“நேரலை மூலமாக (LIVE)” டி.வி.யை ரசித்துப் பார்க்கும் போது நடந்த நிகழ்ச்சி

Sage

“நேரலை மூலமாக (LIVE” டி.வி.யை ரசித்துப் பார்க்கும் போது  நடந்த நிகழ்ச்சி

இப்போது விஞ்ஞான அறிவால் இன்று இயந்திரத்தின் மூலமாகப் பதிவு செய்த படங்களை (LIVE) ஒலி ஒளி என்ற நிலைகளில் செயற்கைக் கோள் உதவியுடன் டி.வி. ஸ்டேசன் மூலமாக நேரடியாக ஒலி பரப்புகின்றார்கள்.

அதைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதே இயக்கச் சக்தியுடன் தொடர் கொண்ட அதே அலை வரிசையில் நம் வீட்டில் டி.வி.யையோ இன்டெர்னெட் மூலமாகவோத் திருப்பினால் எந்த அலை வரிசையில் வெளிப்படுத்துகின்றனரோ அதனைக் கவர்ந்து அங்கே நடக்கும் காட்சிகளைப் பார்க்கின்றோம்.

விளையாட்டுத் திடல்களில் (STADIUM) விளையாடுகின்றனர். அந்தத் திடல்களில் விளையாடும் போது அதற்குகந்த இயந்திரத்தைக் கொண்டு அதை நேரலை ஒலி ஒளிபரப்பு என்று செய்கின்றார்கள்.

இன்ன நேரத்தில் இன்ன அலை வரிசையில் ஒளிபரப்பாகின்றது என்றால் அதன் வழி நாம் நேரடியாகக் காண முடிகின்றது.

அங்கே விளையாடுபவன் உணர்வுபூர்வமாக விளையாடுகிறான் என்றால்
1.ஒரு ஆட்டக்காரன் மேல் நாம் மனதைச் செலுத்தினால்
2.அவன் ஜெயிக்க ஜெயிக்க நமக்கும் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.
3.அவன் ஜெயித்து வரும் நினைப்பில் ஒரு தரம் வீழ்ந்து விட்டால்
4.அடடா…! என்று உடனே வேதனை உணர்வு வரும்.

தன்னை அறியாமலே ஆட்டம் விளையாடுபவன் மீது பற்று கொண்ட உணர்வுகளால் தோல்வி அடைந்தால் வேதனைப்படும் உணர்ச்சிகளை ஊட்டி விளையாட்டு அரங்கைப் பார்க்கப்படும் போது அங்கே அமரவிடாது துடித்து எழுந்து வருவான்.

அப்பொழுது பகைமை கொண்ட உணர்வுகள் அங்கே வருகின்றது. எந்த விளையாட்டு வீரனின் மேல் பற்று அதிகமானதோ நாளடைவில் “இப்படி விளையாண்டு விட்டானே…!” என்று எண்ணும் பொழுது அவன் மேல் வெறுப்பாகின்றது.

நம் தினசரி வாழ்க்கையில் டிவியிலும் சரி இன்டெர்னெட் மூலமாகவும் சரி இவ்வாறு ஒளிபரப்புகளைப் பார்க்கும் பொழுது சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அறியாமலே எப்படி நம்மை இயக்குகின்றது…? என்று ஒவ்வொருவரும் பார்க்கலாம்.

இது லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒருவர் டி.வி. மூலமாக அரங்கத்தில் விளையாடும் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு உள்ளார்.

உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அவரின் மகன் இடைமறித்து ஏதோ சொல்கின்றான். சொன்னவுடனே தன் மகனைத் துப்பாக்கியால் சுட்டு விட்டான்.

1.விளையாட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாலும்
2.மகன் மேல் பற்று கொண்டிருந்தாலும்
3.தன் மகன் பண்பால் அவன் எதையோ சொல்ல முயற்சிக்கின்றான் என்றாலும்
4.விளையாட்டைத் தான் டி.வி.யில் பார்ப்பதைத் தடுக்கின்றான் என்ற அசுர உணர்வு கொண்டு
5.தன் மகனையே துப்பாக்கியால் சுடுகின்றான்.

விஞ்ஞான உலகில் வாழும் மனிதன் விஞ்ஞான அறிவு கொண்டு வாழப்படும் போது “அஞ்ஞான வாழ்க்கையே” அவன் வாழுகின்றான். மெய் ஞான வாழ்க்கைக்கு அவனால் வர முடியவில்லை.

அஞ்ஞான வாழ்க்கை வரப்படும் போது எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது அதன் மேல் அவன் பற்று கொண்டு விளையாடும் போது அவனுடைய செயல்களை ஆர்வமாகக் கவனிக்கின்றான்.

ஆனால் அந்த நேரங்களில் தன்னுடைய பிள்ளை அருகிலே வரப்படும் போது
1.”இவனால் நமக்குத் தடையாகின்றது…!” என்று இந்த வெறி கொண்டு அவனைச் சுடுகின்றான்
2.அவன் பிள்ளை தவறு செய்தானா…? இல்லயே…!

அவன் நுகர்ந்த சந்தர்ப்பம் இது உருவாகி உணர்ச்சிகளை இயக்கி அவனைத் தாக்கச் செய்கின்றது. ஆகவே விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை தான் வாழுகின்றான்.

தன் மகன் கூறும் உணர்வை தந்தையால் கேட்க முடியவில்லை. எதனால் இவன் கூறினான் என்ற நிலையை அறிய முடியவில்லை.

பையனும் தான் தாக்கப்படும் போது அவனிடம் இருக்கும் துப்பாக்கியை வாங்கித் தந்தையின் மண்டையிலே அடித்து உடைத்து விடுகின்றான்.

இவ்வாறு பற்றுடன் டி.வி..யைப் பார்க்கும் நிலையில் அதற்குத் தடையானால் சிந்தனைகள் குறைந்து அசுர உணர்வின் இயக்கமாகத்தான் மாற முடிகின்றது.

விஞ்ஞான அறிவு மனிதனுடைய உடல் இச்சைக்குத்தான் கொண்டு செல்கிறது. அஞ்ஞான வாழ்க்கை வாழ்வதற்குத்தான் அடிகோலுகிறது. மனிதனின் சிந்தனைகளை அழித்துக் கொண்டிருக்கின்றது.

இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் தன்னை அறிந்து… இந்த மண்ணை அறிந்து… “விண்ணை அறிந்தவர்கள்” இன்று மெய் ஞானிகளாக அழியா ஒளிச் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்தில் பேரானந்தப் பெரு நிலை பெற்று வாழ்கின்றார்கள்.

அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை நாம் பெற்றால் மனிதன் என்ற முழுமை அடைந்து இந்தப் பிறவியின் பலனை அடைந்து பிறவா நிலையை அடையலாம்.

Leave a Reply