நமக்குள் இருக்கும் உயிரை நாம் மதிக்கின்றோமா..?

WHO AM I

நமக்குள் இருக்கும் உயிரை நாம் மதிக்கின்றோமா..?

 

ஒருவர் மேல் அன்பாக இருக்கின்றோம். அவர் வேதனைப்படுவதை நாம் நுகர்ந்தால் நம் உடலில் தோஷம் வந்துவிடுகின்றது. நம் உடலின் அணுக்களில் பட்டபின் வேதனைதான் படுகின்றோம்.

நம்மை ஈசன் உருவாக்கினான் என்று நாம் தெரிந்து கொண்டோம். பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அந்த வினைகளுக்கு நாயகனாக தீமைகளை நீக்கும் மனித உடலைத் தந்தது…! என்பதைச் சிவ தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

எல்லா உயிரினங்களும் விஷத்தைத் தன் உடலாக்கி வலுவாக இருக்கின்றன. மனிதனோ விஷத்தினை நஞ்சாகப் பிரித்துவிட்டு நல்ல உணர்வை வலுவாக்கி நஞ்சை மலமாக்கும் திறன் பெற்றவன்.

1.நஞ்சென்று தெரிந்து கொண்டபின்,
2.நஞ்சை நீக்கும் சக்தி பெற்றது மனித உடல்.
3.அதனால்தான் “அங்குசபாசவா…” என்று காட்டப்பட்டது.
4.தீமை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் வந்தபின் தீமையை நீக்கிடும் சக்தி பெற்றது மனித உடல்.

இதையெல்லாம் உருவாக்கியது நமது உயிர். நம் உடலில் உள்ள கணங்களுக்கு எல்லாம் ஈசா… கணேசா…! என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்கின்றது.

1.ஆறாவது அறிவு கொண்ட மனிதன் இந்த உயிரை மதித்து நடப்பதற்கு
2.வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது என்று
3இந்த விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மனிதனானபின் எத்தனையோ உயிரினங்களை உருவாக்குகின்றான். எத்தனையோ இயந்திரங்களை உருவாக்குகின்றான். எத்தனையோ தாவர இனங்களைப் புதிது புதிதாக உருவாக்குகின்றான்.

எந்த உயிர் மனிதனாக உருவாக்கியதோ அது முழுமுதல் கடவுள். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் இதைச் சொல்லியுள்ளான்.
1.என்று மனிதனை உருவாக்கியதோ,
2.அது முழுமையான கடவுள்.

ஆகவே நம் உயிரை நாம் மதித்துப் பழக வேண்டும்.

Leave a Reply