இரவு தூக்கத்தில் நீங்கள் பெற வேண்டிய மிக மிக ஆற்றல் வாய்ந்த சக்தி

sleeping meditation

இரவு தூக்கத்தில் நீங்கள் பெற வேண்டிய மிக மிக ஆற்றல் வாய்ந்த சக்தி 

நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று உணர்வின் நிலைகளைச் செலுத்துகின்றீர்கள்.
1.இதற்குக் குரு வழி கொண்டு உங்களைப் பிரார்த்திக்கக்கூடிய குரு வேண்டும்.
2.அப்படிப் பிரார்த்திக்கக்கூடிய குருவினுடைய தன்மை பெற்றால்தான் உங்கள் உணர்வின் தன்மை வலு கூடும்.

நாம் அனைவருமே TV, RADIO மூலமாக அனைத்தையும் பார்த்துக் கேட்டு அறிகின்றோம். இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு எங்கேயோ விண்ணிலே பரவக்கூடிய அந்த உணர்வின் தன்மையை அந்த அலைகளை எடுத்துப் படங்களை அனுப்புகின்றது.

அப்படி அனுப்பும் பொழுது உடனே அந்தப் படங்களை எடுத்துக் கொள்வதற்காக வேண்டி கம்ப்யூடர் சிஸ்டம் என்று அந்த உணர்வலைகளை அது ஒன்றுக்குள் ஒன்று இணையச் செய்து அது விண்ணிலே எத்தனையோ கோடி மைல்களுக்கு அந்தப் பக்கம் பறந்து கொண்டிருந்தாலும் அது எடுத்து அனுப்பும் படங்களையோ அங்கிருக்கும் உணர்வலைகளை அது படமெடுத்து தரையிலிருக்கும் ஆண்டெனாக்களிலே இயக்கப்படுகின்றது, கம்ப்யூடர் அந்த நிலையை இழுத்துப் பதிவு செய்து விடுகின்றது.

1.இதைப் போன்று உங்கள் உடலின் தன்மை அனைத்துமே “இயந்திரம்…!
2.நீங்கள் தியானத்தாலே எடுத்துக் கொண்ட உணர்வின் கண்ணின் புலனறிவு “ஆண்டெனா…!”
3.அந்தப் பவரின் சக்தி நாம் தியானிக்கப்படும்போது நம் உடலுக்குள் எத்தனை உணர்வுகள் இருந்தாலும் கண்ணுக்குள் தொடர்பு உண்டு.

நாம் எந்தெந்த நிலைகளில் நினைவைச் செலுத்துகின்றோமோ அந்த உணர்வின் தன்மை உங்கள் புலனறிவால் ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு “கண்ணுக்குள் இருக்கக்கூடிய கருவிழிக்குள்..” அது தொடர்பு கொள்கின்றது.

அவ்வாறு அது தொடர்பு கொள்ளும் பொழுது நாம் தியானமிருக்கும் பொழுது
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
2.உங்கள் கண்ணுக்குள் இருக்கக்கூடிய அந்தக் கருவிழியான நிலைகளிலே
3.மெய் ஞானிகளின் அருளாற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்று
4.உணர்வை உந்தி அந்த உணர்வைப் பதிவு செய்கின்றோம்.

அதாவது கண்ணாலே பார்ப்பதும்… அந்தப் பார்வையின் நிலைகள் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்வதும்… எனக்கு (ஞானகுரு) நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் எவ்வாறு காட்டினாரோ அந்த உணர்வின் நிலைகள் கொண்டே
1.உங்கள் கருவிழிக்குள்ளூம் அந்த உணர்வின் திரை ஈர்ப்பின் சக்தியைப் பெறச் செய்யும் போது
2.நீங்கள் இரவிலே படுத்துக் கொண்டிருக்கும்போது இது பதிவு ஆகின்றது.

இவ்வாறு இரவிலே நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டபின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொண்டே நீங்கள் படுக்கும்போது இந்த உணர்வலையின் ஓட்டங்கள் இருந்து கொண்டிருக்கும்.

அப்பொழுது சப்தரிஷி மண்டலங்களில் இருந்தும் துருவ நட்சத்திரத்தில் இருந்தும் வரக்கூடிய அலைகளைப் பெற வேண்டும் என்ற உணர்வுடன் நீங்கள் தொடர்பு கொண்டு செயல்படுத்தும் பொழுது அது தன்னிச்சையாகவே அந்த உணர்வுகளை அது இழுத்துச் செயல்படுத்திவிடும்.

 

Leave a Reply