில் இதே உணர்வுகள் நமக்குள் என்ன செய்கிறது..?

1.நம் உடலுக்குள் அந்த இரண்டாவது தடவை இணைத்தோம் அல்லவா…
2.அவன் நன்றாக வேண்டும்..! என்று எண்ணியது இங்கே வந்துவிடுகின்றது.
3.”நன்றாக வேண்டும்” என்று எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த நாம் சுவாசித்த வேதனையைச் சுற்றி வட்டமிடுகின்றது.

அப்பொழுது இந்தச் சரக்கெல்லாம் சேர்த்தவுடன் என்ன செய்கிறது…? அவனை நினைக்கும் பொழுது நல்லவனாக வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

இல்லை என்றால் “இப்படிச் செய்கிறானே.. அவனுடைய உடலில் இப்படி நோய் இருக்கிறதே…! அவன் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கின்றானே…! என்று நாம் மீண்டும் மீண்டும் எண்ணுவோம்.

ஆனால் முதலில் சொன்ன மாதிரி அதை அப்பொழுதே… அந்தச் செல்களில்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து நாம் பதிவாக்கி விட்டால் இந்த நல்ல நினைவுகள் தான் வரும்.

இல்லாமல் போனால்…
1.அவனை நினைக்கும் பொழுதெல்லாம் நம் உடலில் உள்ள நல்ல உணர்வுகளை மாற்றி
2.அவன் நோயை நமக்குள்ளும் வளர்க்க முடியுமே தவிர அந்த நோயை நீக்க முடியாது.
3.அது தான் வாலி – அதை நமக்குள் வராதபடி எப்படித் தடுப்பது…? என்பதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நர நாராயணன் இரண்யனைப் (தீமையான உணர்வுகளை) பிளந்தான் என்று சொல்வது…!

அந்த நோயாளியைப் பார்த்தவுடனே நம் நல்ல குணங்களை அது கொல்கிறது என்று தெரிகிறது கார்த்திகேயா…! இதைப் போன்ற தீமைகளை எல்லாம் நீக்கியது துருவ நட்சத்திரம். அதை நாம் பெறவேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உடனே அதை உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்.
1.அப்பொழுது அந்த நல்லதுக்குச் சக்தி கொடுத்துவிட்டோம் என்றால்
2.இதை இழுப்பதில்லை கெட்டதை நீக்கிவிடுகிறது.

அடுத்தாற்போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளியின் உடல் முழுவதும் படர வேண்டும்… அவன் உடல் நலமாக வேண்டும்.. அவர்கள் குடும்பத்தில் நல்லது நடக்க வேண்டும்.. அவன் எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய பண்பு வரவேண்டும் என்று சொன்னால் இது நமக்குள் ஆழமாகப் பதிவாகிவிடுகின்றது (RECORD).

1.இப்படி உடனே அதை நமக்குள் மாற்றியமைக்க வேண்டும்.
2.அந்த வேதனையோ நோயோ தீமையோ இங்கே இல்லாதபடி
3.அருள் சக்தியைச் சேர்த்து நாம் புது அணுவாக (வித்தாக) உருவாக்க வேண்டும்.
4.அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது..!

சொல்வது அர்த்தமாகிறதா…?

Leave a Reply