கண்ணுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டிருக்கும் சூட்சம நிலைகளை ஞானிகள் எப்படிப் பார்த்தார்கள்…?

dhuruva-maharishi-agastya

கண்ணுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டிருக்கும் சூட்சம நிலைகளை ஞானிகள் எப்படிப் பார்த்தார்கள்…?  

மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை எந்தெந்த விளக்குகளில் (LIGHT BULBS) இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நிறங்களில் வெளிச்சம் வெளிப்படுகின்றது.

அதே மின்சாரத்தை மற்ற கருவிகளிலும் உபகரணங்களிலும் இணைக்கும் பொழுது அதனதன் நிலைகளுக்குத் தக்கவாறு அந்த இயந்திரங்களை இயங்குகின்றது.

நம் உயிரின் வேலையும் இதே போன்றது தான்.

உயிருக்குள் ஏற்படும் துடிப்பின் நிலை கொண்டு அது இயக்கச் சக்தியான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது. அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வின் சத்தை எல்லாம் ஜீவ அணுக்களாக (உடலாக) அது உருமாற்றிக் கொண்டே வருகின்றது.

இவ்வாறு நமது உயிர் நம் உடலுக்குள் இருந்து செயல்பட்டு வரும் இந்த நிலையில் சூட்சமத்தில் மறைந்திருக்கும் நிலையை (சுவாசிக்கும் உணர்வுகளை) நாம் கண் கொண்டு பார்க்க முடிவதில்லை.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் நுகர்ந்தறியும் உணர்வுகள் அனைத்தும் நல்லதாக இருந்தாலும் சரி… கெட்டதாக இருந்தாலும் சரி…
1.அதைச் சுவாசித்துப் புருவ மத்தியிலிருக்கும் உயிரிலே உராயப்படும் போது தான்
2.அது இயக்கப்பட்டு உடலுக்குள் அந்தந்த உணர்ச்சிகளாகக் காண்பிக்கின்றது.

நாம் கண் கொண்டு திடப்பொருள்களைக் காணுகின்றோம். உதாரணமாக ஒரு மனிதனைப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவனோ தவறு செய்து கொண்டிருக்கின்றான்.

அந்த மனிதன் தவறு செய்யும் உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றினாலும் நம் கண்ணுடன் இணைந்த காந்தப்புலன் நாம் அவரை உற்று நோக்கும் பொழுது அவனின்று வெளிப்படும் உணர்வலைகளை நம்மை நுகரச் செய்கின்றது.
1.நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் பட்டபின் – அகக்கண்ணாக
2.உடலுக்குள் அந்த உணர்வினைப் (தவறு செய்கிறான்) பரப்பி நம்மை அறியச் செய்கின்றது.

கண்ணால் திடப்பொருளைக் (மனிதனைக்) கண்டாலும் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை வருகின்றது. அதாவது உணரும் தன்மை வந்தாலும்
1.சுவாசித்த உணர்வின் தன்மையை நம் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.
2.இயக்கிய உணர்வின் தன்மைகளை நம் உடலிலே இணைத்து விடுகின்றது.
3.இவ்வாறு உள்ளுக்குள் வரும் அந்த உணர்வுகளை – சூட்சமத்தில் இருப்பதைப் பார்க்க முடியவில்லை.

நல்ல திடகாத்திரமான மனிதர்களாக நாம் முதலிலே காணுகின்றோம். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி வேதனை சோகம் என்று வரப்படும் போது அந்த உணர்வுகள் அவர்கள் உடலிலே பாய்ந்து அந்த உணர்வின் இயக்கங்களால் உடல்கள் சோர்வடைவதும் நோயாகி வேதனைப்படுவதையும் நாம் பார்க்கலாம்.

இது நாம் திடப்பொருளில் (அவர்கள் உடலைப் பார்த்து) காணும் நிலைகள்.

சில மனிதர்கள் உடல் நலமாக இருப்பினும் சந்தர்ப்பத்தினால் தான் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் அதிகரிக்க தான் சுவாசித்த நிலைகள் தன் உடலிலே நிம்மதியற்ற நிலைகளாகி உடலை அப்படியே உருக்கிவிடும்.

காரணம் அது எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் எந்த வித்தின் தன்மை அடைகின்றதோ இந்த வேதனை என்பது நஞ்சான வித்து. உடலை நலியச் செய்துவிடுகின்றது.

தினசரி வாழ்க்கையில் நம் உடலிலே எத்தனையோ கோடிக்கணக்கான உணர்வுகளை எண்ணங்களாகப் பதியச் செய்து சதா சிவமாக உடலாக ஆக்கிக் கொண்டு இருக்கும் நிலையில்
1.எந்தெந்த குணங்களின் எண்ணங்கள் உடலுக்குள் அதிகரிக்கின்றதோ
2;அது தான் கணங்களுக்கு அதிபதியாக முன்னாடி நிற்கிறது
3.காரணம் எல்லா குணத்தையும் அது அடக்கிவிடுகின்றது.

நம்மை எது மாற்றுகிறது…? நம்மை எது இயக்குகிறது…? நம் நல்ல குணங்கள் வலிமை இழப்பது ஏன்…? நமக்கு நோய் வருவது எதனால்…? என்று நமக்குள் நடக்கும் நிலைகளைத் “தன்னைத் தான் அறிதல்” என்ற நிலையில் நம்மை நாம் அறிந்து கொள்வதற்கே இதைச் சொல்கிறோம்.

ஆகவே எப்பொழுதெல்லாம் எதிர்மறையான நிலைகளைச் சந்திக்கின்றீர்களோ (மனம் அமைதி இழக்கின்றதோ) அப்பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருளவாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஆத்ம சுத்தி செய்தீர்கள் என்றால் உங்களுக்குள் இயக்கும் நிலையை அது பிரித்துக் காட்டும்.

1.உங்கள் உடலில் விளைந்தது எது..?
2.நீங்கள் சுவாசித்தது எது…?
3.அடுத்தவர்கள் உடலில் விளைந்தது எது…?
4.மகரிஷிகள் தீமைகளை எப்படி வென்றார்கள்…?
5.அவர்கள் எப்படி ஒளியின் சரீரம் பெற்றார்கள்…?
6.அழியாத நிலைகள் கொண்டு இன்றும் எப்படி எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற பேருண்மைகளை அறிய முடியும்.
7.அந்த ஆற்றல்களைப் பெற்று அவர்களைப் போன்று ஆகவும் முடியும்.

Leave a Reply