தீமை செய்பவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்தால் அது நம்மையும் அழித்துவிடும் – இதிலிருந்து மீளும் வழி

அருள் சக்தி

தீமை செய்பவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்தால் அது நம்மையும் அழித்துவிடும் – இதிலிருந்து மீளும் வழி

கடும் சொல்லாகவோ அல்லது மிகவும் தீமையானவைகளையோ செய்தார்கள் என்றால் நாம் பதிலுக்கு எப்படி எண்ணுகின்றோம்?

அவரைத் தாக்க வேண்டும்… அவருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆத்திரத்துடன் சொல்கின்றோம். இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

நேரடியாக ஒருவரைச் சொல்ல வேண்டாம். வேறு யாரையாவது சொன்னாலும் போதும்.

வேடிக்கையாகப் பார்த்த இந்த உணர்வுகள் உற்றுப் பார்த்தோர் உடலுக்குள் பதிவாகி விளைந்து அவர்களையும் அந்தச் செயல்களுக்கு ஆளாக்கி விடும்.

இன்னொருவரைக் கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னால்
1.அதைக் கேட்டவுடனே இந்த உணர்வு
2.“பார்… இப்படிச் சொல்கின்றான் பார்…” என்று எண்ணிய அந்த உணர்வுகள்
3.கெட்டுப் போகும் நிலையை உருவாக்குகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. சந்திக்கும் சந்தர்ப்பம் அவ்வாறு ஆக்கிவிடுகின்றது.

சந்தர்ப்பத்தால் இப்படிச் சந்திக்கும் போது இந்த உணர்வுகள் நமக்குள் வந்தால் ஊழ்வினையாக (வித்தாக) மாறிவிடுகின்றது.
1.பின் அதனுடைய நினைவு வரும் போது
2.வினைக்கு நாயகனாக இயக்கி
3.அதன் வழியிலே நம்மை அழைத்துச் செல்லுகின்றது.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்கு அந்த அகஸ்தியனால் காட்டப்பட்டது தான் “விநாயகர் தத்துவம்…”

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து துருவ நட்சத்திரமானான். அதை எவரொருவர் பின்பற்றினாரோ அவர்கள் சப்தரிஷி மண்டலம் சென்று அடைந்தார்கள்.

அகஸ்தியன் இந்த வாழ்க்கையில் தீமையை அகற்றியவன். அந்த உணர்வின் சக்தியை நாம் நுகரப்படும்போது ரிஷியின் மகன் நாரதன்.

நம்மை ஒருவன் “பழித்துப் பேசினான்…” என்று சொன்னால் நாம் அவனை விடுவதா…? என்ற வைராக்கியத்தில் இருப்போம்.

ஆனால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்தால் அந்தப் பழி தீர்க்கும் உணர்வை நமக்குள் குறைக்கும். நாரதன் கலகப்பிரியன் கலகமோ நன்மையில் முடியும்.

என்னைப் பழி தீர்க்க எண்ணினான் என்று அவனின் பழி தீர்க்கும் உணர்வை எடுக்கும் போது அவனை அழித்து விட வேண்டும் என்ற எண்ணமே வரும்.
`1.அந்த எண்ணம் எனக்குள் அழித்திடும் உணர்வாக வளரப்போகும் போது தான்
2.என்னை அறியாமல் என்னை நானே அழித்துக் கொள்கின்றேன்.

மனிதருக்குள் விளைந்த உணர்வின் எண்ணங்களை நுகர்ந்தால் தீமையின் உணர்வே இது செயல்படுகின்றது.

அந்த சமயங்களில் எல்லாம் மகரிஷிகளின் உணர்வை நுகரப்படும்போது
1.இந்தத் தீமையான உணர்வைப் பிரித்து
2.அந்த உண்மையின் மூலத்தை நமக்குள் வெளிப்படுத்துகின்றது.
3.தீமைகளைப் பிளந்து நமக்குள் ஒளியாகக் காட்டுகின்றது.

அப்பொழுது இப்படிச் சொன்னானே “அவனை… விடுவதா அவனை… விடுவதா…?” என்ற நிலையை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக இது தணிந்து விடுகின்றது.

ஒரு செடி வெளிப்படும் உணர்வை சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவரப்படும் போது அதன் அறிவாக
1.அதே செடிக்கு இரையாக அது நுகரும் சக்தியைக் கொடுக்கின்றது
2.ஈர்க்கும் தன்மை வந்த பின் அதனின் சத்தை இது எடுத்து உணவாகக் கொடுக்கின்றது.

ஒருவன் கெடுதல் செய்த உணர்வு வெளிப்படும் போது இதே உணர்வு சூரியன் காந்த சக்தி கவர்ந்ததை அவனை உற்றுப் பார்த்தால்
1.அதே அலைகள் நமக்குள் வந்து
2.அவன் செய்யும் செயலையே நமக்குள் செயல்படுத்துகின்றது.

அதைப் போன்று தான் மனிதனில் விளைந்து ஒளியின் சரீரமாக ஆன உணர்வை நாம் பருகினோம் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வு நமக்குள் வந்து
2.அந்த மகரிஷிகளின் வழி எதுவோ அதன் வழியில் நம்மைக் கொண்டு போகும்.

இந்த விளக்கத்தை எல்லாம் நாம் தெரிந்து கொண்டால் நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் நம்மை அவ்வாறு அழைத்துச் செல்கின்றது என்பதை உணர முடியும்.

ஆகவே நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கத் தவறக்கூடாது
2.எத்தகைய சந்தர்ப்பமாக இருந்தாலும் மகரிஷிகளின் அருளை இணைக்க்கும் பழக்கம் வர வேண்டும்.

Leave a Reply