மதங்களைப் பற்றிய உண்மை நிலைகள் – மெய் ஞானிகள் அன்று சொன்னது

நாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்

மதங்களைப் பற்றிய உண்மை நிலைகள் – மெய் ஞானிகள் அன்று சொன்னது

 

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் உள்ள உண்மைகள் காலத்தால் மறைந்துவிட்டது. எல்லாம் சாங்கிய சாஸ்திரமாகிப் போய்விட்டது.

விநாயகருக்கு அருகம்புல்லை மட்டும் இரண்டு வைத்தால் போதும்…! ஏற்றுக் கொள்வார். அதுவும் முடியாவிட்டால் பக்தியோடு பக்கத்தில் இருக்கும் தழைகளைப் போட்டு “இந்தாப்பா உனக்குச் சாப்பாடு…!” என்று சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்வார் என்று இப்படி மாற்றி அமைத்துவிட்டார்கள்.

அரசன் தான் வாழ உருவாக்கிய நிலைகளில் “சரணாகதி தத்துவமாகத்தான்…” இன்று இயக்கப்பட்டு அதைக் காக்கும் நிலைகளில் தான் எல்லா மதங்களுமே செயல்பட்டுக் கொண்டுள்ளது.

அதைப் பாதுகாக்கும் குருமார்களாகத் தான் இருக்கிறார்களே தவிர மெய் ஞானிகள் காட்டிய நிலைகளில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ கிறிஸ்துவன் என்றோ அல்லது மற்ற நிலைகளிலோ எதுவுமே கிடையாது.
1.உணர்வுக்கொப்ப உணர்ச்சியும்
2.உணர்ச்சிக்கொப்ப இயக்கமும் (சொல் செயல்) என்ற நிலைகள் தான் ஞானிகளால் உணர்த்தப்பட்டது.

ஆண்டவன் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று ஒரு சாரார் உணர்வைப் பதிவு செய்கிறார்கள். அடுத்து கடவுள் எங்களுக்கு இப்படிச் சொல்கிறார் என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் இந்த இருவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை.

கர்த்தர் வான் வெளியில் இருந்து எடுத்துக் கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். அந்த மெய் ஞானிகளின் உண்மை வழிப்படி நமது உயிரே கர்த்தராகிறது.

“ஆண்டவா…” என்று சொல்கிறார்கள். எதனின் உணர்வை எடுத்தோமோ அது நம் உடலாகிறது.
1.இந்த உடலை ஆள்வது யார்?
2.நமது உயிர் தான் – “ஆண்டவா…!”

கட + உள் = கடவுள் – ஆகவே உள் நின்று நம்மை இயக்கி உணர்வை உடலாக உருவாக்குவது “கடவுள்…” உருவாக்குவதால் ”ஈஸ்வரா…” என்று உயிரைச் சொல்கிறார்கள்.

உருவாக்கிய உணர்வுக்குள் நம்மை ஆளும் ஆண்டவனாக இருக்கிறான். நம்மை ஆள்வது அவன் தான்.

நாம் எண்ணிய உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை இரையாக்குகிறார்.
1.இரையின் உணர்வு உடலாகிறது.
2.உணர்வின் இயக்கம் செயலாகிறது… “தெய்வமாகிறது…!” என்று
3.ஆதியிலே தோன்றிய “அகஸ்தியன்” தெளிவாகக் கூறியுள்ளார்.

இதைச் சீராகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த மெய் ஞானிகள் சொன்ன உணர்வுகளை இணைத்து இணைத்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஒன்று போல் வரும்.

கார்… ரேடியோ… போன்ற உபகரணங்களில் அதற்குள் இருக்கும் உறுப்புகளைத் தனித் தனியே செய்கின்றார்கள். அதில் இந்தெந்த உறுப்புகள் (பாகங்கள்) இந்தெந்த வேலைகள் செய்யும் என்று உருவாக்கி வைத்து விடுகிறார்கள்.

அதைச் சேர்த்து இணைத்து முழுமையாக ஆன பிறகு அது அது அதனதன் வேலைகளைச் செய்யும். அந்த உபகரணம் சீராக இயங்கும்.

உதாரணமாக ஒரு மைக் (MIC) வைத்துப் பேசினால் அங்கே சப்தம் வெளி வருகிறது. ஒலியைப் பெருக்கும் ஆம்ப்ளிபையர் (AMPLIFIER) ஒன்றோடொன்று சேர்த்து ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்யும். ஆனால்
1.அதிலே கொஞ்சம் (அழுத்தமாகி எதிர் நிலையானால்) ரிப்பேர் ஆனால்
2.“கரா… புரா… உஸ்ஸ்ஸ்… உய்ய்ய்…” என்று சப்தம் எழுப்பிவிடும்
3.மைக்கில் யார் பெசினாலும் கேட்க முடியாது அர்த்தமும் ஆகாது
4.மீறிக் கேட்டாலும் எரிச்சலாகிவிடும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உணர்த்திய அருள் வழிப்படி அந்த ஞானிகளும் மகரிஷிகளும் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நாம் சாமியை இப்படிக் கும்பிட்டோம்…! “இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே…?” என்று நினைத்தால் “கரா…புரா…” ஆகிப் போய் விடுகிறது.

நாம் விநாயகரைக் களிமண்ணால் செய்து (விநாயகர் சதுர்த்தி அன்று) எப்படியெல்லாம் கும்பிட்டோமே…, “இவர் இப்படிச் சொல்கிறாரே” என்று
1.இரண்டையும் கிராஸ் (CROSS) பண்ணி நினைத்தீர்களானால்
2.நான் சொல்வதை நீங்கள் CROSS பண்ணிக் கொண்டே..
3.”கரா..புரா…” என்று பண்ணிக் கொண்டே இருப்பீர்கள்.
4.அர்த்தமே உங்களுக்கு ஆகாது.

அகவே இயற்கையின் உண்மையின் நிலைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மெய் ஞானிகளின் உணர்வுகளை முதலில் பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

அதைப் பதிவு செய்த பின் உங்கள் வாழ்க்கையில் எது… எப்படி…? என்ற நிலைகள் தெளிவாகத் தெரியும். நான் இப்போது சொல்வதை அப்படியே கிரகித்து (RECORD) செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலில் இருக்கக்கூடிய நிலைகள்
1.உங்கள் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் எந்தெந்தக் குணங்கள்
2.ஏன் அப்படி வந்தது என்று சிந்தித்துப் பார்த்தால்
3.இது கெட்டது… இது நல்லது…! என்று உங்களால் அறிய முடியும்.

உங்களை நீங்கள் அறிந்து கொள்ளத் தான் இதையெல்லாம் கூறுகிறேன். ஏனென்றால் இயற்கை எப்படி நம்மை வளர்க்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானிகளும் மகரிஷிகளும் சொன்ன சாஸ்திரப்படி நாம் வாழ்ந்தால் என்றுமே அழியா நிலையாக மரணமில்லாப் பெரு வாழ்வாக ஒளியின் சரீரமாக வாழ முடியும்.

Leave a Reply