ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேகத்தை நாம் செய்கிறோமா…?

Abishekam - temple

ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேகத்தை நாம் செய்கிறோமா…?

கோவிலுக்குச் செல்பவர்கள் இன்றைய வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்..?

பால் அபிஷேகத்திற்குக் சாசு எல்லாம் கொடுத்து விட்டு என் பையனுக்கு அத்தனை செலவழித்தேனே.. அவன் இப்படி ஆகிவிட்டானே…! என்று வேதனையைத் தான் எண்ணுகிறார்கள்.

அங்கே சாமிக்குச் சந்தனம் அபிசேகம் செய்யும் போது பார்த்தால் இங்கே இவர்களுக்குக் கண்ணில் தண்ணீர் வரும். அழுது கொண்டிருப்பார்கள். ஆக அங்கே குறையைத்தான் எண்ணிச் சொல்கிறார்கள்.

1.என் பையன் இப்படி இருக்கிறான்.
2.என் வீட்டுக்காரர் இப்படி எல்லாம் பேசுகிறார்.
3.என் மாமியார் இப்படிப் பேசுகிறார்கள்
4.என் நாத்தனார் இப்படிப் பேசுகிறது
5.பக்கத்து வீட்டில் இடைஞ்சல் செய்கிறார்கள் என்று
6.வரிசையில் இதைத்தான் கோவிலில் அடுக்கிக் கொண்டு போகிறார்கள்.

அங்கே சந்தோஷத்தை ஊட்டும் நிலையில்லாதபடி அதை மொத்தமாகவே சிறைப்பிடித்து விடுகிறார்கள். சீதாவை இராவணன் என்ன செய்கிறான்…? சிறைப் பிடித்து வைத்துக் கொள்கிறான்.

1.அதாவது சுவாசித்த அந்த அரக்க உணர்வுகள் உங்களுக்குள் சேர்த்துக் கொண்ட பின்
2.அடுத்து நல்லதை அங்கே பேச முடியவில்லை…!

இராமாயணத்தில் இதை எல்லாம் தெளிவாகவே கொடுக்கின்றார்கள். ஆனால் நாம் அதைப் புரிந்து கொண்டோமா என்றால் இல்லை…!

இன்றைக்குப் பண்புடன் இருக்கிறோம் பாசத்துடன் இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

ஆனால் அவனுக்குச் சரியாகப் படிப்பு வரவில்லை என்றால் அவன் படிக்கவில்லையே.. படிக்கவில்லையே…! என்று எண்ணி வேதனைப்படுகிறோம். வேதனை உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

அதை எல்லாம் நீக்குவதற்காகத் தான்
1.நம் உடலில் உள்ள ஆயிரத்தி எட்டு குணங்களையும் கோவில்களில் சிலைகளாக வடித்து வைத்து
2.அது ஒவ்வொன்றும் என்னென்ன செய்யும் என்று காட்டியிருக்கின்றார்கள்.

சிவாலயம் ஆனாலும் பெருமாள் கோவிலாக இருந்தாலும் மற்ற எந்தக் கோவிலாக இருந்தாலும் நம் உடலில் நடக்கக் கூடியதைச் சிலைகளாக உருவமாக்கி நாம் எப்படி வணங்க வேண்டும் என்று காட்டினார்கள் ஞானிகள்.

நம் பையன் தவறு செய்கிறான் என்றல் உற்றுப் பார்க்கின்றோம். அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிரிலே “அபிஷேகம்” நடக்கின்றது.

ஆக அவனின் தவறான செயலைப் பார்த்ததும் நமக்கு எரிச்சல் ஆகின்றது. அதை நம் உடலில் சேர்க்கப்படும் போது எரிச்சலான உணர்வையே மீண்டும் நமக்குள் கூட்டுகின்றது.

எரிச்சன் ஆன பின் பையனிடம் “ஏன்டா இப்படிச் செய்கிறாய்…?” என்று கேட்டால் இது அவனுடைய உயிரில் “அபிஷேகம்” நடக்கிறது. அவன் உடலில் எரிச்சல் ஆகிறது.

தாயோ தந்தையோ யார் சொன்னாலும் அவர்கள் மேல் அவனுக்கு வெறுப்பு வருகின்றது. ஆனால் அவர்கள் தப்பு செய்யவில்லை.

1.மனிதன் சந்தர்ப்பத்தல் தனக்குள் நுகர்ந்த உணர்வுகள் அது எப்படிக் கெடுதலாக அமைகின்றது…?
2.அதை எப்படி நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும்…? என்பதனை
3.ஆலயத்தில் அன்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

எப்படி…?

சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதாகக் காட்டுகின்றார்கள். பாலாபிஷேகம் சந்தனாபிஷேகம் பன்னீர் அபிஷேகம் என்று எத்தனையோ அபிஷேகங்கள் செய்கிறார்கள்.

அதைப் பார்த்ததும் நாம் எதை எண்ண வேண்டும்…?

1.அந்தப் பாலைப் போன்ற மனம் நாங்கள் பெற வேண்டும்.
2.என் பையனுக்கு அந்தப் பாலைப் போல மனம் வர வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாலைப் போல ஒரு தெளிந்த மணம் பெற வேண்டும்.
4.சந்தனத்தைப் போல நறுமணம் நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் குடும்பத்தில் என் கணவருக்கு என் பிள்ளைக்கு எல்லாருக்கும் சந்தனத்தைப் போன்ற நறுமணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணிடல் வேண்டும்.

அங்கே சாமி சிலைக்கு அபிஷேகத்தை நடத்தும் போது மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாம் எண்ணினால் அந்த உணர்வுகள் தான் நமக்குள் அபிஷேகம் நடக்கிறது.

அந்த உணர்வின் தன்மை உயிரான ஈசனுக்குள் பட்டு நம் உடலுக்குள்ளும் போகின்றது. நாம் எதைச் சுவாசிக்கிறோமோ அதற்குத் தகுந்த மாதிரித்தான் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் இது சாப்பாடாகக் கிடைக்கும்.

ஆகையினால் நல்ல அணுக்களை வளர்க்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..?

அங்கே பாலாபிஷேகமோ சந்தனாபிஷேகமோ செய்யும் பொழுது நாம் எண்ண வேண்டியது
1.பாலைப் போன்ற தூய்மையான மனம் என் பையனுக்கு வர வேண்டும்…
2.அவனுக்குத் தெளிந்த மனம் வர வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று இப்படித் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதைச் செய்தால் நமக்குள் வந்த எரிச்சலை மாற்ற முடியும். பையனுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி அந்தப் பக்குவமான நிலையில் சொல்லப்படும் பொழுது அங்கேயும் எரிச்சல் ஆகாது.. வெறுப்பு வராது.. மகிழ்ந்திடும் உணர்வுகள் வரும்.

செய்து பாருங்கள்…!

Leave a Reply