பல தர்மங்கள் செய்த கர்ணன் ஏன் அழிவின் தன்மைக்குப் போகின்றான்…?

karna- கர்ணன்

பல தர்மங்கள் செய்த கர்ணன் ஏன் அழிவின் தன்மைக்குப் போகின்றான்…?

 

கர்ணன் சகல வல்லமை பெற்றவன்தான்…! அவன் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டாலும் அவனும் அழிவின் தன்மைகள் அடைகின்றான்.

குருவை அலட்சியப்படுத்தியோ குருவென்ற நிலைகள் தன் அருகினில் இருக்கின்றாரென்றும் எளிதில் கிடைக்கின்றாரென்றும் இதன் வலுவின் தன்மை கொண்டு தவறு செய்தால் கடைசியில் கௌரவர்களுக்கு எந்த நிலை ஆனதோ அதை நிச்சயம் அடைவார்கள்.

கர்ணன், அந்த கௌரவர்கள் பக்கம் இணைந்து வாழ்ந்ததினால், கடைசியில் அந்தத் தீமையின் விளைவுகளிலேயே மடிகின்றான்.
1.தர்மம் செய்கின்றேன்… நன்மை செய்கின்றேன் என்று
2.இன்று சிலர் பிறருக்குச் செய்வதுபோல் செய்து,
3.அவர்களை அடிமைப்படுத்தி தன்னுடைய சுயலாபங்களுக்காகச் செய்கின்றார்கள்.
4.இது ஏமாற்று வித்தை.

தங்களுக்கு வலு இருக்கின்றது என்றால் செல்வந்தர்கள் பலருக்குப் பணம் கொடுத்து அவர்களை ஏமாற்றி இவருடைய சுயநலங்களைப் பெற்றுக் கொள்வார்கள். மகாபாரதத்தில் கர்ணன் பலருக்குத் தர்மங்கள் செய்தாலும் தீங்கு உள்ளவர் பக்கம் இருக்கின்றார்.

தர்மம் செய்யும் பொழுது தீங்கு உள்ளவன் எளிதில் அதைப் பெறுகின்றான்.
1.அதனால் இவன் செய்யும் தர்மத்தின் நிலைகளும் சீர் குலைகின்றது.
2.கௌரவர்களின் தீமைகளால் கர்ணனுடைய தர்மம் அழிக்கப்படுகின்றது.
3.இவருடைய தர்மம் நன்மை செய்வதில்லை மாறாகட்ஜ் தீங்கு செய்வோருக்குதான் உதவுகின்றது.

ஆகவே தர்மம் ஒருவருக்குக் கொடுக்க வேண்டுமென்றால் அது எதுவாக இருக்க வேண்டும்..?

1.நல்வழியில் வாழும் அதற்குண்டான உபாயத்தைக் காட்டுவதும்
2.நற்குணங்களைக் காக்கச் செய்வதும் தான் உண்மையான தர்மமாகும்.

அர்ச்சுனன், பல வலிமை கொண்டு உணர்வின் தன்மை எது பெற்றாலும் அவன் நியாயத்தின் எல்லை கொண்டு “குருவை மதித்தான்…” அதன் உணர்வு கொண்டு படை பலம் கொண்டாலும் குருவின் நிலையை நஞ்சை வென்றிடும் குருவின் வலுவைத் தனக்குள் அந்தத் தீமையை வென்றிடும் உணர்வைக் கொண்டு வந்தான்.

எதிரிகள் பக்கம் தன் தாத்தா பீஷ்மர் சகலகலா வல்லமை பெற்றிருந்தாலும் அந்த எதிரிகளுக்கு அவருடைய வலுக்கள் தன் ஆசையின் நிமித்தம் பிறருக்குத் தொல்லைகள் கொடுத்து அபகரிக்கும் அவர்கள் பக்கம் செல்வமும் செல்வாக்கும் இருப்பினும் கண்ணன் பாண்டவர்களை மீட்டுவதாகத் தெளிவாகக் கூறுகின்றது மகாபாரதம்.

நாம் எவ்வாறு செயல்படுகின்றோம் என்றும் தீமையின் பக்கம் சார்ந்து இருக்கும்பொழுது இவருடைய தர்மமும் நிலைத்து இருந்ததேயில்லை.

அவனின் தர்மத்தைக் கண்ணன் எப்படிப் பறித்துக் கொள்கின்றான்…? என்று காட்டப்பட்டது. பிறர் செய்யும் தீமையின் நிலைகள் வரும் பொழுது உடலுடன் ஒட்டிய தர்மத்தின் நிலைகளைக் கண்கள் தான் பறித்துக் கொள்கின்றது.

தர்மத்தின் நிலைகள் வளர்ந்தாலும் தீமையின் நிலைகள் அதிகரிக்கப்படும் பொழுது இயற்கையில் விளைந்த உணர்வுகள்,
1.கண்ணால் பார்த்த தீமையின் உணர்வு அதிகமாகி
2.உடலில் விளைந்த தர்மத்தின் நிலைகளைத் தணிக்கச் செய்கின்றது.
3.அதனால் கர்ணனுடைய செல்வமும் சகலகலா வல்லமையும் மடிகின்றது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது மகாபாரதம்.

இவையெல்லாம், ஞானிகள் காட்டிய உணர்வை நாம் உற்று பார்க்கும் பொழுது இந்த வாழ்க்கைக்கே வருகின்றது.

குருவின் தன்மையைத் தவறான வழிகளில் பயன்படுத்தினால் இன்று சுகமாக இருக்கும். ஆனால் அது சாப அலைகளுக்கே அழைத்துச் செல்லும். இதைத்தான் மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

Leave a Reply