ஞானிகள் சொன்ன சிரச்சேதமும்… அரசர்கள் செய்த சிரச்சேதமும்…!

Punhment by rishis

ஞானிகள் சொன்ன சிரச்சேதமும்… அரசர்கள் செய்த சிரச்சேதமும்…!

1.மனிதனுக்குள் பண்பற்ற நிலைகள் செயல்படுவதை நிறுத்திவிட்டுப் பண்புடன் இயக்கப்பட வேண்டும்.
2,சகோதர உணர்வுகள் உருபெற வேண்டும்.
3.ஒருவருக்கு ஒருவர் இரக்கமான செயல்கள் கொண்டு வர வேண்டும்
4.மனிதன் என்ற பண்பில் இயங்க வேண்டும் என்று தான் மதங்கள் அனைத்துமே கூறுகின்றது. எதிலும் குறை இல்லை.
5.ஆனாலும் அன்று மகான்கள் கூறிய இந்தத் தத்துவங்களை அரசர்கள் தனித்தன்மை வாய்ந்ததாகக் கொண்டு சென்றார்கள்.

மகான்கள் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றி இருந்தார்கள். அந்த மகான்கள் காட்டிய நிலைகளை அரசர்கள் தன் மதம் என்ற நிலைகளில் உருவாக்கிக் கொண்டார்கள்.

அதே சமயத்தில் அந்த மகான்கள் செய்ததைக் (சொன்ன தத்துவங்கள்) காக்கப்பட வேண்டும் என்பதற்காக அதைத் தவறுவோர் எவரோ அவர்களுக்குக் “கடும் சிரச்சேதம்…! என்று உலக மதங்கள் எல்லாமே கூறுகின்றது.

“சிரச்சேதம்…” என்ற ஒரு தண்டனையை அன்று ஆண்ட அரசர்கள் பிறருக்குக் கொடுத்தார்கள் ஏன்…? ஞானிகள் சொன்ன சிரச்சேதம் எது…?

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் அறியாது வரும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைத் தடுப்பதற்காக
2.மகான்கள் காட்டிய அறநெறியின் உணர்வை நமக்குள் உட்புகுத்தி
3.அந்தத் தீமைகளைச் செயலற்றதாக மாற்றுதல் வேண்டும்.
4.அந்தத் தீமைகள் நம்மை இயக்காது தடுத்தல் வேண்டும் என்று தான் சொன்னார்கள்.
5.இது தான் அந்த மகான்கள் கூறிய உண்மை நிலைகள். (அதாவது தீமையான உணர்வுகளுக்குள் மகானின் நல்ல உணர்வுகளைப் பாய்ச்சி அதைச் செயலற்றதாக – சிரச்சேதம் செய்யச் சொன்னார்கள்)

ஆனால் அவர்கள் சொன்னதை அரசர்கள் தனக்குள் பிடிவாதமாக வைத்துக் கொண்டு மகான்களின் செயலை மாற்றித் தன்னைச் சுகபோகவாசியாக அமைத்துக் கொள்ள அரசர்கள் பெரும் பிழைகளைச் செய்து விட்டார்கள்.
1..மக்களை நல்ல வழியில் வழி நடத்தும் அந்த ஞானத்தை அவர்கள் காக்கும் வழி அற்று
2.மற்றதைப் பழி தீர்க்கும் உணர்வாகக் கொண்டு சென்று அதைச் செயலாக்கினார்கள்.

மாற்று மதங்கள் (மதத்தினர்) வந்தால் அவர்கள் கடவுள் வேறு… நமது கடவுள் வேறு…! என்று இப்படித் திரிபு பண்ணி விட்டார்கள். சரித்திரத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்
1.மதத்தின் அடிப்படை வைத்துத் தான்
2.உலகப் போர்கள் அனைத்தும் நடந்து உள்ளது.

மதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்த (எங்கள்) மதத்தில் நல்ல ஒழுக்கங்கள் உண்டு. இந்தக் கடவுள் எங்களுக்குச் சரியான உத்தரவு கொடுத்துள்ளார். அதன் வழிகளில் தான் நாங்கள் நடக்கின்றோம் என்று சொல்வார்கள்.

இப்படிச் சொல்லி அடுத்த நாட்டின் மக்களை எல்லாம் போர் முறையில் அடிமையாக்கிக் கொண்டு தன்னுடன் இணைந்து செயல்படுவதற்காக அந்தத் தத்துவத்தை அங்கே புகுத்துகின்றார்கள்.

இன்றைய உலகம் அந்த அரசர்கள் முன் மொழிந்த தத்துவத்தில் தான் அடிமைப்பட்டுக் கொண்டுள்ளது. ஞானிகள் சொன்ன தத்துவப்படி நல்ல பண்புகளை வளர்க்காதபடி மற்றவரை அடிமைப்படுத்தும் நிலையாகவே சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டுமா இல்லையா…? மகான்கள் காட்டிய வழியில் தெய்வீகப் பண்புகளை வளர்க்க வேண்டுமா… இல்லையா… என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Leave a Reply