இராமாயணத்தில் உணர்த்தப்பட்ட இராவணன் யார்…?

Ramayanam

இராமாயணத்தில் உணர்த்தப்பட்ட இராவணன் யார்…?

ஒரு வீட்டில் கொடூர குணம் கொண்ட ஒருவன் வாழ்ந்து இறந்த பிறகு என்னவாகின்றதென்றால் அவன் உடலுக்குள் விளைந்த உணர்வுகள் ஒவ்வொரு உடலிலும் புகுந்து நரக வேதனையை உருவாக்கின்றது.

சில குடும்பகளில்…
1.தீய குணங்கள் மிகுந்த ஒருவனைப் பார்த்து
2.“இவன் எல்லாம் செத்துத் தொலைந்தால் என்ன…!” என்று எண்ணுவார்கள்.
3.ஆனால் அவன் இறந்த பிற்பாடு அவன் விளைய வைத்த தீய உணர்வுகள் எல்லோருடைய உடல்களிலும் பெருகத் தொடங்கி விடும்.

அரக்க உணர்வு கொண்ட ஒருவன் வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் பொழுது அவன் பேசிய பேச்சுக்கள் வெளியிட்ட உணர்வுகள் அனைத்தும், குடும்பத்திலுள்ள அனைவரிடமும் பதிந்திருக்கும்.

வெளி நபர் ஒருவர் அவரிடம் பேசியிருந்தாலும் அவரிடமும் பதிந்து அவரும் இவரின் உணர்வை அடிக்கடி தன்னுள் வளர்த்திருக்கும் நிலையில் அரக்கக் குணம் கொண்ட மனிதன் இறந்து விட்டால் என்னாகும்…?

இதைத்தான் இராமாயணத்தில் பத்தாவது நிலையை அடையக் கூடிய இராவணன் தன் உடலில் வளர்த்துக் கொண்ட குரோத உணர்வின் அணுக்கள் அனைத்தும் மீண்டும் எப்படி அகர குணங்களை வளர்க்கின்றது என்பதைத் தெளிவாக கூறினார்கள்.

இராவணின் மகன் இந்திரஜித் அவன் “மாயமாக மறைந்திருந்து செயல்படுவான்…!” என்று கூறினார்கள். அதாவது அரக்கக் குணம் கொண்ட ஒருவன் கொடூரமாகச் சாகிறான் என்றால்
1.அவனுடைய உயிரான்மா மற்றொருவருடைய உடலுக்குள் புகுந்து கொண்டு
2.”அவருக்குத் தெரியாமலேயே…!” அவரை ஆட்டிப் படைக்கின்றது.

இதைத்தான்… “இவனுடைய உடலுக்குள் ஆவி இறங்கி விட்டது… பேய் ஆட்டுகின்றது…!” என்பது போன்று இப்பொழுது சமூகத்தில் சொல்கிறார்கள்.

எத்தனை ஆசைகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டு அந்த உயிரான்மா உடலை விட்டு வெளியே வந்ததோ அதே ஆசை கொண்டு, மற்றொரு உடலுக்குள் புகுந்து கொண்டு அங்கே பேயாக ஆட்டும்.

“கொல்ல வேண்டும்…!” என்ற உணர்வுகளை எடுத்துக் கொண்ட உயிரான்மா இத்தனை வேலைகளைச் செய்யும். அவனுக்குப் பிறந்த குழந்தையும் இவன் வழியில் வளரப்படும் பொழுது இப்படித்தான் வருகின்றான்.

அன்றாட வாழ்க்கையில், இதனை நாம் சாதாரணமாகக் காணமுடியும்.

உதாரணமாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மிகவும் நட்பாக, நன்றாகப் பழகுவார்கள். ஆனால், பரீட்சையில் தோல்வி அடைந்து விட்டால் சிலர் மிகவும் வேதனையடைந்து தற்கொலை செய்து கொள்வதும் உண்டு.

தற்கொலை செய்து கொண்ட ஒரு மாணவியின் உயிரான்மா யாரை மிகவும் நட்பாக நேசித்து நட்பாகப் பழகியதோ அந்த உடலுக்குள் வந்துவிடும்.
1.இப்படி வந்த பின்
2.இந்த மாணவி பரீட்சை எழுதச் செல்ல வேண்டும் என்றாலே தன்னையறியாது பயப்படும்…!

ஏனென்றால் இந்த மாணவியின் உடலிலுள்ள உயிரான்மா போகவிடாது. தான் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு இந்த உடலில் பல வித செயல்களைச் செயல்படுத்தும். இதை நாம் அனுபவத்தில் பார்க்கலாம்.

மருத்துவப் படிப்பு படிப்பவருக்குக் கூட இதுபோன்ற நிலைகள் ஏற்படுகின்றன.

நண்பர்களாகப் பழகியிருப்பார்கள். ஆனால் நண்பர்களில் ஒருவர் எதிர்ப்பாராத விதமாக ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் என்றால் பற்றின் உணர்வுகள் இங்கே வந்தவுடனே அந்த உயிரான்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடும்.

இவைகளெல்லாம் எதனால் வருகின்றது என்பதனை, ஞானிகள் இராமாயாணக் காவியம் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

1.உயிரின் இயக்கங்களையும்
2.உணர்வின் எண்ணங்களின் இயக்கத்தையும்
3.உணர்வுக்கொப்ப நமது உடல் எப்படொ உருவானது என்பதையும்
4.மனித சரீர வாழ்க்கைக்குப்பின் நமது நிலை என்ன..? என்பதையும்,
5.ஞானிகள் இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

Leave a Reply