ஞானம் பெற நாம் முக்கியமாகச் செய்ய வேண்டியது எது…?

Computer

ஞானம் பெற நாம் முக்கியமாகச் செய்ய வேண்டியது எது…?

ஒரு கம்ப்யூட்டரில் ஒரு மென் பொருளைப் (SOFTWARE) பதிவு செய்து இயக்கச் செய்து விட்டால் அது தனக்குகந்த பணிகளைச் செய்து கொண்டிருக்கும். (இன்று எத்தனையோ எண்ணிலடங்காத SOFTWARE உபயோகப்படுத்துகின்றார்கள்)

அதற்கு மாறுபாடாக எது வந்தாலும் அதைத் தனித்துப் பிரித்துக் காட்டுகின்றது.

ஒரு பொருளையோ, செயலையோ அல்லது அந்தக் கம்ப்யூட்டரையோ “இப்படித்தான் பாதுகாக்க வேண்டும்…” என்று நினைத்து அங்கே கம்ப்யூட்டரில் ஆணையிட்டுப் (COMMAND) பதிவாக்கி வைத்து விட்டால் அப்பொருளை அது பாதுகாத்தே தீரும்.

ஏதாவது மாற்றம் ஆனால் அதைத் தடுத்து நிறுத்தி அதைத் தெளிவாக இயக்குகின்றது. அதுவே சரி செய்கின்றது.
1.கம்ப்யூட்டரில் பதிவு செய்கிற மாதிரி
2.மெய் ஞானத்தின் தன்மைகளை ”அறிய வேண்டும்…” என்று உங்கள் உடலில் நீங்கள் பதிவு செய்த நிலைக்கொப்ப
3.குருநாதரின் உணர்வுகள் உங்களுக்குள் அது இயக்கும்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எத்தனையோ கோடி உணர்வுகளைப் பதிவு செய்து வைத்திருக்கின்றார். கொஞ்ச நஞ்சமில்லை. குருநாதர் பதிய வைத்திருப்பது எண்ணிலடங்காதது.

1.நான் (ஞானகுரு) தனித்து… அதை உங்களுக்குப் பிரித்து
2.எல்லாவற்றையும் ஒன்று போலச் சொல்ல வேண்டும் என்றாலும் கூட ஆயுள் பத்தாது.

அந்தந்தக் கால நிலைக்கொப்ப அது அதைப் பொருத்தி உங்களுக்கு உபதேசிக்க வேண்டும். அந்த உணர்வுக்கொப்பத்தான் என் சொல்லும் வரும். என் பேச்சும் வரும்.

நீங்கள் எதை எண்ணி வருகின்றீர்களோ அதற்கு மேல் எனக்கும்
1.அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை
2.மீண்டும் அந்த உயர்ந்த சக்தியை வளர்த்துக் கொள்வதற்கு உதவும்.

மெய் ஞானிகளைப் பற்றிய உண்மையின் உணர்வுகளை உங்களுக்கு என்று நான் சொல்லும் பொழுது எனக்குள் மீண்டும் நினைவு கொண்டு அதை ஜீவனூட்ட முடிகின்றது.

நான் பேசவில்லை. குரு கொடுத்த அருள் தான் இங்கே பேசுகின்றது. சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா…!

Leave a Reply