குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தின் மூலம் எடுத்து வளர்க்கச் சொல்வதன் “உண்மையான நோக்கம் என்ன…?”

end of solar system

குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தின் மூலம் எடுத்து வளர்க்கச் சொல்வதன் “உண்மையான நோக்கம் என்ன…?”

 

பிரபஞ்சத்திலுள்ள கோள்கள் எல்லாம் ஒரே நேர் கோட்டில் வரப்படும் போது தான் சில பூமியினுடைய ஈர்ப்புத் தன்மை குறைகிறது. (இது ஏற்கனவே இந்த மாதிரி ஆகி விட்டது).
1.அதனால் நம் பூமி ஒரு நிமிடம் வித்தியாசத்தில் வரும்.
2.அதனால் வித்தியாசத்திற்குப் பூமி சூரியனை விட்டு நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகும்.
3.இதே மாதிரி மற்ற கோள்களும் நகர்ந்து நகர்ந்து வித்தியாசமாகப் போகும்.

கீழே இருக்கும் கோள்கள் தடுத்து நிறுத்தி விட்டது என்றால் இந்த (சூரியனின்) ஈர்ப்பு இல்லை என்றால் நகர்ந்து மேலே போகும். அதற்கு மேல் இருக்கும் கோள்கள் அப்படியே நகன்று நகன்று மேலே போகும். (மேலே என்றால் ஈர்ப்பை விட்டு வெளியே என்று அர்த்தம்)

நகர்ந்து மேலே போகும் கோள்கள் எல்லாம் என்ன செய்யும்…? இது நட்சத்திரங்களாக மாறும் சக்தி கிடைக்கிறது. இதே மாதிரி ஈர்ப்புத் தன்மை இல்லை என்கிற போது இந்த 27 நட்சத்திரங்களும் நகர்ந்து செல்லும்.

ஆக அப்படி நகர்ந்து செல்லப்போகும் போது மற்ற உணர்வுகள் எடுத்து நம் பிரபஞ்சம் முதலில் எப்படி உருவானதோ அது போல் இந்த 27 நட்சத்திரங்களும் அது அது தன் வளர்ச்சிக்குண்டான நிலையில் கோள்களை உருவாக்கும்.

கார்த்திகை நட்சத்திரம் ஒரு சூரிய குடும்பமாக வளர ஆரம்பித்து விட்டது. இதே மாதிரி மற்ற நட்சத்திரங்களும் தனித் தனிப் பிரபஞ்சமாகிவிட்டால் இந்தச் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்படும்.

அதனால் தான் நம் சூரியனில் அநேகமாக இந்தக் கருப்பு நிலைகள் (SUNSPOT) அதிகமாக வருகிறது. ஒளியாக மாற்றுவதற்குண்டான நிலைகள் மாறிப் போகும்…. மாறிக் கொண்டிருக்கிறது…!
1.அப்படி மாறியது என்றால் இன்னும் கொஞ்ச காலத்தில் சூரியன் மங்கிப் போய்விடும்.
2.அதனுடன் சேர்ந்த (நம்) பூமி எங்கே போகும்…? என்று சொல்ல முடியாது.

மற்றொரு சூரியக் குடும்பம் அழிந்து அதிலிருந்து கரைந்து வந்த ஒரு கோள் வியாழன் கோளில் ஏற்கனவே சுமார் 25 வருடத்திற்கு முன்னாடி விழுந்ததது அல்லவா…! பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். (விழுவதற்கு முன்னாடி குருநாதர் காட்டிய வழியில் இந்த மாதிரி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னேன்… பழைய அன்பர்களுக்குத் தெரியும்)

நம் பூமியில் விழுந்திருந்தால் நாமும் அம்போ தான். ஏனென்றால் அந்தக் கல் நம் பூமியைப் போல ஒரு இரண்டு மடங்கு. ஆனால் வியாழன் கோளில் பனிப்பாறைகள் அதிகமாக இருப்பதால் அதற்குள் போய் அமிழ்ந்து விட்டது.

