“உபதேச வாயிலாகத்தான்” உங்களுக்கு பேராற்றல்களையும் சக்திகளையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் – “குரு பலம்” பெறுங்கள்…!”

Venugopalaswamigal

“உபதேச வாயிலாகத்தான்” உங்களுக்கு பேராற்றல்களையும் சக்திகளையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் – “குரு பலம்” பெறுங்கள்…!”

 

வாழ்க்கையிலே நல்லதை எண்ணினாலும் நம்மை அறியாது உடலுக்குள் சேரும் தீமைகளின் விளைவுகளை நாம் போக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டால் தான் மனிதன் மனிதனாக நாம் வாழ முடியும்.

இல்லை என்றால் நம்மை எங்கேயோ இட்டுச் சென்றுவிடும். ஆகையினால் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் பழக்கம் நமக்கு அவசியம் வர வேண்டும்.

இதை எதற்காகச் சொல்கிறேன் (ஞானகுரு) என்றால்
1.சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்கிற மாதிரித் தெரியும்…!
2.புதிதாகப் படிப்பவர்களுக்கு ஏதோ புதிதாகச் சொல்வதாகத் தெரியும்.
3.ஆனால் முன்னாடி (முந்தி) சொன்னதைக் காட்டிலும் சிலதுகளைப் புதிதாகச் சொல்வதாகவும் உங்களுக்குத் தெரியும்.
4.ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி (அவர் எனக்கு இட்ட கட்டளைப்படி)
5.“விண்ணின் ஆற்றல்களை…” உங்களுக்குள் ஒவ்வொரு சமயத்திலும்
6.இந்த “உபதேசத்தின் வாயிலாகத்தான்” வித்துக்களாகப் பதிவு செய்கின்றோம்.
7.குரு பலம் என்பது இது தான்.

மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று தியானித்து அதை உங்களுக்குள் சேர்த்துக் கொண்டால்
1.யாம் (ஞானகுரு) உபதேசித்த வித்துக்குச்
2.சக்தியும் ஆற்றலும் அப்பொழுது கிடைக்கின்றது.

அதன் வழி கொண்டு தான் விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று வளர்த்துக் கொள்ள முடிகின்றது. அந்த விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்றால் உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பத்தைப் போக்க உங்களால் முடிகின்றது.

1.“பிறர் செய்து கொடுப்பார்…!” என்பதற்குப் பதில்
2.இந்த முறைப்படி நீங்கள் வீட்டிலிருந்து சுலப நிலைகள் கொண்டு
3.இருந்த இடத்திலிருந்தே (எந்த இடத்திலிருந்தாலும்) நீங்கள் பெற முடியும்.

ஆகையினாலே எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறத் தியானிப்போம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வலு சேர்த்துக் கொண்ட பின் உங்கள் குலங்களில் தெய்வங்களான மூதாதையர்களை எண்ணி
1.அவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து
2.ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று எண்ணி
3.தினமும் இந்த நினைவினைச் செலுத்திக் கொண்டேயிருங்கள்.

ஏனென்றால் மனித உடலில் நாம் வாழக்கூடிய காலம் மிகக் குறுகியது தான். குறுகியே காலமே வாழப் போகும் இந்த உடலுக்காக வாழாமல் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே என்றுமே ஏகாந்தமாக வாழும் அந்த நிலை பெற ஆசைப்படுங்கள்.

பேரின்பப் பெருவாழ்வு பெறுவீர்கள்…! பேரானந்தப் பெரு மகிழ்ச்சி பெறுவீர்கள்…!

Leave a Reply