உயிரான ஈசனிடம் வேண்டி… “மகரிஷிகளிடம் கேட்டுப் பெற வேண்டியவை எவை…?”

divine frequency

உயிரான ஈசனிடம் வேண்டி… “மகரிஷிகளிடம் கேட்டுப் பெற வேண்டியவை எவை…?”

 

1.நம் குடும்பத்தில் எதனால் நஷ்டமானது?
2.எதனால் ஒற்றுமை இழந்தது?
3.குடும்பத்தில் நம் பிள்ளைகள் ஏன் ஒருவருக்கொருவர் சண்டை செய்தார்கள்?
4.பக்கத்து வீட்டுக்காரர் நம்மிடம் ஏன் சண்டை போட்டார்?
5.அதிலிருந்தெல்லாம் நாம் எப்படி விடுபட வேண்டும்?
6.கஷ்டங்களையும் வேதனைகளையும் திரும்பத் திரும்ப எண்ணுவதனால் உடலில் கை கால் குடைச்சல் எப்படி வருகின்றது?
7.நாம் நுகர்ந்த உணர்வுகளால் வீட்டில் எப்படி வெறுப்பை உண்டாக்கச் செய்கின்றது?
8.பிறர் சொல்லும் தீமையான நிலைகளை நமக்குள் அதிகமாகக் கேட்டால் குடும்பத்திற்குள் எப்படிப் பகைமை உண்டாகின்றது?

இதைப் போன்ற சிந்தனைகளை நாம் செய்தோம் என்றால் சிந்தித்துச் செயல்படும் உபாயங்கள் கிடைக்கும்.

தீமைகள் வராதபடி நம் குடும்பத்தை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்ற அருள் வழியும் கிடைக்கும்.

சிந்தனைத் திறனும் தீமைகளை அகற்றும் ஆற்றல் பெறவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

இருளை நீக்கி ஒளி என்ற உணர்வு பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

1.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
2.மகரிஷிகளிடம் கேள்விகளைக் கேட்டுப் பதிலை அங்கிருந்து பெறவேண்டும்.
3.இந்தப் பயிற்சியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.அனுபவம் கிடைக்கும். அனுபவம் கிடைத்தால் தான் தெளிவு வரும்.
5.அதன் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் தீமைகளை நுகரும் நிலைகளிலிருந்து தீமைகளை நீக்கும் பழக்கமாக நாம் அமைத்துக் கொண்டால் மகிழ்ந்து வாழ முடியும்.

மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில்… அவர்களின் அரவணைப்புடனே… அவர்களின் வழி காட்டுதலிலே… பாதுகாப்பான முறையில் நிச்சயம் வாழ்ந்திட முடியும்.

Leave a Reply