வயிறு வலி… வயிற்றில் புண்… (அல்சர்) நெஞ்சு எரிச்சல்… இதெல்லாம் எதனால் வருகிறது…?

Third eye soul - bliss

வயிறு வலி… வயிற்றில் புண்… (அல்சர்) நெஞ்சு எரிச்சல்… இதெல்லாம் எதனால் வருகிறது…? எதனால் நெஞ்சைக் கரிக்கின்றது…?

வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். சந்தர்ப்பத்தில் உங்கள் குடும்பத்திலோ அல்லது எதிர்த்த வீட்டிலோ கடுமையாக இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்.

நீயா…? நானா..? என்ற அளவிற்கு ஒருவரை ஒருவர் தாக்குகின்றார்கள். பார்க்கின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகின்றது. இழுத்துச் சுவாசிக்கின்றீர்கள்.

சுவாசித்த உணர்வுகள் உமிழ் நீராகி சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது. அப்புறம் கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “புஸ்…” என்று இரைப்பை (வயிறு) வீங்கிவிடும்.

இரைப்பை ஊதியவுடன் புளிப்பான சத்து எதிர்த்து வெளியில் வரும் (எதிர்கழிக்கும்) “ஏஏவ்வ்வ்வ்…!” என்று வரும். அப்புறம் பார்த்தால் நெஞ்சைக் கரிக்கும்.

முதலிலே சாப்பிட்ட ஆகாரம் இரைப்பையைப் பாதிக்காமால் இருப்பதற்காக அதிலே ஒரு முலாம் பூசி இருக்கும். ஆனால் நாம் சுவாசித்த இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி இரைப்பைக்குள் வந்து பாதுகாப்பாக இருக்கும் அந்த முலாமைக் கரைத்துவிடும்.

ஒரு பித்தளைப் பாத்திரத்தில் (அழுக்கு) களிம்பு பிடித்திருந்ததென்றால் அதில் புளியை வைத்துத் தேய்த்தால் என்ன செய்யும்…? அந்தக் களிம்பை எல்லாம் சுத்தமாக எடுத்துவிடும். அதைப் போல
1.நம் இரைப்பைக்குள் புளித்து விட்டது என்றால்
2.நல்ல சத்துக்கள் எல்லாவற்றையும் பிய்த்துக் கொண்டு வந்துவிடும்.
3.அதற்குப் பிறகு வேறு எதைச் சாப்பிட்டாலும் எரிச்சலாகும்.

சும்மா வெறும் வாழைப் பழத்தைச் சாப்பிட்டால் கூட எரியும். வாழைப் பழமோ இனிப்பாக இருக்கும். ஆனால் அதில் இருக்கக்கூடிய துவர்ப்போ கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கும்.

வாழைக்காயை முக்கால் பழமாக இருக்கும் போது கொஞ்சம் போல் சாப்பிட்டுப் பார்த்தால் தெரியும். அந்தத் துவர்ப்பும் மண்ணையப் பிடிக்கிறதும் கழுத்தைப் பிடித்துக் கொண்டு உள்ளுக்குள் திணறுவதைப் பார்க்கலாம். திணறிக் கொண்டு இருக்கும்.

ஏனென்றால் நம் சிறு குடல் அது சுருங்க முடியாமல் தடுக்கிறது. அப்போது எப்படியோ இக்கட்டுப் பிடிக்கிற மாதிரி இருக்கிறது…! என்னவோ தெரியவில்லை… இப்படி வலிக்கிறதே…! என்ற எண்ணம் தோன்றும்.

நாம் எந்தத் தப்பும் பண்ணவில்லை. வேடிக்கை தான் பார்த்தோம். ஆனால் அது இங்கே நெஞ்சைக் கரிக்கச் செய்கிறது. ஆனால் இதிலே வடிக்கப்பட்ட இரத்தமோ புளிக்கச் செய்த உணர்வு கலந்ததாகப் போகும்.

அந்த இரத்தத்தை இழுத்துச் சுத்தப்படுத்துவதற்காக இருதயம் பம்ப் (PUMP) செய்து உடலிலுள்ள எல்லாப் பக்கமும் அனுப்பும். அப்பொழுது என்ன நடக்கின்றது…?

உதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் காரில் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் வைத்திருக்கின்றோம். இஞ்சின் அந்தப் பெட்ரோலை இழுத்து எல்லாப் பக்கத்திற்கும் வேண்டிய அளவுக்கு எடுத்து அதை இயங்கச் செய்கிறது.

அதே சமயத்தில் பெட்ரோலில் வரும் அந்தக் கசடைச் சுத்தப்படுத்துவதற்கு ஒரு பில்டர் (FILTER) போட்டிருப்பார்கள். ஏனென்றால் இஞ்சினில் உள்ள வால்வு (VALVE) அடைத்து விடாமல் இருப்பதற்காக அதை வைத்திருப்பார்கள்.
1.வரும் அழுக்கை எல்லாம் அது வடிகட்டிச் சுத்தமாக்கும்.
2அந்த வால்வில் அழுக்குகள் அடைத்து விட்டால் பெட்ரோல் உள்ளே போகாது.

