மனிதர்கள் வாழ்ந்த வியாழன் கோளில் இன்றும் வளர்ச்சியற்ற சில உயிர் இனங்கள் வாழ்கின்றது…! தெரிந்து கொள்ளுங்கள்

view of jupiter

மனிதர்கள் வாழ்ந்த வியாழன் கோளில் இன்றும் வளர்ச்சியற்ற சில உயிர் இனங்கள் வாழ்கின்றது…! தெரிந்து கொள்ளுங்கள்

 

நம் நாட்டிற்குள் தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய அவர்கள் எத்தனையோ நிலைகள் இங்கே படரச் செய்தது இந்தத் தமிழ் நாட்டில் தான்.

நான் (ஞானகுரு) தமிழன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை.

“தென்னாட்டுடைய சிவனே போற்றி…
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!” என்று சொல்கிறோம் அல்லவா…

இந்தத் தென்னாட்டிலே தோன்றிய இந்த அகஸ்தியன் தான் உலகைக் காத்திட வட துருவத்தின் நிலைகள் பனி உறைந்து ஒரு பக்கமாகத் திரும்பும் நிலையிலிருந்து தென் பகுதியில் வெப்பத்தின் தணலைக் கூட்டச் செய்து பூமியைச் சமப்படுத்தினான்.

அதனால் தான் பூமியில் நடு மையமாக இருக்கும் இடங்களில் மனிதர்கள் உயிர் வாழச் செய்யும் நிலையும் இங்கே வந்தது.

இல்லை என்றால் வியாழன் கோள் போல் முழுவதும் பனிப் பிரதேசமாக மாறியிருக்கும்.

சிறிதளவிற்கு ஒரு நொடி மாறினாலும் நமது பூமி பெரும் பனிப் பாறையாக மாறி உயிர் இனங்களே வாழ முடியாத நிலைகள் ஆகிவிடும்.

அப்படியே உயிரினங்கள் வாழ்ந்தாலும் பனிப் பகுதிகளில் மீன் இனங்களும் மற்ற இனங்களும் வாழ்வது போல மனித இனமே அல்லாது நீர் வாழும் உயிர் இனங்களாகத் தான் திரிய முடியும்.

அன்று பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளிலும் நம் பூமியைப் போல் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

இன்று நாம் செயல்படுத்தும் விஞ்ஞானக் கருவிகளைக் காட்டிலும் பன் மடங்கு நவீனமாகச் செயல்படுத்தப்பட்டு அதன் வழிகளிலே மாற்றங்கள் ஆகி வியாழனின் சுழற்சி வேகம் கூடி பனிப் பாறையாக மாறிவிட்டது.

பனிப் பாறைகளில் உயிரினங்கள் எப்படி வாழுகின்றதோ இதைப் போல மனிதனாக இருப்பவரும் வளர்ச்சி அற்ற நிலைகள் கொண்டு உயிரினங்களாக இன்றும் வியாழனின் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் சில உணர்வலைகள் இன்று பிரபஞ்சத்திலும் மிதந்து கொண்டு வருகின்றது.

மிதந்து வந்தாலும் அவ்வாறு வந்த நிலைகளால் தான் அந்த உயிரணுக்கள் நமது பூமிக்குள் கவரப்பட்டு உயிரணுக்கள் வளர்ச்சி அடைந்து மனித உருவாக நாம் வந்துள்ளோம்.

இப்பொழுது வந்த நிலை அல்ல அது. இந்தப் பிரபஞ்சத்திற்கு சூரியன் இயக்கச் சக்தியாக இருந்தாலும் ஞானிகள் வியாழனைக் குருவாகக் காட்டினார்கள்.

இன்று இங்கிருக்கும் விஞ்ஞான அறிவைக் காட்டிலும் அன்று வியாழன் கோளில் விஞ்ஞான அறிவின் அபரித வளர்ச்சியாகி இங்கே அணுகுண்டுகள் செய்தது போல செய்து இருள் சூழச் செய்து மனித இனமே முழுமையாக அழிந்துவிட்டது.

ஆனால் அன்று இது நடந்தாலும் இயற்கையின் நிலைகள் கொண்டு வளர்ந்ததனால்
1.உயிரணுவின் தோற்றங்கள் அது மாற்றமில்லாது
2.அதே உயிர் இனங்கள் இதே பிரபஞ்சத்தில்
3.இன்று நாம் மனிதனாக வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால் இன்றைய பிரபஞ்சமே கார்த்திகை நட்சத்திரம் அசுவினி போன்ற ஐந்தாறு நட்சத்திரங்கள் தனித் தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாகப் பிரிந்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டது.

அதனால் இங்கே நாம் மனிதர்கள் வாழத் தேவையான சிந்தனைக்குரிய நிலைகள் அழிந்து கொண்டும் தெரிந்து செயல்படும் நிலைகள் மாறிக் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி நம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலையாகி நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.

ஒரு குடி போதையில் உள்ளவர்களை நீங்கள் என்ன தான் எடுத்துச் சொன்னாலும் அது தான் அவர்களுக்கு ரசனையாக இருக்கும்.

இதைப்போல விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த பல பல கருவிகளையும் உபகரணங்களையும் உபயோகப்படுத்திப் பழகிவிட்டோம். அது இல்லை என்றால் இன்றைய சூழலில் நம்மால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.

உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருந்தாலும் மைக் இல்லாமல் பேசினால் அடுத்த நிமிடம் இங்கு யாரும் அமர்ந்து இருக்க மாட்டார்கள்.

இந்த மைக்கின் மூலம் விஞ்ஞான அறிவில் பலரைக் கேட்டு அறியச் செய்கின்றோம். டி.வி. ரேடியோ ஸ்டேஷன் மூலம் அந்த அலைகளைப் பரப்பினால் உலகம் முழுவதற்கும் அறியும் தன்மை வருகின்றது.

விஞ்ஞான அறிவால் எங்கிருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள முடிகின்றது. எங்கேயோ விளையாடும் விளையாட்டினை வீட்டில் அமர்ந்தபடியே பார்க்கின்றோம்.

1.இப்படி நம்முடைய உடலின் சுகத்திற்காக மற்றதை மறந்து
2.மதுவை அருந்தினால் மற்றதனைத்தையும் சிந்தனையற்றுச் செயல்படுத்துவது போல்
3.விஞ்ஞான அறிவில் சிக்கிக் கொண்டுள்ளோம்.

போதைப் பொருளை உபயோகித்தது போலவே விஞ்ஞான உணர்வில் சிக்குண்டு மனிதச் செயலை இழந்து மனிதனே கூண்டுடன் அழிந்திடும் நிலையாக வளர்ந்து வந்துவிட்டது.

ஆகவே நம்மை அறியாது நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அந்த உணர்வின் நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

1.”மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்” உணர்த்திய அருள் வழிப்படி
2.மெய் உணர்வின் ஆற்றலுடன் நாம் அனைவரும் இணைந்து
3.அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையாக
4.மகா மகரிஷிகளின் அருள் உணர்வுடனே என்றுமே நாம் ஒன்றி வளர்வோம்.

Leave a Reply