காயத்ரி – முழுமையான ஒளி

gayatri-wallpaper.jpg

 காயத்ரி – முழுமையான ஒளி

நம் ஆள்களில் பெரும் பகுதியான பேர் இருக்கிறார்கள். அதாவது யாராவது ஒன்று சொன்னால் போதும்….!
1.குருநாதர் எவ்வளவு பெரிய சக்தி பெற்றவர்…?
2.பார்… அவர்களுக்கெல்லாம் சக்தி கொடுக்கிறார்..!
3.நம்மை ஒன்றும் கவனிக்கவில்லை… என்பார்கள்.

தியான வழியில் எல்லோரும் சென்று கொண்டிருந்தாலும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் நிலையில் ஒருவருக்கொருவர் பேசும் பொழுது இப்படிக் குறையாகப் பேசுவார்கள்.

நாம் போகும் ஞானப் பாதையில் இப்படிப்பட்ட நிலைகள் வரும். அதை எல்லாம் நீங்கள் விட்டுவிட வேண்டும்.

அவ்வாறு குறையாகப் பேசுபவதை நீங்கள் கேட்க நேர்ந்தால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும்.
2.மெய்யை அறியும் வாய்ப்பு – “அந்தச் சந்தர்ப்பம்” அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
3.அந்த மெய்ப் பொருள் அவர்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
4.மெய்யை வளர்க்கும் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
5.அப்போது அந்த ஞானிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இது விளைகின்றது.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் உங்களுக்குள் இவ்வாறு விளைவித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

சமைக்கத் தெரியவில்லை என்றால் ஹோட்டலில் ருசியாகச் சமைக்கின்றார்கள் என்று தெரிந்து தேடிப் போய்ச் சாப்பிடுகின்றோம் அல்லவா…!

அதைப் போல உங்களுக்குள் சமைத்த அந்த அருள் ஞானிகளின் உணர்வை
1.அவர்களுக்குள் சொல்லாகச் சொல்லிப் பதிவு செய்ய வேண்டும்.
2.அப்பொழுது மகரிஷிகளின் உணர்வை அருள் ஞானச் சாப்பாடாக அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள்.

அதைக் கேட்டுப் பதிவாக்கியவர்கள் அடுத்து உங்களிடம்
1.ஒரு காரியம் அன்றைக்கு ஆகவேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
2.நீங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்
3.”நல்லதாகும்…!” என்று சொன்னீர்கள்.
4.அதே போல நல்லது நடந்தது என்று உங்களிடம் வந்து சொல்வார்கள்.

அப்போது எதை நீங்கள் சமைக்கின்றீர்கள்…?

சுவை கொண்ட அருள் ஒளியை உங்களுக்குள் சமைக்கின்றீர்கள். அதை எடுத்துச் சொல்லப் போகும் போது மற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

அப்போது யாருக்குச் செய்கின்றீர்கள்…?

1.அவர்களை ஆண்டு கொண்டு இருக்கும் அந்த ஆண்டவனுக்கு நீங்கள் சேவை செய்கின்றீர்கள்.
2.அங்கே இயக்கிக் கொண்டு இருக்கும் அரும் பெரும் சக்தியான நல்ல குணங்களுக்கு
3.அந்தத் தெய்வங்களுக்கு அமுது கொடுக்கின்றீர்கள். சாப்பாடு கொடுக்கின்றீர்கள்.
4.அவர்கள் அதைக் கேட்டவுடனே அந்த நல்லதைச் சாப்பிட்டவுடனே என்ன செய்கின்றது…? மகிழ்ச்சி பெருகுகின்றது.

அதைத்தான் யாம் உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

இராமன் எப்போது கல்யாணராமன் ஆகின்றான்…? பகைமை உணர்வை அகற்றப்படும் போது அரவணைக்கும் சக்தி பெறுகின்றது. சீதாவை அரவணைக்கின்றான். (இராமன் என்றால் எண்ணம்; சீதா என்றால் சுவை)

1.உங்கள் உடலோடு ஒட்டி அந்தச் சுவையான உணர்வு மகிழ்ச்சியான வரப்போகும் போது சீதா.
2.அதனுடன் சேர்த்த அந்த மணத்தின் தன்மை ஞானம் சரஸ்வதி.
3.அதன் வலிமை கொண்டு ஒளியின் உணர்வாக “காயத்ரி…!” முழுமை அடைகின்றீர்கள்.

Leave a Reply