அதைப் போல ஆகாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட இரத்தத்தை இருதயம் இழுத்து உடல் முழுவதும் அனுப்பும் நிலையில்
1.அந்த இரத்தத்தில் விஷத்தின் தன்மை இருந்ததென்றால்
2.இருதயத்திலுள்ள வால்வுகள் வீக்கமாகி
3.இரத்தம் வருவதையோ போவதையோ தடைப்படுத்தும்.

இரத்தத்தை இழுப்பதற்காக வேண்டி பிஸ்டன் (PISTON) இழுக்கும். அப்படி இழுத்தவுடன், “பளீர்…!” என்று நெஞ்சை வலிக்கிறது என்போம். சுவாசிக்கும் பொழுது இங்கே “பளிச்…” என்று மின்னும்.
(ஏனென்றால் அங்கே சண்டை போடுவதைப் பார்த்தோம். அவர்கள் ஒருவருக்கொருவர் சப்தம் போடுவதைப் பார்த்தோம் அது நமக்குள் வந்து இவ்வாறு இயக்கும்)\

அப்படி மின்னியவுடன் எப்படியோ இருக்கிறது…! “பளீர்…பளீர்…” என்று மின்னுகிறது. இது வாயுவாக இருக்குமோ…? என்று நினைப்போம்.

இதிலிருக்கக்கூடிய வாயும் (GAS) விஷமும் சேர்த்து என்ன செய்கிறது…! இரத்தம் சீராகப் போவதை நிற்க வைத்து விடுகிறது. அப்போது அழுத்தமாகி விடுகின்றது.

அந்த அழுத்தத்தால் இங்கே நெஞ்சில் ஏதோ இறுக்கிப் பிடித்த மாதிரி ஒரு மூச்சுத் திணறல் போல ஆகும். இரத்தம் சரியானபடி எல்லாப் பக்கமும் (SUPPLY) போகாதபடி கிட்னிக்கு (KIDNEY) வரும்.

உதாரணமாக நாம் ஒரு அமிலத்தையோ அல்லது விஷமான பொருளையோ சாப்பிட்டுவிட்டால் வாந்தி வந்து வெளியிலே கக்கிவிட்டால் மரமரத்துப் போகின்றது.

அதே போல கிட்னி அந்த அசுத்த இரத்தத்தைச் சுத்தப்படுத்தாதபடி மரமரப்பாகி போகும். அதன் இயக்கமெல்லாம் செயலிழந்து போய்விடும். கிட்னி செயலிழந்தபின் விஷம் கலந்த இரத்தம் தன்னாலே உடலுக்குள் போனவுடனே மற்ற உறுப்புகளிலும் எரிச்சலும் வேதனையும் தோன்றும்.

ஏனென்றால் நாம் இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தோம், அங்கே எரிச்சலாகிப் போனது.
1.நம் உடலில் உள்ள நல்ல குணங்களின் சத்துடன்
2.அந்த இரண்டு பேரின் உணர்வுகள் மோதியவுடனே
3.ஐய்யய்யோ… அம்மம்மா…! என்று அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அதே போல
4.நம் உடலுக்குள் இந்த உணர்வுகள் இயக்கி ஐய்யய்யோ… அம்மம்மா… “பளீர்…!” என்று குத்தும்.
5.ஏனென்றால் அங்கே சண்டையை வேடிக்கை பார்த்தோம். இது இங்கே உடலுக்குள் வந்து அதே மாதிரிச் சண்டை போடும்.

ஆனால் நாம் தப்புப் பண்ணவில்லை. இந்த மாதிரி நம் வாழ்க்கையிலே சேர்ந்து விடுகின்றது. இதைத் தடுப்பது யார்…? தடுப்பதற்கு என்ன ஆயுதம் வைத்திருக்கின்றோம்…? சாமி காப்பாற்றுமா…! சாமியார் காப்பாற்றுவாரா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

ஏனென்றால் நம் உயிர் தான் நாம் நுகர்ந்ததையெல்லாம் உடலுக்குள் அணுவாக மாற்றும் கருவாக உருவாக்கிக் கொண்டே உள்ளது. அதை நல்லதாக மாற்றியமைக்க வேண்டும் என்றால் மீண்டும் அவனிடம் தான் வேண்ட வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணிச் சுவாசிக்க வேண்டும். சுவாசிக்கும் பொழுது
1.அந்த அருள் ஒளியை நம் உயிர் ஒளியான அணுவாக மாற்றும்.
2.ஒளியான அணுவாக மாறிய பின் உடலுக்குள் இருக்கும் தீமைகளை அது அடக்கும்.
3.அதையும் ஒளியாக மாற்றும்.

அதாவது… தீமைகளைத் துடைக்க வேண்டும் என்றால் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்… நம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் உயிரிடம் நினைவைச் செலுத்தித்தான் செயல்படுத்த முடியுமே தவிர வேறு யாராலும் மாற்ற முடியாது.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

Leave a Reply