தியானத்தின் ஏணிப்படிகள்

Concentration - Meditate

தியானத்தின் ஏணிப்படிகள்

 

தியானமிருக்கும் பொழுது நாம் துருவ மகரிஷியை எண்ணுகின்றோம். துருவ நட்சத்திரத்தை எண்ணுகின்றோம். அதன் வழி கொண்டு சப்தரிஷி மண்டலங்களுடன் நம் நினைவை இணைக்கின்றோம்.

ஆறாவது அறிவு கொண்டு துருவ மகரிஷி வெளிபடுத்திய உணர்வு கொண்டு தனக்குள் பெற்று ஏழாவதாக ஒளியின் சரீரம் பெற்று மண்டலமாக இயங்கிக் கொண்டுள்ளதுதான் சப்தரிஷி மண்டலம்.

இந்தத் தொடர் வரிசையில் நம் நினைவினை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் கலந்து விடுகின்றோம்.
1.இதைப் பற்றுடன் பற்றி ஏணிப் படிகளில் மேலே போகிற மாதிரி 1, 2, 3 என்று அதோடு இணைத்து விடுகிறோம்.
2.இது மிக முக்கியம். வரிசைப் படுத்தி இதைக் கொண்டு போக வேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் சேர்க்க வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் பிறவிக் கடனை நீக்கிச் சென்றவர்கள். அவர்களை எண்ணத்தால் கவர வேண்டுமென்றால் நமக்கு அந்தச் சக்தி தேவை.

அந்த சக்தியைப் பெறுவதற்குத்தான்…
1.மகரிஷிகளின் உணர்வினை அடிக்கடி உங்களுக்குள் பாய்ச்சப்பட்டு
2.ஆயிரக்கணக்கானோர் உணர்வுகளில் அது சேர்க்கப்பட்டு
3.அவர்கள் உணர்வின் வலுவைப் பெற்ச் செய்கிறோம்.

தியானத்தில் அமர்ந்துள்ள அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற “ஒருங்கிணைந்த வலுவைக் கொண்டு வருகின்றோம்…!”

குருநாதர் காட்டிய வழியில் அந்த வலுவைக் கூட்டி எண்ணி அதை ஆழமாகப் பதிவு செய்யப்படும்பொழுது எல்லோருடைய எண்ணமும் சமமாகக் கிடைக்கின்றது.
1.அப்பொழுது அந்த ஒருங்கிணைந்த உணர்வுகள் காற்றிலுள்ள மகா ஞானிகளுடைய உணர்வோடு ஒன்றிவிடுகின்றது.
2.அதற்குச் சமமாகி விடுகின்றது.

ஒரு நூலைக் கட்டி ஒரு சாமானைத் தூக்கும்போது அது அறுந்து விடுகின்றது. பல நூல்களை இணைத்துக் கயிறாகத் தறித்துக் கடினமான சாமானையும் எளிதாகத் தூக்குகின்றோம்.

அதைப் போலத்தான் நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அவர் எதை எதை எல்லாம் உணர்த்தினாரோ அதை மனதில் வைத்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை கூட்டுத் தியானத்தின் மூலம் உங்களைப் பெறச் செய்கின்றோம்.

Leave a Reply