அணுவைப் பிளந்து மற்றதை அழிக்கச் செய்யும் விஞ்ஞானத்தின் செயலும்… அணுவைப் பிளந்து ஒளியாக மாற்றச் செய்யும் மெய் ஞானியின் ஆற்றலும்…!

Astral path and ways

அணுவைப் பிளந்து மற்றதை அழிக்கச் செய்யும் விஞ்ஞானத்தின் செயலும்… அணுவைப் பிளந்து ஒளியாக மாற்றச் செய்யும் மெய் ஞானியின் ஆற்றலும்…!

 

அணுவைப் பிளந்து இன்று விஞ்ஞானி அணு குண்டாக உருவாக்குகின்றார்கள். அணு குண்டை வீசிய பின் அந்த அணுக்கதிர் இயக்கங்கள் எல்லாவற்றையும் அழித்து விடுகின்றது.

அணுவிற்குள் இயங்கும் அந்த ஆற்றலே துடிப்பின் நிலைகள் கொண்டு மண்ணை வளர்த்தது. அதே ஆற்றல் தான் வீரியத் தன்மை கொண்டு உலோகத்தையும் விளைய வைக்கின்றது.

அதே அணுவின் ஆற்றல் ஒரு மரத்திற்குள் சிறிதளவு இருக்கப்படும் போது அது துடிப்பின் நிலைகள் கொண்டு மரத்தை இயக்கச் செய்கின்றது… அதை வளர்க்கவும் செய்கின்றது.
1.ஆனால் அணுவைப் பிளந்து அணுகுண்டாக வெடிக்கச் செய்யும் பொழுது
2.அதீதமான வீரியமான ஆற்றல்களை வெளிப்படுத்துகின்றது.

அவ்வாறு வெளிப்படும் அந்த ஆற்றல்களை சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்ப காந்தங்கள் கவர்ந்து கொள்கின்றது.

கவர்ந்த பின் மற்றொன்றுடன் மோதும் போது
1.உதாரணமாக மரம் பச்சையாக இருந்தாலும் அந்தப் பச்சையான மரத்திற்குள் மோதும் போது
2.அதற்குள் மறைந்துள்ள அணுவிற்குள் அதே அணு தன் இனத்தைப் பெருக்கி மரத்தைக் கருக்கச் செய்துவிடுகின்றது
3.காற்றலைகளாக மாற்றி புயலைப் போன்று தன் இனத்தைப் பெருக்கி எல்லாவற்றையும் அழித்து விடுகின்றது.
4.தன் உணர்வின் சக்தியை ஆற்றல் மிக்கதாக விளைந்து அதனின் வீரியம் இருக்கும் மற்றதை அழித்துக் கொண்டே இருக்கின்றது.
5.விஞ்ஞானிகள் புற நிலைகளில் மற்றதை அழிப்பதற்காக அணுகுண்டைச் செய்து வைத்துள்ளார்கள்.

ஆனால் மெய் ஞானிகளோ தன் உடலுக்குள் விண்ணின் ஆற்றல்களைச் சேர்த்து விளையச் செய்து வாழ்க்கையில் வந்த விஷத்தின் தன்மைகள் அனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றினார்கள்.

1.தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்த வீரியச் சக்தியின் துணை கொண்டு
2.விண்ணிலிருந்து வரக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையாக இருந்தாலும் அதைப் பிளந்து
3.அந்த உணர்வின் சக்தி கொண்டே ஒளிச் சரீரமாக ஆகி
4.சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் நிலைத்து வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் ஒளி அலைகளை நாம் எடுத்து நமக்குள் வலு ஏற்றிக் கொண்டு நம் குலதெய்வங்களான முன்னோர்களின் உயிராத்மாக்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) போன்று நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் சுழலச் செய்ய வேண்டும்,

இதைப் போல நாம் செய்தால் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் உணர்வை அவர்கள் சுவாசிக்கப்படும் போது இன்னொரு உடல் பெறும் சரீரத்தைக் கருக்கிவிட்டு ஒளியின் சரீரமாகப் பெறுகின்றார்கள்.

அணு குண்டை வெடித்தபின் அது எப்படி மற்றது அனைத்தையும் கருக்கிவிட்டு ஒளியாகப் பெருக்கிக் கொண்டே போகின்றதோ அதைப் போல உயிராத்மாவில் சேர்ந்த தீமைகளைப் பிளந்து விட்டு (கரைத்துவிட்டு) மெய் ஒளியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றார்கள்.
ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி சப்தரிஷி மண்டலங்களை எண்ணி அந்த உணர்வின் சக்தியை நம் உடலுக்குள் கூட்டி வளர்த்துக் கொண்டால்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் மூதாதையர்களின் உயிராத்மாக்களை
2.சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்து
3.அவர்களைப் பிறவா நிலைகள் பெறச் செய்ய முடியும்.

முன்னோர்கள் அங்கே செல்ல வேண்டும் என்று நாம் உந்தித் தள்ளி அதனுடன் இணைக்கப்படும் போது அவர்களின் உணர்வின் சத்து நம் உடலிலே இருப்பதால் அவர்கள் பெற்ற வழிகளில் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை நாமும் அடைய முடியும்.

சப்தரிஷி மண்டலமே மனிதனின் கடைசி எல்லை…!

Leave a Reply