ஒவ்வொருவரையும் அகஸ்தியராக மாற்றச் செய்யும் “தியானப் பயிற்சி…!”

Sage Agatheeswara

ஒவ்வொருவரையும் அகஸ்தியராக மாற்றச் செய்யும் “தியானம்…!”

அகஸ்தியன் வாழ்ந்த அக்காலத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்போது அந்த ஒளியின் சுடர் உங்களுக்குத் தெரியும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் தனக்குள் விளையச் செய்து
2.அந்த உணர்வின் அலையை எமக்குள் (ஞானகுரு) பாய்ச்சச் செய்து
3.அந்த அகஸ்தியன் உணர்வுகளை முதலில் பார்த்த (பெற்ற) நம் குருவின் உணர்வலைகளை
4.அவர் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருப்பதை
5.குரு அருளின் துணையால் அகஸ்தியன் உணர்வுகளை இப்பொழுது நீங்களும் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அதை உணரும் அறிவு பெற்று உங்கள் உடலுக்குள் பதிவாகி அதனின் நினைவாக நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். இப்போது
1.உங்கள் புருவ மத்தியில் இருந்து
உங்கள் உடலுக்குள் ஒளிக் கதிர்கள் பரவுவதை
உங்களால் உணர முடியும் (ஒளியின் சரீரமாவது போன்று…!”)

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் தன் தாய் தந்தையைப் பார்க்கும் போது அவர்கள் உடல்களில் இருந்து வந்த அந்த பச்சிலை வாசனைகள் இப்பொழுது உங்கள் சுவாசத்திற்குள் வரும்.
1.அதை இப்பொழுது நீங்கள் நுகரும் ஆற்றல் பெறுகின்றீர்கள்
2.அந்தப் பச்சிலைகளின் வாசனையை உணர முடியும்.
3.உங்கள் உடலில் உள்ள பல பிணிகளைப் போக்க இது உதவும்.

அகஸ்தியன் தன் நினைவினைத் தாய் தந்தை பால் செலுத்தி அவர் உடலில் இருந்து வந்த மணங்களை நுகரும் போது அவன் மகிழ்ச்சியுற்ற உணர்வுகள் எவ்வாறோ அதைப் போன்று உங்களுக்குள்ளும் அந்த மணங்கள் கிடைக்கும்.

1.அகஸ்தியன் நுகர்ந்த மணங்கள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று இரத்தங்களில் கலந்து
2.கடும் தீமைகளை அடக்கி உங்களுக்குள் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக வரும்
3.அகஸ்தியன் அடைந்த அதே மகிழ்ச்சி உங்களுக்குள்ளும் இப்பொழுது பெருகுவதைப் பார்க்கலாம். உணரலாம்.

உதாரணமாக மலைப் பகுதிகளில் செல்லும் போது
1.ஆங்காங்கு இருக்கும் தாவர இனங்களின் மணங்களை “நுகர்வது போன்று”
2.இப்பொழுது நம்முடைய சுவாசத்தில் நம் உடலுக்குள் பல அற்புத மணங்கள் பரவும்.
3.நினைவுகள் அனைத்தும் மகிழ்ச்சி பெறும்.

அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு தான் பூமியின் துருவப் பகுதி வழியாக வரும் பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தான். துருவன் ஆனான்.

அதனின் வளர்ச்சியில் இந்தப் பிரபஞ்சத்திற்கு எவ்வாறு சக்தி கிடைக்கிறது என்று அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்தான். துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அகஸ்தியன் கண்டுணர்ந்தது போன்று அதன் அறிவின் தொடராக அறிந்துணரும் சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அகஸ்தியன் வழியில் அனைவரும் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

(இவ்வாறு தியானிக்கும் பொழுது அவரவர்கள் உங்களுக்கு என்ன கிடைத்தது…? என்ன தெரிந்தது…? என்று முடிந்த மட்டும் சொல்லுங்கள்…! – ஞானகுரு)

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றேன்.
1.அந்த “ஈர்க்கும் சக்தி” இப்பொழுது வரும் போது
2.நினைவுபடுத்தி (அகஸ்தியனை) அதைப் பெறுகின்றீர்கள்…! அதை உணர்கின்றீர்கள்.

உதாரணமாக பாட நூல்களைப் பள்ளியில் படித்த பிற்பாடு இன்னதுதான் என்கிற வகையில் ஒரு பொருளை இணைத்து விஞ்ஞான அறிவில நீங்கள் காணுகின்றீர்கள் அல்லவா…!

அதைப் போல…… உங்கள் உணர்வால் அகஸ்தியன் கண்டுணர்ந்த
1.அண்டத்தின் உணர்வுகளையெல்லாம் காட்சியாகக் காணும் நிலைகளைப் பெறுகின்றீர்கள்.
2.அந்தச் சக்தியாக நீங்கள் மாறுகின்றீர்கள்
3.அகஸ்தியனாக மாறுவதற்குத் தான் இதைச் சொல்வது

சொல்வது…..! உங்களுக்கெல்லம் அர்த்தமாகின்றதல்லவா…!

Leave a Reply