உங்களிடம் யாம் கேட்கும் வரம்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
1.அண்ட வீதியெல்லாம் தேடி அலைந்து,
2.அந்த சக்திகளை அந்தந்த காலத்திற்குத் தக்கவாறு அதை யாம் (ஞானகுரு) சுவாசித்து
3.என்னைச் சந்திப்போர் அனைவருடைய உயிரையும் கடவுளாக மதித்து
4.இந்த உணர்வின் மணமான நிலைகளை ஆராதனை செய்து கொண்டிருக்கின்றோம்.
இந்த ஆராதனையினுடைய மணத்தைத்தான் நீங்கள் எங்கிருந்தாலும் பார்க்கின்றீர்கள், நீங்கள் ஆலயத்தில் சென்று ஆராதனை செய்கின்றீர்கள். ஆனால் உங்கள் காந்த ஈர்ப்பின் துணை கொண்டு எமது குருநாதர் அருள் வழி கொண்டு உங்களுக்கு அந்த ஆராதனை செய்கின்றேன்.
அப்பொழுது அந்த மணத்தை நுகரும்போது தான் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அந்த மகிழ்ச்சியின் உணர்வாகவே நீங்கள் வெளியிடும் மூச்சலைகளை யாம் சுலபமாகப் பெற முடிகின்றது.
நீங்கள் “நான் நன்றாக இருக்கின்றேன்…!” என்று சொல்லும் போது அங்கே மகிழ்ச்சியான மணத்தை உயிரான ஆண்டவனிடமிருந்து நல்ல மணத்தை நல்ல வரத்தை வாங்குகின்றோம்,
1.மறந்திட வேண்டாம் உங்களிடமிருந்து தான் நல்ல வரத்தை வாங்குகின்றோம்.
2.காரணம் அந்த மகிழ்ச்சியான உணர்வு ஆராதனை கொடுக்கப்படும்போது
3.உங்கள் உயிரான நிலைகள் அது சமைத்து அந்த மகிழ்ச்சியான உணர்வலைகளைப் பரப்பச் செய்கின்றது
4.அதை யாம் பெறுகின்றோம்.
ஒவ்வொரு நிமிடமும் எமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு பேரண்டத்தில் அலைந்து திரிந்து உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி அந்த நறுமணமான நிலையும், அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மையும் அதைச் சுவாசித்து அதன் உணர்வுகள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்ற ஏக்கத்துடன் பிரார்த்திக் கொண்டிருக்கின்றோம்,
எமது பிரார்த்தனை இதுதான்…! இந்த நிலைகள் கொண்டு இந்த மணத்தை, உங்களுக்குள் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிற உணர்வின் தன்மையை அதை இன்புறச் செய்வதற்கு யாம் பிரார்த்தனை செய்கின்றோம். ஏனென்றால் உயிரான கடவுள் அவன் சிருஷ்டித்த ஆலயம் அது.
உங்களுக்கு இந்த உயர்ந்த சுவாசத்தின் நிலைகளைப் பெறச் செய்ய யாம் பிரார்த்திக்கின்றோம்.
நீங்களும் அந்த நிலைகொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டுமென்று நினைவைச் செலுத்தினால்தான்
1.உங்கள் கதவு திறக்கும்,
2.அப்பொழுது தான் அந்த மணத்தின் தன்மைகள் அங்கே பிறக்கும்.
3.அதனால், அங்கே கிடைக்கக்கூடிய இந்த ஆற்றல் மிக்க சக்திகள் உங்களிலே துன்பத்தைப் போக்க உதவும்.