“அடிக்க…அடிக்க அடி மேல் அடிக்க…அடிக்க…!” பேராற்றல் மிக்க சக்திகள் உங்களுக்குள் வரத் தொடங்கும்…! – பயிற்சி

Divine energy and Power

“அடிக்க…அடிக்க அடி மேல் அடிக்க…அடிக்க…!” பேராற்றல் மிக்க சக்திகள் உங்களுக்குள் வரத் தொடங்கும்…! – பயிற்சி

நாம் தவறே செய்திருக்க மாட்டோம். யாராவது ஒன்றைச் சொல்லி இருப்பார்கள். சாபமிட்டார்கள் என்றால் அதை நாம் கூர்ந்து கவனித்துக் காது கொடுத்துக் கேட்டால் போதும்
1.நான் ஒன்றும் செய்யவில்லையே…
2.”இப்படிச் செய்கிறார்களே…! என்று நாம் பதறிப் போவோம்…..

அப்போது அவர்கள் சொல்வதை நம் உடலிலே வினையாகச் சேர்த்து விடுகின்றோம். இது கடுமையான விஷம். இதை மாற்ற வேண்டும் என்றால் ஒரு ஐந்து நிமிடம் வலுவாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டிவிட்டு அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும். அதற்குப் பின் யார் நம்மைச் சாபமிட்டாரோ…
1.மகரிஷியின் அருள் சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும்.
2.என்னைப் பார்த்துப் பேசும் போது அவர் நல்ல சொல்களைச் சொல்லும் நிலை ஏற்பட வேண்டும்
3.அவர் பிறரிடம் பேசினாலும் அந்தப் பேச்சு நல்லது பெறக்கூடிய நிலையாக உருவாக வேண்டும் என்று
4.அவருடைய எண்ணத்தை நமக்குள் ஊடுருவ விடாதபடி இதைத் தடுக்க வேண்டும்.

இது தான் சூரசம்ஹாரம் என்பது.

“தீபாவளி” – அதாவது அசுர சக்தியைச் சம்ஹாரம் செய்வது என்றால் பிறர் பேசக்கூடிய சாபங்கள் வந்து
1.நம்மை அழித்து விடக்கூடாது
2,நம் நல்ல எண்ணத்தை அழித்து விடக்கூடாது.
3.நம் உடலுக்குள் நோயாக வந்து விடக்கூடாது.

இதற்காக வேண்டித்தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்க்க வேண்டும் என்று சொல்வது. இது தான் ஆத்ம சுத்தி என்பது. நம்மைத் திட்டினார்கள் என்றால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

குழந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்றால் “இப்படி ஆகிவிட்டதே…!” என்று வேதனைப்படுகின்றோம். ஏனென்றால் குழந்தை மேல் நாம் பாசமாக இருக்கின்றோம்.

அப்போது அந்த நோய் என்ன செய்கின்றது…? நம்மைக் கொல்கின்றது. அப்போது அந்த அசுர சக்தியை என்ன செய்ய வேண்டும்…?

அந்த சக்தியால் தான் நோயாக ஆகி அவஸ்தைப் படுகின்றார்கள். ஆகவே அந்த அசுர சக்தி நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும். அதை நீக்குவதற்கு
1.அம்மா அப்பா அருளால் மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்
2.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் தியானிக்க வேண்டும்.
3.இரண்டு நிமிடம் மூன்று நிமிடம் கூட உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் படரச் செய்யலாம்.

ரொம்பவும் பாசமாக நெருக்கமாக இருந்தீர்கள் என்றால் அவர்கள் உணர்வைப் பார்த்தவுடனே அந்த நோயை இழுத்து உங்களைப் பதறச் செய்யும்.

அந்த நேரத்தில் கொஞ்ச நேரமாவது மன பலத்தை உங்களால் கொண்டு வர வேண்டும் என்றால் முடியாது.

அந்த மன பலம் பெறுவதற்காக வேண்டித்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு அந்தச் சக்திகளைக் கிடைக்கச் செய்வதற்காக இதை உபதேசிக்கின்றோம்.

இந்தக் காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்களைக் காத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.
1.ஒரு தடவைச் சொல்லி வரவில்லை என்றாலும்
2.அடுத்த கணம் அதைத் தூண்டி எடுக்க முடியும்
3.ஏனென்றால் “அடிக்க…அடிக்க அடி மேல் அடிக்க…அடிக்க…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் வந்து கொண்டே இருக்கும்…!”

ஒன்றும் அறியாத குழந்தையாக இருக்கின்றது. நோயாகி விட்டதென்றால்
1.மகரிஷிகள் அருள் சக்தியால் உன் நோய் விலகும்
2.நீ உடல் நலம் பெறுவாய்… சீக்கிரம் குணமடைவாய்…! என்று
3.அந்தக் குழந்தையின் “கண்ணிலயே பார்த்து” இதைச் சொல்லுங்கள்.

வெறுமனே தண்ணீரையோ அல்லது மருந்தோ ஏதோ ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுடன் அதைக் குழந்தைக்குக் கொடுங்கள்.

குழந்தை உடலில் நோய் உண்டாக்குவதைச் சம்ஹாரம் செய்ய வேண்டும். அதே சமயத்தில் நமக்குள்ளும் அது வராதபடி சம்ஹாரம் செய்ய வேண்டும்.

ஒருவர் மேல் நாம் பிரியமாக இருக்கும் போது அவர் துன்பப்படுவதைப் பார்த்தால் நமக்குள்ளும் இருள் சூழ்ந்து விடுகின்றது. அந்தத் துன்பத்தில் இருந்து நம்மால் விலக முடியவில்லை.

ஆனால் மேலே சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்று எண்ணிணால் இரண்டு பேரும் நன்மை அடைகின்றோம்.
1.அவர்களையும் நோயிலிருந்து விலக்குகின்றோம்…
2.நம்மையும் காத்துக் கொள்கின்றோம்…!

“வியாபாரம் ஆகவில்லையே…! என்று அடிக்கடி நினைத்தோம் என்றால் அந்த வேதனையை எடுத்துக் கொண்டு அடுத்தாற்போல சரக்கு எடுத்துக் கொடுத்தால் அந்த உணர்வு வாங்குபவர்களிடமும் இயக்கி நம் வியாபாரத்தை கூடக் கொஞ்சம் மந்தமாக்கும்.

ஆகவே கடையில் போய் உட்கார்ந்தவுடனே இத்தகைய அசுர சக்திகள் நம் உடலில் இல்லாதபடி… அவைகள் நம்மை இயக்காதபடி… சம்ஹாரம் செய்ய வேண்டும்.

கடையில் போய் அமர்ந்தவுடனே… மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி இந்தக் கடை முழுவதும் படர வேண்டும். இங்கே வரும் வாடிக்கையாளர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பரப்புங்கள்.

அந்த உணர்வுடன் பொருளை எடுத்துக் கொடுங்கள். உங்கள் வியாபாரம் சீராகும். உங்களுக்கும் உங்கள் கடையில் பொருளை வாங்குவோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

செய்து பாருங்கள்….!

Leave a Reply