வியாழன் கோள் முழுவதுமே பனிப்பாறைகளாக உள்ளது. இப்போது நாம் வாழும் பூமியும் சூரியனின் ஈர்ப்பை விட்டுக் கொஞ்சம் நகன்று விட்டதென்றால் முழுவதும் பனியாக உறைந்து விடும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் சூரியனாக வளர்ச்சி ஆகிவிட்டது என்றால் அந்தச் சூரியனுக்கு சாப்பாடு கிடைக்காது பிற மண்டலத்திலிருந்து சக்திகளை நட்சத்திரங்கள் எடுத்து கொடுக்கவில்லை என்றால் சூரியன் மங்கலாகிவிடும்.

கார்த்திகை நட்சத்திரம் ஏற்கனவே விலகிப் போய்விட்டது. அதைப் போல ஒரு ஐந்தாறு (ரேவதி அசுவினி) நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரபஞ்சமாக வளர்ந்து கொண்டுள்ளது. மற்ற நட்சத்திரங்களும் அதைப் போன்ற நிலைகள் கூடியசீக்கிரம் ஆகும்.

1.நாம் குழந்தையைப் பெற்று அது வளர்ச்சி அடைந்தவுடனே அது ஒரு குடும்பமாகப் பிரிந்து போகிற
2.அதே மாதிரித் தான் சூரிய குடும்பத்திலேயும் நட்சத்திரங்கள் சூரியனாகும் பருவம் வந்த பின்
3.தனக்கென்ற ஒரு குடும்பமாகப் பிரிந்து போய்விடும்.
4.பிரிந்த பிற்பாடு நாளுக்கு நாள் இந்தச் சூரியன் செயல் இழக்கும் தன்மை ஆகும்.
5.அதனுடன் சேர்ந்த பூமி கரைந்து ஓடும்.

அப்பொழுது பூமிக்குள் இருக்கும் உயிர் அணுக்கள் என்ன செய்யும்….? மற்ற உயிரினங்களுக்கு இது குருவாகும். நம் வியாழன் கோளில் இதைப் போன்ற மற்ற நிலைகள் சிக்கப்பட்டு அதன் மூலமாக இந்தப் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது.

வியாழன் கோளில் இன்னும் உயிர் அணுக்களினுடைய நிலைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. அதிலிருந்து தோன்றியது தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்து நம் பிரபஞ்சத்தில் பரவப்பட்டு வருகிறது.

அத்தகைய கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதனால் வியாழன் கோள் தான் உயிரணுக்களின் தோற்றத்திற்கு மூல காரணமாகின்றது. அதில் இருந்து வரும் கரு இல்லை என்றால் உயிர் அணுக்ககளின் தோற்றமே இல்லை.
1.அதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.
2.சும்மா சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).

நாம் வாழும் இந்தச் சூரியனும் செயலிழக்கும் தன்மைக்கு இப்பொழுது வந்துவிட்டது. இன்று நாம் மனிதராக இருந்தாலும் இந்தச் சூரியக் குடும்பம் அழிந்து விட்டது என்றால் அணுக்களாகப் போவோம். மீண்டும் பிரபஞ்சத்தில மிதப்போம். ஏதாவது கோளுக்கு இழுத்துக் கொண்டு போகும்.

அந்த கோள்களில் அதற்குண்டான சத்து இல்லை என்றால் புழுவாகவோ பூச்சிகளாவோ கிருமிகளாவோ தான் வளர முடியும். வேறு வழி இல்லை. நம்மை விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டு இருக்கும்.

நம் பூமியில் தாவர இனங்கள் இருக்கிறது. அதனால் மனிதனாக இருகின்றோம். தாவர இனங்கள் அழிந்து போய்விட்டது என்றால் உயிரினங்கள் வாழ முடியாது.
1.அப்படி நாம் வெளியிலே போய்விட்டால் அப்புறம் எந்தக் கோளுக்குள் நாம் போவோம்…?
2.என்ன ஆவோம்…? என்று சொல்ல முடியாது.

இதிலிருந்து தப்புவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இத்தனை வேலையும் செய்து கொண்டிருக்கின்றோம்.

விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் எடுத்து உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால்
1.இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் சேர்த்துக் கொண்ட ஒளியான உணர்வுக்கொப்ப
2.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.
3.வேகா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.
4.உயிருடன் சேர்த்து ஒளியாக்கப்படும் போது அகண்ட உலகில் எங்கே வேண்டும் என்றாலும் நாம் போகலாம்.

Leave a Reply